திங்கள், 30 நவம்பர், 2015

ஆலந்தூர் இராமச்சந்திரனுக்கு வீர வணக்கம்!

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்
ஆலந்தூர் இராமச்சந்திரனுக்கு வீர வணக்கம்!
சென்னை, நவ.30_ முது பெரும் பெரியார் தொண் டர் ஆலந்தூர் செ.இராமச் சந்திரன் நேற்று (29.11.2015) தமது 95 ஆம் வயதில் கால மானார். அவருடைய மறைவுச் செய்தி அறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்இன்று (30.11.2015) காலை 9.30 மணியளவில் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்மற் றும் கழகத் தோழர்களுடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.
கழகத்தலை வருடைய இரங்கல் உரையை கூடியிருந்த தோழர்களுக்கும், பொது மக்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் வழங் கப்பட்டதோடு, அந்த உரையை கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் வாசித் தார்.
சென்னை மண்டல தலைவர் தி.இரா.இரத்தின சாமி அவர்களின் தலை மையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இரங்கல் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையாற் றினார். தமதுரையில், இந்த ஆலந்தூர் பகுதியில் கட வுள் ஒழிப்பு மாநாடு என்று தந்தை பெரியார் காலத்தில் நடத்திக் காட் டியவர் மறைந்த ஆலந்தூர் செ.இராமச்சந்திரன் அவர்கள் என்றும், இறுதி நாள்களில் தன்னை வந்து சந்திக்கும்போதெல்லாம் அவர் தனது மகனின் துணையோடு வருவார்;
அப்பொழுதெல்லாம் நான் அவருடைய மகனிடம் பத் திரமாக அழைத்துச் செல் லுங்கள் என்று கூறுவேன். அந்த அளவிற்கு நம்மீதும், இயக்கத்தின்மீதும் பற்றுக் கொண்டவர். அவருடைய நூற்றாண்டு விழா நிகழ்ச் சியை பெரிய அளவில் மிகச் சிறப்பாக ஆலந்தூர் பகுதியில் நடத்துவோம் என்றும், அவருடைய இழப்பு அவருடைய குடும் பத்தினரைவிட கழகத்திற் குப் பெரிய இழப்பு என் றும், கழகத் தலைவர் தமது இரங்கல் உரையில் குறிப் பிட்டார்.
கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், சென்னை மண்டலத் தலை வர் தி.இரா.இரத்தினசாமி, தாம்பரம் மாவட்டத் தலை வர் ப.முத்தையன், பொதுக் குழு உறுப்பினர்கள் எம்.பி. பாலு, ஆர்.டி.வீரபத்திரன் ஆகியோரும் இரங்கல் உரையாற்றினர்.
பின்னர் தமிழர் தலை வர் அவரது குடும்பத்து உறுப்பின ர்களுக்கெல்லாம் தமது இரங்கலையும், ஆறு தலையும் தெரிவித்தார்.
இறுதியாக, ஆர்.டி.வீர பத்திரன், வீர வணக்கம், வீர வணக்கம் என்று கூற, கழகத் தலைவரோடு அங் கிருந்த அனைவரும் வீர வணக்கம், வீர வணக்கம் ஆலந்தூர் இராமச்சந்திரன் அவர்களுக்கு வீர வணக்கம் என்று கூறி, 95 வயதுவரை தந்தை பெரியாரையும், தமி ழர் தலைவரின் தலைமை யேற்று எந்தவித சபலத் துக்கும் ஆளாகாமல், தமது இறுதி மூச்சுவரை கழகத் துக்காகவே தன்னை அர்ப் பணித்துக் கொண்ட பெரி யார் பெருந்தொண்டர் ஆலந்  தூர் செ.இராமச்சந்திரன் இறுதிப் பயணத்திற்கு வழியனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், ப.முத் தையன், தி.இர.இரத்தின சாமி, ஆர்.டி.வீரபத்திரன், கோ.நாத்திகன், மடிப்பாக் கம் ஜெயராமன், எம்.பி. பாலு, தாம்பரம் மோகன், தமிழ் இனியன், வேளச்சேரி ஜீவானந்தம், விஜயநாதன், இசையின்பன், நாகரத்தி னம், இராமலிங்கம், சேது ராமன், கார்த்திகேயன், மோகன் மற்றும் அனைத் துக் கட்சித் தோழர்களும் கலந்துகொண்டனர்.
முன்னதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வடக்குப் பகுதி தி.மு.க. செயலாளர் மாமன்ற உறுப்பினர் பி. குணாளன், தெற்கு பகுதி தி.மு.க. செயலாளர் என். சந்திரன் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.


முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்
ஆலந்தூர் இராமச்சந்திரன் அவர்களுக்கு
நமது வீரவணக்கம்!

ஆலந்தூர் திராவிடர் கழகத்தில் மிக நீண்ட காலமாக தொண்டாற்றிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு இராமச்சந்திரன் அவர்கள் தமது 95 ஆம் வயதில் இயற்கை எய்தினார் என்பது நமக்கு மிகுந்த துயரத்தையும் சோகத்தையும் தரும் வேதனைச் செய்தியாகும்.
அய்யா இராமச்சந்திரன் அவர்கள் இரயில் வேத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கருஞ்சட்டை வீரர் ஆவார்.
வடசென்னை புதுவண்ணையில் தோழர் பலராமன் அவர்கள் எப்படி ரயில்வேத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுப் பணியாற்றினாரோ, அதுபோல இவர் தென்சென்னைப் பகுதியில் கழகப் பணியாற்றியவர். எந்த நிலையிலும் கட்டுப்பாடு காக்கத் தவறாத லட்சியத் தோழர் அவர்.
தமது ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் தவறாது பெரியார் திடலுக்கு வந்து நம்மைச் சந்தித்து, கழகத்திற்கு நிதி அளித்து, நமது நலம் விசாரித்துத் திரும்புவார். அவரது மகன் அவர்கள் உதவியோடு  வந்து சந்திக்கத் தவறவேமாட்டார்.
பல ஆர்ப்பாட்டங்கள், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற அவர் புதுடில்லி பெரியார் மய்யத்  திறப்பு விழாவிற்கு (15ஆண்டுகளுக்கு முன்பு) வந்து கலந்து கொண்ட இவரிடம் டில்லி ஆங்கில ஏட்டின் செய்தியாளர் பேட்டி கண்டு கருஞ்சட்டைச் சேனை எப்படி எளிமையும், கட்டுப்பாடும் கொண்டதாக திராவிடர் கழகத்தில் உருவாகியுள்ளது என்று டில்லி நாளேட்டில் கட்டுரைகள் தீட்டப்பட்டன.
நிறைவாழ்வு வாழ்ந்தவர் அவர் என்றாலும் ஒரு சுயமரியாதைக்காரரின் இழப்பு ஒரு விஞ்ஞானியின் இழப்புப் போன்றதல்லவா?
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அம்முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருக்கு நமது வீரவணக்கம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை 
30.11.2015
-விடுதலை,30.11.15

