மயிலாப்பூர் பகுதியில் பரப்புரை
மயிலாப்பூர், ஜூலை 20 சென்னை பெரியார் திடலில் தொடங்கி வைக்கப்பட்ட நீட் ஒழிப்பு இரு சக்கர வண்டி பரப்புரைப் பேரணி தென் சென்னை பகுதியில் 11.7.2024 அன்று முற்பகல் 11.30 மணி அளவில் மயிலாப்பூர் வீர பெருமாள் கோவில் தெருவிற்கு வந்து சேர்ந்தது. திராவிடர் கழகத் தோழர்களும், திராவிட முன்னேற்ற கழகம் மற் றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்களும் பயணத் தோழர்களை வரவேற்றனர். தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் வரவேற்பு கூட்டம் நடைபெற்றது.
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி அமைப்பாளர் பெரியார் யுவராஜ் வரவேற்புரை ஆற்றினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.சண்முகப்பிரியன் தொடக்க உரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன் மற்றும் மாவட்ட துணை செயலாளர் கோ.வீ.ராகவன் ஆகியோர் முன் னிலையேற்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி யைச் சேர்ந்த வழக்குரைஞர் சாரநாத் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மயிலை சட்ட மன்ற உறுப்பினர் மயிலை த.வேலு ஆகியோர் நீட் கொடுமையை விளக்கி உரையாற்றினர். நிறைவாக நீட் ஒழிப்புப் பயணத்தை விளக்கி திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் பிரின்ஸ் என்னாெரசு பெரியார் சிறப்புரை யாற்றினார். தென்சென்னை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா. மாரிமுத்து நன்றி கூறினார். அடுத்த இடமான சைதாப்பேட்டை நோக்கி முற்பகல் 12.25 மணி அளவில் பேரணி புறப்பட்டது.
சைதாப்பேட்டையில் விளக்கவுரை
சைதாப்பேட்டை, ஜூலை 20 சென்னை பெரியார் திடலில் தொடங்கி வைக் கப்பட்ட அய்ந்தாம் குழுவான நீட் ஒழிப்பு இருசக்கர வண்டி பரப்புரைப் பேரணி தென் சென்னை பகுதியில் 11..07.2024 அன்று பகல் ஒரு மணி அளவில் சைதாப்பேட்டை பகுதிக்கு நண்பகல் ஒரு மணியளவில் வந்து சேர்ந்தது. சைதாப்பேட்டை டாக்டர் கலைஞர் பொன் விழா வளைவு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு கூட்டத்திற்கு தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் தலைமையேற்றார். சைதை இரா.ரவி வரவேற்புரை ஆற்றினார். தென்சென்னை மாவட்ட கழக செயலாளர் செ.ர.பார்த்தசாரதி தொடக்க உரை யாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ. ராகவன் முன்னிலையேற்றார்.
தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், மாநில இளை ஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ் ஆகியோர் உரையாற்றி யதற்குப் பின் நீட் ஒழிப்பு பேரணி நோக்கத்தை விளக்கி கழகத் துணை பொது செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரை ஆற்றினார். பிறகு எம்ஜிஆர் நகர் கரு. அண்ணாமலை நன்றி கூறினார்.
நீட் ஒழிப்பு பரப்புரை இரு சக்கர வண்டி பேரணியின் அய்ந் தாம் குழுவினர் பரப்புரையை முடித்துக் கொண்டு நண்பகல் உணவு அருந்தினர். எம்.ஜி.ஆர். நகர் தோழர் கரு. அண்ணாமலை சிறப்பான முறையில் உணவு தயா ரித்து வழங்கினார். வந்திருந்த அனைவருக்கும் பயனாடை அணி விக்கப்பட்டது. பிற்பகல் சுமார் இரண்டே கால் மணியளவில் திருமண மண்டபத்தில் இருந்து மீண்டும் பேரணி புறப்பட்டது.
சோழிங்கநல்லூர் மாவட்டத்தில் பரப்புரை
வேளச்சேரி, ஜூலை 20 கழக மாணவர் கழகம் மற்றும் இளைஞரணி இணைந்து நடத்திய நீட் எதிர்ப்புப் பரப்புரைப் பயணம் மற்றும் இருசக்கர ஊர்திப் பேரணியினை வேளச்சேரி விஜயன் நகர் பேருந்து நிலையத்தில் வரவேற்றுத் தொடங்கிய பரப்புரைப் பயணம், தொடர்ந்து, விடுதலை நகர், பல்லாவரம் மற்றும் தாம்பரம் வரை தொடர்ந்து வாகன பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. பரப்புரையின் போது, அனைத்து இடங்களிலும் கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் பிரின்ஸ் என்னாெரசு பெரியார் சிறப்புரையாற்றினார். மேலும் கோவிலம்பாக்கம் விடுதலை நகரில் சோழிங்கநல்லூர் மாவட்ட பொறுப்பாளர்களால் சிறப்பான முறையில் மேடை அமைக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. கலந்துகொண்ட அனைத்துத் தோழர்களுக்கும் சுவையான வடையுடன், தேநீர் வழங்கப்பட்டது.