தமிழ்ப் புத்தாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்ப் புத்தாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 ஜனவரி, 2026

தென் சென்னை திராவிடர் கழகம் சார்பில் தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டாடினர்


திராவிடர் கழகம்

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 15.01.2026 அன்று காலை 10:30 மணி அளவில், தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டாடினர்.

தென்சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி .ஆர். சேதுராமன் மற்றும் மு. சண்முகப்பிரியன், சா.தாமோதரன், மாவட்ட இளைஞரணி தலைவர் ந.மணிதுரை, இளைஞரணி செயலாளர் பெரியார் யுவராஜ், துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, ச.மாரியப்பன், ஈ.குமார், சைதை ரா.ரவி, மா. இனியவள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

- விடுதலை நாளேடு, 17.01.26

அமைந்தகரை மோகன் அவர்களும் கலந்து கொண்டார்.

யூ டியூப் காணொலி





ஞாயிறு, 21 ஜனவரி, 2024

தமிழ்ப் புத்தாண்டையொட்டி பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு


விடுதலை நாளேடு, Published January 20, 2024

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு 15.1.2024 முற்பகல் 10.30மணி அளவில் சென்னை தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், அமைப்பாளர் ந.மதியழகன், துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், துணைச் செயலாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.இரா.மாணிக்கம், மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, சைதை இரா.ரவி, எம்.டி.சி.செல்வம், எம்.டி.சி.இராஜேந்திரன், வழக்குரைஞர் இராஜா மற்றும் பெரியார் பிஞ்சு இனியவள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.


திங்கள், 20 பிப்ரவரி, 2023

தென் சென்னையில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்

தமிழ்ப் புத்தாண்டு (திருவள்ளுவர் ஆண்டு 2054) மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 15.01.2023 மு.ப.10.15 மணி அளவில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தியாகராயர் நகரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் தலைமையில் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது.

மாவட்ட அமைப்பாளர் மு.ந. மதியழகன், மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன், துணைச் செயலாளர் சா. தாமோதரன், கோடம்பாக்கம் ச. மாரியப்பன், பி .டி. சி. ராஜேந்திரன் மற்றும் திருவல்லிக்கேணி அப்துல்லா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

தென்சென்னையில் பொங்கல் விழா

தமிழ்ப் புத்தண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு 15.01.2020 காலை 10.45 மணி அளவில் தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தலைவர் இரா. வில்வநாதன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு அனனவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. தென் சென்னை மாவட்ட செயலாளர்  செ.ர.பார்த்தசாரதி, அமைப்பாளர் மு.ந. மதியழகன், துணைத்தலைவர்கள் சி. செங்குட்டுவன், டி.ஆர். சேதுராமன், துணைச் செயலாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன் , க. தமிழ்ச்செல்வன், ஆயிரம்விளக்கு மு.சேகர்,  பூந்தமல்லி மணிமாறன் மற்றும் இளைஞரணி செயலாளர் ந.மணித்துரை, மு. சண்முகப் பிரியன், ஈ.குமார்,  மந்தைவெளி சிவகுமார் பிடிசி.இராஜேந்திரன், அரும்பாக்கம் எம்.பிரகாசம் ஆகியோரும் பங்கேற்றனர்.

- விடுதலை நாளேடு 19 1 20

புதன், 23 ஜனவரி, 2019

தியாகராயர் நகர் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு



தமிழ்ப் புத்தாண்டையொட்டி 15.1.2019 முற்பகல் 9.30 மணி அளவில் தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு தென் சென்னை திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, அமைப்பாளர் மு.ந.மதியழகன் மற்றும் துணைத்தலைவர் டி.ஆர்.சேதுராமன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணைச்செயலாளர்கள் கோ.வீ.ராகவன்மற்றும் சா.தாமோதரன், கோ.மஞ்சநாதன், க.தமிழ்ச் செல்வன், இளைஞரணி செயலாளர் ந.மணித்துரை மற்றும் சதிஸ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியையொட்டி சிலையும் பீடமும் வண்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

-  விடுதலை நாளேடு, 23.1.19

திங்கள், 5 பிப்ரவரி, 2018

கழக தோழர்களால் கொண்டாடப்பட்ட தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் விழா



சென்னை, ஜன.20 திராவிடர் திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா கழகத் தோழர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

விவரம் வருமாறு:

அரும்பாக்கம்

14.1.2018 முற்பகல் 11 மணி அளவில் அரும்பாக்கம் பெரியார் நெடுஞ்சாலையில் தென்சென்னை மாவட்ட துணைச்செயலாளர் சா.தாமோதரன் தலைமையில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா நடை பெற்றது.

மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிட முன்னேற்றக் கழக 105ஆவது வட்ட செய லாளர் அதியமான் விழாவை தொடங்கி வைத்தார். இனிப்புப் பொங்கல் வழங்கப்பட்டது.

மாவட்ட துணைச்செயலாளர் கோ.வீ.ராகவன், க. தமிழ்செல்வன், க.பாலமுரளி, மு.டில்லிபாபு, க.திருச் செல்வம், த.அண்ணாதுரை, எம்.பிரகாசம், ஏ.சுந்தர், கு.பா.அறிவழகன், பா.கவுதம் சித்தார்த்தன், ந.அதியமான் (தி.மு.க.) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோயம்பேடு

14.1.2018 முற்பகல் 11.45 மணி அளவில் தென் சென்னை கோயம்பேடு பகுதியில் திராவிடர் கழகமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்களும் இணைந்து தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை கொண்டாடினர்.

- விடுதலை நாளேடு,20.1.18

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா

தமிழ்ப் புத்தாண்டு நெகிழித்திரை.



திருவல்லிக்கேணி-அய்ஸ் அவுஸ் பகுதியில் தென் சென்னை திராவிடர் கழகம் சார்பில் 8.1.15 இரவு  தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து விளம்பர நெகிழித்திரை.வைக்கப்பட்டது.

பொங்கள் விழா
15.1.15 மாலை மந்தைவெளி அபிராம்புரம் பகுதியில் தந்தை பெரியார் படிப்பகம் சார்பில் பொங்கள் விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.