சனி, 28 நவம்பர், 2015

வருந்துகிறோம்

வருந்துகிறோம்
தென் சென்னை மாவட் டத்தை சேர்ந்த நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைத் தலைவர் மா.நடராசன் அவர்கள் 26.11.2015 நண்பகல் 1 மணியவில் மாரடைப்பால் காலமானார் (வயது 63). அசோக் லைலேண்டு தொழிற் சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் சங்கத்தில் பொறுப்பாளராக இருந்தார். அவரது துணைவர் ந.பத்மாவதி அவர்களும் குடும்பத்தினரும் எந்தவிதச் சடங்கும் இன்றி இறுதி நிகழ்ச்சியை நடத்தினர்.
மாலை 5 மணியளவில் நுங்கம்பாக்கம் ஜெயலட்சுமிபுரத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு சென்று நுங்கம்பாக்கம் இடுகாடு அடைந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் மாவட்டத்தலைவர் இரா.வில்வ நாதன், தொழிலாளரணி பொறுப்பாளர் பெ.செல்வராஜ், நுங்கம்பாக்கம் பகுதி செயலாளர் க.வெற்றிவீரன், தரமணி கோ.மஞ்சநாதன், தமிழ்இனியன், மதிவாணன், பகுதி திமுக பொறுப்பாளர் நு.வே.மோகன் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மா.நடராசன் அவர்கள் வீட்டிற்குச் சென்று இரங்கல் கூறினார்.
-விடுதலை,28.11.15

திங்கள், 16 நவம்பர், 2015

ஒரு பெண்ணைக் கைது செய்வதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!இந்திய அரசியல் சாசனம் நாட்டுக் குடிமக்களுக்கு பல அடிப்படை உரிமைகளை அளித்துள்ளது. நாட்டுப் குடிமக்களுக்கு, அவர்கள் விருப்பப்படி, நாட்டு நலனுக்கு ஏற்ற முறையில், மக்களின் நன்மைகளை வலியுறுத்தும் வகையில் பல சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த உரிமை, குடிமக்களோ அல்லது அயல்நாட்டுவாசிகளோ, குற்றம் செய்தால், அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.
சட்டம், ஒழுங்கை நிர்வகிக்கும் காவல்துறை, அவர்கள் கைது செய்ய உரிமை பெற்றுள்ளது. காவல்நிலையக் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, வன்முறை, சித்திரவதை நடக்க வாய்ப்பிருக்கிறது. அடிப்படை உரிமைகளின் அத்துமீறலுக்கு வழிவகுக்கிறது.
ஒரு குடிமகனைக் கைதுசெய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றிய முதல் திருப்புமுனை தீர்வு D.K.Basu Vs. State Case என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்திலிருந்து வந்தது. இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்து, காவலில் எடுத்து விசாரணை செய்ய, காவல்துறை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைக் குறித்து உச்சநீதிமன்றம் சில குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைஅறிவித்துள்ளது.
இதனால், போலீஸ் காவலில் குற்றம் சாட்டப்பட்டவர் இருக்கும்போது, சித்திரவதைக்கு ஆளாகாமல் தடுக்க முடியும். ஆனால், இந்தியாவில் பெண்கள் குற்றங்களுக்காகக் கைது செய்யப்படும்பொழுது பல சூழ்நிலைகளில் அவர்கள் காவல் நிலையத்தில் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. பெண்கள் பல காவல் நிலையங்களில் பாலியல் கொடுமைகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உச்சநீதிமன்றமும், அரசியல்வாதிகளும் சேர்ந்து பெண்களின் பாதுகாப்பிற்காக பல வழிகாட்டுதல்களை ஏற்படுத்தியுள்ளார்கள்.


பெண்களைக் கைது செய்யும்போது காவல்துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:-
1.    கைது செய்யப்பட்ட பெண்களை, ஆண் குற்றவாளிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு, தனி லாக்-_அப்பில் அடைக்கப்பட வேண்டும். தனியாக லாக்_அப் இல்லாவிட்டால், பெண்களை தனி அறைகளில் அடைக்க வேண்டும். மேலும், பெண்கள் கைது செய்யப்படும்போது, பெண் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2.    பெண்களை, சூரிய அஸ்தமனம் -_ சூரிய உதயம் இடையே அதாவது இருட்டியபிறகு, கைது செய்யக்கூடாது. ஆண் காவலர்களால் பெண்கள், பாலியல் தொல்லைகளுக்கு காவல் நிலையத்திலேயே ஆளாக்கப்பட்டதால், இந்த விதி உருவாக்கப்பட்டது.
3.    மூன்றாவதாக, பெண்களை, சிறுமிகளை காவல் நிலையத்திற்கோ, வேறு இடங்களுக்கோ விசாரணை செய்ய அழைக்கக்கூடாது. அவர்கள் வசித்துவரும் வீட்டில்தான் விசாரணை மேற்கொள்ள வேண்டும். விசாரணை செய்ய வேண்டிய நேரமும், முறையும் பெண்களுக்கு கூச்சத்தை, அவமானத்தை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்.
4.    பெண் கைதிகளுக்கு, அல்லது வேறு பெண்களுக்கு மருத்துவ சோதனை செய்ய பெண் மருத்துவர்களையே அனுமதிக்க வேண்டும். பெண் அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த மருத்துவ பரிசோதனை கையாளப்பட வேண்டும். பெண் கைதிகள் குழந்தை பெற்றால், Prenatal and Postnatal Care  பராமரிப்பு அளிக்க வேண்டும்.
5.    பெண்கள் பேறுகாலத்தில் இருந்தால், அவர்களை கைது செய்வதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமல்ல, கருவில் இருக்கும் சிசுவும் சேதமுற வாய்ப்புகள் இருப்பதால், இந்த முடிவை முடிந்த அளவிற்குத் தவிர்க்க வேண்டும். மேலும், கருத்தரித்த பெண்களை கட்டுப்படுத்தக் கூடாது.
ஓரளவு சுதந்திரம் அளிக்க வேண்டும். பெண்களையும், சிறுமிகளையும் பெண் காவலர்கள் அல்லது பெண் அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும். பெண் காவல் அதிகாரிகள் முன்னிலையிலேயே அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
 -உண்மை இதழ்,1-15.6.15

