திங்கள், 28 ஆகஸ்ட், 2023

பெண்களை அடிமைப்படுத்தும் மனுதர்மத்தின் ஆட்சி தொடரலாமா? சென்னை கருத்தரங்கில் மகளிர் அறைகூவல்

 

 12

சென்னை, ஆக.10 - சென்னை கழக மாவட்டங்களின் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் நேற்று (9.8.2023) மாலை 6 மணிக்கு "பெண்களுக்கெதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகள் - மணிப்பூர் வரை" எனும் தலைப்பில் கருத்தரங்கம் சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

கருத்தரங்க அறிமுக உரையுடன் திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணி யம்மை வரவேற்புரை ஆற்றினார். திராவிடர் கழக துணைப்பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி தலைமையுரை வழங்கினார்.

திராவிடர் கழக மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி இணைப்புரை வழங்கினார்.

எழுத்தாளர் கவிதா சொர்ணவல்லி,  இந்திய கம்யூ னிஸ்டு கட்சி மத்திய கமிட்டி உறுப்பினர், உழைக்கும் பெண்கள் அமைப்பின்தேசிய கன்வீனர் தோழர் வகிதா நிஜாம், திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி ஆகியோரின் கருத் துரையைத் தொடர்ந்து திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி கருத்தரங்கத்தின் நிறைவுரையாக சிறப்புரை ஆற்றினார்.

13

கருத்தரங்கில் பேசியவர்கள் மணிப்பூர் கொடூரம் குறித்தும், அதற்குக்காரணம் இன அழிப்பு நோக்கமே என்பதையும்,  ஆணாதிக்கம், பெண்களை மனிதத்தின் ஓர் அங்கமாக, சமமாக கருதாமல் இருப்பதற்கு மதங்களே காரணம் என்றும், அதிலும் குறிப்பாக மனுதர்மம்தான் பெண்களை போகப்பொருளாக, அடிமையாக, ஒரு பண்டமாகக் கருதும் அளவுக்கு கீழ்மைப்படுத்தியுள்ளது என்பதையும் எடுத்துக்கூறியதுடன், அந்த மனுதர்மத்தின் படி ஆட்சிநடத்தவே ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துடன் பாஜக அரசியல் வடிவத்தில் உள்ளது என்பதையும் தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினார்கள்.

மணிப்பூர் கொடூரம் சமூகத்தின் பார்வைக்கு வந்தது சிறிதளவே என்றும், மறைக்கப்பட்ட நிகழ்வுகள் ஏராளமாக உள்ளன என்றும், மணிப்பூர்போல் நாட்டின் பிற பகுதிகளும் பாதிப்புக்கு உள்ளாகாமல் தடுத்திட  2024இல் ஆட்சி மாற்றமே தகுந்த தீர்வு என்றும் விரிவாக உறுதியாகக் குறிப்பிட்டு உரையாற்றினார்கள்.

பெண்கள்மீதான பாலியல் வன்முறை இதற்கு முன் னரும் நடந்துள்ளது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத் துடன் ஆளக்கூடிய பாஜக அரசு வன்முறைகளைக் கட்டுப்படுத்தாமல், அரச பயங்கரவாதத்துடன் பெண் களை ஒடுக்கி வருகிறது. வன்முறைக்கும்பலுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது என்று குறிப்பிட்டார்கள். 

காஷ்மீரில் கோயிலுக்குள்ளேயே சிறுமி ஆசிஃபாவை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கொன்ற கொடூரம், குஜராத்தில் கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை தாக்கி பாலியல் வன்முறைக்குள்ளாக்கியதுடன், தன் தாய்க்கு நேர்ந்த கதியைக் கண்டு கதறிய இரண்டு வயது குழந்தையை தூக்கி அடித்துக் கொன்றது உள்ளிட்ட பல்வேறு பாலியல் வன்முறைகள், வன்முறை வெறியாட்டங்கள் அனைத்தும் நிறுவனப்படுத்தப்பட்ட குற்றங்களாக தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பாலியல் குற்றமிழைத்த குற்றவாளிகள் பாஜக அரசால் நன் னடத்தை என்கிற பெயரில் விடுதலை செய்யப்படும் அவலம், பெண்களுக்கு எதிரான பாஜக அரசில் சிறு பான்மை மக்களை, பெண்களை அச்சத்துடன் தொடர்ச்சியாக இருக்கச் செய்வது, கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்முறைகள் அனைத்துக்கும் அரசே ஆதரவாக இருப்பது உள்ளிட்ட பாஜகவின் உண்மை முகத்தை தோலுரித்துக்காட்டினர்.

1925, 1926களிலேயே தந்தை பெரியார் தொலை நோக்குடன் ஆர்.எஸ்.எஸ். மதவாத நஞ்சுகுறித்து மக்களை எச்சரித்துள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டினார்கள்.

தாம்பரம் மாவட்ட திராவிட மகளிர் பாசறைத் தலைவர் இராசு.உத்ரா பழனிச்சாமி நன்றி கூறினார்.

கழகப் பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறி வாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன் மற்றும் கழகப்பொறுப்பாளர்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பெருந்திரளாக கருத்தரங்கில் பங்கேற்றனர்.

18
எழுத்தாளர் கவிதா சொர்ண வல்லி தனது உரையில் : தொடர்ந்து வெறுப்பு அரசியலை விதைக்கும் பாசிச பிஜேபியின் சித்தாந் தத்தின் வடிவத்தை எடுத்து ரைத்தார். 80 நாள்களாக நடக்கும் வன்முறை வெறியாட்டத்தை இந்த பொது சமூகம் பேசுவதற்கு, இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்யும் காட்சிப் பதிவு தேவைப்படுகிறது என்பதை நினைக்கும்போது தனக்கு அயர்ச்சி ஏற்படுகிறது என்று மனிதநேய உணர்வுடன் அவரது  கருத்தினை பதிவு செய்தார்.

16

வகிதா நிஜாம் தனது உரையில் : குடும்பம் என்ற அமைப்பு முறை பெண்களுக்கு எவ்வளவு எதிரானது என்றும், தாய்வழிச் சமூகம் எப்படி  தனியுடைமையினால் பெண்களை அடிமைப் படுத்தியது என்பதையும் ஏங்கெல்சு எழுதிய புத்தகத்தின் மூலம் தெளிவாக விவரித்தார்.

முதலாளித்துவம் எப்படி பாசி சத்தின் கோர முகத்துடன் கைக் கோர்த்து இன்று பிஜேபி என்ற வடிவத்தில் நிற்கிறது என்றும், மணிப் பூர் பற்றி மட்டுமல்ல, பெண்களுக்கு எதிரான தொடரும் வன்கொடுமைகள் குறித்து, உரையாடல் தொடர்ந்து நடக்க வேண்டும் என்றார்.

19

வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி தனது உரையில் : சட்டம் மட்டுமே பெண்களுக்கு எதிரான வன்கொடுமை களுக்கு தீர்வாக அமையாது, சமூகத்தின் பார்வை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும், குடும்பம் தொடங்கி அனைத்து இடங்களிலும் பெண்களை பாலியல் பண்டமாக பார்க்கும் பார்வை மாறினால் ஒழிய நிரந்தர தீர்வு கிடைக்காது என்றும், ஒழுக்கம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்ற பெரியாரின் பார்வைத் துணை கொண்டு எல்லா இடங்களுக்கும் இதனை கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்றார்.

17

வழக்குரைஞர் அ.அருள்மொழி தனது உரையில்: மிகுந்த கருத்தாழமிக்க நிகழ்வால் நடைபெறும் கருத்தரங்கம் மிகுந்த பொருத்தமான நாளில் நடைபெறு கிறது என்றும், நாடாளுமன் றத்தில் எதிர்க் கட்சிகளின் உரையை உலக அரங்கமே இன்று பார்க்கிறது என்றும், ஆர்.எஸ்.எஸ்.  சித்தாந்தம் எத்தனைக் கொடியது என்பதை பல்வேறு வழக் குகள் மூலமும் விவரித்தார். பெண் களுக்கு மட்டுமல்ல இந்து சகோதரர் களுக்கும் இந்த சித்தாந்தம் எவ்வளவு ஆபத்தானது என்று பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் மூலம் விளக்கினார். இந்த கொடிய ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் பற்றி தந்தை பெரியார் தொலைநோக்கோடு எச்சரித்ததையும், தமிழர் தலைவர் ஆசிரியர் ஒவ்வொரு முறையும் இதன் ஆபத்தை முன்பே உணர்ந்து தமிழ்ச் சமூகத்தை காப்பாற்றி நிற்கும் விதத்தை வரலாற்று செய்திகளுடன் குறிப்பிட்டார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையாக பிஜேபி அற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார்.


ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

பகுத்தறிவாளர் ந.சி.இராசவேலு மறைவு வழக்குரைஞர் அ.அருள்மொழி இறுதி மரியாதை


28

சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பாளராகவும்,  கலைஞர் கருணாநிதி நகர் இலக்கிய வட்டம் அமைப்பின் காப்பாளராகவும் இருந்த ந.சி. இராசவேலு (வயது 83) நேற்று (26.8.2023) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பாரதிதாசன் குடியிருப்பில் பலமுறை பகுத்தறி வாளர்  கழகத்தின் சார்பாக புரட்சிக்கவிஞர் விழாவினை மிகச் சிறப்பாக நடத்தியவர்.

 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மீது ஆழ்ந்த பற்றுடையவர். அவரது இறுதி நிகழ்வில் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி கலந்து கொண்டு மறைந்த தோழர் ராசவேலு அவர்களின் துணைவியார் ஜெயா அம்மையார், மகன்கள் அண்ணாதுரை, அன்பரசன், அரவிந் தன், கருணாநிதி, மகள் தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு திரா விடர் கழகத்தின் சார்பில் - தமிழர் தலைவர், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆறுதலைத் தெரிவித்தார்.

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

சென்னை தாம்பரத்தில் 'நீட்' தேர்வை எதிர்த்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் கழகத் துணைத் தலைவர், பொதுச்செயலாளர் பங்கேற்று உரை


7
தாம்பரம், ஆக. 24 - திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணையை ஏற்று தமிழ்நாடெங்கும் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் 22.8.2023 அன்று சென்னை கழக மாவட்டங்களின் சார்பில் தாம்பரத்தில் நடைபெற்றது.

ச.பிரின்சு என்னாரெசு
துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உரையில், 

தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரிகள் 35 உள்ளன. இரண்டு அரசு பல் மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்தியாவிலேயே 37 அரசு மருத்துவக்கல்லூரிகள், 24 தனியார் மருத்துவக்கல்லூரிகள் இருக்கிற மாநிலம் தமிழ் நாடுதான். தமிழ்நாட்டின் மாவட்ட அரசு மருத்துவ மனைகளில் மூட்டு மாற்று சிகிச்சை உள்ளிட்ட உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களின் தலைநகரங்களில்கூட இதுபோன்று ஒரு வசதி இருக்க வில்லை. நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் மருத்துவக்கட்ட மைப்புகள் சிறப்பாக உள்ளன. இதனை அழிப்பதற்குத்தான் நீட் தேர்வு திணிக்கப்பட்டுள்ளது. 2017முதலே தமிழ்நாட் டில்தான் நீட் தேர்வை தொடர்ச்சியாக எதிர்த்து வருகி றோம்.அதற்கு முன் நுழைவுத் தேர்வையும் எதிர்த்து வந்துள்ளோம். தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்ற, நாடாளு மன்றத் தேர்தல்களிலும் நீட்டை திணித்துவருகின்ற பாஜக வுக்கு எதிராகவே  வாக்களித்து வருகிறார்கள் என்றார்.

பா.மணியம்மை
மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை உரையில், 

நீட் நுழைவுத் தேர்வு தமிழ்நாட்டுக்கு வந்தால் பெரும் பாதிப்பு என்று முதன்முதலாக எச்சரித்தவர் தமிழர் தலைவர் அவர்கள்தான். அரசியல் தலைவர்களிடத்திலும், தமிழ்நாடு முழுவதிலும் நீட் தேர்வுக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு களம் அமைத்தவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்தான். நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்குச் சென்ற நான்கு அணிகளில் ஒரு அணியை தாம்பரம் அம்பேத்கர் சிலை அருகில் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்கள்தான் தொடங்கி வைத்தார். இன்றைக்கு நம்மைத் தாண்டி இந்தியாவைத் தாண்டியும் நீட் நுழைவுத்தேர்வை எதிர்க்கக்கூடிய நிலை வந்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் பல்வேறு போராட்டங்கள், மாநாடுகள், கருத்தரங் கங்கள் கழகத்தின் சார்பில் நடைபெற்றன. இன்றைக்கும் தமிழ்நாடு முழுவதும் நீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நிச்சயமாக இதற்கு விடியல் வரும் என்றார்.

ச.இன்பக்கனி
துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி உரையில், 

அரசமைப்புச்சட்டத்துக்கு, சமூகநீதிக்கு எதிரானது நீட். கிராமப்புற மாணவர்கள் மாநில அரசின் பாடத்திட்டத்தில் தான் படிக்கிறார்கள். ஆனால் நாடுமுழுவதும் பல்வேறு பாடத்திட்டங்கள் உள்ள நிலையில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின்மூலம் நீட் தேர்வை திணிப்பதேன்?

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு சமூக நீதி வழங்குவது தமிழ்நாட்டில்தான்.

உச்சநீதிமன்றத்தில் 3 நீதிபதிகளில் இருவர் நீட் தேர்வு கூடாது என்று தீர்ப்பளித்தனர். மூன்றாவது நீதிபதி ஏ.ஆர். தாவே மட்டும் நீட்டுக்கு ஆதரவாக இருந்தார். அப்போதே நீதிமன்றத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்கிற தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டுவிட்டது.ஆனால், மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் சீராய்வு மனு நீட் வேண்டும் என்று கூறிய நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்து நீட் தேவை என்று தீர்ப்பு வழங்கியது.

நீட்டை எதிர்த்து போராடி வருவது தமிழ்நாடு மட்டும் தான். மண்டலுக்காக போராடியதும் தமிழ்நாடுதான். திரா விடர் கழகத் தலைவர்தான். தற்பொழுது மண்டல் அறிக் கையால் நாடுமுழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டவர்கள் பலன் பெறுகிறார்கள் என்றார்.

பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்

திராவிடர் கழகத்தின் ஆர்ப்பாட்டங்கள் வழக்கமாக சென்னையில்தான் நடைபெறும். இந்த முறை தாம்பரத்தில் நடைபெறுகிறது. காரணம் அண்மையில் இந்த பகுதியில் குரோம்பேட்டையில் நீட்டுக்கு எதிராக மறைந்த ஜெகதீசுவரன்,  அவர் தந்தையார் சந்திரசேகர் உயிரிழந் தனர். அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். 

