குழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 ஜூலை, 2024

நீட் தேர்வை எதிர்த்து கழக இளைஞரணி மற்றும் மாணவர் கழகத்தினர் நடத்திய இருசக்கர வாகன பரப்புரைப் பயணத்தில் 5 குழுவினருக்கும் பல்வேறு இடங்களில் வரவேற்பு


விடுதலை நாளேடு

 சென்னை பயணக் குழுவிற்கு சிறப்பான வரவேற்பு

சென்னை, ஜூலை 17- நீட் தேர்வை எதிர்த்து கழக இளைஞரணி மற்றும் மாணவர் கழகத்தினரின் சென்னை முதல் சேலம் வரையிலான அய்ந்தாம் குழுவினருக்கு 12.7.2024 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை அமைந்தகரையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நீட் பற்றிய விளக்கப் பிரச்சாரம் சிறப்பான வகையில் செய்யப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தலைமை வகித்தார்.

பா.சித்தார்த்தன், வழக்குரைஞர் உதயபிரகாஷ், துர்கபிரகாஷ், அருள்தாஸ், சு.நித்யகுமார் ஆகிய தோழர்கள் முன்னிலை வகித்தனர். சாம்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

குழுமிய பொதுமக்களிடையே துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு ஆகியோர் சமூக நீதியைப் பறிக்கும் நீட் பற்றி விளக்கமாகப் பேசினர்.
அண்ணாநகர் பகுதி தி.மு.க. செயலாளர் பரமசிவம், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மெட்டில்டா கோவிந்தராஜ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் துறைத் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார், மாவட்ட காங்கிரஸ் மேனாள் தலைவர் க.வீரபாண்டியன், பகுதி தி.மு.க. துணைச் செயலாளர் கே.பி.சுரேந்தர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் ராஜன், திமுக வழக்குரைஞர்கள் ஜீ.திவாகர், ஆ.முரளிதரன் மற்றும் அனைத்துக் கட்சித் தோழர்களும், வியாபாரிகள் சங்கப் பொறுப்பாளர்களும் பரப்புரைப் பயணக் குழுவினருக்கு வரவேற்பளித்து வாழ்த்தினர்.
அண்ணாநகர் பகுதி 102 அ வட்ட தி.மு.க. துணைச் செயலாளர் எம்.ஏ.டேனியல் பரப்புரைப் பயணக் குழுவினருக்கு உணவுத் தின்பண்டங்கள் வழங்கி, அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

செனாய் நகரில் தொழிலதிபர் சுந்தரபாண்டியன் பயணத் தோழர்களுக்கு குளிர்பானம் வழங்கி தமது தோழர்களோடு வரவேற்றார்.

அமைந்தகரையில்

அமைந்தகரை பி.பி.தோட்டம் முதன்மைத் தெருவில் பிரின்சு என்னாரெசு பெரியார் கழகக் கொடி ஏற்றினார். அமைந்தகரையில் பரப்புரைப் பணியை நிறைவு செய்து, தோழர்களிடம் விடைபெற்றுப் புறப்பட்ட பரப்புரைக் குழுவினர் அண்ணாநகர், ஓட்டேரி, பெரம்பூர், திரு.வி.க. நகர் ஆகிய பகுதிகளில் ஒலியெழுப்பிக் கொண்டே – நீட் தேர்வினைப் பற்றிய புரட்டைதோலுரித்தவாறு மூலக்கடை மய்யப் பகுதியை வந்தடைந்தனர்.

மூலக்கடையில்…

மூலக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாதவரம் கழக அமைப்பாளர் சி.வாசு தலைமை வகித்தார். கழக துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால் முன்னிலை வகித்தனர். செம்பியம் கழகத் தலைவர் ப.கோபாலகிருட்டிணன் வரவேற்றுப் பேசினார்.

தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் ஆகியோர் உரையாற்றிய பின்பு – நிறைவாக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் பரப்புரைப் பயணத்தின் நோக்கம் குறித்து விளக்கமாகப் பேசினார்.

வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், காப்பாளர் கி.இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன், அமைப்பாளர் சி.பாசுகர், கொடுங்கையூர் கழக தலைவர் கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, எருக்கமாநகர் கழக அமைப்பாளர் சொ.அன்பு, ச.இராசேந்திரன், க.செல்லப்பன், வ.கலைச்செல்வன், வ.தமிழ்ச்செல்வன், அ.செந்தமிழ்தாசன், கோ.சுந்தரமூர்த்தி மற்றும் கழகத் தோழர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பயணக் குழுவின் சொற்பொழிவாளர் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், குழுத் தலைவர் வழக்குரைஞர் சோ.சுரேஷ், ஒருங்கிணைப்பாளர் தருமபுரி மா.செல்லத்துரை ஆகியோருக்கு தே.செ.கோபால் பயனாடை அணிவித்தார். ச.இன்பக்கனிக்கு தங்க.தனலட்சுமி சால்வை அணிவித்து அனைத்துத் தோழர்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.

பரப்புரைப் பணியை சேலம் சென்றடைந்து சிறப்பான வகையில் நிறைவு செய்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் வரவேற்பு

அரியலூர், ஜூலை 17- நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பாக இராமநாதபுரத்தில் தொடங்கிய இரு சக்கர ஊர்தி பரப்புரை பயணக் குழு 14. 7. 2024 ஞாயிறு மாலை 6 மணியளவில்அரியலூர் மாவட்டம் திருமானூருக்கு வருகை புரிந்தனர். திருமானூர் ஒன்றிய பொறுப்பாளர்கள்அவர்களை வரவேற்றனர். பின்னர்அரியலூர் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் அனைவரும் மாலை 6.30 மணி யளவில் கீழப்பழுவூர் கடைவீதியில் பயணக் குழுவை வரவேற்றனர்.பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று அரியலூர் நிர்மலா மேல்நிலைப்பள்ளி, கடைவீதி வழியாக ரத்து செய்!ரத்து செய்! நீட் தேர்வை ரத்து செய்!

ஒன்றிய பாஜக அரசே ரத்து செய்!
வேண்டாம் வேண்டாம் நீட் தேர்வு வேண்டாம்!

வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே! தாழ்த்தப்பட்ட மாணவர்களை வஞ்சிக்காதே! கிராமப்புற மாணவர்களை வஞ்சிக்காதே! பிற்படுத்தப்பட்ட மாணவர்களை வஞ்சிக்காதே – என்ற முழக்கங்களை எழுப்பியவாறு பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது.பின்னர் அரியலூர் அண்ணா சிலை அருகில் பரப்புரைக்கூட்டம் இரவு 7.20 மணியளவில் தொடங்கியது. மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் நிகழ்ச்சிக்கு தலைமையேற்க, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சு..அறிவன் வரவேற்புரையாற்றினார்.

மாவட்ட இளைஞரணி தலைவர் க.கார்த்திக் மாவட்ட இளைஞரணி செயலாளர் லெ. தமிழரசன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.செந்தில், அரியலூர் ஒன்றிய தலைவர் சிவக்கொழுந்து, ஒன்றிய செயலாளர் த.செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திமுக மாநில கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார். பயண குழுவினர் அனைவருக்கும் பயனாடை போர்த்தி சிறப்பு செய்தார்.தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன் தொடக்க உரையாற்றினார்.

