சமூகநீதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகநீதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 மே, 2023

சட்டமன்றம், நாடாளுமன்றம், நிர்வாகத் துறைகளைவிட நீதித் துறையில்தான் இட ஒதுக்கீடு மிக முக்கியமாகத் தேவை!

  

 சமூகநீதி என்பது பிச்சையல்ல - சலுகை அல்ல - நமது உரிமை!

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்!

13

சென்னை, பிப்.16 சட்டமன்றம்,  நாடாளுமன்றம் - நிர்வாகத் துறை இவற்றைவிட இட ஒதுக்கீடு எதற்கு மிக முக்கியமாகத் தேவை என்றால், நீதித் துறையில்தான் இட ஒதுக்கீடு தேவை. ஏனென்றால், அதற்கு மிக எளிய விடை -  இந்த மேற்கண்ட இரண்டு துறைகளும் செய்யக்கூடியவற்றை சரியா? தவறா? என்று முடிவு செய்து - சிவப்பு மையினால் கோடு போட்டு அது செல்லுமா, செல்லாதா? என்று கூறும் சக்தி வாய்ந்த இடத்தில் நீதிமன்றங்கள் இருக்கின்றன என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சமூகநீதிகோரி ஆர்ப்பாட்டம்!

கடந்த 11.2.2023 அன்று முற்பகல் 11 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே  உச்ச - உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன ஆதிக்கமா? தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக நீதிபதிகள் புறக் கணிக்கப்படுவது ஏன்?  என சமூகநீதி கோரி திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

சமூக அநீதிக் கொடியை இறக்கிவிட்டு - சமூகநீதிக் கொடியை ஏற்றவேண்டிய காலம் நெருங்கிவிட்டது!

மிகக் குறுகிய காலத்தில், உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றம் ஆகியவற்றில் சமூக நீதி கொடி பறக்கவேண்டும்; இங்கே சமூகநீதிக்கு இடமில்லாத, சமூக அநீதிக் கொடி பறந்துகொண்டிருக்கின்றது. அந்த சமூக அநீதிக் கொடியை இறக்கிவிட்டு, சமூக நீதிக் கொடியை ஏற்றவேண்டிய நாள் நெருங்கிவிட்டது என்பதற்கு அடையாளமாகத்தான், அண்மையில் நடந்த பல்வேறு நியமனங்கள்; அந்த நியமனங்களுக்குள் ஏற்பட்டி ருக்கின்ற பல்வேறு போட்டிகள்; அங்கே நிகழ்ந்துள்ள உயர்ஜாதி ஆதிக்க நிலை; நம்மவர்களுக்குக் கதவு சாத்தப்படக் கூடிய ஒரு பேராபத்து - இவற்றையெல்லாம் விளக்கி, தமிழ்நாடு முழுவதும் இன்றைக்குத் திராவிடர் கழகமும், அதேபோல, கழகத்தினுடைய மூன்றாவது குழலாக எப்பொழுதுமே இருக்கக்கூடிய நம்முடைய எழுச்சித் தமிழர் தலைமையில் இயங்கக்கூடிய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும், அதேபோல நம்முடைய இடதுசாரி தோழர்கள் கொள்கைப் பயணத் தோழர்கள் என்பதில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எப்போதும் நம்மில் ஒருவராக இருக்கக்கூடியவர்கள் என்பதற்கு அடையாளமாக இடதுசாரிகளின் சார்பாக இங்கே உரையாற்றிய நம்மு டைய மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன் அவர்களே,

இந்நிகழ்வில் எனக்கு முன் உரையாற்றிய கழகத் துணைத் தலைவர் அவர்களே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வம் அவர்களே,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், சீரிய கொள்கையாளருமான அருமைத் தோழர் தழிழரசன் அவர்களே,

திராவிடர் கழகப் பொருளாளர் குமரேசன் அவர் களே, கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு வரவேற்புரையாற்றிய திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் த.வீரசேகரன் அவர்களே,

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் ஜெயக்குமார் அவர்களே, மாநில அமைப்பாளர் குணசேகரன் அவர்களே, அமைப்புச் செயலாளர் பன்னீர்செல்வம் அவர்களே,