ஹையர் செகண்டரி போர்டு இந்தியா முழுவதும் 158 உள்ளன. வெவ்வேறு பாடத்திட்டங்கள் உள்ளன. அங்கீ கரிக்கப்பட்டவை 702 போர்டுகள். இவர்களுக்கெல்லாம் பொதுவாக ஒரு தேர்வாம். அந்த தேர்வும் யாரால் நடத்தப்படுகிது என்றால், நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி என்று சொல்லக்கூடிய அவர்களும் அவுட்சோர்சிங் செய்து பியர்சன் என்கிற அமெரிக்க நிறுவனத்தின்மூலமாக இந்த நீட் தேர்வு நடைபெறுகிறது.

பள்ளிகளில் ஹோம்ஒர்க் செய்வதற்காக சிறிய கோச்சிங் சென்டர் ஆரம்பித்ததுதான் பியர்சன் நிறுவனம். அது பல கிளைகளாக மாறி நாடுகளைக்கடந்து, தற்பொழுது வசதி படைத்தவர்களை தேர்வு செய்துவருகிறது.

உலகம் முழுவதும் பொது நுழைவுத் தேர்வு என்று உண்டு. பல்வேறு நாடுகளிலும் இரண்டு ஆண்டுகளில் மறு ஆய்வு செய்து நீக்க வேண்டியதை நீக்கி வருகின்றன. அண்மையில் கேம்பிரிட்ஜ் , கலிபோர்னியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் இந்த மாதிரி தேர்வு முறையை கருப்பின மக்களுக்காக, அவர்களின் கல்வி வாய்ப்புகளை பெற முடியாமல் மறுக்கின்ற இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளை அவர்கள் நீக்கிவிட்டார்கள். புத்திசாலித் தனமான அரசுகள் இதை செய்கின்றன. அதை இந்த ஒன்றிய அரசிடம் நாம் எதிர்ப்பார்ப்பது நம்முடைய தவறு. நீதிபதி ஏ.கே.ராஜன் 165 பக்க அறிக்கை அளித்தார். பொதுநுழைவுத்தேர்வுகள் குறித்த அம்பேத்கரின் கருத்தை பதிவு செய்துள்ளார்.

1984-1985இல் இதுபோன்று நுழைவுத் தேர்வு கொண்டு வந்தபோது ஏறத்தாழ 22 ஆண்டுகள் தொடர்ந்து போராடி, 2007இல் அது விலக்கப்பட்டது. 

நாடு முழுவதும் 705 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அதில் 1,08,500 இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு தேர் வெழுதியவர்கள் 17,64,000 மாணவர்கள். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 9,93,000. நீட் தேர்வில் மொத்தம் 720 மதிப் பெண்கள். 150 வினாக்கள். 3 மணி நேரம். பெர்சன்டைல் என்கிறார்கள். தொடர்ச்சியாக சைக்கிள் ஓட்டுவதுபோன்று பிராக்டீஸ் இருக்க வேண்டும். இந்த தேர்வு தகுதி தேர்வு என்று சொல்ல முடியாது. பயிற்சி மய்யங்களில் ஆண்டு தோறும் 25, 30 லட்சம் என கட்டணம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மட்டும் 400க்கும் மேல் கோச்சிங் சென்டர்கள் உள்ளன.

நேஷனல் கிரைம் ரெக்கார்ட்ஸ் பீரோ -என்சிஆர்பி என்கிற குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில், நாடு முழுவதும் சென்ற ஆண்டு மட்டும் பல்வேறு காரணங்களில் தற்கொலை செய்து கொண்டவர்கள் 13,089பேர். இதில் அதிகம்பேர் மாணவர்கள் என்கிறது அந்த அறிக்கை.

மராட்டியம், பெங்களூரு, டில்லி என பல இடங்களிலும் நீட்டால் பலரும் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

நீட்தேர்வை எதிர்த்து திராவிடர் கழகம் முதலிலிருந்தே குரல் கொடுத்து வருகிறது. இதற்கு ஒரே தீர்வு கல்வியை ஒத்திசைவுப்பட்டியலிலிருந்து (கன்கரண்ட் லிஸ்ட்) மாநில பட்டியலில் கொண்டு வரவேண்டும் என்பதுதான். அதற்கான போராட்டத்தை திராவிடர் கழகம் தொடங்கியது, தொடர்ந்து இதில் போராடி வெற்றி அடைவோம்  திராவிடர் கழகம் எடுத்த எந்த ஒரு போராட்டத்திலும் தோல்வியே கிடையாது, காலம் வேண்டுமானால் தாமதிக்கலாம், ஆனால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார். 

கழகத்துணைத் தலைவர்
கழகத்துணைத் தலைவர் உரையில்,

நீட் என்பது வேறு ஒன்றுமில்லை, நீட்டா நம் மக்களை ஒழிப்பதுதான். ஒரேயொரு வைரசைக்கொண்டு நீட்டா ஒழித்துவிடவேண்டும் என்பதுதான். ஏனென்றால் கீழே இருந்து வந்தவன் எல்லாம் டாக்டர்கள் ஆகிவிட்டானே, குப்பன் எம்.எஸ்., சுப்பன் எம்.டி., ஆகிவிட்டார்களே. இதையெல்லாம் அவர்கள் பார்க்கும்போது வயிற்றெரிச்சல். தீண்டத்தகாதவன் எல்லாம் டாக்டராவதா, அவனிடத்தில் போய் வைத்தியம் செய்துகொள்வதா என்கிற ஜாதிக் கொழுப்பு. ஜாதி ஆணவம், பார்ப்பனத்திமிர். 

இது ஒரு சூழ்ச்சி என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. 2010இல் காங்கிரசுதான் கொண்டு வந்தது. திமுக கூட்டணியில் இருந்தது என்கிறார்கள். உண்மை. அப்போது குஜராத்தில் முதலமைச்சராக இருந்தவர் யார்? இன்றைக்கு பிரதமராக உள்ள நரேந்திர மோடி. அவர் நீட்டை எதிர்த்தாரா, ஆதரித்தாரா? எதிர்த்தார்.

நீங்கள் அதைத்தான் கவனிக்க வேண்டும். நீட்டையும் எதிர்த்தார். ஒன்றிய அரசினுடைய ஜிஎஸ்டியை எதிர்த்தார். 

இடம் மாறின, உடனே ஆள் மாறிவிடுகிறார்.

இதில் என்ன ஒழுங்கு இருக்கிறது? 

நீட் கூடாது என்று சொன்ன புத்தி, குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது வருகிறது.

எப்படி மாறிச்சு?

இவ்வளவும் கேட்டா,  அவர் பிற்படுத்தப்பட்டவர் என்கிறார்கள்.

இவர் காதைத் திருகுவது ஆர்.எஸ்.எஸின் நாக்பூர். இவர் ஒன்றும் தானாக முடிவு எடுத்துவிடவில்லை. இப்போது ஒரு செய்தி வந்திருக்கிறது, அடுத்த பிரதமராக மோடி...? என்கிற கேள்வி அவர்களுக்குள் எழுந்துள்ளது. 

அதனாலே மோடிதான் பிரதமர் என்கிற உறுதி யெல்லாம் அங்கே இல்லை. ஏனென்றால், மக்களிடத்திலே பெரிய விழிப்புணர்வு வந்திருக்கிறது என்பது அவர்களுக்கு தெரிந்துபோச்சு.

இவரை முன்னிறுத்தினால், நம்ம ஆட்சி காலி, ஆட்டம் காலி என்று அவர்களிடத்தில் அப்படி ஒரு முடிவு இருக்கிறது.ஆனால், இவர் ரொம்ப குதிக்கிறார்.

தந்தைபெரியார் சொல்வார், நிஜப்புலியைவிட,  வேஷம் போட்ட புலி அதிகம் குதிக்கும்.

இது நிஜப்புலி அல்ல, வேஷம் போட்ட புலி. 

ஏன்னா சந்தேகம் வந்திருக்கு. நம்மை புலி இல்லை என்று நினைத்துவிடுவார்களோ, வேஷம் போட்ட புலி என்று நினைத்துவிடுவார்களோ என்பதால் அதிகமாக குதிக்கும். எல்லாமே அய்யா சொல்லியுள்ளார்.

இது வேஷம் போட்ட புலி. 

12ஆம் வகுப்பு படித்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, டாக்டராகி, இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் சென்றுள்ளார்கள்.

தந்தைபெரியார் ஒரு கேள்வி கேட்டார், ஏம்பா, டாக்டர் படிப்பு முடித்து கோல்டு மெடல் வாங்கினானே, அவனெல்லாம் எங்கே இருக்கறான்னு கேட்டார்.

அவன்தான் புகழ்பெற்ற டாக்டராக இருக்கிறானா? தகுதி திறமைஎன்பதையே புரட்டு என்றார், மோசடி என்றார்.

ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டராகணும்னா என்ன தகுதி? என்றார், உடல் திண்மை இருக்கணும், சமயோசித புத்தி இருக்கணும். துணிவு இருக்க வேண்டும். 

அதில்லாம, திருடன் ஓடும்போது, டேய், ஓடாதே, நான் எம்.எஸ்சி.,ன்னா நின்றுவிடுவானா? எம்.எஸ்சி படிப்புக்கும், அந்த வேலைக்கும் என்ன சம்பந்தம்? 

அதனால்தான் தந்தைபெரியார், தகுதி திறமை என்பது புரட்டு, இது பார்ப்பனர் செய்த ஏமாற்று வேலை.

மனப்பாடக்கல்வி, அது பார்ப்பானுக்கு வசதி. வேத சுலோகங்களை மனப்பாடம் பண்ணிபண்ணி, அந்த அடிப்படையிலே, மனப்பாடக் கல்வியாக இருக்கிற காரணத்தாலே மனப்பாடக் கல்வியில் வெற்றி பெறுகிறான்.

ஆனால், நீட்டுக்கும் டாக்டர் தொழிலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

இன்னும் சொன்னால் நீட், டாக்டர்களுக்கான தேர்வா? டாக்டர் உத்தியோகத்துக்கும், நீட்டுக்கும் என்ன சம்பந்தம் சொல்லுங்க. 12 வருசம் படிக்கிறார், அனிதா 1176 மதிப்பெண் வாங்கினார். அதைக் குப்பைக்கூடையில் தூக்கிப் போடணுமா?

என்ன ஆகும்னா, 12ஆம் வகுப்புவரைக்கும் படிப்பது வீண், இது வேஸ்ட் என்று படிக்க மாட்டான்.

இவன் 12ஆம் வகுப்புக்குக்கூடப் போகக்கூடாது என்று நினைக்கிறான். இதில் பெரிய சூழ்ச்சி இருக்கிறது. பெரிய திட்டமிருக்கு.

அந்த அடிப்படையில்தான், தமிழ்நாட்டில் மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேட்பதாக சொன்னாங்க. 

இங்கதான பெரியார் பிறந்தார், இதுதானே திராவிட மண்,அதனால் எதிர்ப்பு வருகிறது.

தந்தைபெரியார் காங்கிரசை விட்டு வெளியேறியதே சமூகநீதிக்காகத்தானே, பார்ப்பனர்கள் முட்டாள்கள். நான் 50 சதவீதம் கேட்டேன், கொடுக்க மாட்டேன் என்றான், இன்றைக்கு 69 சதவீதம் வந்துவிட்டதே!

பெரியார் சொன்னார், ஒரு காலம் வரும், எங்களுக்கும் இடஒதுக்கீடு கொடுங்கள் என்று கேட்கக்கூடிய காலம் பார்ப்பனர்களுக்கு வரும்.

எவ்வளவு தொலைநோக்கு பாருங்கள்.

எஸ்விசேகர் என்று ஒரு நடிகன். ஒரு நாள் திடீரென்று பெரியார் திடலுக்கு வந்துவிட்டார். ஆசிரியர் என்னைக் கூப்பிட்டார், எதற்கு வந்திருக்காருன்னு.

கலைஞரைப் போய்ப் பார்த்தாராம் சேகர், எங்களுக்கு வந்து ஒரு 10 சதவீதம் பிராமணர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று. அதற்கு ஏன் எங்கிட்ட வருகிறீர்கள், பெரியார் திடலில் வீரமணி இருப்பாரு அவர்கிட்ட போ என்றாராம்.

அங்கேயிருந்து வந்தார் அந்த நடிகர்.

என்ன விஷயம் என்று ஆசிரியர் கேட்டார். 

எங்களுக்கு 10 சதவீதம்....

ஏன்யா, 1928இலே முத்தையா முதலியார் கொண்டு வந்தாரே அந்த இடஒதுக்கீடு சட்டத்திலே, உங்களுக்கு 14 சதவீதம் கொடுத்தார். அதை எதிர்த்து நீங்கள் கோர்ட்டுக்குப் போனீங்க இல்ல, இப்ப 10 சதவீதத்துக்கு வந்து நிக்கிறீங்கன்னு கேட்டாரு.

இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதுங்க.

இப்ப தெரிஞ்சுக்கங்க என்றார் ஆசிரியர்.

பார்ப்பனர்களுக்கு இப்ப சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது ணிகீஷி என்பது அதுதான். வேறொன்றுமில்லை.

உச்சநீதிமன்றம் சொல்லுது 50 சதவீதத்துக்கு மேலே இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று.

ணிகீஷிக்கு 10 சதவீதம் கொடுத்திருக்கியே, அப்ப 60 சதவீதம் ஆகிறது இல்லையா.

எப்படி கொடுக்கலாம் என்று கேட்டால், நீதிமன்றமும் கேட்கமாட்டேங்குது, அரசாங்கமும் கேட்கமாட்டேங்குது.

ஆகவே, பார்ப்பனர்கள் என்றாலே சூழ்ச்சிதான்.

திட்டமிட்டு நம்முடைய மக்களை பழிவாங்குவதுதான்.

2010இல் நீட் வந்தது என்றார்கள். மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா அதுதான் பரீட்சை நடத்துகிறது.

உச்சநீதிமன்றத்தில் ஷார்ப்பா ஒரு கேள்வி கேட்டார்கள், மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கு பரீட்சை நடத்த தகுதி உண்டா? ஹ்ஷீu லீணீஸ்மீ ஸீஷீ க்ஷீவீரீலீt. உன் வேலை நிர்வாகத்தை பார்ப்பது என்றார்கள்.

பரீட்சை நடத்துவது உன்னுடைய வேலை இல்லை என்று உச்சநீதிமன்றம் ஆழமாக குத்திவிட்டது.

அதற்கப்புறம். சீராய்வு மனு போட்டது யாரு?

பொய்யை திரும்பத் திரும்ப பிஜேபியினர் சொல் கிறார்கள் - காங்கிரசுதான் என்று. சீராய்வு மனு போட்டதா? மோடி தலைமையிலான பிஜேபி அரசு. இவ்வளவு வேலையை செய்துவிட்டு, பிஜேபி என்ன செய்கிறது?

தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் பிஜேபி தவிர எல்லாக் கட்சியும் திமுக கொண்டு வந்த நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஆதரவு கொடுத்துவிட்டன.