சொற்பொழிவாளர் தே.நர்மதா சிறப்புரையாற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் உமாநாத் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தோழர்களை வழி நடத்தி வந்தனர்.நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன் மாநில ப.க. அமைப்பாளர் தங்க . சிவமூர்த்தி, காப்பாளர் சு.மணிவண்ணன் மாவட்ட இணை செயலாளர் ரத்தின ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் பொன்.செந்தில்குமார், மாவட்ட விவசாய அணி தலைவர் மா. சங்கர் மாவட்ட தொழிலாளரணி தலைவர் தா.மதியழகன் செயலாளர் வெ.இளவரசன் மாவட்ட விவசாய அணி செயலாளர் இளவழகன், செந்துறை ஒன்றிய தலைவர் மு. முத்தமிழ்செல்வன் ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன் ஒன்றிய செயலாளர் தியாக. முருகன் ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் ஆ.ஜெயராமன், தா.பழூர்ஒன்றிய செயலாளர் பி. வெங்கடாசலம், திருமானூர் ஒன்றிய தலைவர் க. சிற்றரசு ஒன்றிய செயலாளர் பெ.கோபிநாதன், நகர செயலாளர் சு.சேகர், ஆண்டிமடம் நகர செயலாளர் டி எஸ் கே அண்ணாமலை குழுமூர் சுப்பராயன் ஆண்டிமடம்ஒன்றிய இளைஞரணி தலைவர் வே.செந்தில் செயலாளர் இரா.பாலமுருகன், மணிமாறன் பொன்பரப்பி சுந்தரவடிவேல் பா.சுந்தரமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். அரியலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் க. மணிகண்டன் நன்றி கூறினார்.

திருப்பத்தூர் மாவட்டம் விசமங்கலம் – வரவேற்பு

நீட் தேர்வு இருசக்கர பிரச்சார பரப்புரை பயணம் புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட குழு 14.07.2024 ஞாயிற்றுக் கிழமை மாலை 12.30 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் விசமங்கலம் கிராமத்திற்கு வருகை தந்தனர்.விசமங்கலம் பேருந்து நிலையத்தில் பரப்புரை நடைபெற்றது. பயணம் மேற்கொண்ட தோழர்கள் வினோத் கவுன்சிலர் தி.மு.க., டி.சி.கார்த்தி தி.மு.க. மாணவர் கழகத் தலைவர் ஆகியோர் இருசக்கர வாகன பரப்புரை மேற்கொண்ட தோழர்கள் வரவேற்று பயனாடை அணிவித்து மரியாதை செய்தனர்.

மாவட்ட செயலாளர் பெ. கலைவாணன் தலைமையில், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் சி.எ.சிற்றரசன் வரவேற்பில் தோழமை இயக்கங்கள் தி.மு.க, ம.தி.மு.க, வி.சி.க, மனித நேய மக்கள் கட்சி ஆதி தமிழர் பேரவை, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் ஆகியோர்கள் பங்கேற்றனர்.

