சனி, 24 பிப்ரவரி, 2018

அரும்பாக்கம் பகுதி கழகக் கலந்துரையாடல் கூட்டம்

அரும்பாக்கம்: 25.2.18, ஞாயிறு, மாலை 4 மணி

இடம்: சா.தாமோதரன் இல்லம், 579/884, பெரியார் நெடுஞ்சாலை, அரும்பாக்கம், சென்னை-106

தலைமை: இரா.வில்வநாதன் (மாவட்ட தலைவர்)

பொருள்: கழக ஆக்கப்பணிகள் றீ குறிப்பு: அரும்பாக்கம் மற்றும் மாவட்டத் தின் பகுதி கழகத்தோழர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இப்படிக்கு - க.தமிழ்ச்செல்வன், செயலாளர், அரும்பாக்கம், திராவிடர் கழகம்.

சா.தாமோதரன் 55ஆவது பிறந்த நாள் நன்கொடைதென்சென்னை மாவட்ட கழகத் துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன் 55ஆவது பிறந்த நாள் (25.2.2018) மகிழ்வாக திருச்சி அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!

- - - - -


- விடுதலை நாளேடு, 24.2.18

வியாழன், 22 பிப்ரவரி, 2018

சமூகநீதிப் பாதுகாப்புக்கான பேரவை சார்பில் 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம்!சென்னை, பிப்.22 சென்னை - வள்ளுவர் கோட்டம் அருகே இன்று (22.2.2018) காலை 11 மணியளவில் சமூகநீதிப் பாதுகாப்புக்கான பேரவை சார்பில் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவர் அமைப்பினர் பங்கேற்று எழுச்சி முழக்கமிட்டனர். 
திராவிடர் மாணவர் கழக மாநில கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி வரவேற்றார்.  திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொடக்க உரையாற்றினார்.
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் சீ.தினேஷ் ஆர்ப்பாட்ட நோக்கவுரையாற்றினார்.
திராவிட முன்னேற்றக் கழக மாணவரணி மாநிலச் செய லாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமாகிய சி.வி.எம்.பி.எழி லரசன்  நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்று நீட்டை எதிர்ப்பது ஏன்? எனும் தலைப்பில் விளக்கவுரையாற்றினார்.
வழக்குரைஞர்  ஜெரால்டு, நா.பார்த்திபன், ப.சோமசுந்தர மூர்த்தி, வானவில் விஜய், தமீம் அன்சாரி, அ.சுரேஷ், முபின், ராமசாமி, வி.சேஷன், இரா.சத்தியகுமரன், முகவை இரா.சங்கர், பா.ஜெய்கணேஷ், எம்.அருணாச்சலம், ச.இராஜராஜ சோழன், ஈகை ஜி.சிவா, எச்.முகம்மது அசாருதீன், ஜி.ரஹீம் பாஷா, அப்துல் ரஜாக், முகம்மது பெரோஸ், குர்ஷித், எஸ்.விஜயகுமார், பிஎம்.சுரேஷ் பாபு, கார்த்திகேயன், எழிலன், ஆனந்தராஜ், அம்பேத்கர், அத்னான், பிரபாகரன், அலாவு தீன்,  அன்வர் இஸ்மாயில், கபீர் அஹ்மத், ஆர்.ராஜன் உள்பட பல்வேறு மாணவர் அமைப்பினர் முன்னிலை வகித்தனர். 
வழக்குரைஞர் கவி.கணேசன், யாழ் திலீபன், கஸாலி,  விஜயக்குமார் ஆகியோர் நீட் எதிர்ப்பு முழக்கமிட்டனர்.
மதிமுக மாணவர் அணி மாநிலச் செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், மாநில உரிமை பறிப்பு எனும் தலைப்பிலும், முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநிலச் செயலாளர் அன்சாரி பாசிச நோக்கம் எனும் தலைப்பிலும், முற்போக்கு மாணவர் கழகத்தின் மாநிலத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் செஞ்சுடர் நீட் தேர்வின் சமூகநீதி மறுப்பு எனும் தலைப்பிலும், சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில துணைச் செயலாளர் பெரோஸ், கல்வி உரிமை மறுப்பு எனும் தலைப்பிலும், கேம்பஸ்  ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநிலத் தலைவர் முஸ்தபா, கல்வி முதலைகள் கொள்ளை எனும் தலைப்பிலும், மாணவர் இந்தியா மாநிலச் செயலாளர் அசாருதீன் இந்துத்துவக் கல்வித் திணிப்பு எனும் தலைப் பிலும், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாணவரணி ஒருங்கிணைப்பாளர் சிறீநாத் நுழைவுத் தேர்வே அவசிய மற்றது எனும் தலைப்பிலும், அகில இந்திய கிராமப்புற மாணவர் சங்கம் சார்பில் கா.அமுதரசன் உயர் ஜாதி, நகர்ப்புற பணக்காரர்களுக்கானது எனும் தலைப்பிலும், சமூக நீதி மாணவர் இயக்கத்தின் மாநில பொருளாளர் அன்சாரி உள்பட பலர் நீட் திணிப்பை எதிர்த்தும், கல்வி உரிமைகளை வலியுறுத்தியும், கல்விணை மாநிலப்பட்டியலுக்கு திரும்பக் கொண்டுவர வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்ட முடிவில் திமுக மாணவரணி மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.மோகன் நன்றி கூறினார்.
அனைத்து மாணவர் அமைப்புகளின் சார்பிலும் கொடிகள் ஆர்ப்பாட்டத்தின் எழுச்சியை பறைசாற்றின. திராவிடர் மாணவர் கழகம், திராவிட முன்னேற்றக் கழக மாணவரணி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், மதிமுக மாணவர் அணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி முற்போக்கு மாணவர் கழகம், முஸ்லிம் மாணவர் பேரவை, முற்போக்கு மாணவர் கழகம், சமூகநீதி மாணவர் இயக்கம், கேம்பஸ்  ஃப்ரண்ட் ஆப் இந்தியா,    மாணவர் இந்தியா, திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாணவரணி, அகில இந்திய கிராமப்புற மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவரணியினர் பெருந்திரளாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உணர்ச்சிமிகு முழக்கங்களை எழுப்பினார்கள்.