ஞாயிறு, 15 நவம்பர், 2015

மக்கள் கலையரசி மனோரமா உடலுக்குஇறுதி மரியாதை


மக்கள் கலையரசி மனோரமா உடலுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். உடன் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், முரளி ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
-விடுதலை,12.10.15

சனி, 14 நவம்பர், 2015

தோழர் திருமகள் மறைந்தாரே!


நமது வீர வணக்கம்!
பெரியார் சுயமரி யாதைத் திருமண நிலையத்தின் இயக்கு நரும், பெரியார் பேரு ரையாளர் இறையன் அவர்களது வாழ்வி ணையரும்,  கழகத் தலைமைச் செயற் குழு உறுப்பினரும்,
திராவிடர் கழக மகளி ரணியின் மூத்த பொறுப்பாளருமான மானமிகு திருமகள் இறையன் (வயது 77) அவர்கள் இன்று விடியற்காலை (14.11.2015) 2.30 மணிக்குக் காலமானார் என்ற செய்தி மிகுந்த துயரத்தையும், சொல்லொணா சோகத்தையும் இயக்கத்தவர் அனைவருக்கும், குறிப்பாக நமக்கும் அளித் துள்ள ஓர் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.
திருமகள் அம்மா அவர்கள் ஆசிரியையாகப் பணியாற்றி, ஆசிரியர் இறையன் அவர்களை ஜாதி மறுப்புத் திருமணம், பல ஆண்டுகளுக்கு முன்பே செய்துகொண்டு, உறவினர்கள், ஜாதிக் காரர்கள் விரோதத்தினைப் பொருட்படுத்தாமல், பெரியார் தொண்டர்களாகவே இருவரும் கொள்கை வாழ்வு வாழ்ந்தனர் - இறுதிவரை!
முழுநேர இயக்கப் பணியை, பணி ஓய்வு பெற்ற பிறகும் இறையனார் அவர்கள் தொடர்ந் ததைப் போலவே, திருமகள் அம்மா அவர்களும் பணி ஓய்வுக்குப் பிறகும் அலுப்பு சலிப்பின்றி பெரியார் திடலிலேயே தங்கி, குடும்பத்துடன் இயக்கப் பணி செய்த ஓர் வீராங்கனையாவார். இயக்கம் நடத்திய அத்துணைப் போராட்டங் களிலும் முன் நிற்க, அவர்கள் தயங்கியதே இல்லை, பிள்ளைகளோடு வருவார்கள்.
அவர் இல்லத்தில் நடைபெற்ற அத்துணைத் திருமணங்களும், ஜாதி மறுப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளாகவே நடத்தப்படுதல் வேண்டும் என்பதில் அம்மையார் மிகவும் குறியாய் இருந்தவர்.
சிறிது காலமாகவே உடல்நலக் குறைவுடன் இருந்த அவருக்குத் தேவையான அத்துணை சிகிச்சைகளும் தரப்பட்டன; என்றாலும், ‘இயற் கையின் கோணல் புத்தி’ அவரை நம்மிடமிருந்து பறித்துக் கொண்ட கொடுமைக்கு ஆளாக்கிவிட்டது!
பெரியார் திடலில் எமக்கு உதவிய முது பெரும் தோழர்கள் ஒவ்வொருவராக விடை பெற்றதை எண்ணும்போது நமக்கு ஆறுதல் கூறித் தேற்றுவதற்கு எவரே உள்ளார்?
என்றாலும், பெரியாரின் பெரும்பணி தடை யின்றி தொடர, நாம் துயரத்தை மறந்து, தொண் டூழியத்தைத் தொடர்ந்து, இறையன் களின் இதய வேட்கையைப் பூர்த்தி செய்வதே நாம் அவருக்குக் காட்டும் உண்மையான, சரியான மரியாதை ஆகும்!
வீராங்கனை திருமகளுக்கு கழகத்தின் சார்பில் வீர வணக்கம்!
அவரது குடும்பத்தவர் அனைவருக்கும் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை    தலைவர்
14.11.2015    திராவிடர் கழகம்.


கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருமகள் இறையன் அவர்களின் உடலுக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் மோகனா வீரமணி, வெற்றிச்செல்வி, கு.தங்கமணி, பேராசிரியை இசையமுது, டாக்டர் தேனருவி மற்றும் பலர் உள்ளனர் (சென்னை, 14.11.2015)
திருமகள் இறையன் அவர்களின் மறைவிற்காக நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். அக்கூட்டத்தில் கலந்துகொண்ட கழகத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள், கழக மகளிரணியினர், தோழர்கள் (சென்னை, 14.11.2015)

சென்னை, நவ.14_ பெரியார் பேருரையாளர் இறையனாரின் வாழ் விணையரும், திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர், சுயமரியாதைத் திருமண நிலைய இயக்கு நருமாகிய திருமகள் இறையன்  இன்று (14.11.2015) அதி காலை 2.30 மணி யளவில் இயற்கை எய்தி னார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அவரது மறைவை யொட்டி, சென்னை பெரி யார் திடலில் பெரியார் நினைவிட முகப்பில் வீர வணக்க இரங்கல் கூட்டத் தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையேற்று இரங்கல் உரையாற்றினார்கள்.
திராவிடர் கழகத் தணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழகப் பிரச்சார செய லாளர் வழக்குரைஞர் அருள்மொழி, திராவிடர் கழக வெளியுறவு செய லாளர் வீ.குமரேசன், தலை மைச் செயற்குழு உறுப்பி னர்கள் க.பார்வதி, சாமி. திராவிடமணி, மாநில மகளிர் பாசறை அமைப் பாளர் டெய்சி மணி யம்மை, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் கோ.ஒளிவண் ணன், திராவிடர் வர லாற்று ஆய்வு மய்யத் துணைத் தலைவர் முனை வர் செகதீசன், புதுமை இலக்கியத் தென்றல் வழக் குரைஞர் ஆ.வீர மர்த்தினி, பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக் குரைஞர் சு.குமாரதேவன், பாவலர் மறைமலையான், சென்னை மண்டலத் தலை வர் தி.இரா.இரத்தினசாமி, செயலாளர் வி.பன்னீர் செல்வம்,  உள்பட பலரும் இரங்கல் உரையாற்றி னார்கள்.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்,  மாநில  மாணவரணிச் செய லாளர் பிரின்சு என்னா ரெசு பெரியார்,  ஊடகவி யலாளர் கோவி.லெனின், எழுத்தாளர் வே.மதிமாறன், திமுக மேனாள் மேயர் சா.கணேசன், மோகனா அம்மையார், வடசென்னை மாவட்ட மகளிரணித் தலைவர் தங்கமணி குண சீலன், சி.வெற்றிச்செல்வி, வழக்குரைஞர் தமிழன் பிர சன்னா, மு.கலைவாணன்,  பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை வீரபத்திரன்,  பெரியார் புத்தக நிலைய மே லாளர் த.க.நடராசன், குஞ் சிதம் நடராசன், ச.சிங்காரம், வே.சிறீதர், திராவிடர் இயக்க எழுத் தாளர் மஞ்சை வசந்தன், வடசேரி மீரா செகதீசன், வழக்குரை ஞர் செ.துரை சாமி, அகில இந்திய பிற் படுத்தப்பட்ட வங்கிப் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செய லாளர் கோ. கருணாநிதி,   வடசென்னை மாவட்ட செயலாளர் தே.ஒளி வண்ணன், வட சென்னை மாவட்ட ப.க. தலைவர் கோ.வி.கோபால்,  செய லாளர் ஆ.வெங்கடேசன், திருவொற்றியூர் கணேசன், சைதை மதியழகன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், பொழிசை கண்ணன், புழல் ஏழுமலை, புழல் இராசேந் திரன், சா.தாமோதரன், பாலமுரளி, சைதை தென் றல், சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணியம்மை, வழக்குரை ஞர் ம.வீ.அருள்மொழி,  திருப்பூர் ஆசிரியை பாலா மணி, ரத்தினாவதி, சந்திரா முனுசாமி, வளர்மதி, பவானி, செந்தமிழ் செல்வி, ஆவடி மோகனப்ரியா, கோ.நாத்திகன், மறை மலைநகர் துரை.முத்து, சிவக்குமார், கருணாகரன், பேராசிரியை இசையமுது, இராஜதுரை,  மருத்து வர்கள் மீனாம்பாள், தேன ருவி, யுனைடெட் இந்தியா காப்பீட்டுக்கழக இரா மலிங்கம், செங்கல்பட்டு நகர தலைவர் சுந்தரம், மஞ்சுளா, பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் சத்தியநாராயணசிங், பெரி யார் நூலக ஆய்வக நூல கர் கோவிந்தன், செஞ்சி ந.கதிரவன், உடுமலை வடி வேல் உள்பட ஏராள மான வர்கள் பெரியார் திடலில் மறைந்த திருமகள் அமமை யாரின் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தி இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பெரியார் மணியம்மை மருத்துவ மனை, விடுதலை செய்திப் பிரிவு, அச்சகப்பிரிவு, பெரி யார் புத்தக நிலையம் உள் ளிட்ட பல்வேறு பிரிவு களில் பணியாற்றும் பெரி யார் திடல் பணி யாளர்கள் உள்பட ஏராளமான வர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள். திருமகள் இறையனார் குடும்பத்தினர் பண்பொளி கண்ணப்பன், இறைவி நயினார், மாட்சி ராம மூர்த்தி, இசையின்பன் பசும்பொன், செல்வி பெரி யார் மாணாக்கன் உள் ளிட்ட குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இரங்கலைத் தெரி வித்துக் கொண்டார்கள்.

தொலைபேசி வாயிலாக கழகப் பொருளாளர் மருத் துவர் பிறைநுதல்செல்வி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் துணை வேந்தர் நல்.இராமச்சந் திரன்,  மாநில மகளிரணிச் செயலாளர் கலைச்செல்வி, திராவிட தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண் டியன், பெண்ணியலாளர் ஓவியா, குவைத் உலகத் தலைவர் தந்தை பெரியார் நூலகம் சார்பில் செல்லப் பெருமாள், கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார், வட மாவட் டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேக ரன் ஆகியோர் இரங்கலைத் தெரிவித்துக்கொண்டனர்.
-விடுதலை,14.11.15

ஞாயிறு, 8 நவம்பர், 2015

நாமக்கல்லில் ஒரு ‘‘தடபுடல் விருந்து!’’


நாமக்கல்லில் ஒரு ‘‘தடபுடல் விருந்து!’’

