பொதுக்கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுக்கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 செப்டம்பர், 2026

தெலங்கான நாத்திக சங்கத்தினரின் இசைப் பாடலுடன் பெரவள்ளூரில் பெரியார் 148 ஆம் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம்!



திராவிடர் கழகம்

சென்னை, செப்.20 வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், பெரம்பூர் – அகரம் – பெரவள்ளூர் சதுக்கத்தில் கடந்த 17.9.2026 அன்று மாலை 6 மணிக்கு, “உலகத் தலைவர் தந்தை பெரியாரின் 148 ஆம் பிறந்தநாள் விழா நடைபெற்றது. பெரியார் பெருந்தொண்டரும், வடசென்னை மாவட்ட கழக மகளிரணி மேனாள் தலைவருமான கு.தங்கமணி குணசீலன் நினைவாக அம்மேடை அமைக்கப்பட்டி ருந்தது.

நிகழ்வில், வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் அனைவரையும் வரவேற்றும், ஏன் பெரியார் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றிய, மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டி யன், நிகழ்ச்சியை நெறிப்படுத்தியும் சிறப்பித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தொடங்கி வைத்தும், மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், திராவிடர் மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, வழக்குரைஞரணி மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் துரை. அருண், துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பொருளாளர் வீ.குமரேசன், துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் முன்னிலை வகித்தும் உரையாற்றினர்.

துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், மாநில மகளிரணி துணைச் செயலாளர் க.இறைவி, மாநில மகளிரணி துணைச் செயலாளர் வீ.கே.ஆர்.பெரியார் செல்வி, தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், சி.வெற்றிச்செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம், முனைவர் அதிரடி க.அன்பழகன், முனைவர் த.கு.திவாகரன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், சு.மோகன்ராஜ், தென்சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் கரு.அண்ணாமலை, ஆவடி மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் க.ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

தந்தை பெரியார்பற்றிய கொள்கைப் பாடல்கள்!

முன்னதாக, தெலங்கான நாத்திக சங்கத்தின் நிறுவனர் ஜி.டி.சாரய்யாவின் தலைமையில் பாலாஜி, ராமகிருஷ்ணன், சிறீதர், ஸ்பார்ட்டகஸ், ராஜ்குமார், ஆனந்த் மற்றும் போஸ் பாபு ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, தெலுங்கில், தாளத்துடன் மூன்று பாடல்களைப் பாடினர். ஒன்று, பெரியார் கொள்கை எப்படிப்பட்டது என்றும், மற்றொன்று, பார்ப்பன ஆதிக்கம் எப்படிப்பட்டது என்றும், மூன்றாவது, பெரியார் அதை எப்படியெல்லாம் தகர்த்தார் என்றும் அப்பாடல்கள் அமைந்திருந்தது. கலந்து கொண்ட அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடனும், உணர்ச்சி யுடனும் பாடல்களைப் பாடினர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு பாடிய ஸ்பார்ட்டகஸ், ஆங்கிலத்தில் மூன்று பாடல்களின் கருத்தை சுருக்கமாக விவரித்தார். மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் அதைத் தமிழில் பெயர்த்துக்கூறினார்.

இயக்க நூல்கள் அறிமுகம்!

தொடர்ந்து, ‘‘பெரியார் கேட்கும் கேள்விகள்” 10 புத்தகங்கள் ரூ.200/- க்கும், ”உலகத்தலைவர் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு” 12 தொகுதிகள் ரூ.3,000/- க்கும், ”விடுதலை மலர்” ரூ.300–க்கும் அறி முகம் செய்யப்பட்டன. தோழர்கள் வரிசையாக வந்து கழகத் தலைவரிடம் புத்தகங்களை பெற்றுச் சென்றனர்.

‘‘பெரியார் உலக”த்திற்கு
நன்கொடை!