வழக்குரைஞரணி மாநில துணைத் தலைவர் வழக்குரைஞர் ராஜசேகரன் அவர்களே, மாநில துணைத் தலைவர் வழக்குரைஞர் திருப்பூர் பாண்டியன் அவர் களே, வழக்குரைஞர் நம்பியூர் சென்னியப்பன் அவர் களே, தம்பி பிரபாகரன் அவர்களே, மணியம்மை அவர்களே, சண்முகப்பிரியன் அவர்களே,  தளபதி பாண்டியன் அவர்களே, சுரேஷ் அவர்களே, துரை அருண் அவர்களே,  திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி அவர்களே,

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,  மாநில இளைஞரணி செயலாளர் சேகர் அவர்களே,

மற்றும் இங்கு பல்வேறு அமைப்புகளிலிருந்து வந்தி ருக்கக் கூடிய அருமை நண்பர்களே, போராட்டக் களத்தில் இருக்கக்கூடிய அருமைப் போராளிகளான சக தோழர்களே, ஊடகச் செய்தியாளர்களான அருமை நண்பர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விரிவாக விளக்கமாக இன்றைய நிலையை மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்

தோழர்களே, இங்கே உரையாற்றியவர்களின் உரையில், குறிப்பாக தோழர் வீரபாண்டியன் அவர்களும் சரி, எழுச்சித் தமிழர் அவர்களும், கழகத் துணைத் தலைவர் அவர்களும் விரிவாக விளக்கமாக இன்றைய நிலையை மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.

உச்ச, உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி தேவை என்ப தற்கு இப்படி ஒரு போராட்டம் நாடெங்கும் நடை பெறுவதற்காக வெட்கப்படவேண்டியவர்கள் உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் இருக்கக்கூடிய நீதிபதிகள்தான்; அல்லது அவர்களை நியமிக்கின்ற அதிகாரம் கொண்டவர்கள்தான் என்பதை நான் மெத்தப் பணிவன்போடு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

சமூகநீதி என்பது பிச்சையல்ல - 

சலுகை அல்ல - நமது உரிமை!

ஏனென்றால், நிச்சயமாக சமூகநீதி என்பது பிச்சை யல்ல; சமூகநீதி என்பது நாம் ஏதோ முறை தவறி, வழிதவறி, அரசமைப்புச் சட்டத்தில் இல்லாத ஒன்றை, நீங்கள் எங்களுக்குக் கொடுங்கள் என்று கேட்பதற்கு, நாம் பாத்திரம் ஏந்திக் கொண்டு போகவில்லை.

அரசமைப்புச் சட்டத்தின்மீதுதான் இவர்கள் பிரமாணம் எடுத்துப் பதவிக்குப் போகிறார்கள். அந்த அரசமைப்புச் சட்டத்தில் பதவிப் பிரமாணம் எடுக்கும் பொழுது, பீடிகையில் உள்ளது என்ன?

அந்தப் பீடிகையை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கஷ்டப்பட்டு உருவாக்கினார். அந்த ஒன்றுக்காவது அவர் தன்னுடைய முழு சுதந்திரத்தையும், தன்னுடைய முழு ஆற்றலையும் பயன்படுத்தினார்.

WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens:

JUSTICE, social, economic and political; LIBERTY of thought, expression, belief, faith and worship;

EQUALITY of status and of opportunity;

and to promote among them all FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation

எல்லாக் குடிமக்களுக்கும் நியாயங்கள், நீதி என்கிற வார்த்தையைப் போட்டுவிட்டு, சமூகநீதிக்கு முன் னுரிமை; இரண்டாவது பொருளாதார நீதி; மூன்றாவது அரசியல் நீதி.

எனவே, இது மாற்றப்பட முடியாத அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிக்கட்டுமானமாகும்.

எந்த அரசாங்கமாக இருந்தாலும், இதை செய்தே தீரவேண்டும் என்பது கட்டளை. அது வேண்டுகோள் அல்ல.

எனவேதான், நாம் சமூகநீதியை, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நமக்குத் தேவை என்று போராடு கின்றோம் என்று சொன்னால், அந்தப் போராட்டத்திற்கு அவசியம் இல்லாமலேயே அதனை செய்திருக்க வேண்டும். ஆனால், பார்ப்பனியத்திற்கு இதயம் கிடையாது; பார்ப்பனியத்திற்கும், மனிதாபிமானத்திற்கும் சம்பந்தம் கிடையாது. ஆரியத்திற்கும், நியாயத்திற்கும், நியதிக்கும் சம்பந்தம் கிடையாது.