மின்சாரம்
நாமக்கல் நகரம் - பெரியார் மன்றத்தில் - கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு (அக்.2, 3, 4) ஆகிய நாள்களில் ஒரு ‘‘தடபுடல் விருந்து’’ நடந்தது.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவரும், 90 வயதைக் கடந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், பண்பின் பெட்டகமுமான மான மிகு பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் தலைமையில் மூத்த பெரியார் தொண்டர்களும், நடுத்தர வயது கொண் டவர்களும், இளைஞர்களும் தலைமுறை இடைவெளி இல்லாமல் இந்தப் பெரியாரில் விருந்தினை நடத்தினர்.
இந்த விருந்து நடைபெற்ற வளாகத்திற்கு ‘‘சுயமரி யாதைச் சுடரொளி’’ கருப்புச் சட்டை கருப்பண்ணன் அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.
யாரிந்த கருப்புச் சட்டைக் கருப்பண்ணன்? 1906 ஆம் ஆண்டில் நாமக்கல்லையடுத்த பெரிய பட்டியில் பிறந்தவர்.
1937 இல் நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பெரியார் பேசுகிறார் என்று கேள்விப் பட்டு, அந்தக் கூட்டத்தைக் கேட்கச் சென்ற இந்தக் கருப்பண்ணன் கூட்டத்தைக் கேட்டு, திரும்பியபோது புதிய புத்தியைக் கொள்முதல் கொண்டவராகத் திரும் பினார். ஆம், அன்றுமுதல் பெரியார் தொண்டராகவே மாறிவிட்டார்.
தந்தை பெரியார் கருத்துக்களைத் திறந்த மனதுடன் எண்ணுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் கண்டிப் பாகப் பெரியாரின் சீடர்களாக, புதிய பாதையைத் தேர்ந் தெடுத்துக் கொண்ட புத்திமான்களாகத்தான் மாறுவார் கள் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.
கனக சுப்புரத்தினமாக இருந்த ஒரு கவிஞர், காரைக் காலையடுத்த நிரவியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் - மயிலாடுதுறையில் பெரியார் பேசு கிறார் என்று கேள்விப்பட்டு, அக்கூட்டத்திற்குச் சென்ற சுப்பிரமணிய பாரதியின் சீடராக இருந்தவர் - மயிலம் சுப்பிரமணியர் துதி பாடிய அந்தக் கவிஞர் புரட்சிக் கவிஞராகப் பரிணாமம் பெறும் நிலைக்கு ஆளானார் - ஆம், தமிழர்களுக்கு ஒரு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கிடைத்தார்.
பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சான்றிதழ் வழங்கினார். நாமக்கல் பெரியார் மன்றத்தில் பெரியாரியல் பயிற்சி முகாம் சிறப்பாக நடப்பதற்கு உழைத்த பொத்தனூர் க.சண்முகம், நடராசன், ஈரோடு சண்முகம் ஆகியோருக்கு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார் (நாமக்கல், 4.10.2015).
மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத் தில் தந்தை பெரியார் அவர்களின் முழக்கத்தைக் கேட்கின்றவரையிலும் மத ஓடையில் மனப்படகைச் செலுத்திக் கொண்டிருந்தவர்தான்!
அதன்பின், அவரின் எழுதுகோல் வாளில் மின்னித் தெறித்ததோ...
‘‘மத ஓடத்திலேறிய மாந்தரே - பலி
பீடத்திலே சாய்ந்தீரே!’’ என்பதுதான்!
ஆம்! அறிவுலக ஆசான் உரையைக் கேட்டாலோ அவர்தம் அறிவுக் கருவூல நூல்களின் தோப்பில் மேய்ந்தாலோ எப்படிப்பட்ட புராணக் குப்பை மேடாகக் கிடக்கும் புத்தியில் கூட புரட்சித் தீ புறப்பட்டே தீரும்!
பீடையாய்க் கிடந்த தமிழ் நானிலம் புரட்சிப் பூமியாகப் பரிணமித்ததற்குக் காரணமே இந்தப் பகுத்தறிவுப் பகலவனின் கதிர் வீச்சுதானே!
நாமக்கல் கருப்பண்ணன் போன்றவர்கள் 1937 களில் இந்த வகையில் இயக்கத்திற்குக் கிடைத்தார்கள்.
நாமக்கல்லில் அரசு மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் - அவர் பெயரும் இராமசாமிதான் - தீவிர சுயமரியாதைக்காரர் - தந்தை பெரியாரின் சீடர்.
மேசையின்கீழ் ‘குடிஅரசு’ இதழ்களையும், பெரியார் நூல்களையும் வைத்திருப்பார். நோயாளி களுக்கும் இலவசமாகக் கொடுப்பார். அந்த அறிவு வலையில் வீழ்ந்தவர்தான் இந்தக் கருப்புச்சட்டை கருப்பண்ணன்.
எப்படியெப்படியெல்லாம் அந்தக் காலகட்டத்தில் அய்யாவின் கருத்தை ஊட்டியிருக்கிறார்கள் பார்த்தீர் களா?
நாமக்கல்லிலே பெரிய மிராசுதார் ஆர்.முனுசாமி நாயுடுவும், டாக்டர் இராமசாமியிடம் நோயாளியாக வந்தார் - அவ்வளவுதான், விடுவாரா? அவருள் ‘குடிஅரசு’ புகுந்தது.
குழவிக்கல் கோவில்களுக்குக் கொட்டியழும் பணக்காரர்கள் மிராசுதார்கள்தானே நம் நாட்டில். ஆனால், டாக்டரின் அறிவு மணம் முனுசாமி நாயுடு அவர்களையும் ஈர்த்தது. அதன் விளைவு நாமக்கல்லில் தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக்கத் திற்கு ஓரிடம் கிடைத்தது.
பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த இடம்தான் பெரியார் மன்றமாக - கருப்புச்சட்டை கருப்பண்ணன் வளாகமாகப் பூத்துக் குலுங்கிக் கொண்டு இருக் கிறது.
தந்தை பெரியார் நாமக்கல் வழியாக எப்பொழுது சென்றாலும், கழகத் தொண்டர் கருப்புச்சட்டை கருப் பண்ணன் அவர்களின் கடையின் வாசலில் வாகனத்தை நிறுத்தி, அவரை விசாரிக்காமல் சென்றதே இல்லை.
ஒருமுறை அவர் கடையைக் கடந்து சென்றுவிட்ட தந்தை பெரியார், வாகனத்தைத் திருப்பி, அவரைச் சந்தித்துவிட்டுச் சென்றார் என்றால், சாதாரணமா?