- விடுதலை நாளேடு, 22.2.18

சென்னையில் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

சென்னை, பிப். 23- சமூக நீதிப் பாதுகாப்புக்கான பேரவை சார்பில்   சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று (22.2.2018)   நீட் எதிர்ப்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திரா விடர் மாணவர் கழகம், திரா விட முன்னேற்றக் கழக மாண வரணி, அனைத்திந்திய மாண வர் பெருமன்றம், மதிமுக மாணவர் அணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி முற்போக்கு மாணவர் கழகம், முசுலிம் மாணவர் பேரவை, முற்போக்கு மாணவர் கழகம், சமூகநீதி மாணவர் இயக்கம், கேம்பஸ்  ஃப்ரண்ட் ஆப் இந்தியா,    மாணவர் இந்தியா, திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாணவரணி, அகில இந்திய கிராமப்புற மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

திராவிடர் கழகத்தின் சார் பில் கலந்துகொண்டவர்கள் விவ ரம் வருமாறு: மாநில மாணவ ரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாணவ ரணி கூட்டுச் செயலாளர் சே. மெ.மதிவதனி, துணை செயலா ளர் நா.பார்த்திபன்,  யாழ் திலீ பன், அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பொறி யாளர் இன்பக்கனி, பொதுக் குழு உறுப்பினர் ஆர்.டி.வீர பத்திரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செய லாளர் கோ.நாத்திகன்,  மாநில இளைஞரணி துணை செயலா ளர் பொழிசை கண்ணன், மண் டல இளைஞரணி செயலாளர் ஆ.இர.சிவசாமி,   மண்டல மாண வரணி செயலாளர் பா.மணி யம்மை, விஜயக்குமார், விடு தலை நகர் செயராமன், கூடு வாஞ்சேரி மா.ராசு, கு.சோமசுந் தரம், லட்சுமிபதி, மோகன்ராஜ்,  குணசேகரன், சீனுவாசன், நங்கை நல்லூர் மோகன், ராஜ சேகர், ஜெ.கோபி, மோகன், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மயிலை டி.ஆர்.சேதுராமன், கோ.வீ.ராகவன், தரமணி மஞ்சநாதன்,  அரும்பாக்கம் சா.தாமோதரன், க.தமிழ்செல்வன், மதுரவாயல் டி.கே.வேலு, கு. பா.அறிவழகன், வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலை வர் தளபதிபாண்டியன், கொடுங் கையூர் கோ.தங்கமணி, சுரேஷ், அம்பேத்கர், ரேவந்த், பவன்குமார், சிறீராம், சுதன், பிரவீன்குமார்,