அதைத்தான் மனோன்மணியம் சுந்தரனார் அழகாகச் சொன்னார் - மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி என்று.

‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய 

முதல் கட்டம்தான் - வகுப்புவாரி உரிமை

நம்முடைய தலைவர்கள் போராடி, நீதிக் கட்சிக் காலத்திலிருந்து போராடி, திராவிட ஆட்சிக் காலத்திலிருந்து போராடி - இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இல்லாத காலத்தில், முதல் முறையாக, 1928 இல் திராவிடர் ஆட்சிதான் - ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய முதல் கட்டம் தான் - வகுப்புவாரி உரிமை என்பதைக் கொடுத்தது.

அதில்கூட பார்ப்பனர்களை நாம் வஞ்சிக்க வில்லை; பார்ப்பனர்களுக்கு இடம் கிடையாது என்று சொல்லவில்லை; உயர்ஜாதிக்காரர்களுக்கு இடம் கிடையாது என்று சொல்லவில்லை. நீங்கள் எந்த அளவு அனுபவிக்கிறீர்களோ, அதைவிட பல மடங்கு கொடுக்கிறோம் என்று சொல்லி, வகுப்புவாரி உரிமை என்ற அந்தக் கம்யூனல் ஜி.ஓ.வில் நண்பர்களே, மூன்று சதவிகித பார்ப்பனர்களுக்கு 16 சதவிகிதம் கொடுத்தார்கள்; 5 மடங்கு அதிகம் கொடுத்தார்கள்.

அதை எதிர்த்து ஏன் அவர்கள் வழக்குத் தொடுத்தார்கள்; அதுவும் ஒரு பொய்ப் பிர மாணத்தை ஒரு பார்ப்பன அம்மையார், நீதிமன் றத்தில் தாக்கல் செய்தார். அதற்காக அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்; ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை; அவர் களுக்கெல்லாம் சட்டம் வளைந்து கொடுக்கிறது. நம்மை மாதிரி இருப்பவர்கள்தான் மிலேச்சர்கள்; நாம்தான் சூத்திரர்கள்; நாம்தான் பஞ்சமர்கள்; நாம்தான் அடித்தளத்தில் இருக்கக்கூடியவர்கள்; ஆகவே, நாமெல்லாம் சண்டாளர்கள் - எனவே, நமக்குத்தான் தண்டனை உண்டே தவிர, அவர்களுக்கெல்லாம் கிடையாது.

அந்த கம்யூனல் ஜி.ஓ. வழக்கில், நூற்றுக்கு நூறு எங்களுக்கு வழங்கவேண்டும்; மற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. காரணம் என்ன? சூத்திரர்கள் படிக்கக் கூடாது; எந்த ஜாதிப் பெண்களாக இருந்தாலும், பெண்கள் படிக்கக்கூடாது என்று சொன்னதினால்தான், பெரியார் போராடினார்.

முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் செய்து வழிகாட்டியது தமிழ்நாடு

அன்றைக்கு முதல் முறையாக அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டதினால்தான், தமிழ்நாட்டிலே மட்டும் இருந்த சமூகநீதி, கேட்காமலேயே வடபுல மாநிலங் களுக்கும், இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில், முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் செய்து வழிகாட்டியது தமிழ்நாடு.

இதை சகோதரர் எழுச்சித் தமிழர் அவர்கள் இங்கே சொன்னார்கள்.

தமிழ்நாடுதான் கலங்கரை விளக்கம். தமிழ்நாடுதான் எதையும் முதலில் சொல்லக்கூடிய ஆற்றலும், முன்னோக்கும் கொண்டது.

அதைத்தான் தந்தை பெரியார் செய்தார். அவருக்கு ஒரு உறுப்பினர்கூட கிடையாது நாடாளுமன்றத்தில்.

நல்ல வாய்ப்பாக, ஜனநாயகவாதி பிரதமராக நேரு இருந்தார்; நல்ல வாய்ப்பாக சட்ட அமைச்சராக நம்முடைய புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் இருந்ததி னால், அரசமைப்புச் சட்ட முதல் திருத்தம் வந்தது.

தமிழ்நாட்டில்தான் 69 சதவிகித இட ஒதுக்கீடு, இந்தியாவிலேயே 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்பில்...

மற்ற இடங்களில் சமூகநீதி வந்திருக்கிறது. கல்வியில் இட ஒதுக்கீடு வந்திருக்கிறது. இன்னுங்கேட்டால், தமிழ் நாட்டில்தான் 69 சதவிகித இட ஒதுக்கீடு, இந்தியாவிலேயே 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்போடு இருக்கிறது.

