பார்த்தசாரதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்த்தசாரதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 டிசம்பர், 2022

தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி - கோ.குமாரி ஆகியோர் தமது குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு நன்கொடை

தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி - கோ.குமாரி ஆகியோர்  தமது குடும்பத்தின் சார்பில் ரூ.25 ஆயிரத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (சென்னை, 1.12.2013).

செவ்வாய், 6 ஜூலை, 2021

கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதிக்கு பணி ஓய்வு பாராட்டு


கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கச்  செயலாளரும் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக செயலாளருமான செ.ர.பார்த்தசாரதி அவர்கள் 37 ஆண்டுகள் மறைமலை நகர் 'கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புரோடக்ட்'   தொழிற் சாலையில் பணி யாற்றி 05.06.2021ஆம் நாள் பணி ஓய்வு பெற்றார். பணி ஓய்வு பாராட்டு நிகழ்ச்சி 05.06.2021 பிற்பகல் 3.00 மணி அளவில் தொழிற்சாலை வளாகத்தில் தொழிற்சாலை மேலாளர் பால முருகன் தலைமையில் நடைபெற்றது. தொழிற்சங்கம் சார்பில் செயலாளர் செ.ர. பார்த்தசாரதியை பாராட்டி பயனாடை அணிவித்து கேடயம் வழங்கப்

பட்டது.  சங்க தலைவர் த.ரமேஷ்,, பொருளாளர் கா.நாகராஜ், துணைத்  தலைவர் கோ.குமாரி, துணைச் செயலாளர் ம.கருணாநிதி, பி.தங்கமணி ஆகியோர் சிறப்பு செய்தனர். தொழிற்சாலை அலுவ

லர்கள் மற்றும் சாரா லீ டிடிகே தொழிலாளர் நல சங்க பொறுப்பாளர்களும் தொழிலாளர்

களும் கலந்து கொண்டு சிறப்பு செய்து பாராட்டி வழியனுப்பி வைத்தனர்.