பிஜேபி தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது. இது ஒன்று போதும்.  ஆனானப்பட்ட எம்ஜிஆரே, 9000 ரூபாய் வருமான வரம்பு கொண்டு வந்து, 39 இடத்தில் நின்று, 37 இடத்திலே தோற்றார். அனைத்துக்கட்சிக்கூட்டம் நடைபெற்றது. இரண்டொரு கட்சி பேசியபிறகு, டக்குன்னு எம்ஜிஆர், வீரமணி மட்டும் பேசட்டும் என்றார். 

ஆதாரத்தோடுதான் ஆசிரியர் பேசுவார். எல்லாருக்கும் ஆதாரத்தைக் கொடுத்து, 40 நிமிடம் பேசினார்.

ஒரு கேள்வி கேட்டார், செங்கல்பட்டிலே ஒரு கடைநிலை ஊழியர் பியூன் அரசாங்கத்தில 8990ரூபாய் வாங்குகிறார். அதே பியூன் சென்னைக்கு மாற்றல் ஆனால், அப்போது அவருடைய சம்பளம் 9100 ரூபாய் சிட்டி அலவன்சு உள்ளிட்டவை சேர்ந்து.

ஒரு ஆளு செங்கல்பட்டில இருந்து சென்னைக்கு வந்தா ஃபார்வார்டா? என்றார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் நிறைவாக செய்தியாளர்களை எம்ஜிஆர் சந்தித்தார். ஏன் இந்த அவசரக் கூட்டம் என்று கேட்டதற்கு, 

தேர்தலில் நிற்காத ஒரு கட்சி, ஒரு தலைவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றி அலைந்து பிரச்சாரம் செய்து, என்னுடைய ஆட்சி இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆட்சி என்று பிரச்சாரம் செய்து நம்பவைத்துவிட்டார் என்றார்.

அரசியலுக்கு போகாத கட்சி எது?

அந்த தலைவர் யார்?

அப்போது எம்ஜிஆரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன், அரசமைப்புச் சட்டத்தில் ஷிஷீநீவீணீறீறீஹ் ணீஸீபீ ணிபீuநீணீtவீஷீஸீணீறீறீஹ் ஙிணீநீளீஷ்ணீக்ஷீபீ என்றுதானே இருக்கிறது, சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இடஒதுக்கீடு, எக்கானமிக்கல் இல்லை. நீங்கள் எப்படி புதுசா கொண்டுவந்தீர்கள்? என்று கேட்டேன். அதற்கு எம்ஜிஆர், யார் சொன்னது?  அப்படி இருக்கு என்றார். அடுத்து நான் ஒரு கேள்வியைக் கேட்டேன், ஙிணீநீளீஷ்ணீக்ஷீபீ சிறீணீss, ஷிலீமீபீuறீமீபீ சிறீணீss என்று பட்டியல் போட்டுள்ளீர்கள், இது ஏழை, பணக்காரன் பட்டியலா, ஜாதிப்பட்டியலா? என்றேன்.

ஆ... இது வீரமணிக்குத்தான் தெரியும். அவரைக் கேட்டுக்கொள்ளுங்கள் என்றார். செய்தியாளர்கள் கூட்டம் முடிந்துவிட்டது. அடுத்த ஒரு வாரத்தில் தோழர்களே, அந்த வருமான வரம்பு ஆணை ரத்து செய்யப்பட்டதோடு, 31 சதவீதமாக இருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு 50சதவீதமாக அறிவிக்கப்பட்டது. திராவிடர் கழகம் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டங்கள் நடத்தியது.

நீட் வருவதற்கு முன் தமிழ்நாடு அரசு மேநிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு கிடைத்த மருத்துவ இடங்கள் 30. நீட் வந்தபிறகு 5 இடங்கள்தான்.  இதற்கு பெரிய விளக்கமெல்லாம் தேவையில்லை. இந்த விவரத் தைச் சொன்னாலே யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், யார் பலனடைந்திருக்கிறார்கள் என்று தெரியும்.

2011-2016இல் நீட்டுக்கு முன் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கிடைத்த மருத்துவ இடங்கள் 510. நீட்டுக்குப்பின் 62 இடங்கள். தமிழ்வழியில் படித்தவர்கள் நீட்டுக்கு முன்னால் 510, நீட்டுக்குப்பின்னால் 68.

சிபிஎஸ்இ படித்தவர்கள் நீட்டுக்கு முன்னால் 52, நீட்டுக்கு பின்னால் 1220. இருபது மடங்கு அதிகம். இப்போது புரிகிறதா? நீட் எதற்காக கொண்டு வரப்பட்டது?  யாரை நசுக்குவதற்காக கொண்டுவரப்பட்டது?

யாரைத் தூக்கிவிடுவதற்காக கொண்டுவரப்பட்ட தென்று? நினைத்துப்பார்க்கவேண்டும்.

ணிகீஷி இல் மாதம் ரூ.66,000 சம்பளம் வாங்குபவன் உயர்ஜாதி பார்ப்பானாக இருந்தால் அவன் ஏழையாம்.

அதிமுக மாநாட்டுத் தீர்மானத்தில் நீட் இல்லை. இவ்வளவுக்கும் அவர்களின் நீட்டை எதிர்த்து மசோதா நிறைவேற்றி இருக்கிறீர்களா இல்லையா?

திமுக கொண்டு வந்த நீட் எதிர்ப்பு மசோதாவுக்கு ஆதரவு கொடுத்தீர்களா? இல்லையா?

பிஜேபியுடன் சேர்ந்து நீங்களும் அழியப்போகிறீர்கள் அவ்வளவுதான். பிஜேபியுடன் சேர்ந்த குற்றத்தால் அதிமுகவும் துடைத்து அழிக்கப்படும்.

திராவிடர் கழகத்துக்கு கட்சி அரசியல் கிடையாது. தமிழன் வீட்டுப் பிள்ளைகள் டாக்டர்கள் ஆக வேண்டும் இல்லையா?

நீட் ஒரு சூழ்ச்சித்திட்டம். ஆர்.எஸ்.எஸ். கொள்கையே இடஒதுக்கீட்டை ஒழிப்பதுதான்.

இடஒதுக்கீட்டை ஒழிக்கவே, 'நீட்' என்கிறான். 'ணிகீஷி'  என்கிறான்.

ஆகவே, நீட் பார்ப்பன சூழ்ச்சி என்பதை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்.

- இவ்வாறு கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரையாற்றினார்.

பங்கேற்றோர்

தே.செ.கோபால், ந.கரிகாலன், ப.முத்தையன், கோ.நாத்திகன், தி.இரா.இரத்தினசாமி, பொழிசை கண்ணன், கண்ணதாசன், பம்மல் கோபி, கு.சோமசுந்தரம், ஊரப் பாக்கம் இரா.உத்திரகுமாரன், இராமண்ணா, சீ.லட்சுமிபதி, மு.சண்முகபிரியன், வடசென்னை சு.அன்புச்செல்வன், யுவராஜ், மா.இராசு. ஆனந்தன், வைத்தியலிங்கம், மு.மணி மாறன், குன்றத்தூர் திருமலை, அம்பத்தூர் சோபன்பாபு, கோ.தங்கமணி, இராமாபுரம் ஜெ.ஜெனார்த்தனம், பாஸ்கர், பி.சி.ஜெயராமன், வேலூர் பாண்டு, தமிழினியன், பொய்யா மொழி, செல்லப்பன், புகழ், க.பாலமுரளி, பா.கோவன், சித்தார்த்தன், கலைமணி, தனலட்சுமி தங்கமணி, பழநிசாமி, சந்திரசேகர், எஸ்.ஆர்.வெங்கடேஷ், மா.குணசேகரன், செ.ர.பார்த்தசாரதி, தேவசகாயதாஸ், ராகுல், கு.பா.அறிவழகன், ஆலந்தூர் சிவா, அயன்புரம் துரைராஜ், நடராஜ், கஜேந்திரன், க.வெற்றிவீரன், மு.சேகர், உடுமலை வடிவேல், எம்.டிசி.பாபு, தனசேகர், ராகுல், தாம்பரம் மோகன்ராஜ், காரைக்குடி சாமி. திராவிடமணி, ஜெயா திராவிடமணி, டார்வின் தமிழ், கு.பா.கவிமலர் மற்றும் கழகத் தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

நீட்’ தேர்வை கண்டித்து சென்னை - தாம்பரம் சண்முகம் சாலை, பாரதி திடலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் திராவிட மாணவர் கழகத்தினர் - இளைஞரணியினர் பெருந்திரளாகப் பங்கேற்று நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

 கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்!

தமிழ்நாட்டின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரே ஒப்புதல் வழங்குக!

11

சென்னை, ஆக.22- சமூகநீதிக்கு எதிரான - கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கும் முறைகேடுகள் மலிந்த ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரியும், தமிழ்நாட்டின் ‘நீட்’ விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரே ஒப்புதல் வழங்குக! ஒன்றிய பிஜேபி அரசே தூண்டாதே! மாணவர் புரட்சியைத் தூண்டாதே! என்பதை வலியுறுத்தியும் திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி சார்பில் இன்று (22.8.2023) தமிழ்நாடெங்கும் மாபெரும் பெருந் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமூகநீதிக்கு எதிராக முதன்முதலில் இப்படி ‘நீட்’ என்ற ஒரு தேர்வு கொண்டுவரப்பட வேண்டும் என்ற முடிவை உள்ளே திணித்தது ஒன்றிய அரசின் அதிகார வர்க்கம்.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்ட நிலையில், அது தேவையில்லை என்று தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், மற்றொரு நீதிபதி விக்ரமஜித் சென் ஆகியோர் தீர்ப்பு வழங்க, குஜராத்தைச் சேர்ந்த தவே என்ற (பார்ப்பன) நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை (‘நீட்’ தேர்வு தேவை) என தந்தார்.

அந்த தலைமை நீதிபதி வங்காளத்தைச் சேர்ந்தவர். அவர் ஓய்வு பெற்ற நிலையில், மறு சீராய்வு என்ற போர்வையில் - மரபுக்கு மாறாக, முன்பு மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி தவே தலைமையில் ஓர் அமர்வு வழங்கிய  ‘நீட்’ தேர்வு தேவை என்ற தீர்ப்பின் மூலமே மீண்டும் ‘நீட்’ தேர்வு நுழைந்தது!

தொடக்கத்திலிருந்தே தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகள் ‘நீட்’ தேர்வை எதிர்த்து கடுமையான பிரச்சாரம், போராட்டங்களை நடத்தி வந்தன. திராவிடர் கழகம் நாடு முழுவதும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்தி, மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், அரியலூர் அனிதா, ஓர் தாழ்த்தப்பட்ட சமூக தொழிலாளியின் மகள். 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் (1200க்கு 1176 மதிப்பெண்கள்) வாங்கியும், ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் (86) பெறாமல், உச்சநீதிமன்றம் வரையில் போராடி, விரக்தி, வேதனையில் தனது மருத்துவக் கனவு நிறைவேறாததால். தற்கொலை செய்து கொண்டார்.

அனிதாவைத் தொடர்ந்து, ‘நீட்’ தேர்வு தோல்வியால் ஏழை, எளிய, கிராம, நடுத்தர வகுப்பு மாணவர்கள் பலரும் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கடந்த 10.8.2023 அன்று கூட குரோம்பேட்டை ஜெகதீசுவரன் தற்கொலை செய்துகொண்டார்; மகன் இறந்த துக்கம் தாளாமல், மாணவனுடைய தந்தை செல்வசேகர் கடந்த 14ஆம் தேதியன்று தற்கொலை செய்து கொண்டார். இப்படித் தொடர்ந்து ‘நீட்’ தேர்வு தமிழ்நாட்டில் மட்டும் 21 உயிர்களை பலி கொண்டுள்ளது.

இதற்கிடையில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ‘நீட்’ தேர்வு ஒழிப்புக்குரிய ஏற்பாடுகளை சட்டரீதியாக உடனடியாக மேற்கொண்டு நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து, அது ஆராய்ந்து சிறப்பான ஓர் அறிக்கையை மூன்றே மாதங்களில் தந்தது.

அதன் பரிந்துரை அடிப்படையில் சட்டப் பேரவையில் ‘நீட்’ தேர்வு விலக்குக்கான தனி மசோதாக்களை நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் மூலம் அனுப்பப்பட்ட நிலையில், அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் - அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக - முறைகேடாக ஆளுநர் ஆர்.என்.இரவி கிடப்பில் போட்டதை எதிர்த்து, பலத்த எதிர்ப்புக் குரல்கள் (நாடு தழுவிய பிரச்சாரப் பயணம்) எழுந்தன. அப்படியிருந்தும், ஆளுநர் ஆர்.என்.ரவி அம்மசோதாவி¬னை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் வைத்திருந்தார்.

முதலில் திருப்பி அனுப்பினார்; உடனே சட்டமன்றத்தைக் கூட்டி, விரும்பிய திருத்தங்களைச் செய்து ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கே அனுப்பிட, ஆளுநர் பிறகு அசைந்தார். அது குடியரசுத் தலைவரைச் சென்றடைந்து, அவரது பரிசீலனை என்ற அளவில் நிலுவையில் உள்ளது.

தி.மு.க. அரசு அதன் அதிகார எல்லைக்குள் எந்த அளவு விரைந்து செயல்பட முடியுமோ, அதைச் செய்து, பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோரை நமது முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நேரிலும், கடிதங்கள் வாயிலாகவும், நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து இடையறாது வற்புறுத்தியும் வரத் தவறவில்லை!

இந்த நிலையில், என்ன செய்ய முடியுமோ, அதைத் தி.மு.க. அரசு செய்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையில், ஆணை இல்லாமல் ஆஜராவதைப் போல, தமிழ்நாட்டில் ஒரு போட்டி அரசு நடத்திடும் அரசமைப்புச் சட்ட விரோத  ஆளும் அவதாரமான ஆர்.என்.ரவி என்ற ஆர்.எஸ்.எஸ் சனாதன பிரச்சார ஆளுநர், “எனக்கு அதிகாரம் இருந்தால், நான் ‘நீட்’ தேர்வு ரத்து சட்டத்திற்குக் கையெழுத்துப் போட மாட்டேன்” என்று தனக்கு இல்லாத அதிகாரத்தைப் பொல்லாத நிலைப்பாட்டைக் கூறி, தமிழ்நாட்டு மக்களை, பெற்றோரை - தமிழ்நாடு அரசை நாளும் வீண்வம்புக்கு இழுக்கிறார்!

இவற்றை மக்களுக்கு விளக்கிடவும், மருத்துவக் கல்வி உரிமையை நிலைநாட்டிடவும், இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திடவும், ஒவ்வொரு மாவட்டத் தலைநகர் அல்லது முக்கிய நகரங்கள் - கிராமங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் 22.8.2023 அன்று நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்திருந்தார்.  அதன்படி தமிழ்நாடெங்கும் இன்று (22.8.2023) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

12

இந்த ஆர்ப்பாட்டத்தில்:-

திணிக்காதே திணிக்காதே!

