வெள்ளி, 10 ஏப்ரல், 2020

விருகை நாதன் மறைவு

விருகம்பாக்கம் பெரியார் பெருந்தொண்டர் நாதன் மறைந்தாரே!


குடந்தையைச் சேர்ந்தவரும், விருகம்பாக்கத்தில் நீண்ட காலமாகக் குடியிருந்து கழகப் பணிகள் ஆற்றியவரும், கழகப் பாடல்களை மேடைகளில் கம்பீரமாகப் பாடி வந்தவருமான நாதன் (வயது 83) அவர்கள் நேற்று (7.4.2020) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கடைசி மூச்சு அடங்கும்வரை கழகப் பணியில் ஆர்வம் கொண்டவர் அவர்.

அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

- கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

8.4.2020

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக முன்னோடி அய்யா விருகை நாதன் அவர்கள் 7.4.2020 மாலை 3.00 மணிக்கு மறைவுற்றார். 8.4.20 முற்பகல் 10.00 மணி அளவில் விருகம்பாகத்திலுள்ள அவரது இல்லத்திற்கு சென்று தென் சென்னை திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அவரது உடல்மீது கழகக் கொடி போர்த்தி மரியாதை செலுத்தினார். உடன் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் சி. செங்குட்டுவன்,  துணைச் செயலாளர் சா. தாமோதரன் மற்றும் குடந்தை புவனேந்திரன் மரியாதை செலுத்தினர். இறுதி நிகழ்வு முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற்றது.

- விடுதலை நாளேடு, 8.4.20