இப்பொழுது மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் எங்களுக்கு 9 ஆவது அட்டவணை பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அண்டை மாநிலமான கருநாடக மாநிலத்தில் நடைபெறப் போகும் தேர்தலில், இதைச் சொல்லியாவது வாக்கு வாங்கலாமா? என்று பிஜேபியினர் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் முன்னோடி நாம்தான்!

இப்பொழுதுதான் ஷெட்யூல் காஸ்டுக்கு 15 சதவிகிதம், 16 சதவிகிதம் கொடுக்கலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எத்த னையோ ஆண்டுகளுக்கு முன்பாக அவர்களுக்கு 18 சதவிகிதத்தைக் கொடுத்திருக்கிறோம்; எல்லாவற்றிற்கும் முன்னோடி நாம்தான்.

ஆனால், கல்வியில் இட ஒதுக்கீடு; வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு - எந்த அளவிற்கு செயல்பாட்டில் இருக்கிறது என்பது அது ஒரு தனி விவாதத்திற்குரியது. உதாரணமாக, மண்டல் அறிக்கையின்படி 27 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்று நாம் போராடினோம். ஏட்டுச் சுரைக்காயாக 27 சதவிகிதம் என்று எழுதி, உத்தரவு போட்டிருக்கிறார்கள்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டால், வெறும் 11 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதம்தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கே கூட. மீதி 14 சதவிகிதம் யாருக்கு? உயர்ஜாதிக்காரர்களுக்குத்தான். இந்தத் தகவலை ஒன்றிய அரசே கொடுத்திருக்கிறது - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்.

எனவே, இது ஒரு பக்கத்தில் இருந்தாலும் நண்பர் களே, அங்கெல்லாம் இட ஒதுக்கீடு இருந்தாலும்கூட - ஜனநாயகத்தைப் பொறுத்தவரையில், 18 வயதுள்ள வர்களுக்கு வாக்குரிமை இருப்பதினால் வருகிறார்கள்.

மிக முக்கியமாகத் தேவை - நீதித் துறையில்தான் இட ஒதுக்கீடு தேவை

சட்டமன்றம்,  நாடாளுமன்றம் - நிர்வாகத் துறை இவற்றைவிட இட ஒதுக்கீடு எதற்கு மிக முக்கிய மாகத் தேவை என்றால், நீதித் துறையில்தான் இட ஒதுக்கீடு தேவை. ஏனென்றால், அதற்கு மிக எளிய விடை -  இந்த மேற்கண்ட இரண்டு துறைகளும் செய்யக்கூடியவற்றை சரியா? தவறா? என்று முடிவு செய்து - சிவப்பு மையினால் கோடு போட்டு அது செல்லுமா, செல்லாதா? என்று கூறும் சக்தி வாய்ந்த இடத்தில் நீதிமன்றங்கள் இருக்கின்றன.

நாம் அரும்பாடுபட்டு, ஆட்சியை உருவாக்கி, எல்லாவற்றையும் செய்தால், அவற்றை எதிர்த்து சிலர் நீதிமன்றத்திற்குச் செல்லும்பொழுது, தீர்ப்பு பல நேரங்களில் அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது.

சாலையின் ஓரமாக இருக்கின்ற குடிசைகள்  போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது எடுக்க வேண்டும் என்றால், பரவாயில்லை அகற்றி விடுங்கள் என்று சொல்கிறார்கள்.

சமமாக அல்லவா நீதி வழங்கவேண்டும்!

நடு சாலையில், பெரிய கல்லை வைத்து, அது கோவில் என்று சொல்லும்பொழுது, அது போக்கு வரத்திற்கு இடையூறாக இருக்கிறது; அதை அகற்ற வேண்டும் என்றால், ‘‘அய்யய்யோ அது கோவில், அதை இடிக்கக் கூடாது’’ என்று சொல்கிறார்கள்.

இதுதான் நீதியா? இரண்டிற்கும் சமமாக அல்லவா நீதி வழங்கவேண்டும்.