நீட் தேர்வைத் திணிக்காதே!

பறிக்காதே பறிக்காதே!

மருத்துவக் கனவைப் பறிக்காதே!

எத்தனைப் பலிகள்? எத்தனைப் பலிகள்?

நீட் தேர்வுத் திணிப்பினால் எத்தனைப் பலிகள்?

தேவையில்லை தேவையில்லை!

நீட் தேர்வு எங்களுக்குத் தேவையில்லை!

வேலையில்லை வேலையில்லை!

ஒன்றிய அரசின் கங்காணிக்குத்

தமிழ்நாட்டில் வேலையில்லை!

கரையான்களெல்லாம் புற்றெடுக்க

கருநாகம் வந்த குடியேறுமா?

எங்கள் வரிப்பணத்தில் கல்லூரி கட்டினால்

வடநாட்டவர்க்குத் தாரை வார்ப்பா?

கல்வியை வணிகப் பொருளாக்கும்

நீட் தேர்வை ஒழித்துக் கட்டு!

காவியை நாட்டில் திணிக்கப் பார்க்கும்

பாஜகவே மூட்டை கட்டு!

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கெதிராய்

நீட்டைத் திணிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சே!

தமிழ்நாட்டு மாணவர் உயிரைப் பறிக்கும்

ஆளுநர் ஆர்.என்.ரவியே!

வெளியேறு வெளியேறு தமிழ்நாட்டை விட்டு வெளியேறு!

ஒப்புதல் வழங்குக, ஒப்புதல் வழங்குக!

நீட் விலக்கு மசோதாவுக்கு

தமிழ்நாட்டின் மசோதாவுக்கு

குடியரசுத் தலைவரே ஒப்புதல் வழங்குக!

தூண்டதே தூண்டாதே!

ஒன்றிய அரசே தூண்டாதே!

மாணவர் புரட்சியைத் தூண்டாதே!

 என ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சென்னை - தாம்பரம்

‘நீட்’ தேர்வை கண்டித்து சென்னை - தாம்பரம் சண்முகம் சாலை, பாரதி திடலில் இன்று (22.8.2023) காலை 11 மணியளவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் இர.சிவசாமி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் தே. சுரேஷ் வரவேற்புரையாற்ற, திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொடக்கவுரையாற்றினார்.

ஆர்ப்பாட்ட கண்டன உரை

திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, மதிமுக தலைமைக் கழக பேச்சாளர்  எஸ்.டி. செல்வராஜ், மனிதநேய மக்கள் கட்சி - தமிமுன் அன்சாரி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை இளங்கோ, திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்ட கண்டன உரையாற்றினர். நிறைவாக திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் ஆர்ப்பாட்ட கண்டன விளக்கவுரையாற்றினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.சண்முகப்பிரியன் இணைப்புரை வழங்கினார். பெரியார் யுவராஜ், பொழிசை கண்ணன், மு.மணிமாறன் ஆகியோர் ஆர்ப்பாட்ட ஒலி முழக்கமிட்டனர்.  

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக காப்பாளர் தி.இரா.ரத்தினசாமி, திராவிடர் மாணவர் கழக மாவட்டப் பொறுப்பாளர்கள் பா. அறிவழகன், தாம்பரம் ம. சுபாஷ், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், சோளிங்க மாவட்டத் தலைவர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், வட சென்னை மாவட்டத் தலைவர் தளபதி பாண்டியன்.  மாவட்டச் செயலாளர்கள்: கோ.நாத்திகன், செ.ர.பார்த்தசாரதி, சு.அன்புச்செல்வன், அ.விஜய்  உத்தமன் ராஜ். மகளிரணி பொறுப்பாளர்கள்: பசும்பொன்,  இறைவி, நூர்ஜஹான்,  த.மரகமணி,  அருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக சோளிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் நித்தியானந்தம் நன்றி கூறினார்.

_-------------+++++++++-+++------++++---++----
நீட்டை எதிர்த்து தி.மு.க. நடத்திய பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்து தமிழர் தலைவர் எழுச்சியுரை* ‘நீட்' விலக்குக் கிடைக்கும் வரை நாம் விடப்போவதில்லை

* உதயநிதி என்றால் 'போராளி' என்று பொருள்

அந்த ஒற்றைச் செங்கல் பத்திரமாக இருக்கிறதா?

‘நீட்'டுக்குக் கல்லறை எழுப்ப அது பயன்படும்!

10

சென்னை, ஆக. 22- நீட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கிடைக்கும் வரை நம் போராட்டம் ஓயாது - ஓயாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை வள்­ளு­வர் கோட்­டம் அரு­கில் கடந்த 20.8.2023 அன்று நடை­பெற்ற பட்டினிப் போராட்டத்தை மாலை­யில், திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அவர்­கள் பழச்­சாறு வழங்கி முடித்து வைத்­தார். 

இம்­மா­பெ­ரும் அறப்­போ­ருக்­குத் தலை­மை­யேற்ற தி.மு.கழக இளை­ஞர் அணிச் செய­லா­ளர்  உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீர­மணி அவர்­கள் பொன்­னாடை அணி­வித்து வாழ்த்­தி­னார். 

சென்னை கிழக்கு மாவட்­ட திமுக செய­லா­ளர் பி.கே.சேகர் ­பாபு, தி.மு.கழக மாண­வர் அணிச் செய­லா­ளர் சி.வி.எம்.பி. எழி­ல­ர­சன், தி.மு.க.மருத்­துவ அணிச் செய­லா­ளர் டாக்­டர் எழி­லன் நாக­நா­தன், தி.மு.க. மருத்­துவ அணித் தலை­வர் டாக்­டர் கனி­மொழி என்.வி. என்.சோமு, சென்னை மேற்கு மாவட்­ட திமுக செய­லா­ளர் நே.சிற்­ற­ரசு, தி.மு.கழக இளை­ஞர் அணி துணைச் செய­லா­ளர் எஸ்.ஜோயல் உள்­ளிட்­ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டதாவது,

‘நீட்' தேர்வை ஒழிப்பதற்காக, நீட் தேர்வை தமிழ்நாட்டிலே யிருந்து விரட்டுவதற்காக, நம்முடைய பிள்ளைகளுடைய வாழ்வை பலி கொள்ளக்கூடிய இந்த நீட் தேர்வுக்கு பெரியார் மண்ணிலே, சமூகநீதி மண்ணிலே தமிழ் நாட்டிலே அறவே இடம் கிடையாது என்று சொல்வதற்காக, இந்தப் பட்டினிப் போராட்டம் மிகுந்த எழுச்சியோடு காலை முதற்கொண்டே இந்த நேரம் வரையிலே நடந்துகொண்டிருக்கிறது. நீட் தேர்வு அறிவிக்கப்பட்ட காலத்திலே இருந்து திராவிடர் இயக்கம் குறிப்பாக திராவிடர் கழகம், திமுக, நம்மோடு இணைந்த கூட்டணிக்கட்சிகள் அத்த னையும் சிறப்பாக நடத்தக்கூடிய பெரிய எதிர்ப்புப் போராட்டத்திலே, திட்டமிட்டு மீண்டும் நாங்கள் குறுக்கு சால் ஓட்டிக் கொண்டிருப்போம், இதைத்தொடர்ந்து நடத்திக் கொண் டிருப்போம் என்று சொல்லக்கூடிய அளவிலே, அவர் கள் நடந்துகொண்டிருக்கக்கூடிய இந்த காலக்கட்டத் திலே ஒரு சரியான நேரத்திலே, தெளிவான ஒரு முடிவை இன்றைக்கு எடுத்து, அந்த வகையிலே இன்றைக்கு இந்த நீட் தேர்வுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். அந்த போர்க்களத்திலே, போராட்டக்களத்திலே நிற்க வேண்டும் என்று சொல்லக்கூடிய உணர்வோடு, நம்முடைய ஒப்பற்ற திமு கழகத்தினுடைய ஆற்றல்மிகு தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பிறகு இந்த இயக்கம் எவ்வளவு சிறப்பாக, எள்ளளவும் போர்க்குணத்தை மாற்றிக்கொள்ளாத ஓர் இயக்கமாக இருக்கும்   என்பதை மிகத் தெளிவாக இன்றைக்குக் காட்டிக் கொண்டிருக் கின்ற, நம்முடைய ஒப்பற்ற சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய வழியிலே இந்த இயக்கம்  இவ்வளவு வலிமையாக இருப்பதற்கு அடை யாளமே இளைஞரணி, அது ஒரு பாசறை, அது ஒரு கொள்கைப் பாசறை. அது வெறும் பதவிக்காக வந்தவர்கள் கூட்டம் அல்ல என்று சொல்லக்கூடிய கட்டத்திலே, இந்தப் போராட்டத்தை சரியான ஒரு நேரத்திலே சரியான தலைமையை வைத்து இங்கே நடத்தக்கூடிய வாய்ப்பைப்பெற்று, நம்முடைய ஒப்பற்ற இளைஞர்களின் வழிகாட்டியாக இருக்கக்கூடிய அருமைச் சகோதரர் நம்பிக்கை நட்சத்திரம் தமிழ்நாட் டிலே இளைஞர்களிடத்திலே வெறும் பதவிக்காக இளை ஞர்களைத் தயாரிக்க மாட்டோம், கொள்கைக்காக அவர்களைத் தயாரிப்போம். போராட்டக் களத்திலே அவர்களை ஆயத்தப்படுத் தக்கூடிய போர் வீரர்களாக, கருத்துப்போர் வீரர்களாக உருவாக்குவோம் என்ப தற்கான வகையிலே கொண்டு போய்க் கொண்டிருக்கக் கூடிய வகையில், இன்றைக்கு சிறப்பாக இந்த நீட் தேர்வுக்கு எதிராக முதற்கட்டம் இது. 

இளைஞரணி செயலாளர் உதயநிதி அவர்கள்  இது ஒரு முடிவல்ல, இது ஒரு தொடக்கம் என்று சொன்னார். தொடக்கம் மட்டுமல்ல, அப்படிப்பட்ட அருமைத் தளபதி அவர்கள் சொன்னார்கள், தளபதிக்குத் தளபதி யாக, தமிழ் நாட்டுத் தளபதியாக, இன்னுங்கேட்டால் உங்களுக்கு எத்தனையோ முகங்கள் உண்டு. ஆற்றல் உண்டு.  பன்முகத்திறமை உண்டு. "நான் அமைச்சராக இங்கே வரவில்லை, அமைச்சராகவும் நினைக்கவில்லை. நான் சகோதரனாக, ஒரு மனிதனாக, உணர்ச்சியுள்ள மனிதனாக, ஒரு மாமனிதனாக, எளிய மனிதனாக வந்திருக்கிறேன்" என்று சொன்னீர்கள் அல்லவா? அதைவிட நான் சொல்லுகி றேன், இந்த இயக்கத்திலே உங்களைப்போன்ற அய்ந் தாவது தலைமுறையைப் பார்க்கிறோம். நீங்கள் 5ஜி. 5ஜி எவ்வளவு வேகமாக இருக்கிறதோ, அந்த வேகம், ஆற்றல் தங்களுக்கு உண்டு, அதனால் நம்பிக்கை உங்கள் மீது  எங்களுக்கு உண்டு, நாட்டு மக்களுக்கு உண்டு. 

"மூத்த உறுப்பினர் எனும் முறையில் சொல்கிறேன்!"

உங்களுடைய வீரம் செறிந்த உரை, அறைகூவல் விட்ட உரை, அதற்குப்போதுமானது, நான் நீண்ட நேரம் பேசப்போவதும் இல்லை, தேவையும் இல்லை. அந்த அளவிற்கு நான் முடிவெடுத்திருக்கிற நேரத்திலே, ஒன் றைச் சொன்னீர்கள், "நான் ஒரு எளிய மனிதனாகத்தான், இந்த உணர்வுடன் இருப்பதாக" சொன்னீர்கள்.

நாங்கள் சொல்கிறோம், நாடு சொல்கிறது, நாட்டிலிருப் போரை பிரதிபலிப்பவர்கள் சொல்கிறோம், திராவிட இயக்கத்தினுடைய மூத்த உறுப்பினர் என்ற உரிமை யோடும், உறவோடும் உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் எல்லாவற்றையும்விட ஒரு வாழ்நாள் போராளி. உங்களுடைய போர் எப்போதும் வெற்றி பெறும். அஞ்சிப்போகவேண்டிய அவசியம் இல்லை. இன்னும் நிறைய விளக்கங்கள் சொல்லிவிட்டீர்கள். நீங்கள் விட்ட சவாலை ஏற்பதற்கு அவர்கள் தயாராக இருக்கமாட்டார் கள். அது தெரியும். காரணம் என்னவென்றால், அந்த காலத்திலேயே அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்கள் சொன்னார்கள், "பதவிக்காக வந்த இயக்கம் அல்ல. கொள்கைக்காக வந்தது" என்றார்கள். அதுவும் போராட் டத்திலே பூத்த மலர்கள் இந்த மலர்கள். காய்த்த கனிகள் இந்த கனிகள். ஆகவே, அவர்களுக்குத் தெரியாது. பீகாரிலே இருந்து வந்திருக்கிற அந்த அய்யருக்குத் தெரியாது. அவருக்கு இது தெரியாது. அந்த பாசறைக்குத் தெரியாது. பூமிகார் பிராமணன் என்று சொல்லக்கூடிய அளவிலே அந்த உணர்ச்சியோடு அவர்கள் இருக்கிறார் கள், அவர்கள் எத்தனை சவால் விட்டாலும் இங்கே எதுவும் நடக்காது.

அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக, 159 என்ற பிரிவிலே தனியாக ஒரு ஆளுநர் எப்படிப் பதவிப் பிரமாணம் எடுக்கவேண்டும், அந்தப்பதவிப் பிரமாணத் தினுடைய வாசகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை வழக்குரைஞராக இருக்கிறவர்கள் மட்டுமல்ல, மற்றவர் களும் தெரிந்துகொள்ள வேண்டும். அமைச்சர்களுககு இல்லாத பதவிப் பிரமாணம், குடியரசுத் தலைவரிலே இருந்து மற்றவர்களுக்கு  இல்லாத ஒரு பதவிப் பிரமாணம் ஆளுநர்களுக்கு  உண்டு. அதனை அம் பேத்கர் அவர்கள் வகுத்திருக்கிறாரா?

என்ன அந்த பதவிப் பிரமாண வாசகம்? நண்பர்களே, I will preserve, protect and defend the Constitution  என்று சொல்லி கடைசியாக   I will devote myself to the service and well-being of the people, மக்களுக்குத் தொண்டாற்றுவேன். welfare of the people  மக்கள் நலனைப் பார்ப்பேன் என்று உறுதியை சொன்னார். ஆனால், ஆளுநர் அதைச் செய்கிறாரா? 