மாநில துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே. மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார். இப்பரப்புரையில் கழக தோழர்கள் அண்ணா. சரவணன் மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர், அ. உலகன் மாவட்ட தலைவர் மாணவர் கழகம், தங்க அசோகன் மாவட்ட துணைத் தலைவர், சி. தமிழ்ச்செல்வன் மாவட்ட தலைவர் ப. க., காளிதாஸ் நகர தலைவர், ஏ. டி. ஜி. சித்தார்த்தன் நகர செயலாளர், வ. புரட்சி மாவட்ட துணைத் தலைவர் விடுதலை வாசகர் வட்டம், பெ. ரா. கனகராஜ் கந்திலி ஒன்றிய தலைவர், ரா. நாகராசன் கந்திலி ஒன்றிய செயலாளர்,ம. சங்கர் மாவட்ட துணைத் தலைவர் இளைஞரணி, ப. அஜித் மாவட்ட துணைச்செயலாளர் இளைஞரணி, கே.ராஜேந்திரன் சோலையார்பேட்டை ஒன்றிய தலைவர், தா. பாண்டியன் சோலையார்பேட்டை ஒன்றிய செயலாளர், ப. நாத்திகன் மாவட்ட துணைச்செயலாளர், சுப்புலட்சுமி மாவட்ட தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்* இரா. கற்பகவள்ளி மாவட்ட தலைவர் மகளிர் பாசறை, சி. சபரிதா மாவட்ட செயலாளர் மகளிர் பாசறை, தி. நவநீதம் மாவட்ட அமைப்பாளர் மகளிர் பாசறை, கோ. திருப்பதி மாவட்ட தலைவர் ப.ஆசிரியரணி, குமரவேல் மாவட்ட செயலாளர் ப. ஆசிரியரணி, ஆர். பன்னீர் மாவட்ட செயலாளர் தொழிலாளரணி, கே. மோகன் மாவட்ட அமைப்பாளர் தொழிலாளரணி, எம்.ஞானபிரகாசம் குமரவேல், பெருமாள்சாமி, ஆ.ப.செல்வராஜ், இசை பிரியன் இளைஞரணி, சிவக்குமார் நகரதலைவர் சோலையார்பேட்டை ஜே.எம்.பி.வள்ளுவன் நகர அமைப்பாளர் சோலையார்பேட்டை, லட்சுமணன் சோலையார்பேட்டை பொறுப்பாளர், நரசிம்மன் நகர காப்பாளர், அன்புச் சேரன் நகர தலைவர் வாணியம்பாடி, மு. வெற்றி மாதனூர் ஒன்றிய தலைவர், சே. வெங்கடேசன் மாதனூர் ஒன்றிய செயலாளர், வே. அன்பு மாவட்ட செயலாளர் ப.க. எம்.என்அன்பழகன், நா. சுப்புலட்சுமி மாவட்ட ப. க. எழுத்தாளர் மன்றம், எஸ். சுரேஷ் குமார் மாவட்ட தலைவர் இளைஞரணி, ரவி ஆம்பூர் நகர தலைவர், இளங்கோ ஆம்பூர், ராஜ சேகர் கிரி சமுத்திரம்கிளை தலைவர், கோ. சங்கர் சுந்தரம் பள்ளி ஒன்றிய தலைவர், சி.சந்தோஷ் குமார் காக்கங்கரை ஆகியோர் பங்கேற்றனர்.

வாணியம்பாடி

நீட் தேர்வு இருசக்கர பிரச்சார பரப்புரை பயணம் சென்னையிலிருந்து புறப்பட்ட குழு 13.07.2024 சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் வாணியம்பாடி வருகை தந்தனர். வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் பரப்புரை நடைபெற்றது நகர் வந்தடைந்தது . பயணம் மேற்கொண்ட தோழர்கள் அனைவருக்கும் பயனாடை அணிவிக்கப்பட்டது.

நாட்றம்பள்ளி

13.07.2024 சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வருகை தந்தனர். நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் பரப்புரை நடைபெற்றது. பயணம் மேற்கொண்ட தோழர்கள் அனைவருக்கும் பயனாடை அணிவிக்கப்பட்டது.

மாவட்ட செயலாளர் பெ. கலைவாணன் தலைமையில், மாநில இளைஞரணி துணை செயலாளர் சி. எ. சிற்றரசன் வரவேற்பில் வாணியம்பாடி நகர தலைவர் அன்புச் சேரன் முன்னணியில் பரப்புரை நடந்தது.இதில் தோழமை இயக்கங்கள் ம. தி. மு. க, வி. சி. க, மனித நேய மக்கள் கட்சி ஆகியோர் பங்கேற்றனர்.

நாமக்கல் பூங்கா சாலையில் பரப்புரை

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் 15-07-2024 1.30 மணி அளவில் நாமக்கல் பூங்கா சாலையில் பிரச்சார பரப்புரை பயணம் நடைபெற்றது. இதில் பயணத் தலைவர் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன், பயண ஒருங்கிணைப்பாளர் சு.இனியன் கலந்து கொண்டனர்.