ஆகவேதான்,  நீதித் துறையில் இட ஒதுக்கீடு என்பது மிகமிக முக்கியம். ஏனென்றால், நிர்வாகத் துறையும், நாடாளுமன்றம், சட்டமன்றமும் கொண்டு வருகின்ற சட்டமும், போடுகின்ற ஆணையும் செல்லுமா? செல் லாதா? என்பதை முடிவு செய்யக்கூடிய சர்வ சக்தி வாய்ந்தது நீதிமன்றம்.

(தொடரும்)

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம் தேவை

வரும் நவம்பரில் டில்லியில் அகில இந்திய அளவில் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் மாநாடு
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் உரை
சென்னை, ஆக.16 அரசமைப்புச் சட்டப்படி மூன்று முக்கிய துறைகளில் நீதித்துறை மிகவும் முக்கியமானது; மாவட்ட அளவில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு இருக்கும் பொழுது, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அளிக்கப்படாதது சமூக அநீதியாகும். இத்துறைகளிலும் இடஒதுக்கீட்டை வலியுறுத்திட, வரும் நவம்பர் மாதத்தில் சமூக நீதி உணர்வுடைய அனைத்துக் கட்சிகளையும், தலைவர்களையும் ஒருங் கிணைத்து திராவிடர் கழகம் மாநாடு ஒன்றை டில்லியில் நடத்தும்; தொடர்ந்து போராடும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,  இன்று (16.8.2018) சென்னை மண்டல திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  தலைமை வகித்து திராவிடர் கழகத் தலைவர் உரையாற்றுகையில் கூறியதாவது:
சமூகநீதி என்பது வெறும் கல்வி, உத்தியோகத்துறையிலே மட்டும் இருக்கக்கூடாது. இதற்கே போராடித்தான் 1951ஆம் ஆண்டில் அரசமைப்புச் சட்ட முதல் திருத்தம் தொடங்கி போராடித்தான் வெற்றி பெற்றிருக்கிறோம்;  உயர்நீதி மன்றங்கள், உச்சநீதிமன்றம் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு  அறவே புறக்கணிக்கப்படுகிறது.
மூன்று துறைகளில் முக்கியமானது  நீதித்துறை
நீதிபதிகள் நியமனம் என்பது  அரசமைப்புச் சட்டத்தி னுடைய துறைகளில் மூன்று பிரிவுகளில் மிகமிக முக்கியமானது.
அரசு நிர்வாகம், சட்டங்களை இயற்றுகின்ற சட்டமன்றம், இறுதியாக நீதிமன்றம் என்ற  மூன்று பிரிவுகளிலே மூன்றாவது பிரிவுதான் மற்ற இரண்டு பேரும் செய்கின்ற காரியங்களை விமர்சித்து, பரிசீலித்து, செல்லும், செல்லாது என்று சொல்லி, எல்லாவற்றுக்குமே உத்தரவு கொடுத்துக் கொண்டிருக்கக் கூடிய உண்மையான அதிகாரம் நீதிபதிகளிடத்திலே, நீதிமன்றங்களில்தான் இருக்கிறது. அந்த நீதிமன்றங்களிலே  தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத் தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், அதேபோல சிறுபான்மை சமுதாயத்தினர், பெண்கள்  இவர்கள் அத்துணைப் பேருக்கும் உரிய இடத்தை, பிரதிநிதித்துவத்தைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகம் நடத்தும் இந்தப் போராட்டத்தினுடைய நோக்கமாகும்.
இடஒதுக்கீடு நீதித்துறையிலே உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்திலும்கூட செய்யக்கூடிய அளவிற்கு இன்றைக்கு இருக்கிற சட்டமே போதுமானது.
அரசமைப்புச்சட்டத் திருத்தம்கூட செய்ய வேண்டும் என்று நாம் கோர வேண்டியதில்லை. தேவைக்கு அதிக மாகவே அதைக் கேட்கிறோம் நாம்.
காரணம் என்னவென்று சொன்னால், மாவட்ட நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கின்ற வரையிலே இட ஒதுக்கீடு இருக்கிறது.
மாவட்ட நீதிபதிகளுக்கு அடுத்த கட்டம், மேல் கட்டம் தான் உயர்நீதிமன்றம், அதேபோல, உச்சநீதிமன்றம்.
கோவையில் மட்டும் தனி சட்டமா?
உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் நியமனத்திலும் இடஒதுக்கீடு கோரி திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. ஆனால் கோவையில் மட்டும் காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஒரு சட்டம்,   கோவையில் மட்டும் தனி சட்டம் - கோலோச்சுகிறதோ?
உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட ஒருவர்கூட நீதிபதியாக இல்லை
உச்சநீதிமன்றத்திலே 31 நீதிபதிகளிலே ஒரு நீதிபதிகூட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் கிடையாது பல ஆண்டுகளாக.
அதேபோல, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இடம் 27 சதவிகிதத்தை   இதிலே  கடைப்பிடிப்பதே இல்லை.  இது ஏதோ மாவட்ட நீதிபதிகள் அளவிலேதான் இடஒதுக்கீடு உண்டு, உயர்நீதிமன்றங்களுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் கிடையாது என்பது ஒரு தவறான ஒரு நிலை. எனவே இதை வலியுறுத்த வேண்டும். மோடி அரசு அண்மைக்காலத்திலே, தங்களுடைய செல்வாக்கு சரிந்திருக்கிற காரணத்தினால், தாழ்த்தப்பட்ட மக்கள்,  பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியிலே அவர்களுடைய வாக்கு வங்கியைப் பெறவேண்டும் என்று இப்போது அம்பேத்கரைப்பற்றி அதிகமாக கவலைப்படுகிறார்.