பெரியார் பெருந்தொண்டர் முத்துக்கிருஷ்ணன், ‘‘பெரியார் உலகம்” நன்கொடை ரூ.30,000/-, விடுதலை சந்தா ரூ.2,000/-, ‘‘சாமி கைவல்யம் முதியோர் இல்லம்” நன்கொடையாக ரூ.2,000/-, அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2,000/- என மொத்தம் ரூ.36,000/- காசோலையாக, ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன் உடனிருக்க, கழகத் தலைவரிடம் வழங்கினார். அண்மையில் மணவிழா கண்ட வடசென்னை மாவட்ட அமைப்பாளர் ஓட்டேரி சி.பாஸ்கர் மகள் இளையமதி – சதீஷ் இணை யர்கள் ”பெரியார் உலகம்” நிதியாக ரூ.15,000/- வழங்கினர்.  பெரம்பூர் – செம்பியம் திராவிடர் கழகம் சார்பில், மாவட்டக் காப்பாளர் கி.இராமலிங்கம், கழகத் தலைவருக்குப் பயனாடை அணிவித்து, பெரியார் உலக நிதிக்கு ரூ.1000 வழங்கினார். கழகத்தின் இளைஞரணி சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து, மரியாதை செய்யப்பட்டது. சுயமரியாதைத் திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி கழகத்தலைவருக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்தார்.

மேலும், “பெரியார் எனும் வியப்பு” எனும் நூலை நூலாசிரியர் மோகன் மேடையில் அமர்ந்திருந்த வர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார்.

வடசென்னை மாவட்டக் காப்பாளர் கி.இராமலிங்கம் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

முன்னதாக, கூட்ட செலவில் துண்டு விழுந்துள்ளது என்று, தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தோழர்கள் பொதுமக்களிடம் துண்டேந்தி வருவார்கள் என்று அறிவிப்பு செய்திருந்தார். அதன்படி தோழர்கள் பசும்பொன்னும், த.மரகதமணியும் துண்டேந்திச் சென்றனர். குறைந்த நேரத்தில் மக்கள், ரூ.3,200/- ரூபாயை கூட்ட செலவுக்காக வழங்கியிருந்தனர். அத்தொகை மேடையில் அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மரகதமணியுடன் பா.பார்த்திபன், ந.கார்த்திக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தோழர்கள் பெரியார் மாணாக்கன், பூவை செல்வி, ஆவடி முருகேசன், பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்றுநர் காமராஜ், இளைஞரணித் தோழர்கள் பூவரசன், யுகேஷ், ஊடவிலயாளர் த.பரிதின், ஆவடி ஆ.வெ.நடராஜன், இ.தமிழ்மணி, பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன், செம்பியம் கழக செயலாளர் டி.ஜி.அரசு, மாவட்ட துணைச் செயலாளர் வ.தமிழ்ச்செல்வன், திராவிட மாணவர் கழகச் செயலாளர் அ.புகழேந்தி, மகளிரணிச் செயலாளர் த.இளவரசி, மாவட்ட தொழிலாளர் கழகத் தோழர் க.சுமதி, அயன்புரம் துரைராஜ், செந்துறை இராசேந்திரன், சி.வாசு, பெரியார் பெருந்தொண்டர்கள் கோ.தங்கமணி, தங்க. தனலட்சுமி, அரும்பாக்கம் சா.தாமோதரன், கோவை சகா உள்ளிட்டோரும், பொதுமக்கள் ஏராளமானோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கலந்துகொண்ட அனைவருக்கும் தந்தை பெரியார் 148 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

கடைசி வரையிலும் மக்கள் கலையாமல் இருந்து கருத்துகளை உள்வாங்கிக்கொண்டனர். மொத்தத்தில் இந்நிகழ்வு திராவிடர் இயக்கத்தின் மாலை நேரக் கல்லூரியாக இருந்து மக்களுக்கு பெரியாரின் அவசியம் பற்றி மறுபடியும் கற்றுத் தந்ததாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு, 20.09.2026

தென் சென்னை திராவிடர் கழக ஊடகம்

யூடியூப் காணொலி




வெள்ளி, 12 ஜூன், 2026

மயிலாப்பூர் நொச்சி நகர்ப் பகுதியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்


திராவிடர் கழகம்

மயிலை, ஜூன் 12- முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 103ஆவது பிறந்தநாள் விழா  பொதுக்கூட்டம், 06.06.2026 அன்று மாலை 6.30 மணி அளவில் மயிலாப்பூர் நொச்சி நகர், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சாலை (லூப் சாலையில், தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன் தலைமையிலும், பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன், மாவட்ட இளைஞரணித் தலைவர் ந.மணிதுரை, மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பெரியார் யுவராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.

தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தொடக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்புரையாற்றினார்.

மாவட்டத் துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம் பேச்சாளர் கோகுல் என்கிற குயிலன் ஆகியோர் உரையாற்றினர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மயிலாப்பூர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

இறுதியில் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி சிறப்புரை ஆற்றினார். எஸ்.முரளி (மயிலாப்பூர் கிழக்கு பகுதி செயலாளர், தி.மு.க), அ.தவநேசன் (125ஆவது வட்டச் செயலாளர், தி.மு.க.), மற்றும் திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக அறிவுமானனின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சாலையின் இரு மருங்கிலும் கழகக் கொடிகள் கட்டப்பட்டு சிறப்பான முறையில் நிகழ்ச்சி விளம்பரப்படுத்தப்பட்டது.

இரா.பிரபாகரன், ஈ.குமார், ச.மகேந்திரன், அய்ஸ் அவுஸ் அ.அன்பு (இளைஞர் அணி துணைத் தலைவர்கள்), இரா.மாரிமுத்து (மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர்) வி.வளர்மதி (மகளிர் அணித் தலைவர்), பி.அஜந்தா, மு.பவானி (மகளிர் பாசறைத் தலைவர்), ஜெ.சொப்பன சுந்தரி, செய.குசேலன், வி.தங்கமணி, சா. தாமோதரன், வை. கலையரசன், மு. பசும்பொன், செ.பெ.தொண்டறம், சு.தமிழினி தானு, ஜெயசங்கரி, ஆர் ராதா, கு ரதியா, பார்வதி, எஸ்.வசந்தி, விஜயா, ஜி.ரேவதி, கவிதா, இனியன் சம்பத், மயிலை தா.தீபன்,ம.தி. பெரியார் இனியன், ம.தி. பெரியார் ஆதவன், சி. மதியழகன், அய். முனுசாமி, எம். ஜெய்கர், க. சதீஷ்,ஆர். கிருஷ்ணவேணி, சு. பரமசிவன், வே. நடராஜன், ஆர். அழகேந்திரன், நாராயணசாமி, நந்தகுமார், சி. சுப்பிரமணி, ஆர். கோவிந்தசாமி, வெங்கடேசன்,மோ.திருமலை மற்றும் கலந்து கொண்டனர்.

மாணவர் கழகப் பொறுப்பாளர் வி.யாழ்ஒளி நன்றி உரையாற்றினார்.

ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திராவிட இயக்க வரலாற்றினை செவிமடுத்து எழுச்சி பெற்றனர்.

-விடுதலை நாளேடு, 12.06.2026

யூ டியூப் காணொலி


ஒளிப் படங்கள்





வெள்ளி, 19 செப்டம்பர், 2025

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக் கூட்டம்

147ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரைகேட்க திரண்டிருந்தோர்

தமிழ்நாடு

சென்னை – எம்.ஜி.ஆர். நகரில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார்
147ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரைகேட்க திரண்டிருந்தோர்

தமிழ்நாடுதமிழ்நாடு  தமிழ்நாடு

* திராவிடர் கழக மேனாள் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச. இன்பக்கனி பெரியார் உலக நன்கொடைக்கு ரூ.1 லட்சத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.  கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி ரூ.30 ஆயிரம், கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு. குமாரதேவன், ரூ.25 ஆயிரம் என இயக்க நன்கொடைக்கென்று தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினர்.  மாவட்ட தி.மு.க. பிரதிநிதி ச. முத்து மாரியப்பன் விடுதலை சந்தா வழங்கினார். (17.9.2025)

சென்னை, செப்.19 தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம் 17.9.2025 அன்று மாலை 6.30 மணி அளவில் சென்னை கலைஞர் கருணாநிதி நகர் அருகிலுள்ள எம்.ஜி.ஆர். நகர் அங்காடி (மார்க்கெட்) பகுதியில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் கரு.அண்ணாமலை தலைமையில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.

தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் வரவேற்புரையாற்றினார். தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ. நாத்திகன், ஆவடி மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன்,  செயலாளர் க. இளவரசு, வடசென்னை மாவட்ட தலைவர் தளபதிபாண்டியன், செயலாளர் சு.அன்புச்செல்வன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாலை 6 மணி அளவில் ‘இனநலம்’ குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்  கலி.பூங்குன்றன்  தொடக்க உரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ. குமரேசன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்ட பொறுப்பாளர் அண்ணா மகிழ்நன், கழக பரப்புரை செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர்கள் ச.பிரின்சு என்னாரெசு பெரியார். சே.மெ.மதிவதனி. திமுக மாவட்ட பிரதிநிதி ச.முத்து மாரியப்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் செ.கரிகால்வளவன், ஆகியோர் உரையாற்றினர்.

பெரியார் பிறந்த நாள் மலரினை
தமிழர் தலைவரிடம் இருந்து பெற்றனர்

திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேரா.சுப.வீரபாண்டியன்  “விடுதலை-தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள்” மலரை வெளியிட்டு உரையாற்றினார். பெரியார் பெருந் தொண்டர் சி. செங்குட்டுவன் முதல் படியை பெற்றுக் கொண்டார்.

மேடையின் கீழே இறங்கி வந்த  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடமிருந்து பெரியார் பிறந்த மலருக்கு உரிய நன்கொடையினைத் தந்து தோழர்கள் பலரும் மலரினைப் பெற்றுக் கொண்டனர்.

நிறைவாக, திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தென் சென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும்  எம்ஜிஆர் நகர் கழகத் தோழர்கள்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர், துணைத் தலைவர்  கவிஞர் கலி. பூங்குன்றன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், விழாவில் உரையாற்றியவர்களுக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.

தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், சு.குமாரதேவன், தமிழக மூதறிஞர் குழு பொருளாளர் த.கு. திவாகரன், ச.இன்பக்கனி, சி. வெற்றிச்செல்வி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வி.கே.ஆர். பெரியார் செல்வி, தி.என்னாரெசு பிராட்லா, மாநில இளைஞரணி செயலாளர் சோ. சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ. ராகவன், தென் சென்னை மாவட்ட காப்பாளர் மு.ந. மதியழகன், சா. தாமோதரன், தாம்பரம் சு. மோகன்ராஜ், கூடுவாஞ்சேரி ராசு, விடுதலை நகர் ஜெயராமன், தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், சி.செங்குட்டுவன், தென் சென்னை இளைஞர் அணி தலைவர் ந. மணிதுரை, இளைஞர் அணி துணைத் தலைவர் அ.அன்பு, இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் இரா. மாரிமுத்து, அ. அன்பரசன், பெரியார் களம் இறைவி, தேவ. நர்மதா, கொடுங்கையூர் கோ. தங்கமணி, தங்க. தனலட்சுமி, ச.மாரியப்பன்,  கலைமணி, க.தமிழ்ச்செல்வன்,  த.ராஜா, க.ச. பெரியார் மாணாக்கன், மு.செல்வி,செ.பெ.தொண்டறம், திருப்பத்தூர் பெரியார் வாசகர் வட்டம் எம்.என். அன்பழகன், விஜயா அன்பழகன், மணிமேகலை சுப்பையா, ஆட்டோ சேகர், புரசை கோபி, கோ. அன்புமணி, உடுமலை வடிவேலு, நல். இராமச்சந்திரன், எம்.டி.சி. இராஜேந்திரன், ஆட்டோ சேகர், செ.அன்புச்செல்வி, த.மரகதமணி, சே.மெ. கவி நிசா, அரங்க.சுரேந்திரன், மு. திருமலை, நா. பார்த்திபன், த.பர்தீன், அப்துல்லா, க. சுப்பிரமணியன், ச. சனார்த்தனன், டெய்லர் கண்ணன், பெரியார் மணிமொழியன், வெ.கா.மகிழினி, கா.முருகையன், ஆ. செகதீசன், திராவிடச் செல்வன், முனைவர் முகம் இளமாறன், க. கார்த்திகேயன், கோ.க. மகராசன், சோ. நடராசன். இரா. ஏழுமலை, ப. தியாகராஜன், அய்ஸ் அவுஸ் உதயா, முல்லைவேந்தன். மு.கனகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி நன்றி உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 19.09.2025