ஒரே கொள்கை, ஒரே இயக்கம், ஒரே தலைமை என்று வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய அந்தப் பெரியார் பெருந்தொண்டர்க்கு ஊரிலே தனி மரியாதை - இதுதானே கருஞ்சட்டைக்காரனின் விலை மதிக்க முடியாத பெரும் சொத்து!
உள்ளே நுழைந்தவுடன் சிலம்பொலி செல்லப்பனார் படிப்பகம் - திருமண மண்டபம் - கருத்தரங்கக் கூடம் என்று பல வகைகளில் பரிணமித்துக் கொண்டிருக்கிறது. காரணகர்த்தாவான டாக்டர் இராமசாமி, இடம் வழங்கிய அய்யா முனுசாமி நாயுடு - அவற்றையெல்லாம் கட்டிக் காக்கும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்,
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் முதலியவர்களின் பெயர்கள் எல்லாம் அலுவலகங்கள், கூடங்கள் முதலியவற்றிற்குச் சூட்டப்பட்டு, இயக்கத்தின் நன்றி உணர்வு நிலைநாட்டப் பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் பெரியார் மன்றம் சீரமைக்கப்பட்டு, புதிய பொலிவுடன் ஒளிர்கிறது.
பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர் பேராசிரியர் மானமிகு ப.சுப்பிரமணியம், பொறியாளர் ரகுமான் ஆகியோரின் உழைப்புப் பாராட்டுக்குரியது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்த வளாகம் மிகவும் கலகலப்பாகவே இருந்தது; இருபால் மாணவர்கள் பெற்றோர்களுடனும், ஆசிரியர்களுடனும் வந்து கொண்டே இருந்தனர்.
கழகத் தோழர்கள் பொறுப்பாளர்கள் அங்கும் இங்கு மாக ஓடிக்கொண்டே இருந்தனர்.
ஏதோ திருமணம் நடக்கும் மண்டபத்தில் திருமணத் திற்காக வருபவர்களைக் கவனிக்கவும், ஏற்பாடுகளைச் செய்யவும் திருமண வீட்டார் பறந்து பறந்து பணிகளில் ஈடுபடுவதுபோல, அவர்கள் செயல்பட்டார்கள்.
இவ்வளவும் எதற்கு? பெரியாரியல் பயிற்சிப் பட் டறை மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு  நடத்துவதற் குத்தான் இந்த தடபுடல்கள்.
பயிற்சிப் பட்டறை என்பது திராவிடர் கழகத்திற்கே உரித்தான தனி முத்திரைக் கழனி! தந்தை பெரியார் அவர்கள் காலத்திலே கோடை விடுமுறை நாள்களில் ஈரோட்டில் மாணவர்களுக்குப் பல நாள்கள் இத்தகைய பட்டறைகள் நடத்தப்பட்டதுண்டு. தந்தை பெரியார் அவர்களின் மேற்பார்வையிலேயே அது நடக்கும். அந்தப் பட்டறையில் தயாரிக்கப்பட்டவர்கள்தான் - நமது கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உள்பட!
அந்தப் பாரம்பரியம் இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  குற்றாலத்தில் கடந்த 38 ஆண்டு களாகத் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது - அன்னை மணியம்மையார் அவர்களே பட்டறையில் தங்கி நேரடியாக அனைத்தையும் கவனித்தார்கள். ஒகனேக்கல், குமுளி, நாமக்கல் போன்ற இடங்களில் அதேபோல ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாள்களில் இத்தகுப் பயிற்சிப் பட்டறைகள் நடத்துவதற்கும் நமது கழகத் தலைவர் அவர்கள் உரிய வகையில் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.
இவ்வாண்டு நாமக்கல்லில் அதன் தொடக்கத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது.
நாமக்கல் மக்களுக்கு ஒரு திருமண மண்டபமும், கருத்தரங்குகளை நடத்துவதற்காக கூடமும் கிடைத்தது - இயக்கத்திற்கு இலட்சிய இளைஞர்களைப் புடம்போட்டு புரட்சிப் போர் வாள்களாக வார்ப்பதற்கும் சிறப்பான ஓர் இடம் - வளாகம் கிடைத்துவிட்டது.
பயிற்சி பெற்றிட பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் (இருபால் மாணவர்) வந்துகொண்டே இருந்தனர்.
என்னதான் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள் வதற்கும் பார்வையாளர்களும் வந்திருந்தனர். அவர் களுடன் மாணவர்களின் பெற்றோர்களும் அடங்குவர்.
அருமையான தலைப்புகளில், இளைஞர்கள், மாண வர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய அடிப்படைக் கருத்து கள் எடுத்துக் கூறப்பட்டன. பல்வேறு கலாச்சாரப் போதை களில் தங்கள் இளமையைத் தொலைத்துக் கொள்வதற்கான சூழல்கள் நாட்டில் எங்கும் பொங்கி வழிந்துகொண்டி ருக்கும் ஒரு காலகட்டத்தில் -
பகுத்தறிவு - தன்மானம் - இனமானம் - தனியொ ழுக்கம் - பொது ஒழுக்கம் - தொண்டறம் - பெண்ணுரிமை - சமத்துவம் - சமூகநீதி என்கிற வகைகளில் உள்ளங்களில் பயிர் வளர்க்கும் நாற்றாங்கால்கள்தான் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை.
அவர்தாம் பெரியார் - சமூகநீதி - திராவிடர் இயக்கச் சாதனைகள் - திராவிடர் கழகத்தின் அரும்பணிகள் - பெரியார் நேற்று - இன்று - நாளை - திராவிடர் தேசியம் - தமிழ்த் தேசியம் - திராவிடம் வளர்த்த தமிழ் - கழகம் கண்ட களங்கள் - புரட்சிக்கவிஞர், பண்பாட்டுப் படையெடுப்பு - பெண்ணுரிமை - திராவிடர் இயக்க மகளிர் - மூடநம்பிக்கை களும், அறிவியலும் - மூட நம்பிக்கைகள் - கடவுள் தோற்றம்,
வளர்ச்சி - ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் - கழகத்தின் அணுகுமுறை என்று பல்வேறு தலைப்புகளில், மாணவர், இளைஞர் உலகம் அறிந்தே தீரவேண்டிய இன் றியமையாத பொருள்களை உள்ளடக்கிய தலைப்புகளில் பக்குவமும், அனுபவமும் கொண்ட பெரியாரியலில் தேர்ந்த பேராசிரியர்கள் வகுப்புகளை நடத்தினர்.
தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பட்டறையில் இரு நாள்கள் தங்கியி ருந்து வகுப்புகளை எடுத்ததோடு, பயிற்சி மாணவர்களின் கேள்விகளுக்கு அய்யப்பாடுகளுக்குத் தக்க விடையளித் தும், விளக்கம் அளித்தும் பட்டறைக்குப் பெருமைச் சேர்த்தார்கள் - பயிற்சியாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பெரும் பேறாகவும் கருதினார்கள்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் (பட விளக்கத்துடன்), கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, டாக்டர் இரா.கவுதமன், பேராசிரியர் ப.காளிமுத்து ஆகியோர் வகுப்புகளை நல்ல முறையில் எடுத்தனர். ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும், பயிற்சியாளர்கள் எழுப்பும் வினாக்களுக்கு விடை அளிக்கப்பட்டது.
முதல் நாள் இரவு பெரியார் திரைப்படம் காண்பிக்கப் பட்டது. மூன்று நாள்களும் பயிற்சியாளர்கள் முகாமிலேயே தங்கி இருந்தனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறு வனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் தலைமையிலான குழு திறன்பட திட்டமிட்டு நேர்த்தி யாகவே செய்து கொடுத்தது.
அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், கடந்த 15 நாள்களாக நாமக்கல்லில் முகாமிட்டு பணிகளை மேற்கொண்டார். மண்டலத் தலைவர் மானமிகு நடராசன் (இளைஞராகவே மாறிவிட்டார்), நாமக்கல் மாவட்டச் செயலாளர் மானமிகு ஆ.கு.குமார், நகர தலைவர் வழக் குரைஞர் மானமிகு பெரியசாமி, குமாரபாளையம் தலைவர் மானமிகு சரவணன்,
மேட்டூர் மாவட்டக் கழகத் தலைவர் மானமிகு கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் மானமிகு கா.நா. பாலு, குமாரபாளையம் மானமிகு காமராஜ், பள்ளிப் பாளையம் மானமிகு க.பொன்னுச்சாமி, ஆத்தூர் மாவட்டச் செயலாளர் மானமிகு சேகர், ஆத்தூர் மண்டல இளை ஞரணிச் செயலாளர் மானமிகு சுரேஷ், ஈரோடு மாவட்ட இளைஞரணித் தலைவர் மானமிகு தமிழ்ச்செல்வன், ஈரோடு மானமிகு த.இராசேசுவரி,
நாமக்கல் நகரச் செய லாளர் மானமிகு மாமாறன், மானமிகு பொறியாளர் செந் தூரபாண்டியன், மானமிகு பொறியாளர் த.பரிதின், மானமிகு நாகப்பட்டினம் பொன்முடி, சமையல் கலைஞர்கள் மானமிகு முருகன், பழனி, சந்திரா, சக்திவேல் ஆகியோர் அடங்கிய கூட்டுக்குழு (டீம்) பட்டறையைப் பொலிவுறச் செய்தது.
இந்தக் குழு பல நாள்களாக வேறு பணிகளில் கவனம் செலுத்தாமல் இதே பணியாகவே இருந்தது. தலைமைச் செயற்குழு உறுப்பினர் மானமிகு இரா.குணசேகரன் அவர்களின் ஒருங்கிணைப்பு அபரிதமானது.
தோழர் மானமிகு இளவரசன் அவரோடு இணைந்து ஆக்கப் பணிகளில் ஈடுபட்டார். பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தலைமைச் செயற்குழு உறுப் பினர் பழனி.புள்ளையண்ணன், சேலம் மாவட்ட கழகச் செயலாளர் கடவுள் இல்லை சிவகுமார் மூன்று நாள் பட்டறையிலும் பங்கேற்றனர்.
ஆத்தூர் ஏ.வி.தங்கவேலன் குடும்பத்தினர், சேலம் வைரம், ஆத்தூர் அண்ணாதுரை, ஆத்தூர் வானவில் குடும்பத்தினர் முதலியோர் வருகை தந்திருந்தனர்.
சென்னையிலிருந்து தோழர்கள் இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, அரும்பாக்கம் தாமோதரன், க.தமிழ்ச் செல்வன் ஆகியோர் வந்திருந்தனர்.
கருத்து விருந்தான விலை கூற முடியாத கருவூலம் ஒரு பக்கம் என்றாலும், மூன்று நாள்களிலும் மூன்று வேளை உணவு மட்டும் அல்ல - இடை இடையே தேனீர், சிற்றுண்டி என்று ‘‘திக்கு முக்காடச்’’ செய்துவிட்டனர். ‘திகட்டும்’ அளவுக்கு கல்யாண வீட்டு உபசாரமாக அது இருந்தது என்றே சொல்லவேண்டும்.
இதனை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்; பயிற்சி மாணவர்களும் மிகவும் கட்டுப்பாட்டுடன் வருகைப் பதிவேடு எடுக்கவேண்டிய அவசியம் இல்லாமலேயே மிகவும் ஒழுங்கு முறையுடன் நடந்துகொண்டனர்.
இந்தப் பயிற்சிப் பட்டறை கழகத் தலைவருக்கு மிகுந்த மன நிறைவை அளித்தது. இனி ஆண்டுதோறும் நாமக்கல்லில் மூன்று நாள்கள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்தப்படும் என்றும் அறிவித்தார்கள்.
பயிற்சியாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இயக்க நூல்கள் 50 சதவிகித கழிவில் அளிக்கப்பட்டன. அந்த வகையில் ரூ.26 ஆயிரத்திற்கு நூல்கள் சென்ற டைந்தன.
பெரியார் வலைக்காட்சிக் குழுவினர் தோழர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் தோழர்கள் உடுமலை வடிவேல், சிறீராம், அருள் ஆகியோர் மூன்று நாள் பட்டறை நிகழ்வுகளையும் பதிவு செய்து ஆவணப் படுத்தினர்.
மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் பட்டறை சிறப்பாக நடைபெற பாடுபட்ட, ஒத்துழைத்த அனைவ ருக்கும் கழகத் தலைவர் அவர்களால் பயனாடை அணி விக்கப்பட்டு சிறப்புச் செய்யப்பட்டது.
நாமக்கல் பயிற்சிப் பட்டறை கருத்து வளம் செறிந்த தாக - எடுத்துக்காட்டான பட்டறையாக அமைந்தது. அதற்குக் காரணமான அனைவருக்கும் பாராட்டுகள்! பாராட்டுகள்!!