இடஒதுக்கீட்டைப்பற்றி அவர்கள் வேகமாகப் பேசுகிறார்கள்.
அண்மையிலே, நேற்று சுதந்திர நாள் உரையிலேகூட, அதை அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
பிரதமர் என்ன செய்ய வேண்டும்?
உண்மையாகவே அதை சிந்திக்கிறார் என்று சொன்னால், உடனடியாக செய்ய வேண்டியது என்னவென்றால், உச்சநீதிமன்றத்துக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதிகள், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதிகள் இவர்கள் வரவேண்டும்.
பெண்களுக்கு உரிய பங்களிப்பை அளிக்க வேண்டும். பெண்களுக்குரிய பங்களிப்பு என்கிற போர்வையிலே, உயர்ஜாதிக்காரப் பெண்களைத்தான் நியமனம் செய்கிறார்களே தவிர, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துப் பெண்களுக்கு அங்கே வாய்ப்பு இல்லை. ஆகவேதான், இந்த போராட்டம் என்பது தமிழ்நாடு முழுக்க மாவட்டத் தலைநகரங்களில் இன்று தொடங்கி நடக்கிறது. அடுத்த கட்டமாக, புதுடில்லியிலே அகில இந்திய தலைவர்களை வைத்து சமூகநீதி நீதித்துறையிலும் வரவேண்டும் என்ற ஒரு கோரிக் கையை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் மாநாடு நடைபெறும். அதுபோலவே, இடஒதுக்கீட்டை ஒருபக்கத்திலே கொடுத்துவிட்டு, இன்னொரு பக்கத்திலே பொதுத்துறைகளையெல்லாம் தனியார் துறை களாக மாற்றி, இடஒதுக்கீடு கிடைக்காத சூழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது இப்பொழுது.
அந்த சூழ்ச்சியையும் முறியடிக்கின்ற வகையிலே, தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு என்பதை வலியுறுத்துவோம்.
சமூகநீதி வென்றெடுக்க வேண்டுமானால்,  உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் இவைகளில் இந்தியா முழுவதும் சமூகநீதிக்கு இடமிருக்க வேண்டும். தமிழ்நாட்டைப்பொருத்தவரையில் ஓரளவுக் காவது இருக்கிறது. ஆனால், மற்ற மாநிலங்களிலே  பல நீதிமன்றங்களில் தாழ்த்தப்பட்ட சமுதாய நீதிபதிகளே கிடையாது. அதேபோல உச்சநீதிமன்றத்திலே கிடையாது.
நாடாளுமன்றத்திலே இருக்கிறவர்கள் வெறும் முதலைக்கண்ணீர் விடவேண்டும் என்ற நிலை இருக்கக்கூடாது.
உள்ளபடியே அக்கறை இருக்குமேயானால், மோடி, பாஜக அரசு நாளைக்கே அவர்கள் தொடங்கி நவம்பருக்கு உள்ளாக அவர்கள் நியமனத்தை செய்ய வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் இடங்கள் காலியாக இருக்கின்றன. 31 இடங்களிலே 25 இடங்களில்தான் இப்போது நீதிபதிகளை நிரப்பி இருக்கிறார்கள். எனவே, காலியான இடங்களிலே பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட் டவர்களை நியமிக்க வேண்டும் என்பது முதல் கோரிக்கை.
இரண்டாவது கோரிக்கை உயர்நீதிமன்றங்களிலும் இது தெளிவாக இருக்க வேண்டும் என்பது.
மூன்றாவது கோரிக்கை தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்பது.
இந்த மூன்று கோரிக்கைகளையும் வலியுறுத்தி இன்றைக்கு தமிழ்நாடு முழுக்க எல்லா மாவட்டங்களிலும் திராவிடர் கழகத்துக்காரர்களால் அறப்போராட்டம் நடைபெறுகிறது.
வரும் நவம்பரில் டில்லியில் மாநாடு
அடுத்த கட்டம் ஒத்த கருத்துள்ள அனைவரையும் அழைத்து டில்லியிலே வருகிற நவம்பரிலே பெரிய அளவிற்கு, தந்தை பெரியாருடைய 140ஆவது பிறந்த நாள் விழாவையும் இணைத்து, அதிலே சமூகநீதி மாநாடு என்பதை மிகத்தெளிவாக பல அமைப்புகளை ஒருங்கிணைத்து நடத்த உள்ளோம். இப்போதே பல வடநாட்டு அமைப்புகள் பல மாநிலங்களிலே இருக்கக்கூடிய பல்வேறு அமைப்புகள் எங்களோடு தொடர்பில் இருக்கின்றன.  ஆகவே, அந்த அமைப்புகளையெல்லாம் ஒருங்கிணைத்து திராவிடர் கழகம் ஒரு மாபெரும் மாநாட்டையும், அதற்கு அடுத்து இந்தியா முழுக்க போராட்டத்தையும் இதற்காக தொடங்க இருக்கிறோம்.  சமுக நீதி வெறும் கானல் நீரல்ல. சமூக நீதி என்பது வெறும் ஏட்டுச்சுரைக்காய் அல்ல,
தொடர்ந்து போராடுவோம்!
சமூக நீதி என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த போராட்டத்தின் நோக்கம்.
இது ஒரு தொடர் போராட்டம்.  நீதிக்கட்சி என்ற பெயராலே திராவிட இயக்கம் பிறந்ததே சமூக நீதிக்காகத் தான்!
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அது விரிவாகி இ,ருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் வந்தால் போதாது.
இந்த உணர்வு அகில இந்திய அளவிலே வரவேண்டும்.
இடஒதுக்கீடு உலகளாவிய நிலையிலே வளர்ந்திருக்கிறது-.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேகூட, அஃப்பர்மேட்டிவ் ஆக்ஷன் என்று கறுப்பர்கள், வெள்ளையர்கள் என்ற பேதமில்லாமல், அவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்என்ற அளவிலே; இந்த இடஒதுக்கீட்டினுடைய நியாயங்கள், சமூக நீதியினுடைய தேவைகள் இன்றைக்கு நிலைநாட்டப்பட்டிருக்கின்றன.
சமூக நீதிக்காக இந்த இயக்கம் போராடுகிறது.
தொடர்ந்து போராடும்!
இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.