ஆவடி மாவட்ட அமைப் பாளர் உடுமலை வடிவேல், நடராசன், இளவரசன், இராம லிங்கம், கோபால், க.ச.பெரி யார் மாணாக்கன், முகமது அபு தாகீர், சு.வெங்கடேசன், ரஞ்சித், தமிழ்மணி, கலைமணி, பெரியார் களம் இறைவி, தங்க.தனலட்சுமி, பூவை செல்வி, பசும்பொன் செந்தில் குமாரி,  தமிழ்செல்வி, க.வெண் ணிலா, இ.ப.சீர்த்தி, குறள் அரசி, கு.பா.கவிமலர் உள்பட

ஏராளமானவர்கள் ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்றனர்.

- விடுதலை நாளேடு, 23.2.18

வியாழன், 15 பிப்ரவரி, 2018

அண்ணா நினைவு நாள்

திராவிட அரசியலை அசைக்க எண்ணும் தீயர் கூட்டத்தைத் துரத்துவோம்!

அண்ணா நினைவு நாளில் தமிழர் தலைவர் அறிக்கைஅறிஞர் அண்ணாவின் 49 ஆம் ஆண்டு நினைவு நாளில் நாம் எடுக்கவேண்டிய சூளுரை என்ன என்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

தந்தை பெரியாரின் தலைமாணாக்கராகத் தன்னை வரித்துக்கொண்ட தானைத் தளபதி அறிஞர் அண்ணா தனி அரசியல் இயக்கம் கண்ட பிறகும் - ஏன் இறுதி வரைக்கும் என்றும் சொல்லவேண்டும் - ‘தான் கண்ட, கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார்தான்' என்றே பிரகடனப்படுத்தினார்!

தாம் முதலமைச்சர் பதவியில் அமர்ந்து வரலாறு படைத்த காலகட்டத்திலும்கூட, தனது ‘வாழ்வின் வசந்தம்‘ தந்தை பெரியாருடன் இருந்து தொண்டூழியம் செய்ததேதானே தவிர, பதவி வாழ்வல்ல என்று கூறி அடக்கத்துடன் இலக்கணமாய் உயர்ந்தார்.

அமைச்சரவையே பெரியாருக்குக் காணிக்கை

தன் அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிர கடனப்படுத்திப் பெருமையடைந்தார் அண்ணா!

அதற்குமுன்னர் - தேர்தல் வெற்றிக் கனியை 1967 இல் பறித்து, தமிழ்நாட்டு வரலாற்றில் திராவிடர் அரசியல் கொடியேற்றத்தை நிகழ்த்துமுன்னர், 200 மைல்களுக்கு அப்பால் இருந்த தனது ஆசானை, தலைவனைக் கண்டு, அவ்வெற்றிக் கனியை அவருடைய கையில் தந்து ‘‘ஆசி பெற்று’’ தனிச்சிறப்பைப் பெற்றார்!

முப்பெரும் சாதனையே!

ஓராண்டு கால ஆட்சியில் செய்த முப்பெரும் சாதனைகளாக,

1. சுயமரியாதைத் திருமண செல்லுபடி சட்டம்

2. தாய்த் திருநாட்டுக்கு ‘‘தமிழ்நாடு’’ பெயர் மாற்றம்

3. இருமொழிகளே தமிழ்நாட்டு ஆட்சி மொழிகள்

என்ற பிரகடனம்!

இப்படி ஒப்பரிய வரலாற்றுச் சாதனைகளைச் செய்த தோடு, அரசு அலுவலகங்களில் கடவுள், கடவுளச்சிகள் படங்களை மாட்டுவதைத் தவிர்த்தும், அகற்றுமாறும் சுற்றறிக்கை அனுப்பி மதச்சார்பின்மை என்ற அரசியல் சட்டக் கட்டளையைச் செயல்படுத்தி அகிலத்திற்கே ஒரு மகத்தான பாடம் எடுத்தார்!

அவர் இட்ட அடித்தளம் 50 ஆண்டுகால, அரை நூற்றாண்டு வரலாற்று அரசியலின் திருப்பமாகி, தமிழ்நாடு பெரியார் மண்ணாகவே தொடருகிறது!

அண்ணாவின் பெயரும், உருவமும் போதுமா?