நாமக்கல் நகர செயலாளர் ப.ராமச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். நாமக்கல் மாவட்ட செயலாளர் வை.பெரியசாமி தலைமை வகித்தார். இந்திய கணசங்க கட்சித் தலைவர் மு.பெ.முத்துச்சாமி முன்னிலை வகித்தார். சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன் சிறப்புரை ஆற்றினார். இந்த பரப்புரை பயண பிரச்சாரக் கூட்டத்தில் திராவிடர் கழக அனைத்து அணியைச் சேர்ந்த தோழர்களும் தோழமை இயக்க தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர். வெண்ணந்தூர் ஒன்றிய தலைவர் இல.ப. செல்வகுமார் நன்றி கூறினார்.

கிருஷ்ணராயபுரத்தில்…

14-07-2024 கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் நடைபெற்ற நீட் ஒழிப்பு இருசக்கர வாகன பரப்புரை பயணத்தில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சிவகாமிசுந்தரி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மதுரையில்…

நீட் தேர்வு ஒழிப்பு இரு சக்கர வாகன பரப்புரை பேரணிக்கு மதுரை கழகத்தின் சார்பாக வரவேற்பு நடைபெற்றது.

தமிழ்நாட்டின் 5 முனைகளிலிருந்தும் இரு சக்கர ஊர்திகளில் ‘நீட்’டை எதிர்த்து பிரச்சாரப் பெரும் பயண வீரர் – வீராங்கனையர்


விடுதலை நாளேடு

 முதல் குழு (கன்னியாகுமரி முதல் சேலம் வரை – 1030 கி.மீ.)

1. தலைவர் இரா. செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்), 2. ஒருங்கிணைப்பாளர் சு. இனியன் – தென்காசி (திராவிடர் மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்), 3. பேச்சாளர் மூ. இளமாறன் – நாகை (திராவிடர் மாணவர் கழக சட்டக் கல்லூரி மாநில செயலாளர்) 4. ஆ. அறிவுச்சுடர் – திருச்சி, 5. த. வீரன் – தென்காசி, 6. பா. முத்துக்கருப்பன் – மதுரை, 7. த. நாகராஜ் – தூத்துக்குடி, 8. இரா. அழகர் – அருப்புக்கோட்டை, 9. ஏ. வீரபாண்டிய கட்டபொம்மன் – நெல்லை, 10. சு. ஆறுமுகம் – அருப்புக்கோட்டை, 11. செ. நவீன்குமார் – தூத்துக்குடி, 12. ப. வெங்கடேஷ் – பெரம்பலூர், 13. சீ. செங்கதிர் வள்ளுவன் – தென்காசி, 14. த. முத்துராமன் – திருநெல்வேலி, 15. ச. கசமுத்து – திருநெல்வேலி, 16. அ.க. அருள்மணி – திருச்சி, 17. சக்தி சரவணன் – திண்டுக்கல், 18. செ.அ. அவனிகோ இளந்திரையன் – லால்குடி.
தொடங்கி வைத்தவர்: மாநில ஒருங்கிணைப்பாளர் – இரா. குணசேகரன்.

இரண்டாம் குழு (இராமநாதபுரம் முதல் சேலம் வரை – 920 கி.மீ)
1. குழுத் தலைவர் நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), 2. ஒருங்கிணைப்பாளர் அ.ஜெ. உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), 3. சொற்பொழிவாளர் தே. நர்மதா (திராவிடர் கழகம்) 4. வாழப்பாடி வேல்முருகன், 5. ஜெகதை குமார், 6. கா. காரல் மார்க்ஸ், 7. வி. புஷ்பநாதன், 8. நாகை என். இரவிக்குமார், 9. ப. இராஜேந்திரன், 10. ஜா.இர. நிலவன், 11. அ. வீரமணி, 12. க. கலையரசன், 13. இர. மகேந்திரன், 14. க. இராகுல், 15. மு. கார்த்திக், 16. பொன். பன்னீர் செல்வம், 17. பெரியார் கணபதி, 18. இரா. இரமேஸ், 19. சு. தர்மசீலன், 20. அ. பிரகாசு, 21. செ. மர்சிகா.
தொடங்கி வைத்தவர்: கே.எம். சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்).