சென்னை, ஆக.16 நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கோரி சென்னை மண்டல திராவிடர் கழகத்தின்சார்பில் ஆர்ப்பாட்டம்  இன்று (16.8.2018) காலை 11.00 மணியளவில் சென்னை துறைமுகம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் எழுச்சியுடன் நடை பெற்றது.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை வகித்து ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினார். சென்னை மண்டலத் தலைவர் தி.இரா. இரத்தினசாமி, மண்டலச் செயலாளர் தே.செ. கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தையன், ஆவடி மாவட்டத் தலைவர் பா. தென்னரசு, தென் சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி,  தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ. நாத்திகன், கும்மிடிபூண்டி மாவட்டச் செயலாளர் இரா. ரமேஷ்  உள்ளிட்டவர்கள் முன்னிலையில் வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரை ஞர் சு. குமாரதேவன் வரவேற்புரையாற்றினார்.
வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன் தொடக்கவுரையாற்றினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், வெளி யுறவுச் செயலாளர் வீ. குமரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, அமைப் புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் உள்பட பலர் ஆர்ப்பாட்ட விளக்க உரையாற் றினார்கள்.
தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் நன்றி கூறினார்.
தென்சென்னை, வடசென்னை, தாம்பரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி கழக மாவட்டங் களிலிருந்து பொறுப்பாளர்கள் ஏராளமான வர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
நாட்டின் மிக உயர்ந்த அதிகார மய்யமாகிய உச்சநீதிமன்றம் &- உயர்நீதிமன்றங்களில் சமூக நீதி  கிடைக்காதது கண்டித்து தமிழகத்தில் மாவட்டத் தலை நகரங்களில் இன்று (16.8.2018) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விடுதலை நாளேடு, 16.8.18





நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி கோரி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

 

சென்னை, ஆக. 17- நீதித்துறை யில் நீதிபதிகள் பணிநியமனங் களில் இடஒதுக்கீட்டை நடை முறைப்படுத்தி சமூக நீதியை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சென்னை மண்டல கழகம் சார் பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நேற்று (16.8.2018) காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை, வடசென்னை, தாம்பரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி கழக மாவட்டங்களிலிருந்து பொறுப்பாளர்கள், மகளிர் தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

மகளிரணி தோழர்கள்: க.பார் வதி, வெற்றிச்செல்வி, இன்பக் கனி, பசும்பொன் செந்தில்குமாரி,  வி.வளர்மதி, பி.அஜந்தா, பூவை செல்வி, கி.மணி மேகலை, உ.மோகனப்பிரியா, வெண்ணிலா கதிரவன், தங்க.தனலட்சுமி, ராணி, செல்வி, வி.சகானாப்பிரியா

வடசென்னை மாவட்டம்: வழக்குரைஞர் சு.குமாரதேவன், எண்ணூர் வெ.மு.மோகன், திருவொற்றியூர் இராஜேந்திரன், புதுவண்ணை செல்வம், திரு வொற்றியூர் பாலு, செம்பியம் கோபாலகிருஷ்ணன், அம்பேத் கர்வளவன், நாத்திகன்மோகன், வியாசர்பாடி கவுதம், கெடார் மும்மூர்த்தி, காரல்மார்ஸ், அம் பேத்கர், கொடுங்கையூர் கோ.தங்கமணி, பெரவள்ளூர் செல் லப்பன், நாத்திகன் சேகர், சுதன், வேணு, ஷாஜகான், குமார்

தென்சென்னை: இரா.வில்வ நாதன், செ.ர.பார்த்தசாரதி, மயிலை டி.ஆர்.சேதுராமன், சூளைமேடு கோ.வீ.ராகவன், அரும்பாக்கம் சா.தாமோதரன், க.தமிழ்ச்செல்வன், மு.சேகர், மு.ஆனந்தன், சி.செங்குட்டு வன், தங்கவேலு, ஆர்.எம்.சிதம்பரம், தரமணி கோ.மஞ்சநாதன், நுங்கம்பாக்கம் பவன் குமார், திருவான்மியூர் கா.அமுதரசன், ஒளிப்பட கலை ஞர் சிவக்குமார்

தாம்பரம்: தி.இரா.இரத்தின சாமி, ப.முத்தையன், கோ.நாத் திகன், விடுதலைநகர் செயரா மன், இராமேசுவரம் கே.எம்.சிகாமணி, தாம்பரம் சீ.இலட் சுமிபதி, தாம்பரம் சு.மோகன் ராஜ், மா.குணசேகரன், விஜய் ஆனந்த், கூடுவாஞ்சேரி மா. இராசு,  கு.சோமசுந்தரம், சீர் காழி இராமன்னா, பொழிசை கண்ணன், ந.கதிரவன், க.தமி ழினியன், அருணாசலம், அரு சுனன், நடராசன்

கும்மிடிப்பூண்டி மாவட் டம்: ச.நாகராஜன், க.ச.க. இரணி யன், செ.உதயகுமார், முரளி, புழல் ஏழுமலை, இரமேஷ்

ஆவடி மாவட்டம்: பா.தென் னரசு, உடுமலை வடிவேல், பெரியார்மாணாக்கன், க.கலை மணி, வஜ்ஜிரவேலு, ரகுபதி, கார்வேந்தன், வேலவன், இள வரசு, கொரட்டூர் இரா.கோபால், ரகுபதி, முத்துக்குமார், மாண வர் கழகம் வேலவன்  பிரவீன் குமார் மற்றும் திண்டிவனம் சிறீராமுலு, தஞ்சை ஆறுமுக அடிகளார், வேட்டவலம் பி. பட்டாபிராமன், த.க.நடராசன் உள்பட பலர் சமூக நீதி கோரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

 - விடுதலை நாளேடு, 17.8.18