-விடுதலை,5.10.15

.
நாமக்கல் நகரம் - பெரியார் மன்றத்தில் -  வெள்ளி, சனி, ஞாயிறு (2015,அக்.2, 3, 4) ஆகிய நாள்களில் தடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை


நாமக்கல்லில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமின் இறுதி நாளான 4.10.15 காலை மாணவர்களுக்கு உடற் பயிற்சி கல்வியை மாரியப்பன் அவர்கள் கற்றுத் தந்தபோது...

நாமக்கல்லில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமின் இறுதி நாளான 4.10.15 ம் நாள் தென் சென்னை திராவிடர் கழக செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தலைவர் இரா.வில்வநாதன், க.தமிழ்ச்செல்வன், தரமணி கோ.மஞ்சநாதன் மற்றும் துணைச் செயலாளர் சா.தாமோதரன் ஆகியோர் பங்கேற்க சென்றபோது...
நாமக்கல்லில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமின் இறுதி நாளான 4.10.15 ம் நாள் தென் சென்னை திராவிடர் கழக செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தலைவர் இரா.வில்வநாதன், க.தமிழ்ச்செல்வன், தரமணி கோ.மஞ்சநாதன் மற்றும் துணைச் செயலாளர் சா.தாமோதரன் ஆகியோர் பங்கேற்க சென்ற போது அங்குள்ள சிலம்பொலி செல்லப்பனார் படிப்பக அறைக்குள்.
நாமக்கல்லில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமின் இறுதி நாளான 4.10.15 ம் நாள் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பயிற்சி எடுத்தபோது....


நாமக்கல்லில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமின் இறுதி நாளான 4.10.15 ம் நாள் தென் சென்னை திராவிடர் கழக செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தலைவர் இரா.வில்வநாதன், க.தமிழ்ச்செல்வன், தரமணி கோ.மஞ்சநாதன் மற்றும் துணைச் செயலாளர் சா.தாமோதரன் ஆகியோர் அங்குள்ள சிலம்பொலி செல்லப்பனார் படிப்பக அறைக்குள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்தபோது...

நாமக்கல்லில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமின் இறுதி நாளான 4.10.15 ம் நாள் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயிற்சி எடுத்தபோது....
நாமக்கல்லில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமில் பங்கேற்ற  பயிற்சியாளர்கள் தமிழர் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுடன் உள்ளனர் (4.10.2015)
4.10.15 மாலை நாமக்கல் மலைக்கோட்டை சென்று தென் சென்னை திராவிடர் கழக  தோழர்கள் சுற்றி பார்த்தனர்.4.10.15 மாலை நாமக்கல் மலைக்கோட்டை முன்பாக தென் சென்னை திராவிடர் கழக செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன் மற்றும்க.தமிழ்ச்செல்வன் .


 நாமக்கல் மலைக்கோட்டை மலையேறிச் செல்லும் தென் சென்னை திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன், க.தமிழ்ச்செல்வன் .மற்றும் கோ.மஞ்சநாதன்.
நாமக்கல் மலைக்கோட்டை மலையில் உள்ள கோட்டை முன்பாக தென் சென்னை திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன், க.தமிழ்ச்செல்வன் .

 நாமக்கல் மலைக்கோட்டை மலையில் உள்ள கோட்டை முன்பாக தென் சென்னை திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன், க.தமிழ்ச்செல்வன் (.பின் புறம் நாமக்கல் 
நகரம்)

நாமக்கல் மலைக்கோட்டை உ்ள்ளே, தென் சென்னை திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன், க.தமிழ்ச்செல்வன்
 நாமக்கல் மலைக்கோட்டை உ்ள்ளே, தென் சென்னை திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன், க.தமிழ்ச்செல்வன் மற்றும் கோ.மஞ்சநாதன்.

 நாமக்கல் மலைக்கோட்டை மேலே உள்ள ஒரே மரமான ''வெப்பாலை'' மரத்தின்(மூலிகை மரம்) கீழே , தென் சென்னை திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன், க.தமிழ்ச்செல்வன்
 நாமக்கல் மலைக்கோட்டை மேலே உள்ள நீர்நிலை அருகில் , தென் சென்னை திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன், க.தமிழ்ச்செல்வன் மற்றும் கோ.மஞ்சநாதன்.


 
நாமக்கல் மலைக்கோட்டை மேலே உள்ள தூண் அருகில் , தென் சென்னை திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன், க.தமிழ்ச்செல்வன்