இதனை மாற்ற இன்று ஆன்மிக ஒப்பனைகளோடு அரசியல், யாக, யோக, யக்ஞம் நடத்திடும் வேடிக்கையான விலாநோகச் சிரிக்கும் கேலிக்கூத்துகள், ஊடகங்களை குத்தகைக்கு எடுத்தும், உண்மைகளைப் பலியாக்கும் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்தும், ‘சுக்ரீவ - அனுமர் - விபீ டண - பிரகலாத’ வகையறாக்களைத் தோளில் தூக்கியும், இதோ மாற்றுகள் தயாராகி விட்டன என்ற கானல் நீர் வேட்டை, மயிரைச் சுட்டு கரியாக்கி, மலையைக் கெல்லும் வெட்டி வேலைகள் எல்லாம் நடக்கின்றன!

நாம் எடுக்கும் சூளுரை!

அண்ணா பெயரில் கட்சி, அண்ணா படத்துடன் கொடி, ஆனால், அண்ணாவுக்கோ, அவரது கொள்கைக்கோ ஒரு பெரிய ‘‘நாமம்'' - ‘அண்ணா நாமம்' போடும் வேதனையான வெட்கப்படும் வினையாற்றம் - இவைகளை எதிர்நோக்கிட உண்மை திராவிடர் இன உணர்வு, பண்பாட்டுக் காப்புகள் உள்ள பாசறைப் பட்டாளங்கள்  ஆயத்தமாகி அணிவகுத்து, ஆரியத்தின் அறைகூவலை ஏற்க புதியதோர் சூளுரை ஏற்போம் - அண்ணா நினைவு நாளில்!

திராவிடம் என்பது எல்லைக் கோடு அல்ல; ரத்தப் பரிசோதனை அல்ல. பண்பாட்டுப் பெட்டகம்!

அண்ணாவின் அரசியல் பதவி இலக்கு அல்ல; பதவியின்மூலம் இலட்சிய வெற்றியை அடைதலே என்பதை இளையர்களுக்குப் புரிய வைத்து, திராவிட அரசியலை அசைக்க எண்ணும் தீயர் கூட்டத்தை திசைதெறிக்கத் தோற்றோட போர்ச் சங்கு ஊதுவோம், வாரீர்!

வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா!

வளரட்டும் திராவிடம்!

 

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்.

சென்னை 
3.2.2018

இரும்புக்கோட்டை உறுதியாக நிற்கும்;

ஈக்கள் மடிந்து போகும்: தமிழர் தலைவர் பேட்டிஇரும்புக்கோட்டையை ஈக்களால் தகர்த்துவிட முடியாது; திராவிட அரசியல் ஆயிரங்காலத்துப் பயிராக என்றைக்கும் பாதுகாக்கப்படும்  என்று தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அண்ணா அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2018) சென்னை கடற்கரை காமராசர் சாலையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்த  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

‘‘திராவிடன் நான் - தெற்கிலிருந்து வருகிறேன்!’’ என்று பிரகடனப்படுத்தியவர்

தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் குடும்பத்தின் தலை மாணாக்கராகத் தன்னை இறுதிவரை வரித்துக்கொண்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்து 49 ஆம் ஆண்டு நினைவு நாள் என்றாலும், அவர்கள் தத்துவமாக, கொள்கையாக, திராவிடர் அரசியலாக, ஆரிய மாயை அகற்றக்கூடிய மிகப்பெரிய போர்த் தளகர்த்தராக, இன்றைக்கும் உலகெங்கும் வாழ்ந்துகொண்டிருக்கின்ற தமிழ் திராவிட மக்களுடைய எண்ணத்தில் குடியேறி இருக்கிறார்கள்.

மாநிலங்களவையில் ‘திராவிடன் நான் - தெற்கிலி ருந்து வருகிறேன்’ என்று பிரகடனப்படுத்திய அண்ணா அவர்கள், ஆட்சிக்கு வந்தவுடன் சாதித்தவை முப்பெரும் சாதனைகள்!

சுயமரியாதைத் திருமணம்

தாய்த்திருநாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்

இந்தி இல்லை. தமிழ் - ஆங்கிலம் இருமொழிக் கொள்கை என்ற இந்தக் கொள்கைகள் திராவிட அரசிய லின் அடித்தளங்கள்.