யூ டியூப் - வளையொளி காணொலி



செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

சூளைமேட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம்



திராவிடர் கழகம்

செங்கல்பட்டு, மறைமலைநகரில் அக்டோபர் 4அன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர். அதன் விவரம் வருமாறு:-

சூளைமேடு, சென்னை

தென்சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் 23.08.2025 அன்று மாலை 6.30 மணி அளவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம்; சூளைமேடு, சவுராஷ்டிரா நகர், முதல் தெருவில் சூளைமேடு பகுதி கழகத் தலைவர் நல்.இராமச்சந்திரன் தலைமையிலும், தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட துணைச் செயலாளர் கரு.அண்ணாமலை, மாவட்ட இளைஞரணி தலைவர் ந.மணிதுரை மற்றும் மாவட்ட இளை ஞரணி செயலாளர்  பெரியார் யுவ ராஜ் ஆகியோர் முன்னிலையிலும் நடை பெற்றது.

பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி தொடக்க உரையாற்றினார்.முன்னதாக மாலை 5.30 மணி அளவில் அறிவு மாணனின் கொள்கைப் பாடல்களுடன் ‘இசை நிகழ்ச்சி’ நடைபெற்றது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 112ஆவது வட்ட செயலாளர் த.பரி சிறிது நேரம் உரையாற்றினார்.

மாவட்ட துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்ததின் விளைவால் ஏற்பட்ட பயன்களை எடுத்துக் கூறி உரையாற்றினார்.

அடுத்து உரையாற்றிய திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் பா.மணியம்மை சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி மற்றும் திராவிடர் கழகம் போன்றவை மக்களுக்காக ஆற்றிய பணிகளை பட்டியலிட்டு கூறினார்.

திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன் தந்தை பெரியாரின் தொண்டினையும், தந்தை பெரியார் அவர்கள் இட ஒதுக்கீட்டிற்காக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய தையும், தந்தை பெரியாரின் இட ஒதுக்கீடு கொள்கையை நீதிக் கட்சி ஏற்றத்தையும், இட ஒதுக்கீட்டிற்கான அடித்தளத்தை அமைத்ததையும், முத்தையா அவர்கள் இட ஒதுக்கீட்டை சட்டம் ஆக்கியதையும் எடுத்துக் கூறி, இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பட்ட தடைகளையும், போராட்டங்களையும், இட ஒதுக்கீட்டிற் காக இந்திய அரசியல் சட்டம்  திருத்தப் பட்டதையும், படிப்படியாக இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்ட வரலாற்றையும் கூறி, ஆசிரியருக்கு கி.வீரமணி அவர் களால்  69% இட ஒதுக்கீடு இந்திய அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு பாது காக்கப்பட்டதையும் விரிவாக எடுத்துக் கூறி  செங்கல்பட்டு மாநாடு வெற்றி அடைய அனைவருக்கும் அழைப்பு விடுத்து சிறப்பு உரையாற்றினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின்  109 ‘அ’ வட்ட செயலாளர் டேவிட் இன்பராஜ், பொன்சீலன், கிருஷ்ணன், 109 ‘அ’ வட்ட பகுதி பிரதிநிதி ஆர்.சேகர், நீலகண்டன், சிவா, போஸ்டல் பாஸ்கர், பரமேஸ்வரி, சாந்தி, தென்சென்னை மாவட்ட கழக மகளிர் அணி தலைவர் வி. வளர்மதி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.பவானி, செயலாளர் பி.அஜந்தா, ஆர். தமிழ்ச்செல்வி, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, ஆவடி மாவட்ட கழகத் துணை தலைவர் வை. கலையரசன், எம்ஜிஆர் நகர் வெ.கண்ணன், அரங்க.ராசா, வடசென்னை க.செல்லப்பன், அய்ஸ் அவுஸ் உதயா, சூளைமேடு ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இறுதியாக எம்.டி.சி.பா.இராஜேந் திரன் நன்றியுரையாற்றினார்.

-விடுதலை நாளேடு, 26.08.2025