எனவேதான், இந்தப் பதவிக்கு முற்றிலும் ஆளுநர் ரவி சரியானவராக இல்லை, லாயக்கானவராக இல்லை. அவர் எடுத்துக் கொண்டிருக்கக்கூடிய அரசமைப்புச் சட்டத்தினுடைய பிரிவுப்படி, அவர் எடுத்த உறுதிப்படி, அவர் இல்லை.

எனவே, நீங்கள் பதவியேற்பின்போது அதைத் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். ‘நீட்'டை நீக்க முடியுமா என்று கேட்கவேண்டிய அவசியம் இல்லை, மக்கள் தயாராக இருக்கிறார்கள். நாம் இந்தக்களத்தில் தயாரித் துள்ள தளபதிகள் இருக்கிறீர்கள், அமைச்சர்கள் இருக் கிறீர்கள், 

அந்த செங்கல் நினைவிருக்கிறதா?

மேலும் ஒன்று, அந்த செங்கல்லை பத்திரமாக வைத்திருக்கிறீர்கள். அந்த செங்கல் போன தேர்தலிலே எதற்குப் பயன்பட்டது? அங்கே இருக்க வேண்டிய எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியைக்காட்டிய அந்த ஒரு செங்கல், அந்த செங்கல் தான் - உங்கள் கையிலே! அந்த செங்கலை, ஏன் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். காரணம் நீங்கள் அதிபுத்திசாலி, அந்த செங்கல்லைக்கொண்டுதான் ‘நீட்'டின் கல்லறையை நீங்கள் கட்டப்போகிறீர்கள்.

'நீட்' தேர்வினுடைய கல்லறை, அதற்கு அச்சாரமாக உள்ள அந்த செங்கல்லையே வாங்கி கட்டி முடிப்பதற்கு மக்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள். 

இன்னும் ஆறே மாதங்கள்தான் நண்பர்களே, முடியுமா என்று கேட்கிறவர்களுக்குச் சொல்லுகிறோம், இந்த ஆட்சி விடைபெறப்போகிறது, எதேச்சதிகார ஆட்சி, பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். ஆட்சி, தமிழ்நாட்டிலே மட்டுமல்ல, இந்தியா முழுவதும் வெறும்  37 சதவீதத்தை மட்டுமே பெற்றவர்கள் தான் அவர்கள். மெஜாரிட்டி, மெஜாரிட்டி என்று சொல்கிற இந்த ஆட்சி இருக்கிறதே ஆர்.எஸ்.எஸ். ஆட்சி , பிஜேபி ஆட்சி, மோடி ஆட்சி அது முடிவுக்கு வருகின்ற காலக்கட்டத்திலேதான் இப்போது இருக்கின்றன. எனவே இந்த போராட்டங்கள் ஏதோ 5 ஆண்டுகள் கடந்து விட்டன என்று நினைக்க வேண்டிய அவசியமில்லை. 

நினைவிருக்கட்டும் நுழைவுத் தேர்வை ஒழித்தவர்கள் நாம்!

வரலாறு தெரியாதவர்களுக்குச் சொல்கிறோம், எம்.ஜி.ஆர். அவர்கள் நுழைவுத் தேர்வு என்று கொண்டு வந்த நேரத்திலே திராவிடர் கழகமும், திமுகவும், கலைஞரும் எல்லாம் சேர்ந்து போராடிய நேரத்தில் 24 ஆண்டுகள் தொடர்ந்து போராடினோம். 24ஆவது ஆண்டுக்குப்பிறகு கலைஞர் வந்தார், ஆட்சி மாறி மாறிச் சுழன்று வந்த நேரத்திலே நுழைவுத் தேர்வுக்கு விடை கொடுத்து எல்லோருக்கும் மருத்துவ வாய்ப்பு என்பது ஏற்பட்டது. 

எனவேதான், வரலாறு திரும்புகிறது. நிச்சயமாக நீங்கள் தொடங்கியிருக்கிற முயற்சி, காலையிலே இருந்து பட்டினிப் போர் என்ற பெயராலே ஓர் அறப்போரை முதற்கட்டமாக நடத்தியிருக்கிறீர்கள்.

22ஆம் தேதி அன்று நாடு முழுவதும் திராவிடர் கழக மாணவர்களை, பெற்றோர்களைத் திரட்டி அடுத்த கட்டத்துக்கு நாங்கள் நகர்த்துகிறோம். ஒவ்வொரு இயக்கமும் தமிழ்நாட்டிலே போராட்டக் களத்திலே நிற்கக்கூடிய அளவிலே உங்கள் முயற்சி வெல்லும். நீங்கள் எடுத்த காரியம் தோற்பதில்லை. திராவிடம் ஒருபோதும் தோற்பதில்லை. 

அதை வரலாறு என்றைக்கும் சொல்லும். அதற்குத் தான் இவ்வளவு பெரிய முயற்சி. இவ்வளவு தோழர்கள் இங்கே உறுதியோடு திரண்டு இருக்கிறார்கள்.

இது ஓர் அறப்போர் என்பதற்காகத்தான் இந்த அற வழியை நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். இதைத் தாண்டி, மக்கள் மத்தியிலே எந்தவிதமான அமைதிக்கும் குந்தகம் விளைவிக்காத ஒரு போராட்டம், கட்டுப்பாடு மிகுந்த ஒரு போராட்டம் என்பதை இளைஞர்களாக இருக்கிற நீங்கள் ஆற்றல்மிகு தலைமையால் அடை யாளம் காணப்பட்டு நீங்கள் நடத்தியிருக்கிறீர்கள். 

"உங்களுடைய முயற்சி வெல்லும்

ஒருபோதும் நீங்கள் தோற்க முடியாது!"

இப்படை வெல்லும்!

"இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்!" என்ற அந்த முயற்சியோடு இதை முடித்துவைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 

நிச்சயமாக அந்த செங்கல்லை மறக்காதீர்கள். கல்லறை கட்டப்படும். மறைந்தவர்களுடைய கண்ணீர் துடைக்கப்படும். 

மிகப்பெரிய அளவிலே அனைவருக்கும், அனைத் தும் என்ற சமூக நீதி, தந்தைபெரியாரின் கொள்கை, அறிஞர் அண்ணாவின் கொள்கை, கலைஞருடைய வழிகாட்டுதல், இன்றைய முதலமைச்சருடைய உறுதி மிக்க நிலைப்பாடு இவை அத்துணையும் வெல்லும்.

அத்தனையையும் சேர்த்து அவற்றின் முழு உருவமாக உதயநிதி அவர்கள்  இங்கே இருக்கிறார். எனவே உதயநிதி நமது புதிய நம்பிக்கை நிதி, போராளி, அந்த போராளியினுடைய புரட்சி வெல்லட்டும்!

எனவேதான் நீங்கள் நீண்ட நாள் வாழவேண்டும். உங்களுடைய உடல்நிலை பாதுகாக்கப்பட வேண்டும். 

"வெற்றி நமதே" என்று கூறி உதயநிதி அவர்களை வாழ்த்தி, (பொன்னாடை போர்த்தி, பெரியார் நூல்களை கொடுத்து), உங்கள் முயற்சியிலே , பெரியாரைக் காணுகி றோம்,  அண்ணாவைக் காணுகிறோம், கலைஞரைக் காணுகிறோம். 

எண்ணற்ற தோழர்கள் - போராளிகளாக இந்த இயக்கத்தில் இணைந்தவர்கள் அத்தனை பேரையும் தயார் செய்யுங்கள். இந்த படை நிச்சயம் வெல்லும்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

_--------------------+++++++++++--+++++----------


வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ’தொழ’ வைத்துவிட்டார்! மனம் திறக்கும் ஆவடி மாவட்டக் காப்பாளர் பா.தென்னரசு!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ’தொழ’ வைத்துவிட்டார்! மனம் திறக்கும் ஆவடி மாவட்டக் காப்பாளர் பா.தென்னரசு!

 ‘தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்றார் புரட்சிக்கவிஞர்!

8

நேர்காணல்: உடுமலை வடிவேல்

பெரியார், சுயமரியாதையை உயிர்ப்பிக்கின்ற வற்றாத நதி! அதன் இலக்கு, சுயமரியாதைக் கடல்! இது எல்லா மக்களுக்குமானது! அந்த சுயமரியாதை நதியில், ஜாதி, மத, பாலியல் பேதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாகவே கலந்துவிடுவார்கள்! இது நேரடியாக மழைநீர், மண்ணுக்கு வருவதைப் போன்றது. தேக்கங்களில் உபரி நீரைத் திறந்துவிடுவார்கள் அல்லவா? அதுவும் அந்த சுயமரியாதை நதிக்குத்தான் வந்துசேரும். இது பரம்பரையாக சுயமரியாதைக்காரர்களாக இருப்பவர்களின் வாரிசுகள்! அவர்களை கைப்பிடித்து அழைத்துவந்து, சுயமரியாதை நதியை அறிமுகம் செய்வித்து, கலக்கவிடுவார்கள்! இன்னும் சிலர், நதியின் ஓட்டத்தை தடுக்க முயன்று, முடியாமல் தாமும் நதியுடன் சேர்ந்து சுகமடைவர்! இவர்கள் எதிர் சித்தாந்தக்காரர்கள்! சரியான புரிதலில்லாத வைதீகக் குடும்பங்களில் பிறந்த ஓரிருவர் இயல்பாகவே சுயமரியாதை உணர்வு பெற்று, எங்கெங்கோ ஓடிவிட்டு பின்னர் தானாக அந்த சுயமரியாதை நதியைத் தேடி வந்து, ’செம்புலப் பெயல் நீர்போல’ தாமாகக் கலந்துவிடுவர்! இவர்கள் சுயமரியாதைச் சுயம்புகள்! அப்படிப்பட்ட ஆயிரமாயிரம் சுயமரியாதைச் சுயம்புகளில் பா.தெட்சிணாமூர்த்தி எனும் பா.தென்னரசும் ஒருவர். அவரை 2023 சனவரி 2 ஆம் நாள் பட்டாபிராமில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து உரையாடினோம்.

அய்யா வணக்கம்.

வணக்கங்கய்யா.. 

கேள்வி: முதலில் உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

பதில்: அம்மா  பவுனம்மாள், பிறந்தது பட்டாளம் தேவராஜ் முதலி தெருவில். அப்பா பாலகிருஷ்ணன், அவர் பிறந்தது ஆம்பூர், அப்பா காங்கிரஸ்காரர். கூடப் பிறந்தவங்க மொத்தம் ஏழு பேரு. நான் அஞ்சாவது பிள்ளை. 1947 இல் ’உமராபாத்’தில் பிறந்தேன். இது அன்றைய வேலூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூரிலிருந்து 8 கி.மீ இருந்தது. அப்பாவுக்கு எழுதப் படிக்க தெரியாது. காமராசர் சொன்னார் என்று, எங்கப்பா 1965 இலேயே 5 ஆம் வகுப்பு வரையிலுமான தொடக்கப் பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டிக்கொடுத்திருக்கிறார். அதனாலேயே, இப்போதும் அந்தப் பகுதியில் ‘பள்ளிக்கூடத்தான் பேரன்’ என்றே எனக்கொரு பெயருண்டு. ஆனால், எனக்கு எட்டாம் வகுப்பு வரையில் படிக்கத்தான் வாய்ப்பு இருந்தது.

கேள்வி: ஓ... நீங்க எந்த வயதில் இயக்கத்திற்கு வந்தீர்கள்? 

பதில்: இயக்கத்திற்கு வருவதற்கு முன்பேயே இயக்க உணர்வு வந்துவிட்டதுங்கய்யா... எனக்கு 14 வயதிருக்கும்போதே தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க. ஏன்னா? எங்கப்பா முஸ்லிம்களுக்கு நல்ல மரியாதை கொடுத்து, கைகட்டி நின்று எஜமான்னு சொல்லுவாரு. நான் அதை எதிர்த்துப் பேசுவேன். ’அவரும் மனிதர், நீங்களும் மனிதர், அவரை ஏன் எஜமான் என்கிறீர்கள்?’ என்பேன். இதற்காகவும் ”கோவிந்தா”ன்னு சொல்லச் சொல்லியும் கட்டிவைத்து அடிப்பாரு. ’முடியாது, ’கோவிந்தன்’ இருந்தால்தானே சொல்வதற்கு’ என்று, அந்த வயதிலேயே பதில் சொல்லியிருக்கேன். உமராபாத் என்ற இடத்திலிருக்கும் கைலாசகிரி மலைக்கு பறையர்களுக்கு ஒரு வழி? வசதி உள்ளவங்க போறதுக்கு ஒருவழி? ”ஏண்டா, ஆண்டவனைக் கும்பிடுவதற்கு இரண்டு வழியா?” என்று தகராறு செய்தேன். வேலூர் கலெக்டர் வந்தாரு! எனக்கு பதிலாக எங்க அப்பாவை கைது பண்ணிட்டாங்க. 

கேள்வி: ஓ, சரி, தந்தை பெரியாரை எப்போது சந்தித்தீர்கள்?

பதில்: 1956 அல்லது 1957 இல் என்று நினைக்கிறேன். ஆம்பூரிலிருந்து 10 கிலோ மீட்டரில் உள்ள பாலூர் என்ற கிராமத்தில் ஒரு கூட்டத்தில் பெரியார் பேசினார். அப்போது அங்கிருந்த பார்ப்பன வழக்குரைஞர் குப்புசாமி என்ற பார்ப்பான் வைத்ததுதான் சட்டம். அவர் சுகர்மில் இயக்குநர் வேற? அறங்காவலர் குழுத் தலைவரும் அவர்தான். ஒரு மணியகாரருக்கு இருக்கிற அதிகாரம் அந்த பாப்பானுக்கு இருந்தன. பள்ளிக்கூட சான்றிதழா? அவன்தான் கையெழுத்துப் போடணும். ஜாதி சான்றிதழா? அவன்தான் கையெழுத்து போடணும். அவன் பில் பாஸ் பண்ணாதான், விவசாயிக்கு கரும்புக்கு கட்டிங் கிடைக்கும். இதற்காக ஆறு மாசம் வரைகூட விவசாயிகள் காத்துக்கிடப்பார்கள். பள்ளிக்கூட வாத்தியாருக்கு இரண்டு இலவச வீடுகள் இருக்கும். பாப்பான்தான் வாத்தியாரு. அப்புறம்? வீடும் அவனுக்குத்தான். வெள்ளைக்காரன் காலத்திலேயே இவங்க இந்த இடத்தை புடிச்சிட்டாங்க. இப்படி பலப்பல கொடுமைகள். அவர்களால் ஊரே பாதிக்கப்பட்டிருந்தது. கவுண்டர்கள், கம்மாநாயுடு, நாலு வகை செட்டியாருங்க எல்லாரும் சேர்ந்து, அந்த பார்ப்பானைக் கண்டித்துத்தான் பாலூரில் கூட்டம் போடுகிறார்கள். அந்தக் கூட்டத்தில்தான் பெரியார் பேசுகிறார். 