‘‘இரும்புக்கோட்டை உறுதியாக நிற்கும்; ஈக்கள் மடிந்து போகும்!’’

இதை மாற்றுவதற்கு எந்தக் கொம்பனாலும் முடியாது. அண்ணாவின் நினைவு நாளில், திராவிட அரசியலை வீழ்த்திவிடலாம் என்று சிலர் கனவு காணுகிறார்கள். இரும்புக் கோட்டையை ஈக்களால் தகர்த்துவிட முடி யாது என்பதுதான் மிக முக்கியம். எனவே, ஈக்கள் எத்த னைதான் சேர்ந்தாலும், இரும்புக்கோட்டை உறுதியாக நிற்கும்; ஈக்கள் மடிந்து போகும். இதுதான் இன்றைய அரசியல் நிலவரம்.

இந்தப் புதிய சூளுரையை அண்ணாவின் நினைவு நாளில் ஏற்போம்! அண்ணா அடித்தளமிட்ட திராவிட அரசியல், ஆயிரங்காலத்துப் பயிராக என்றைக்கும் பாதுகாக்கப்படும். அதுதான் பண்பாட்டு சிகரம்; அதுதான் பண்பாட்டினுடைய உச்சம். அதனைப் பாதுகாப்பதற்குக் கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்களை ஆயத்தப் படுத்திக் கொண்டிருக்கின்ற காலகட்டம் இது.

எனவேதான், தந்தை பெரியாரின் தலைமகனான அண்ணா அவர்கள், அவருடைய கொள்கையை அரசி யலில் வகுத்தார்; அது தொடர்ந்து வீறுநடை போட்டு, வெற்றி நடை போட்டுக்கொண்டே இருக்கிறது.

தி.மு.க. -  அ.தி.மு.க.வும்

அண்ணா வழியில்தான் பயணிக்கிறதா?

செய்தியாளர்:  இப்பொழுது இருக்கக்கூடிய இரண்டு பெரும் திராவிடக் கட்சிகள் தி.மு.க. -  அ.தி.மு.க.வும் அண்ணா வழியில்தான் திராவிட அரசியலில் ஈடுபட்டுக் கொண்டு வருகிறார்களா?

தமிழர் தலைவர்: முழுக்க முழுக்க என்று சொல்ல முடியாது. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில், அண்ணா அவர்களுக்குப் படம் - பாடமல்ல. கொடியிலே ஒரு சின்னம் - கொள்கையில் அவருடைய கோட்பாட்டைப் பின்பற்றுவதில் இல்லை.

திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா பாதை யில் பயணித்தாலும்கூட, இன்னும் வேகமாக அண் ணாவினுடைய கொள்கைகளான மாநில சுயாட்சி மற்றும் சமூகநீதி, பகுத்தறிவுக் கொள்கைகளை முன் னெடுத்துச் செல்லவேண்டும்; அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது வரவேற்கத்தக்கது. அந்தப் பயணம் இன்னும் வேகமாக நடக்கவேண்டும். திராவிட அரசியலைப் புறந்தள்ள யாராலும் முடியாது.

- இவ்வாறு செய்தியாளர்களுக்கு இன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.
- விடுதலை நாளேடு,3.2.18

திங்கள், 5 பிப்ரவரி, 2018

கழக தோழர்களால் கொண்டாடப்பட்ட தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் விழாசென்னை, ஜன.20 திராவிடர் திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா கழகத் தோழர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

விவரம் வருமாறு:

அரும்பாக்கம்

14.1.2018 முற்பகல் 11 மணி அளவில் அரும்பாக்கம் பெரியார் நெடுஞ்சாலையில் தென்சென்னை மாவட்ட துணைச்செயலாளர் சா.தாமோதரன் தலைமையில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா நடை பெற்றது.

மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிட முன்னேற்றக் கழக 105ஆவது வட்ட செய லாளர் அதியமான் விழாவை தொடங்கி வைத்தார். இனிப்புப் பொங்கல் வழங்கப்பட்டது.

மாவட்ட துணைச்செயலாளர் கோ.வீ.ராகவன், க. தமிழ்செல்வன், க.பாலமுரளி, மு.டில்லிபாபு, க.திருச் செல்வம், த.அண்ணாதுரை, எம்.பிரகாசம், ஏ.சுந்தர், கு.பா.அறிவழகன், பா.கவுதம் சித்தார்த்தன், ந.அதியமான் (தி.மு.க.) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோயம்பேடு

14.1.2018 முற்பகல் 11.45 மணி அளவில் தென் சென்னை கோயம்பேடு பகுதியில் திராவிடர் கழகமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்களும் இணைந்து தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை கொண்டாடினர்.

