தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 15.01.2021 முற்பகல் 11.00 மணி அளவில், திருவள்ளுவர் நாளை முன்னிட்டு மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது. மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, மாவட்ட துணைத் தலைவர் டி .ஆர். சேதுராமன் மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் கோ.வீ.ராகவன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட தலைவர் இரா,வில்வநாதன் மாலை அணிவித்தார். ஈ.குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மணித்துரை, இரா.பிரபாகரன், மு.சண்முகப் பிரியன், பிடிசி ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெள்ளி, 24 ஜனவரி, 2025
தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு
ஞாயிறு, 21 ஜனவரி, 2024
திருவள்ளுவர் நாளில் சிலைக்கு தென்சென்னை மாவட்ட கழகம் சார்பில் மாலை அணிவிப்பு

16.01.2024 செவ்வாய்கிழமை திருவள்ளு வர் நாளினை முன்னிட்டு தென்சென்னை மாவட்டம் மயிலாப்பூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு கழக இளைஞரணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யபட்டது. கழக துணை பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் மாலை அணிவித்தார். மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன்,
மாவட்டச் செயலாளர் செ. ர. பார்த்த சாரதி, மாவட்ட துணை தலைவர்கள் டி.ஆர்.சேதுராமன், சா.தாமோதரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு. சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ந. மணிதுரை, மாவட்ட இளை ஞரணி துணைச் செயலாளர் இரா. மாரி முத்து, கழக பகுதி செயலாளர் பொறியாளர் ஈ. குமார், மாணவர் கழகப் பொறுப்பாளர் அறிவழகன், பெரியார் பிஞ்சு மா.இனியவள், ஆகியோர் கலந்துகொண்டனர்.
திங்கள், 20 பிப்ரவரி, 2023
சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு
புதன், 19 ஜனவரி, 2022
மயிலை திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு
திருவள்ளுவரின் 2053ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தென்சென்னை மாவட்ட கழகம் சார்பில் சுறவம்- 2 (15.1.2022 ) முற்பகல் 10.30 மணி அளவில் மாலை அணிவிக்கப்பட்டது.
தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார். செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைச்செயலாளர் கோ.வீ. ராகவன், இளைஞரணி மாவட்டத் தலைவர் ச.மகேந்திரன், செயலாளர் ந.மணிதுரை, மு.சண்முகப்பிரியன், ஈ.குமார், அப்துல்லா, பி.டி.சி. இராசேந்திரன், சக்திவேல் மற்றும் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
செவ்வாய், 19 ஜனவரி, 2021
ஞாயிறு, 19 ஜனவரி, 2020
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் மயிலாப்பூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாவட்ட தலைவர் வில்வநாதன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. (16.01.2020) தென் சென்னை மாவட்ட துணை செயலாளர் டி.ஆர். சேதுராமன், இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, பொறியாளர் ஈ. குமார், மு. சண்முகப்பிரியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
- விடுதலை நாளேடு 17 1 20
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல்
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 16.01.2020 முற்பகல் 9.00மணி அளவில் சென்னை மாங்காட்டில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, பூவை பகுதி தலைவர் பெரியார் மாணாக்கன், க.தமிழ்ச்செல்வன், பூவை மணிமாறன், பகுத்தறிவாளர் கழக மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- விடுதலை நாளேடு 19 1 20