மூன்றாம் குழு (புதுச்சேரி முதல் சேலம் வரை 1000 கி.மீ)
1. குழுப் பேச்சாளர் சே.மெ. மதிவதனி (கழக துணைப் பொதுச் செயலாளர்), 2. தலைவர் தா. தம்பிபிரபாகரன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), 3. செ.பெ. தொண்டறம், 4. பி. அறிவுச்செல்வன், 5. குழு ஒருங்கிணைப்பாளர் கோ. வேலு (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), 6. க. சத்தியசீலன், 7. ச. சித்தார்த், 8. நவா ஏழுமலை, 9. ச. அன்புகரசன், 10. நா. உதயசங்கர், 11. பா. செந்தில், 12. ரா. ராமநாதன், 13. ப. பாஸ்கர், 14. இரு. ராஜேந்திரன், 15. த. நந்தகுமார், 16. மு. அருண்குமார், 17. கு. பிரவீன்குமார், 18. த.சி. இளந்திரையன், (தலைமைக் கழக அமைப்பாளர்), 19. செ. சிலம்பரசன், 20. சு. பன்னீர்செல்வம்.
தொடங்கி வைத்தவர்: சிவ. வீரமணி, (புதுவை மாநில தலைவர்).

நான்காம் குழு (தாராபுரம் முதல் சேலம் வரை – 890 கி.மீ.)
1. குழு ஒருங்கிணைப்பாளர் மு.வீரமணி (மேட்டுப்பாளையம் மாவட்ட இளைஞரணி தலைவர்), 2. மு. பிரபாகரன், 3. ச. பிரசாந்த், 4. குழுத் தலைவர், த. சிவபாரதி (திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்), 5. கோ. பிரகதீஸ்வரன், 6. ந. விக்னேஷ்குமார், 7. ந. மோகன்குமார், 8. ச. ஆதித்யன், 9. குழு பேச்சாளர், தருமபுரி யாழ். திலீபன் (அரூர் மாவட்ட இளைஞரணி தலைவர்) 10. சி. புதுமைராஜ்.
நான்காம் குழுவில் பெண்கள் யாரும் இடம் பெறவில்லை.
தொடங்கி வைத்தவர்: மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்.

அய்ந்தாம் குழு (சென்னை முதல் சேலம் வரை – 660 கி.மீ.)
1. குழு பேச்சாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்), 2. குழுத் தலைவர் சோ. சுரேஷ் – வடசென்னை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), 3. குழு ஒருங்கிணைப்பாளர் மா. செல்லதுரை– தருமபுரி (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), 4. தளபதி பாண்டியன் – வடசென்னை 5. ஆ. வெங்கடேசன்– வடசென்னை, 6. மு. வேலவன் – வடசென்னை, 7. நா. பார்த்திபன் – வடசென்னை, 8. பா. பார்த்திபன் – வடசென்னை 9. அ. புகழேந்தி – வடசென்னை, 10. கி. ஏழுமலை – ஆவடி, 11. சா. சென்னகிருஷ்ணன் – ஆவடி, 12. வ. வேலவன் – ஆவடி 13. நா. விவேகானந்தன் – தாம்பரம், 14. க. கண்ணன் – தாம்பரம், 15. ஜி. ராஜவர்மன்– தாம்பரம், 16. த. ராஜா– தென்சென்னை, 17. இரா. அருள் – தென்சென்னை, 18. ச. அகரன்– கிருஷ்ணகிரி, 19. கு. ஹரிஹரன் – தருமபுரி, 20. மா. நித்தியானந்தம் – திருப்பத்தூர், 21. தா. பாண்டியன் – திருப்பத்தூர், 22. மு. பசும்பொன் –ஆவடி 23. க. இறைவி – தாம்பரம், 24. த. மரகதமணி – வடசென்னை, 25. டே. பிரித்திவிராஜ் – வடசென்னை, 26. மு. பவானி – தென்சென்னை, 27. சா. தாமோதரன் – தென்சென்னை, 28. ரே. வடிவேலன் – அரூர், 29. கு. ராஜேந்திரன் – திருப்பத்தூர், 30. ஆ. செல்வம் – சோழிங்கநல்லூர் 31. ச. சஞ்சய்– தென்சென்னை, 32. ர. ராஜேஷ்– அரூர், 33. வி. யாழ்ஒளி – தென்சென்னை, 34. கே.என். மகேஷ்வரன் – வடசென்னை, 35. ஒ. இராமச்சந்திரன் – வடசென்னை, 36. பொ.இ. பகுத்தறிவு – தஞ்சை, 37. வை. கலையரசன் – ஆவடி 38. துரை. அருண் – தென் சென்னை 39. கோகுல்குமார் – ஒசூர், 40. சித்தார்த் – ஒசூர், 41. ச. தருண் – ஒசூர், 42. ச.க. தருண் – ஒசூர், 43. வே. சரவணன் – வடசென்னை.
தொடங்கி வைத்தவர்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்.
5 குழுக்களினதும் ஏற்பாட்டு ஒருங்கிணைப்பாளர் : பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்.