- விடுதலை நாளேடு,20.1.18

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ தொடர்பான

இரு மசோதாக்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தராவிட்டால்

அடுத்த கட்ட போராட்டத்தை

மாணவர் அமைப்புகள் கையில் எடுக்கும்!

சென்னை பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் பேட்டிசென்னை, பிப்.5 ‘நீட்’ தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேர வையில் நிறைவேற்றப்பட்ட இரு சட்டத் திருத்த மசோதாக்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காவிட்டால், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நிறைவேற்றிக் கொடுக்காவிட்டால், அடுத்தகட்ட போராட்டங்களை மாணவர்கள் கையில் எடுப்பார்கள்  என்று தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தி யாளர்களிடம் கூறினார்.

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குக்கோரி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில்  இன்று (5.2.2018) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

இரண்டு சட்ட மசோதாக்கள் சட்டப்படி கையெழுத்தாகியிருந்தால்...

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குக் கோரி ஓராண்டிற்கு முன்பு தமிழக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி கொண்டுவந்த இரண்டு சட்டத் திருத்த மசோதாக்களை, எதிர்க்கட்சிகள் உள்பட தி.மு.க., காங் கிரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை சேர்ந்து ஆதரித்தன. அந்த இரண்டு சட்ட மசோதாக்கள் சட்டப்படி கையெழுத்தாகியிருந்தால், விலக்கு தானே கிடைத்திருக்கும்.

அரசியல் சட்டப்படி இது மாநில அரசிற்கு இருக் கிற உரிமை. நீட் தேர்வைப்பற்றிய அந்த சட்டம்  நாடாளு மன்றத்தில்  நிறைவேற்றப்பட்டபொழுதே, விலக்குக் கோரு கின்ற மாநிலங்களுக்கு விலக்குத் தரவேண்டும் என்பது அந்த சட்டத்திற்குள் இருக்கக்கூடிய பார்லிமெண்டரி ஸ்டேண்டிங் கமிசனுடைய பரிந்துரையை உள்ளடக்கிய ஒன்றாகும்.

அதுமட்டுமல்ல,  கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு இருக்கிறதே தவிர, இன்றைக்கு இருக்கின்ற மத்திய அரசாங்கத்தினுடைய போக்கு, அது யூனியன் லிஸ்ட்டுக்கே போய்விட்டது போன்று - மத்திய அரசுக்கே முழுக்க முழுக்க கல்வி உரிமை என்பது போன்று நடந்துகொண்டிருக்கிறது.

சமூகநீதி காப்பாற்றப்படக் கூடாது என்பது மத்திய அரசினுடைய நோக்கம்

98 சதவிகிதம் மாநிலக் கல்வி முறை - 1.6 சதவிகிதம்தான் சி.பி.எஸ்.இ. முறை. இதிலிருந்துதான் நாங்கள் கேள்வி கேட்போம் என்று சொன்னால், நம் பிள்ளைகள் தேர்வாகக் கூடாது - நீட் தேர்வில் தேர்வடையக்கூடாது - தமிழ்நாட்டுப் பிள்ளைகள், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர், சமூகநீதி காப்பாற்றப்படக் கூடாது என்பது மத்திய அரசினுடைய நோக்கமாகும்.

அது உயர்ஜாதிக்காரர்களுக்கும், நகர வசதியாளர் களுக்கும், இன்னுங்கேட்டால், நீட் பயிற்சி வகுப்பு என்ற பெயரால், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வசதியாக ஒரு தொழிலை உருவாக்குவதற்கும் பயன்பட்டு இருக்கிறது. ஆகவே, இது கூடாது. அதனை ரத்து செய்யவேண்டும் என்பதற்காக, அந்த நீட் தேர்வை எல்லோரும் எதிர்க் கிறார்கள்.

பி.ஜே.பி.,யும், ‘பிராமண’ சங்கத்தைத் தவிர வேறு யாரும் கிடையாது

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியும், ‘‘நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம்‘’ என்று இன்றைக்குக்கூட கல்வி அமைச்சர் சொல்கிறார். ஆனால், இந்த நீட் தேர்வை ஆதரிப்பவர்கள், பி.ஜே.பி.,யும், ‘பிராமண’ சங்கத்தைத் தவிர வேறு யாரும் கிடையாது. இதுதான் உண்மை.