அந்தக் காலனியில் தினமணி, கல்கண்டு படிக்கிற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ’பெருமாள்’ என்றொருவர் இருந்தார். கையில் தடியுடனும், அதன் நுனியில் பொரி மூட்டையைக் கட்டிக்கொண்டு தோளில் போட்டுக் கொண்டு வருவார். அவர்தான் எனக்கு பெரியார், காமராசர், தமிழ்வாணன் ஆகியோரைப் பற்றி படிச்சுப் படிச்சு சொல்வார். அந்தப் பெருமாள்தான், என்னை பெரியார் பேசுகிற அந்தக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அபோதுதான் பெரியாரை நான் நேரில் பார்த்தேன். அன்றைக்கு அய்யா பேசினது சரியாக நினைவு இல்லை. ஆனால், ’நான் இங்கே அறிவாளின்னு வரல! புத்திக் கூர்மை உள்ளவன்னு வரல! நான் சொன்னா நீங்க எல்லாத்தையும் கேட்டுக்கணும்னு நான் சொல்லல! என் மனசுக்கு பட்டதை நான் சொல்லப் போறேன். அதை ஏத்துக்கறதும், ஏத்துக்காததும் உங்க விருப்பத்தை பொறுத்தது’ அப்பிடின்னு பேசுனதுதான் நினைவில் இருக்கு. 

கேள்வி: உங்களுக்கு திராவிடர் கழகத்தில் சேரக்கூடிய வாய்ப்பு எப்போது வந்தது?

பதில்: 1962 இல் தொழில் செய்வதற்காக சென்னைக்கு வந்துட்டேன். அரசு உத்தியோகம் இல்லாததால் எனக்கு பொண்ணு குடுக்க மாட்டேன்னுட்டாங்க. வியாபாரத்தை அவர்கள் தொழிலாகவே கருதவில்லை. வேற வேலை பார்க்க வேண்டுமென்று எனக்கும் தோன்றவில்லை. ஆனால், வியாபாரத்தில்தான் கட்டுக் கட்டாக பணம் வந்தது. அப்போதுதான் எனக்கு அரசியல் தொடர்பு ஏற்பட்டது. சத்தியவாணிமுத்து 1967 தேர்தலில் நின்றார்கள். அவங்களுக்கு நானும் வேலை செய்தேன். காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு ரொம்பத் தொல்லை கொடுக்கும். அப்போது சலூன் கடை, லாண்டரி கடைகள்தான் திமுகவுக்கு கிளைக் கழகம். அங்கேதான் பேச்சு! சந்திப்பு!

கேள்வி: ஓ...நீங்க முதலில் தி.மு.க.வில் இருந்தீர்களா?

பதில்: ஆமாங்கய்யா, 1968லேயே தி.மு.க. தொழிலாளர் கழகத்தில் உறுப்பினராக இருந்தேன். 1970 இல் தான், பட்டாளம் மணிக்கூண்டுக்குப் பக்கத்தில் திராவிடர் தொழிலாளர் கழகத்தை ஆசிரியர் துவக்கி வச்சாங்க. அந்த ஆண்டுதான் பகுத்தறிவாளர் கழகமும் தொடங்கப்பட்டது. அதற்குப்பிறகுதான் ஆசிரியர் தொடர்பு எனக்குக் கிடைத்தது. ஆசிரியர் என்னை தொழிற்சங்கத் தேர்தலில் நிற்கச் சொன்னார். நான், அழகிரி, வேலு, கருங்குழி கண்ணன், வெங்கடேசன், சண்முகம், குப்புராசு மச்சான் ஓட்டேரியில் இருக்கிற யமரோஸ் ஏழு பேருமே ’திராவிடர் கழக தொழிலாளர் அணி’யில் தேர்தலில் நின்று, வெற்றி பெற்றவர்கள். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ஆசிரியரிடம், ’தொழிற்சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கிடைக்கிற சலுகை காரணமாக கேளிக்கை, பொழுதுபோக்குன்னு ஊர் சுத்திட்டு இருப்பாங்க. அதனால கழகத்துக்கு பயன்பட மாட்டாங்க’ என்று சொன்னேன். ஆசிரியரும் அதை ஆமோதித்தார். 

அந்த சமயத்தில்தான் சங்கராச்சாரியார் பின்னி மில்லுக்கு வந்தாரு. நான், ’ஓடிப்போன சங்கராச்சாரிக்கு இங்கென்ன வேலை? பண்டு, பலகாரத்தோட சோறு போட வருகிறாரா?’ என்று தட்டியில் எழுதி வச்சிட்டேன். அப்போது கேண்டீனில் உணவு அஞ்சு ரூபாயிலிருந்து, அறுபது ரூபாய்க்கு விலை ஏத்தியிருந்தாங்க. அதைக் கண்டித்துத்தான் ஆர்பாட்டம், பேச்சுவார்த்தை நடந்துகிட்டு இருக்கு. என்னைக் கைது பண்ணிட்டாங்க. அதுக்கப்புறமும் பூஜை பண்றதுக்கு சங்கராச்சாரியாரை கூட்டிட்டு உள்ளே வராங்க. எங்க பக்கம் நாலு பேர் சேர்ந்து பம்பை அடிச்சாங்க. சத்தம் பெருசா இருந்துச்சு. சங்கராச்சாரி போயிட்டாரு. பூஜையும் நடக்கவில்லை. 

கேள்வி: திராவிடர் கழகத்திற்கு எப்போது வந்தீர்கள்?

பதில்: திராவிடர் தொழிலாளர் கழகம், திராவிடர் கழகம் என்று பொறுப்புகளுக்கு மாறி, மாறி வந்துட்டேன். தொழிற்சங்கத்தில் இருந்து மங்களபுரம் திராவிடர் கழகத் தலைவர். பிறகு, வட சென்னைக்கு செயலாளர். மறுபடியும் மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர். மறுபடியும் மங்களபுரம் கிளைக்கழகப் பொறுப்பு. அப்போது, பெரம்பூர் பாசறை பாலனின் அண்ணன் நெடுஞ்செழியனுக்குப்பிறகு, ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு, ’தொழிலாளர் கழகத்தினுடைய தலைவரா இரு’ன்னு சொன்னாரு. அப்போதுதான் குணசீலன் ஓய்வுபெற்று வெளியே வந்தார். உடனே அவரைத் தலைவராகப் போட்டுட்டு, என்னைச் செயலாளராகப் போட்டாங்க. நாங்கள் பல்வேறு இடங்களுக்கு சைக்கிளிலேயே போவோம்; கூட்டம் போடுவோம். என்னை உடகார வைத்துக்கொண்டு குணசீலன் சைக்கிளை மிதிப்பாரு. சென்னையிலிருந்தும் ஆவடிக்கு வருவோம். செய்த பணிகளைப் பற்றி ஆசிரியரிடம் சொல்லுவோம். மாதவரத்தில் ’ஒருநாள் குடும்பவிழா!’ நடத்தினோம். அதில் கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் போன்றவற்றை நடத்தினோம். ஆசிரியர் முழுமையாக உடனிருந்தார்.  

கேள்வி: உங்கள் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்க.

பதில்: 1975 இல் திருமணம் நடந்தது. இணையர் பெயர் உமாராணி. கொள்கையில் என்னைவிடவும் அவர் வேகமாக இருந்தார். ஜீவா, மீனா, சித்ரா ஆகியோர் மகள்கள். எல்லாரும் நன்றாக படித்திருக்கிறார்கள்; நன்றாக இருக்கிறார்கள். இணையர் உமாராணி, ’பெரியார் சமூகக் காப்பு அணித் தலைவர்’ உள்ளிட்ட, மகளிர் அணியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் சென்று வந்திருக்கிறார்.

கேள்வி: பெரியார், மணியம்மையார் ஆகியோருடனான நேரடியான அனுபவம் பற்றி சொல்லுங்கள்

பதில்: பெரியாரிடம் நேரடியான அனுபவம் குறைவு. மணியம்மையார் கிட்ட சொல்ல முடியும். அதில் எப்போதும் நினைவிலிருப்பது அப்பல்லாம், காஞ்சிபுரம், திருத்தணி போன்ற வெளியூரிலிருந்து வருகிறவர்களுக்கு திடலில் வைத்து சோறு போடணும். அப்போதிருந்த எம்.ஆர்.ராதா மன்றம் பள்ளமாக இருக்கும். அதில் ஓரமாக உட்கார வைத்துதான் சோறு போடுவோம். அப்பொழுது கவிஞர் வீட்டில் இருந்து கரண்டி, கிண்ணம் வாங்கிட்டு வந்து, வந்தவங்களுக்கு சோறு போட்டு அனுப்புவோம். சமைக்கிறதுக்கு எப்படியோ மணியம்மையார் ஆளுங்களை வைத்து செஞ்சிடுவாங்க. பரிமாறுவது, இலையெடுப்பது எல்லாமே நாங்கதான். ரொம்ப தூரம் போற தோழர்கள், பட்டினியா போகக் கூடாது அப்படிங்கறது மணியம்மையாரோட கருத்து. 

(தொடரும்....)

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ’தொழ’ வைத்துவிட்டார்! மனம் திறக்கும் ஆவடி மாவட்டக் காப்பாளர் பா.தென்னரசு!

நேர்காணல்: உடுமலை வடிவேல்

8

கேள்வி: தலைமை எண்ணுவதைக்கூட நீங்கள் செயல்படுத்தியதை நான் கண்டுள்ளேன். அதைப்பற்றி சொல்ல முடியுமா? 

பதில்: ஒருவேளை பலராமன், குணசீலன், செம்பியம் ஏழுமலை போன்றவர்களிடமிருந்து அது வந்திருக்கலாம். முக்கியமாக காலம் சென்ற வடசென்னை மாவட்டத் தலைவராக இருந்த ப.கவுதமனின் தந்தை, பலராமன் அய்யாவைச் சொல்லலாம். பொறுப்புக்கு வருவதற்கு முன்பே பலராமன் அய்யா தொடங்கியிருந்த வடசென்னை பெரியார் மாளிகை கட்டட வேலையில் பங்கெடுத்துக் கொண்டேன். அதைத் தடுக்க ஆர்.எஸ்.எஸ்.காரங்க தொல்லை கொடுத்திருக்காங்க. இவரு, அவர்களை சிதறடிச்சிருக்காரு. பலராமன் அய்யா கொள்கைத் தெளிவும், துணிச்சலும் மிக்கவர். அவரும் சைக்கிளில்தான் வருவாரு. தோழர்களின் குடும்பப் பிரச்சனைகளுக்கு நல்ல,நல்ல ஆலோசனைகள் சொல்வாரு! சம்பாதிக்கிற காசை வீட்டில் கொடுக்கணும், சிக்கனமாக செல்வு செய்யணும், அப்பொழுதுதான் வாழ்க்கையில் முன்னுக்கு வரமுடியும், அப்படி வந்தாதான் இந்தக் கொள்கைக்காரங்க கெட்டுப்போகலேன்னு மக்களுக்குப் புரியும் அப்பிடிம்பாரு; தலைமையின் எண்ணப்படியே நடந்துக்குவாரு; ஏதாவது முக்கியமான செய்தி இருந்தாக்கூட, பெரியார் திடலில் உள்ள தலைவர் அறைக்குள்ளேகூட போகாமல் ஓரமா காத்துகிட்டு இருப்பாரு; ஆசிரியர் வெளியில் வந்து இவரைப் பார்த்து, ’என்னய்யா இங்க நிற்கறீங்க. உள்ளே வரவேண்டியதுதானே? என்று கடிந்து கேட்பாரு. இவரு, ‘உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். நானும் உங்க நேரத்தை எடுத்துக்கணுமா?’ என்று சொல்லிவிட்டு, செய்தியைச் சொல்லிவிட்டு வந்துவிடுவார்! 

வடசென்னையில் ஈஸ்வரன் தெருவில்தான் அடிக்கடி கூட்டம் போடுவோம். அங்கிருக்கும் ஒரு பூங்காவில், ஆர்.எஸ்.எஸ். காரர்கள் சாகா நடத்துவாங்க. நம்மிடம், கணேசன், ராஜேந்திரன், கருத்தோவியன், ஏழுகிணறு கதிரவன், பெத்தநாயக்கம்பேட்டை ராஜேந்திரன், அவரு மகன் பிரபு, இந்தப் பக்கம் பட்டாளத்தில் ரவிச்சந்திரன், பட்டாளம் பன்னீர், தேவராஜ், சேகர் ஆகியோர் இருந்தார்கள். அதனால, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிராக நம்ம பிரச்சாரமும் ஜோரா இருந்தது. சிலம்பம் பயிற்சியை நாமளும் செஞ்சுகிட்டு இருந்தோம். பலராமன் இயக்கக் குடும்பத்து பெண்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பாரு. அவருதான் இயக்கம் என்றால் என்ன? குடும்பம் என்றால் என்ன? என்பதை வாழ்ந்துகாட்டி எங்களுக்கு புரியவைத்தவர். 

கேள்வி: அதோடு முடிஞ்சு போச்சா பிரச்சினை? 

பதில்: 11.04.1985இல், ஆசிரியர், தோழர் க.பார்வதிக்கு, வடசென்னை ராயபுரத்தில் கூட்டம் நடத்துவதற்கு தேதி கொடுத்திருந்தாரு. மகளிர் நிதி திரட்டி அந்த நிகழ்ச்சியை நடத்துவாங்க. நம்ம ஒத்துழைப்பும் இருக்கும். அங்கு நமக்கும், இந்துமுன்னணிக்கும் பிரச்சினை ஏற்பட்டது. பாண்டியன் என்ற பெயர் மட்டும் நினைவில் இருக்கிறது. பத்து பேரோடு ஒரு முட்டுசந்தில் ஆசிரியர் வேன் வரும்போது மடக்கிட்டானுங்க. கூட்டம் முடிஞ்சு நம்ம தோழர்கள் பெரும்பாலும் போயிட்டாங்க. ஆனாலும் சமாளிச்சோம். அவங்களும் கம்பு வச்சிருந்தாங்க, நாமும் ஏழெட்டு பேருடன் கம்புகளோடதான் இருந்தோம். தாக்குதல் நடத்துனாங்க. நாமும் திருப்பித் தாக்கினோம். அதுக்குள்ள காவலர்கள் வந்து, ஆசிரியர் வண்டியை பத்திரமாக அனுப்பிவச்சாங்க. பிறகு வழக்கு நடந்தது.  

கேள்வி: நெடிய இயக்க வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்கள் பற்றிச் சொல்லுங்கள்!

