நன்கொடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நன்கொடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 ஜனவரி, 2026

முனைவர் பட்டம் பெற்ற கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜுக்கு டி.கே.நடராஜன் குடும்பத்தினர் ரூ.1 லட்சம் நன்கொடை

முனைவர் பட்டம் பெற்ற கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜுக்கு டி.கே.நடராஜன் குடும்பத்தினர் ரூ.1 லட்சம் நன்கொடை
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ் முனைவர் பட்டம் பெற்றதை யொட்டி டி.கே. நடராஜன் குடும்பத்தினர் சார்பில் கண்ணுசாமி – சுசிலா ஆகியோர் பாராட்டுத் தெரிவித்து ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினர். அவர்களுக்கு நன்றி தெரிவித்த கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தனக்கு அளிக்கப்பட்ட நன்கொடை தொகை
ரூ.1 லட்சத்தை திராவிடர் கழக அறக் கட்டளைக்கு அப்படியே நன்கொடையாக வழங்கியுள்ளார். நன்றி.
- விடுதலை நாளேடு, 23.01.26

வியாழன், 18 டிசம்பர், 2025

தமிழர் தலைவரின் 93ஆவது பிறந்த நாளை முன்னிட்டு – டி.கே.நடராசன் – குஞ்சிதம் குடும்பத்தின் சார்பாக பெரியார் மருத்துவ நலநிதி அறக்கட்டளைக்கு ரூ.93,000 நன்கொடை

 


மறைந்த நமது தோழர் டி.கே.நடராசன் – குஞ்சிதம் ஆகியோரின் மூத்த மகன் ஆடிட்டர் மணவாளன் – பொறியாளர் ரேணுகா, இளைய மகன் கண்ணுதுரை, சுசீலா குடும்பத்தின் சார்பாக ஆசிரியரின் 93ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்தி, அளித்துள்ள ரூ.93,000 தொகை பெரியார் மருத்துவ நலநிதி அறக்கட்டளையில் (பெரியார் ஹெல்த் கேர் டிரஸ்ட் ஃபண்ட்) சேர்க்கப்பட்டது.

-விடுதலை நாளேடு,13.12.25

செவ்வாய், 25 நவம்பர், 2025

பெரியார் உலக நிதி மற்றும் நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி- (எம்.நடராஜன் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி) (26.11.2025)

நன்கொடை
அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகத்தின் முன்னாள் தலைவரும் நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக முன்னாள் துணைத் தலைவருமான எம்.நடராஜன் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (26.11.2025) அவரது துணைவியார் ந.பத்மாவதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உலகத்திற்கு ரூ.3 ஆயிரமும், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ 5 ஆயிரம் வழங்கினார். உடன் தென்சென்னை மாவட்ட கழகச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி.(24.11.2025)
- விடுதலை நாளேடு, 25.11.25

புதன், 29 அக்டோபர், 2025

சைதை வாசுதேவன், எத்திராஜன், ரங்கநாதன் ஆகியோரின் தாயார் நினைவில் வாழும் பிரேமா அவர்களின் கண் மற்றும் உடற் கொடையை முன்னிட்டு நன்கொடை

திராவிடர் கழகம்
சைதை வாசுதேவன், எத்திராஜன், ரங்கநாதன் ஆகியோரின் தாயார் நினைவில் வாழும் பிரேமா அவர்களின் கண் மற்றும் உடற் கொடையை முன்னிட்டு ரூ.5,000/- , வாசுதேவன்  அவர்களின் இதயமாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று நலமுடன் உள்ளதை முன்னிட்டு ரூ.5,000/-, எத்திராஜனின் மகள் ஜான்சிராணி தனியார்  பணிக்குத் தேர்வு பெற்றமைக்குரூ.5,000/- என இயக்க நிதியாக (மொத்தம் ரூ.15,000/-) தமிழர் தலைவரிடம்  குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நேரில் சந்தித்து வழங்கினார்கள். உடன்: இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் வி.சொக்கலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர்
நா. எழிலன். (சென்னை, 25.10.2025)

-விடுதலை நாளேடு,28.10.2025

செவ்வாய், 28 அக்டோபர், 2025

குடும்பத்தின் சார்பாக கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பெரியார் உலகம் நன்கொடை

 

'பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை


சேலம் தமிழ்மறவர் புலவர் அண்ணாமலை – சரசு அம்மையார் குடும்பத்தின் சார்பாக கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பெரியார் உலகம் நன்கொடை ரூபாய் ஒரு லட்சத்தினைக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: சேலம் தோழர் தமிழர் தலைவர், ஆஸ்திரேலியா – பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர் மகிழ்நன் அண்ணாமலை, ஓய்வு பெற்ற ஆசிரியர் நடேசன், அ.இளவழகன். (பெரியார் திடல், 17.09.2025)

விடுதலை நாளேடு,12.10.2025

வியாழன், 2 அக்டோபர், 2025

'பெரியார் உலக'த்திற்குத் தமிழர் தலைவரிடம் சென்னை கழக மாவட்டங்களின் மகளிரணி -மகளிர் பாசறையினர் சார்பில் நன்கொடை

 

நன்கொடை

 

சென்னை கழக மாவட்டங்களின் மகளிரணி -மகளிர் பாசறையினர் சார்பில் தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாள் அன்று 'பெரியார் உலக'த்திற்கு ரூ.1,00,000 நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். (சென்னை
17-9-2025)

- விடுதலை நாளேடு,20.09.2025

சனி, 14 டிசம்பர், 2024

தென் சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியார் யுவராஜ், பெரியார் உலகத்திற்கு நன்கொடை

டிசம்பர் 14, 2024 , விடுதலை நாளேடு
திராவிடர் கழகம், நடக்க இருப்பவை, நன்கொடை

தென் சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியார் யுவராஜ், தனது தாயார் தனலட்சுமி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு 5000/- ரூபாயினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார். உடன் அவரது வாழ்விணையர் லீலாவதி . (13.12.2024,சென்னை)

திங்கள், 25 நவம்பர், 2024

மா..நடராஜன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (26.11.2024) அவரது துணைவியார் ந.பத்மாவதி நன்கொடை

நன்கொடை

நன்கொடை

அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகத்தின் மேனாள் தலைவரும், நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக மேனாள் துணைத் தலைவருமான மா.நடராஜன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (26.11.2024) அவரது துணைவியார் ந.பத்மாவதி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களிடம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு (உணவு அளிக்க) ரூ.5000/- வழங்கினார். உடன் தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி.
விடுதலை நாளேடு,25.11.2024