ஆகவே, ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒன்றாகத் திரட்டி, இன்றைக்கு இந்த உணர்வை வெளிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டத் தலை நகரங்களிலும் முதல் கட்டமாக, மக்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

ஓராண்டு நீட் தேர்வு நடந்துவிட்டதால், இது ஏதோ முடிந்துவிட்டது, நிலைத்துவிட்டது என்ற எண்ணம் இருக்கவேண்டிய அவசியமில்லை.

21 ஆண்டுகாலம் போராடி, நுழைவுத் தேர்வை ரத்து செய்த சட்டத்தை நிறைவேற்றிய மாநிலம்

நுழைவுத்தேர்வை எதிர்த்து, 21 ஆண்டுகாலம் போராடி, நுழைவுத் தேர்வைரத்து செய்த சட்டத்தை நிறைவேற்றிய மாநிலம் தமிழ்நாடு. இன்னும் அந்த சட்டம் அப்படியே இருக்கிறது.

ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில், நீட் தேர்வு விலக்குக் கோரியும், அதேபோல, மருத்துவக் கவுன்சிலை நீக்கிவிட்டு, தேசிய மருத்துவத் தேர்வாணையம் என்று ஒன்றை உருவாக்குகின்ற மசோதா நிறைவேற்றப்படக் கூடாது - அது கைவிடப்படவேண்டும். அதன்மூலம், மருத்துவர்களின் உரிமை, மாநிலங்களின் உரிமை, சமூகநீதி பாதிக்கப்படுகிறது என்பது இரண்டாவது கோரிக்கையாகும்.தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கவேண்டும்

மூன்றாவது கோரிக்கை, உயர்மருத்துவக் கல்லூரிகளில், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 100 விழுக்காடு இடங்களையும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கவேண்டும் என்பது மிக முக்கிய தீர்மானமாகும்.

அதேபோல, அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவக் கல்லூரியில், 50 சதவிகித இடங்கள் வழங்கவேண்டும் போன்றவைகளையெல்லாம் தீர்மானங்களாக நிறைவேற்றி, அதனையொட்டி இன் றைக்கு முதல் கட்டப் போராட்டம் நடைபெற்று இருக்கிறது. இது அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற போராட்டம்.

வருகிற 10 ஆம் தேதி சென்னை பெரியார் திடலில், தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவ அமைப்புகள், மாணவப் பிரதிநிதிகள் கூடி, மேற்கண்ட நிலையை வலி யுறுத்த உள்ளார்கள். இதனைப் பெற்றோர்களுக்கும் தெளிவாக்கவேண்டும்; அரசினருக்கும் தெளிவாக்க வேண்டும் என்பதற்காக போராட்டங்களை மேற்கொள்ள  இருக்கிறார்கள்.

இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது

செய்தியாளர்: ஒருபக்கம் தமிழக அரசு நீட் தேர்வு விலக்குக்கோரி இரு மசோதாக்களை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளார்கள். ஆனால், மறுபுறம் 412 பயிற்சி மய்யங்களை ஏற்படுத்தி, நீட் நுழைவுத் தேர்வுக்காக என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சொல்கிறார். இந்த இரண்டு நிலைப்பாட்டை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: உங்கள் கேள்வி வரவேற்கப்பட வேண்டியது. பாலுக்கும் காவல் - பூனைக்கும் தோழன் என்கிற இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது. அதில் தெளிவாக இருக்கவேண்டும். ஒன்று, அந்தப் பக்கத்தில் இருக்கவேண்டும் அல்லது இந்தப் பக்கத்தில் இருக்கவேண்டும். இதனை மக்கள் உணரக்கூடிய அள விற்கு வருகிறார்கள். அவர்களே தங்களைத் தெளிவாக்கிக் கொள்வார்கள், அதனை நீங்கள் விரைவில் பார்ப்பீர்கள்.

மத்திய அரசிடமிருந்து எந்தத் தகவலையும், மாநில அரசு பெறவில்லை

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்ற இரண்டு சட்டத் திருத்த மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஓராண்டிற்கு மேலாகியும், இதுவரையில் அந்த சட்டத் திருத்தங்கள் என்னாயிற்று என்று மத்திய அரசிடமிருந்து எந்தத் தகவலையும், மாநில அரசு பெறவில்லை.