பதில்: மு.நீ.சிவராசன் அலுவலக அறையில் இருந்தேன். உள்ளிக்கோட்டை வை. கலை யரசன் அலுவலகப் பணியாக வெளியில் போயிருந்தார். வேகமாக நாலஞ்சு பேரு வந்தாங்க; ஆங்கிலப் பயிற்சி வகுப்புல சேரணும் அப்பிடின்னாங்க; நானும் சரியென்று படிவம் எடுத்து கொடுத்திட்டேன். நிரப்பி, அதற்குரிய காசும் கொடுத்தாங்க. கலையரசன் வந்தவுடன் அவரிடம் ஒப்படைத்தேன். விண்ணப்பங்களை பார்த்துவிட்டு, ”என்னங்கய்யா இப்படி பண்ணிட்டீங்க?” என்றார் அதிர்ச்சியுடன். நான், "என்னப்பா?” என்றேன். “பார்ப்பனர்களைச் சேர்த்திருக்கீங்களே” அப்பிடின்னாரு. “என்னடா இது? படிக்கிறேன்னு வந்தாங்க. கொடுத்திட்டேன்” அப்பிடின்னேன். அடுத்தநாள் மு.நீ.சிவராசன் வந்தாரு, “ஆசிரியர் என்ன சொல்லுவாருன்னு தெரியலயே”ன்னு ஆசிரியரிடம் நடந்ததை சொல்லியிருக்கிறாரு. அவரோ அமைதியாக, "எத்தனை மாணவர்கள்?” என்று கேட்டிருக்காரு; இவரு, "40ங்க” என்று சொல்லியிருக்காரு; "எத்தனை பேர் பார்ப்பனர்?”னு அவரு கேட்க, இவரு, "3 பேருங்க” என்றிருக்கிறார். ஆசிரியரோ, “விழுக்காட்டு அளவில் 3 பேரு இருக்கலாம், போய்யா” அப்பிடின்னுட்டார். அந்த சம்பவத்தை மறக்கவே முடியாது. 

100 கூட்டம் நடத்துவதாக திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கிற காலம். அப்போதெல்லாம் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு கூட்டம் நடத்துவோம். ஆசிரியர், ”உன்னால் முடியும்! நீ நடத்துய்யா” என்று என்னை ஊக்கப்படுத்தினார். எங்கெங்கு மக்கள் கூடுவார்கள் என்பதையும் ஆசிரியரே சொன்னார். வட சென்னை, தென்சென்னை, சாலிக்கிராமம் வரையிலும் போய் கூட்டம் போட்டோம். அடுத்து ஜமாலியால பேசும்போது சலசலப்பு வந்துச்சு. முதல்நாள் புரசைவாக்கத்தில் நடத்திட்டோம். ஆவடியில் மேடை போட்டும், மற்ற மாவட்டங்களில் மூன்று ஆட்டோக்களில் ஒலிபெருக்கி வைத்தும் பிரச்சாரம் செஞ்சோம். வியாசர்பாடியில் அடுத்த கூட்டம். பெரம்பூர் கந்தன் ஒத்துழைப்போடு மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள, தணிகாச்சலம் ஏற்பாடு செய்திருந்தார். 

கூட்டம் முடித்து இரவு 10 மணிக்கு, பெரியார் செல்வன், திருநாவுக்கரசு, லைலேண்ட் செல்வராஜ், தங்கமணி தம்பி இவங்க எல்லாம் சாப்பிட்டு முடிஞ்சு போன பிறகு, எருக்கஞ்சேரி அன்பு கிட்ட மினிட்ஸ் புத்தகம், ஃபைல் எல்லாத்தையும் கொடுத்துட்டு, பெரம்பூர் பஸ் ஸ்டாண்ட் வந்து, ரயில்வே லைன் தாண்டி வீட்டுக்குப் போக இருந்தேன். அங்கே தண்டவாளத்தில் நான்கு பேர் பட்டாக்கத்திகளுடன் படுத்துட்டு இருக்காங்க. ஒருவன் சட்டென்று பட்டாக் கத்தியை என் கழுத்தில் வச்சிட்டான்; கத்தியைப் புடிச்சு திருப்பி அவன் முகத்தை பார்க்கலாம் என்பதற்குள், விரல்களில் காயமாகி ரத்தம் கசியுது; சிரமத்துடன் திரும்பிப் பார்ப்பதற்குள் ஒருத்தன் ஓடி வந்தான்; அவன் கையிலும் பட்டாக்கத்தி; நான் பின்னால் நகர்வதற்குள் வயிற்றில் சொருகிட்டான்; கத்தி முதுகுக்குப் பின்னால் வந்திடுச்சு; கழுத்தில் கத்தி வைத்தவனை கீழே தள்ளிவிட்டேன்; வயிற்றில் சொருகிய கத்தியுடனேயே, இந்தப்பக்கம் வந்தேன். ஆட்டோவுக்கு பயன்படுத்துகிற ரெக்சினை எடுத்து ரத்தம் வருகிற இடத்தில் வைத்து அழுத்திக் கொண்டேன். வெள்ளையன் தம்பி என்னைப் பார்த்துட்டான்; பிறகு கே.எம்.சி. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அப்போது செல்போன் கிடையாது. ஊத்தங்கரை பழனிச்சாமி வீட்டில்தான் போன் இருந்தது. அதில் அழைத்து ஆசிரியருக்கு தகவல் கொடுத்தார்கள். உடனடியாக ஆசிரியர், மேலாளர் சீத்தாராமனுக்கு தகவல் கொடுத்து, பெரியார் சமூகக் காப்பு அணியைச் சேர்ந்த 10 பேரை எனக்கு பாதுகாப்புக்கு போடச்சொன்னார். உடல் நிலை சரியில்லாத செய்யாறு அருணாச்சலமும் வந்துட்டாரு. பஞ்சாட்சரம் அருகிலேயே இருந்தார். மதியத்திற்கு மேல்தான் உடம்பிலிருந்த கத்தியை வெளியில் எடுத்தாங்க. பகல் 2 மணிக்கு மேலதான் எனக்கு விழிப்பு வந்தது. நான் மயக்கத்தில் இருக்கும் போதே ஆசிரியர் ஏராளமான தோழர்களுடன் வந்து பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார். ஆசிரியர், மறுநாளும் அம்மாவுடன் வந்து, “உடம்பைப் பார்த்துக்கொள்” என்றார். கே.எம்.சி.யிலிருந்து பெரியார் திடலுக்கு வந்தேன். அங்கு 20 நாட்களுக்கு மேலே கவிஞர் வீட்டில்தான் உணவு.

கேள்வி: அதற்குப் பிறகு உங்கள் இயக்கச் செயல்பாடு எப்படி இருந்தது?

பதில்: அதற்குப் பிறகுதான், வேகமாக வேலை செஞ்சேன். தங்கசாலை மணிக் கூண்டு பக்கத்தில் மாநில மாநாடு நடத்துகிற பொறுப்பை ஆசிரியர் என்னிடம் கொடுத்தார். அதே போல தங்கசாலையிலும் மத்தியிலிருந்த தலைவர்கள் வந்தாங்க. அப்போதெல்லாம் பதாகை போட வாய்ப்பில்லை. லாங்லாத் துணி எடுத்து, ஒரு லோடு லாரியில் மரம் எடுத்துவந்து, ரீப்பராக மாற்றி, துணியில் எழுதி 15, 20 அடி பேனர் விளம்பரம் செய்தோம். 

எனது பெயரையே ஆசிரியர்தான் மாற்றினார். அதாவது, பெங்களூரிலுள்ள அலசூர் ஏரிப் பக்கத்தில் இருக்கும் கண்டோன்மெண்ட் பகுதியில், கர்நாடகா திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த, தமிழ்ச்சங்க நிகழ்ச்சியில்தான் பா.தெட்சிணாமூர்த்தி என்ற சமஸ்கிருதப் பெயரை ஆசிரியர், பா.தென்னரசு என்ற தமிழ்ப் பெயராக மாற்றினார். 

கேள்வி: ஓ... சரி, கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும் போது, இன்றைக்கு உங்கள் உணர்வு எப்படியிருக்கிறது? 

பதில்: இயக்கத்திற்கு வந்து 50 ஆண்டுகள் ஆயிற்று! கடந்த ஜனவரியில் பெரியார் திடலில் ’சமூகநீதி பாதுகாப்புப் பயணம்’ செல்வதற்கான கலந்துரையாடல் கூட்டத்தில் ஆசிரியரைப் பார்த்தபிறகு, கிட்டத்தட்ட எனது நோய்த்தன்மை குறைந்தது போலானது. பிப்ரவரி 3 ஆம் தேதி ஈரோட்டில் தொடங்கி கடலூர் வரை நடைபெறும் சுற்றுப்பயணம் குறித்து அவர் பேசியது எனது உற்சாகத்தை அதிகப் படுத்தியிருக்கிறது. ஆசிரியர், பெரியாரையும் மிஞ்சிவிட்டார். ”மண்டைச் சுரப்பை உலகு தொழும்” என்றார் புரட்சிக்கவிஞர்! ஆசிரியர் ’தொழ’ வச்சுட்டார்! ஆசிரியர் ’பெரியார் உலகம்’ என்ற மிகப்பெரிய திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். ஆவடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பெரியார் உலகத்திற்கு ஏறக்குறைய ரூ.10 லட்சம் நிதி திரட்டிக் கொடுத்திருக்கிறோம்! சென்னையைப் பொறுத்தவரையில் ஆவடி மாவட்டத்தில்தான் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகம். கொடி மரங்கள் 67 இருக்கின்றன. 

இன்னும் இது அதிகமாகுமே தவிர குறையாது. இதற்கான அடித்தளமாக, ஆவடி பெரியார் மாளிகை 2007இல் தொடங்கப்பட்டு, சிறுகச் சிறுக சேகரித்து 2020இல் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. ஆவடி மனோகரன், ஆவடி கோ.முருகன், உடுமலை வடிவேல், வெ.கார்வேந்தன் உள்ளிட்ட ஏராளமான இயக்கத் தோழர்கள், பகுத்தறிவாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் உள்ளிட்ட அனைத்துக் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களின் பங்களிப்போடும் கட்டப்பட்டு, மேலே கம்பீரமாக கழகக்கொடி பறக்கிறது. ஆசிரியரை அழைத்து துவக்க விழா நடத்தவேண்டும் என்பது நீண்ட காலத் திட்டம். 

அதற்குள் எனக்கு உடல்நிலை சரியில் லாமல், வீட்டிற்கும் மருத்துவமனைக்குமாக அலைந்து கொண்டிருக்கிறேன். எனது இணையருக்கும் உடல் நிலை சரியில்லை. எனது இயக்க வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, மிகுந்த மன நிறைவுடன்தான் இருக்கின்றேன் என்ற தென்னரசுவுக்கு 76 வயதுதான் என்றாலும், தனது உடல்நிலையை கருதி, ஈரோடு பொதுக் குழுவுக்கு சிலநாட்களுக்கு முன்பு, ஆசிரியருக்கு தன்னுடைய இயலாமையைச் சுட்டிக்காட்டி தன்னைப் பொறுப்பிலிருந்து விடுவிக்கக் கோரி, கடிதம் மூலம் வேண்டுகோள் வைத்திருந்தார். தலைவரும் கோரிக்கையை ஏற்று, அவரை மாவட்டக் காப்பாளராக அறிவித்திருக்கிறார். கடந்த 3-6-2023 அன்று பொறுப்புகள் மாற்றப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் ஆவடி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்திலும் தனது உடல் நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் கலந்துகொண்டு, அடுத்த தலைமுறைக்கு நான் வழிகாட்டுவேன் என்றும் உறுதியளித்திருக்கிறார் என்பதை எண்ணும்போது, மலைப்பாகத்தான் இருக்கிறது! அந்த உணர்வு பெரியாரில் தொடங்கி, அன்னை மணியம்மையார், ஆசிரியர் போன்ற தலைவர்களிடம் மட்டுமல்ல, ஒரு சாதாரண தொண்டரிடமும் இருப்பதுதான் அந்த மலைப்பை இன்னமும் அதிகப்படுத்துகிறது! 

துரை அருண் விடுதலை சந்தா வழங்கல்

விடுதலை சந்தா

28

சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞரும், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவருமான  துரை அருண், இரண்டாண்டு விடுதலை சந்தாக்கள் மற்றும் ஓராண்டு மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தாக்களை கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார் உடன் திராவிடர் கழக வழக்குரைஞணித் தலைவர் த.வீரசேகரன் ( 15.07.2023)

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

மத்தியப் பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் சமூக அநீதியைக் கண்டித்து தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்


17
சென்னை, ஆக.13 மத்தியப் பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு  சமூக அநீதியை இழைத்து வரு கின்ற ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து நேற்று (12.8.2023) மாலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமூக நீதி என்பது நமது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலேயே, எடுத்த எடுப்பிலேயே உறுதி செய்யப் பட்டுள்ள குடிமக்களின் பறிக்கப்படக் கூடாத உரிமையாகும்!

18

"Justice, Social, Economic and Political" என்ற சொற்றொடர்கள் மிகவும் கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய முக்கிய அம்சங்களாகும். அந்த வகையில் கூட, முதலில் சமூக நீதி, இரண்டாவது பொருளாதார நீதி, மூன்றாவது அரசியல் நீதி என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. 

ஆனால், இந்த சமூக நீதியை இதற்கு முன்பிருந்த காங்கிரஸ் - திமுக முதலிய கட்சிகளின் கூட்டணியான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA - United Progressive Alliance) அரசு படிப்படியாக செய்தது!

அய்.அய்.டி., அய்.அய்.எம்., போன்ற அமைப்புகள், மத்தியப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் கல்வியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவருக்கு, அதற்கு முன் கிடைக்காத இடஒதுக்கீடு கிட்டும் வாய்ப்பு - அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கொண்டு வந்து நிறைவேற்றிய 93ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தச் சட்டம் மூலம் கிடைத்தது

அதைப் பிரதமர் மோடி தலைமையில் அமைந்த ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசு தட்டிப் பறிக்கும் வகையில், மத்திய பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்கள் நியமனங்களில் 45 மத்தியப் பல்கலைக் கழகங்களில் 4 சதவிகிதம்தான். பிற்படுத் தப்பட்ட சமூகத்தினைச் சார்ந்த பேராசிரியர்கள் உள்ளனர்.

இதன் பொருள்: மண்டல் பரிந்துரை ஆணை மோடி ஆட்சியில் குப்பைக் கூடைகளில் தான் என்பது புரிகிறது.

அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதிலிருந்தே வழங்கப்பட்டுள்ள சட்ட வாய்ப்பின்படி எஸ்சி, எஸ்டி போன்ற ஆதி திராவிடர், பழங்குடியினருக்காவது - ஒதுக்கீடுபடி கிடைக்க வேண்டிய 23 சதவிகிதம் நிரப்பப்படுகிறா? என்றால், அதுவும் இல்லை.

எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி ஆகிய மூன்று பிரிவினர்களுக்கான இட ஒதக்கீட்டிற்கு மிகவும் குறைந்த அளவே பதவிகளை நிரப்பிவிட்டு, மீதமாகும் எஞ்சிய பதவிகள் அத்தனையும் முன்னேறிய ஜாதியினருக்காகக் கபளீகரம் செய்யப்படுகிறது. அவர்களது சதவிகிதத்திற்கு மேல் முன்னேறிய ஜாதியினர் பன்மடங்கு அனுபவிக்கிறார்கள் - இந்த ஆர்.எஸ்.எஸ்., பாஜக மோடி ஆட்சியில்! 

இதை எதிர்த்து நேற்று (12.8.2023) மாலை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் கண்டனப் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்தியப் பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் சமூக அநீதியைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் வரவேற் புரையாற்ற, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், துணைப் பொதுச் செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, தலைமைக் கழக அமைப் பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், காஞ்சி பா.கதிரவன், ஊமை.ஜெயராமன், திண்டிவனம் தா. இளம்பரிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்க கண்டன உரையாறறினர்.

நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆர்ப்பாட்ட தலைமை கண்டன உரையாற்றினார். 

திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். நிறைவாக தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், புரசை சு.அன்புச்செல்வன், வெ.மு.மோகன், தே.ஒளி வண்ணன், தாம்பரம் ப.முத்தையன், கோ.நாத்திகன்,, ஆர்.டி.வீரபத்திரன், உத்தமன் விஜய், வெ.கார்வேந்தன், க.இளவரசன், புழல் த.ஆனந்தன், ஜெ.பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதை எதிர்த்து நேற்று (12.8.2023) மாலை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் கண்டனப் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்தியப் பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் சமூக அநீதியைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் வரவேற் புரையாற்ற, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், துணைப் பொதுச் செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, தலைமைக் கழக அமைப் பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், காஞ்சி பா.கதிரவன், ஊமை.ஜெயராமன், திண்டிவனம் தா. இளம்பரிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்க கண்டன உரையாறறினர்.

நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆர்ப்பாட்ட தலைமை கண்டன உரையாற்றினார். 

திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். நிறைவாக தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், புரசை சு.அன்புச்செல்வன், வெ.மு.மோகன், தே.ஒளிவண் ணன், தாம்பரம் ப.முத்தையன், கோ.நாத்திகன்,, ஆர்.டி.வீரபத் திரன், உத்தமன் விஜய், வெ.கார்வேந்தன், க.இளவரசன், புழல் த.ஆனந்தன், ஜெ.பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் வழக்குரைஞர் சேமெ.மதிவதனி ஒலி முழக்கங்கள் எழுப்பு அதை அனைவரும் முழங்கினர்.

ஒலி முழக்கங்கள்

ஒன்றிய அரசே! ஒன்றிய அரசே!

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் 

பழங்குடிமக்கள் இடஒதுக்கீட்டை 

முழுமையாக நடைமுறைப்படுத்து!

ஏமாற்றாதே ஏமாற்றாதே!

ஒன்றிய அரசுப் பணியிடங்களில்

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை

தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை

பழங்குடியினர் இடஒதுக்கீட்டை

நிரப்பாமல் ஏமாற்றாதே!

மத்தியப் பல்கலைக்கழகங்கள் எல்லாம்

பார்ப்பனர்க்கு மட்டும் பட்டாவா?

மத்தியப் பல்கலைக்கழகங்களா?

மனுவாதிகளின் கூடாரமா?

அக்கிரகாரக் கொட்டாரமா?

ஜூம்லா அரசே! மோடி அரசே!

பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ். அரசே!

சமூகநீதியில் மோசடியா!

ஒடுக்கப்பட்டோருக்கு வஞ்சனையா?

நிரப்பிடு! நிரப்பிடு!

இடஒதுக்கீட்டுப் பணியிடங்களை

உடனடியாக நிரப்பிடு!

படிக்க வந்தாலும் இடஒதுக்கீடு மறுப்பு

பணியிடங்களிலும் இடஒதுக்கீடு மறுப்பு

வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே!

பிற்படுத்தப்பட்டோரை வஞ்சிக்காதே!

ஒடுக்கப்பட்டோரை வஞ்சிக்காதே! சமூகநீதிக் கூடாரத்தில்

பொருளாதார ஒட்டகமா?

இந்து என்று சொல்லிச் சொல்லி

துரோகம் செய்யாதே துரோகம் செய்யாதே!

பிற்படுத்தப்பட்டோருக்குத் துரோகம் செய்யாதே!

ஒடுக்கப்பட்டோருக்குத் துரோகம் செய்யாதே!

முறியடிப்போம் முறியடிப்போம்!

சமூக அநீதியை முறியடிப்போம்!

வென்றெடுப்போம் வென்றெடுப்போம்!

ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை வென்றெடுப்போம்!

போராடுவோம் போராடுவோம்!

வெற்றிபெறும்வரை போராடுவோம்!

ஓயமாட்டோம் ஓயமாட்டோம்

ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை

மீட்கும் வரை ஓயமாட்டோம்!

பங்கேற்றோர்

தென்சென்னை: டி.ஆர்.சேதுராமன், மு.ந.மதியழகன், கோ.வீ.ராக வன், சா.தாமோதரன், மு.இரா.மாணிக்கம், பா.இரா சேந்திரன்,எம்..டி.சி. அரங்க.சுரேந்தர். அரங்க.இராசா, மு.சண் முகப்பிரியன், வழக்குரைஞர் துரை.அருண், இரா.பிரபாகரன், பெரியார் யுவராஜ், இரா.மாரிமுத்து, ச.துணைவேந்தன், கு.சிவபிரகாஷ், கு.பா.அறிவழகன், சோம.பாலசுப்ரமணியன், தமிழ்ச்செல்வன்

வடசென்னை: கி.இராமலிங்கம் (காப்பாளர்), நா.பார்த்தி பன் (இளைஞ ரணி), பா.கோபாலகிருஷ்ணன், சி.காமராஜ், கண்மணி துரை, சி.அன்புச் செல்வன், வ.தமிழ்ச்செல்வன், கொடுங்கையூர் சி.வாசு, அறிவுமதி, யுவராஜ், த.பரிதின்,

ஆவடி: அ.வெ.நடராசன், ரகுபதி, முரளி, கே.ஏழுமலை, மா.சிலம் பரசன், ராமலிங்கம், அய்.சரவணன், இரா.கோபால், பெரியார் மாணாக்கன், திருநின்றவூர் தமிழ்ச்செல்வன், கார்த்திக், பகுத்தறிவு, ரவீந்திரன், வஜ்ரவேல், சுந்தரராஜ், தங்க சரவணன், கோபால், பூவை.தமிழ்ச்செல்வன், அ.வெ.நடராசன், கார்ல் மார்க்ஸ், நாகராஜ், மோகன்ராஜ், மா.தமிழ்ச்செல்வன், முத்தை யன், சந்திரபாபு, 

தாம்பரம்: மாடம்பாக்கம் அ.கருப்பையா, எஸ்.ஆர்.வெங்கடேஷ், தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், சந்திரசேகர், வழக் குரைஞர் இரா.உத்திரகுமாரன், பெருங் களத்தூர் பழநிசாமி, சீர்காழி ராமண்ணா, வண்டலூர் சுபாஷ், பொழிசை க.கண் ணன், காரைமாநகர் ப.கண்ணதாசன், போரூர் பரசுராமன்,

காஞ்சிபுரம்: அ.வெ.முரளி (காஞ்சி மாவட்ட தலைவர்), ஆ.மோகன் (மாவட்ட இணைச் செயலாளர்), எஸ்.செல்வம் (வாலாஜாபாத் ஒன்றிய அமைப்பாளர்), குறளரசு (ஒரிக்கை பகுதி கழகத் தலைவர்)

செய்யாறு: வெங்கடேசன், தனுஷ், பிரதீப், விஜய், ஆகாஷ்

செங்கல்பட்டு: மாவட்டத் தலைவர் செங்கை சுந்தரம், மாவட்ட அமைப்பாளர் பொன்.இராசேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் அ.பா.கருணாகரன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அருண், மதுராந்தகம் நகர செயலாளர் ஏ.செல்வம், வள்ளுவர் மன்ற செயலாளர் ம.சமத்துவமணி, இராதாகிருட்டிணன், மு.பிச்சைமுத்து (ப.க. மாவட்ட அமைப்பாளர்), சி.தீனதயாளன் (ப.க. மாவட்ட செயலாளர்),

கும்முடிப்பூண்டி: மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன், மாவட்ட செயலாளர் ஜெ.பாஸ்கர், புழல் ஒன்றிய செயலாளர் வடகரை உதயகுமார், கும்முடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் தெய்வ சிகாமணி, கும்முடிப்பூண்டி நகர தலைவர் ராமு, மாவட்ட இளைஞரணி சக்கரவர்த்தி, மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முருகன்,

திருவொற்றியூர்: வெ.மு.மோகன் (மாவட்டத் தலைவர்), தே.ஒளிவண்ணன் (மாவட்ட செயலாளர்), ந.இராஜேந்தின் (துணைத் தலைவர்), இரா.சதிசு (இளைஞர் அணி) சி.வாசு (மாதவரம் நகர தலைவர்), மாணிக்கம், ஏ.மணிவண்ணன், கு.செல்வேந்திரன்,

சோழங்கநல்லூர்: வேலூர் பாண்டு, பி.சி.ஜெயராமன், ஜெ.குமார், சோமசுந்தரம்.

திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள்: இரா. செந்தூர பாண்டியன், செ.பெ.தொண்டறம், வி.தங்கமணி, மு.இளமாறன், பா.கவிபாரதி, எஸ்.இ.ஆர்.திராவிட புகழ், அ.அறிவுச்சுடர், நிலவன், சிவபாரதி, வெ.இளஞ்செழியன், ம.சுபாஷ், மு.குட்டிமணி, சிந்தனை அரசு, அ.ஜெ.உமாநாத், இரா.கபிலன், ப. நீலன், பூ.மங்கலலெட்சுமி, நிரஞ்சன், ஜெனித், மு. அய்யப்பன், யுகேஷ், ஆனந்தகுமார், ச.பிரசாந்த், மாணிக்க வசந்த், பிரதீப் வசந்த், ஆதிகேசவன், இன்பதமிழ், துளசிராமன், ஆதி.

பொறுப்பாளர்கள்: திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், நெய்வேலி வெ.ஞானசேகரன், தேவக்கோட்டை ப.க. அறிவரசன், வழக் குரைஞர் ஆம்பூர் ஜெ.துரைசாமி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் தாராபுரம் சு.முனிஸ்வரன், வழக்குரைஞர் நா.சக்திவேல் (பொதுக்குழு உறுப்பினர்)

கழக மகளிரணி: பசும்பொன், மாட்சி, பண்பு, இறைவி, மு.செல்வி, தொண்டறம், நாகவள்ளி, மங்கலலட்சுமி, ஓசூர் செல்வி, தேன்மொழி வேலூர், மீனாம்பாள், மோ.மீனாட்சிநாத்திகன், பெரியார் பிஞ்சு அய்யை, பெரியார் பிஞ்சு மகிழன், சீர்த்தி, மு.பவானி, மா.சண்முகலட்சுமி, முத்துலட்சுமி, வி.தங்கமணி, சோமங்கலம் அ.பா.நிர்மலா, பெரியார் பிஞ்சு நனிபூட்கை, பெரியார் பிஞ்சு செம்மொழி, திவ்யா, பெரியார் பிஞ்சு வெ.சாரல் இன்பன், மீரா நாத்திகன், வ.வளர்மதி, யாழ் ஒளி, பி.அஜந்தா, மணிமேகலை, மெர்சி அஞ்சலா மேரி, மகிழினி (பெ.பி.), கவிநிஷா (பெ.பி.), இ.நிவேதா இளம்பரிதி, தா.விஜயலட்சுமி தாஸ், தா.தேன்மொழி (திண்டிவனம்), இ.இனியா (பெ.பி.), நவநீத கிருஷ்ணன் (பெ.பி.), ஜெ.சொப்பன சுந்தரி, சு.தமிழினி தானு (பெ.பி.), சு.செல்வம் (செங்கல்பட்டு), ம.யுவராணி, ஏ.செம்மொழி, த.மரகதமணி, மு.செல்வமுரளி, சுஜித்ரா, ராணி ரகுபதி, வனிதா, சமத்துவமணி (பெ.பி.), தேன்மொழி (ஆவடி), ஏ.சரோஜா, கா.பெரியார்செல்வி, விநோதா, வெண்ணிலா, பகுத்தறிவு, சுகுணா (கடலூர்)

கழக தொழிலாளரணி - திராவிடர் தொழிலாளர் பேரவை: தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், பேரவைத் தலை வர் கருப்பட்டி கா.சிவகுருநாதன், பொருளாளர் கூடுவாஞ்சேரி ராசு, திருச்சி முபாரக், திருச்சி முருகன், தாம்பரம் மா.குண சேகரன், சென்னை ஏழுமலை, சென்னை சுமதி கணேசன், தருமபுரி சிசுபாலன், காஞ்சிபுரம் முரளி, மோகன், குறளரசு, செல்வம், கதிரவன், திருப்பத்தூர் மோகன், கனகராஜ்

திருவாரூர்: வீ.மோகன் (மாவட்ட தலைவர்), ஆதிகேசவன், ஏ.நிரஞ் சன், இன்பத்தமிழ், அறிவுச்சுடர், ஜெனித், ஆதீஸ், துளசிராம், அரங்கராஜா, ஜெயராமன், வீர.கோவிந்தராசு,  சிங்காரவேல் 

உரத்தநாடு: மாநில மாணவர் கழக துணை செயலாளர் பா.கவிபாரதி, உரத்தநாடு ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை மாவட்ட வழக்குரைஞரணி செயலாளர் க.மாரிமுத்து, பொறியாளர் ப.பாலகிருஷ்ணன், உரத்தநாடு கு.லெனின், மாவட்ட இளைஞரணி செயலாளர் ரெ.யுவராஜ், ஒன்றிய விவசாய  அணி தலைவர் சு.அறிவரசு, வெள்ளூர் மெய் யழகன், ஒக்கநாடு மேலையூர் நா.விக்னேஷ்

திண்டிவனம்: தா.இளம்பரிதி (தலைமை கழக அமைப்பாளர்), தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), ர.அன்பழகன் (மாவட்ட தலைவர்), செ.பரந்தாமன் (மாவட்ட செயலாளர்), நகர செயலாளர் ரோஷனை பன்னீர், மாவட்ட இளைஞணி தலைவர் மு.ரமேஷ், நகர இளைஞரணி செயலாளர் கோ.பாபு, பெரியார் பிஞ்சுகள் இனியா, இசைத் தென்றல், கவிநிலவன், கவிஅமுதன்

அரூர்: கழக காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் பூபதி ராஜா, இளைஞணி அன்பரசன், மாணவர் கழக செந்தில் ஆகியோர் பங்கேற்றனர்.