‘நீட்’ எதிர்ப்பு இரு சக்கர ஊர்திப் பயணம் மேற்கொண்டு வருகை தந்த இளைஞர்களை சேலத்தில்
கழக பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் வரவேற்றார்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பிற்கு இணங்க நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் ஜூலை 11ஆம் தேதி கன்னியாகுமரி, இராமநாதபுரம், புதுச்சேரி, தாராபுரம், சென்னை ஆகிய 5 முனைகளில் இருந்து புறப்பட்டு ஒவ்வொரு குழுவும் பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து சிற்றூர், பேரூர், நகராட்சி, மாநகராட்சி என பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து ‘நீட் விலக்கு ஏன்’ என்ற துண்டறிக்கைகளையும், புத்தகங்களையும் மக்களிடையே பரப்பி ஜூலை 15 சேலம் வருகை தந்த 5 குழுக்களிலும் பங்கேற்ற 112 இளைஞர்கள், மாணவர்களை சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் வரவேற்று பேரணியாக மேடைக்கு அழைத்து வந்தார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா. குணசேகரன், தலைமை கழக அமைப்பாளர்கள், ஊமை ஜெயராமன், ஈரோடு சண்முகம் ஆகியோரும் வரவேற்றனர்.

‘நீட்’ எதிர்ப்பு இரு சக்கர ஊர்திப் பேரணியை
சேலத்தில் தலைவர்கள் பார்வையிட்டனர்
திராவிடர் கழக இளைஞரணி, திராவிடர் மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் 5 முனைகளில் இருந்து புறப்பட்டு ஜூலை 15இல் சேலம் நிறைவு விழாவிற்கு வருகை தந்த நீட் எதிர்ப்பு இரு சக்கர ஊர்திப் பேரணியாக வருகை தந்த குழுவினரை, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மேனாள் அமைச்சர் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மேனாள் தலைவர் ஈ.வி.கி.ச. இளங்கோவன் எம்.எல்.ஏ., சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளர் இராஜேந்திரன் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ. வந்தியதேவன், கழக பொதுச் செயலாளர் வீ. அன்பு ராஜ் ஆகியோர் பார்வையிட்டு கையசைத்து வாழ்த்தி வரவேற்றனர்.

திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழகம் சார்பில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி மாபெரும் இரு சக்கர வாகனப் பரப்புரை பயண நிறைவு விழா பொதுக் கூட்டம் சேலம் – கோட்டை மைதானத்தில் நேற்று (15.7.2024) மாலை 6 மணிக்கு தொடங்கியது. அய்ந்து முனைகளிலிருந்தும் (11.7.2024) புறப்பட்டு கன்னியாகுமரி, இராநமாதபுரம், புதுச்சேரி, தாராபுரம், சென்னை ஆகிய முக்கிய நகரங்களில் தொடங்கிய 100க்கும் மேற்பட்ட தோழர்கள் 60க்கும் மேற்பட்ட வாகனங்களில் கோட்டை மைதானத்தை வந்தடைந்தனர். மூன்று வரிசைகளாக அணி வகுத்த தோழர்களை விண்ணைமுட்டும் முழக்கத்துடன் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா எம்.பி., மேனாள் ஒன்றிய அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் உள்ளிட்ட தலை வர்கள், பயணத் தோழர்களை வரவேற்றனர். ‘நீட்’டை ஒழித்துக் கட்டுவதற்கான முழக்கம் ஒலித்தது. நிகழ்ச்சியின் தொடக்கமாக அனைவரையும் சேலம் மாவட்டத் தலைவர் அ.ச. இளவழகன் வரவேற்று உரையாற்றினார்.

சேலம் மாவட்டச் செயலாளர் சி. பூபதி தலைவரை முன்மொழிந்தார். அதனை தொடர்ந்து ஜூலை 11ஆம் தேதி தொடங்கி 15.7.2024, வரை அய்ந்து நாட்கள் வெயில், மழையின் இடையில் தொடர் பிரச்சா ரங்களை மேற்கொண்டு 250க்கும் மேற்பட்ட நகர, பேரூர், ஒன்றிய, கிராமங்களில் ‘நீட்’க்கு எதிரான முழக்கங்களை எடுத்துரைத்த கழகத்தின் இளைஞரணி சொற்பொழிவாளர்கள் 1) திருவாரூர் தே. நர்மதா, 2). மு. இளமாறன், 3. த.மு. யாழ் திலீபன் மற்றும் கழக துணைப் பொதுச் செயலாளர்கள், 4. சே.மெ. மதிவதனி, 5. ச. பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் பயணத்தின் நோக்கத்தையும் மக்களின் மன நிலையையும், சுருக்க மாக எடுத்துக் கூறி உரையாற்றினார்கள். 5ஆம் குழுத் தோழர்கள் கழகத் தலைவரிடம் பயண குழு உண்டியலை காண்பித்தவுடன் தமது சர்பாக ரூ.500ம், அதனைத் தொடர்ந்து ஆ. இராசா எம்.பி., ஈ.வெ.கி.ச. இளங்கோவன் எம்.எல்.ஏ., இரா. இராசேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோரும் பயணக் குழுவை பாராட்டி உண்டியல் நிதி அளித்தனர். ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி மாநிலச் செயலாளர் ஆ. வந்தியத்தேவன், இந்த வாகனப் பேரணியை சென்னை பெரியார் திடலில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். திருவண்ணாமலை, விருத்தாச்சலம் ஆகிய ஊர்களிலும் பங்கேற்று உரையாற்றி இருக்கிறேன் என்று கூறினார்.

மதிமுக கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் ஆ. வந்தியத்தேவன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், சேலம் மாநகர மேயர் ஆ. இராமச்சந்திரன், தி.மு.க. மத்திய மாவட்டச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான இரா. இராஜேந்திரன், சேலம் தமிழ்நாடு கமிட்டியின் ேமனாள் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் எம்.எல்.ஏ., நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளருமான ஆ. இராசா ஆகியோர் பயணக் குழுக்களை வரவேற்று வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று நிறைவுரையாற்றினார். நிகழ்ச்சியை மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிறைவாக சேலம் மாநகர செயலாளர் ச.வெ. இராவணபூபதி நன்றி கூறி விழாவை நிறைவு செய்தார்.