அந்த சட்டங்களில் என்ன குறைபாடு? அல்லது ஏன் அவர்கள் மறுக்கிறார்கள் என்று ஏதாவது காரணங்களை சொல்லியிருக்கிறார்களா என்றால், அப்படி எதுவும் கிடையாது.

இந்த சூழ்நிலையில், அதை வலியுறுத்தி, அந்த சட்டத் திருத்த மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவருடைய ஒப்புதலைப் பெறவேண்டிய கடமை அரசியல் சட்டப்படி, தமிழக அரசுக்கு உண்டு. தமிழக அரசு முதுகெலும்போடு அதனை வலியுறுத்தவேண்டும்.

மாநிலங்கள் விலக்குக்கோர உரிமை - அதிகாரமும் உண்டு

மூன்றாவதாக, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று கேட்பது இருக்கிறதே, இது கருணையோ, பிச்சையோ, சலுகையோ அல்ல. மாறாக, இந்திய அரசியல் சட்டப்படி மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட்டு இருக்கின்ற உரிமை. பொதுப் பட்டியலில் இருக்கிறது கல்வி. அப்படி இருக்கும்பொழுது, அதனை மற்ற மாநிலங்களுக்கு வலியுறுத்த மத்திய அரசுக்கு உரிமை உண்டு என்று சொன்னால், மாநிலங்கள் விலக்குக்கோர உரிமை - அதிகாரமும் உண்டே!

எனவே, இது மோடியினுடைய விருப்பத்தைப் பொறுத்ததோ, குடியரசுத் தலைவரின் விருப்பத்தைப் பொறுத்ததோ அல்ல. அவர்கள் பிரமாணம் எடுத்துக்கொண்ட அரசியல் சட்டப்படி அவர்கள் செயல்படவேண்டிய கடமை உண்டு.

அப்படியானால், அரசியல் சட்டத்திற்கு விரோதமாக, அவர்கள் அரசியல் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்; தவறாகப் பயன்படுத்துகிறார்கள் அல்லது அரசியல் சட்டத்தின் பெயரால், ஒரு  மோசடி அரசியல் நடக்கிறது என்று அதற்குப் பொருள்.

- இவ்வாறு செய்தியாளர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.

சென்னையில் கிளர்ந்து எழுந்த மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

சென்னை, பிப். 5- ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் Ôநீட்Õ தேர்வை ரத்துசெய்யக்கோரி பெருந் திரள் ஆர்ப்பாட்டம் இன்று  (5.2.2018)  காலை 11 மணியளவில் சென்னை சேப் பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலை மையில் அனைத்துக்கட்சித் தலைவர் கள், பொறுப்பாளர்கள் பெருந்திரளாக பங்கேற்றார்கள்.

ஜனநாயக உரிமை பாதுகாப்புக் கூட் டமைப்பின் சார்பில் 27.1.2018 அன்று சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகளின் தலை வர்கள், பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோச னைக் கூட்டம் திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் முடிவு செய்தபடி,  இன்று (5.2.2018) நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில்  நடை பெற்றது.

திராவிடர் கழகம், திமுக, காங்கிரசு கட்சி, மதிமுக, சிபிஅய், சிபிஎம், இந்திய யூனியன் முசுலீம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமுமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் கழ கத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவரையும் வரவேற்று போராட்டத்தின் நோக்கம்குறித்து உரை யாற்றினார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன்,  சிபிஅய் மாநிலச் செயலா ளர் இரா.முத்தரசன், சிபிஎம் மாவட்ட செயலாளர் அ.பாக்கியம், காங்கிரசு கட்சி மூத்த தலைவர் இலக்கியச்செல்வர் குமரி அனந்தன், மாநில துணைத் தலை வர் தாமோதரன், விடுதலை சிறுத்தை கள் கட்சி வன்னியரசு, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் ப.அப்துல்சமது, இந்திய யூனியன் முசுலீம் லீக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அபுபக்கர், எஸ்.டி.பி.அய். கட்சி மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி, இந் திய சமூகநீதி இயக்க நிறுவனர் பேராயர் எஸ்றா சற்குணம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்  உள்ளிட்ட அனைத்துக்கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின்சார்பில் ஏராளமானவர் கள் பங்கேற்று ஆர்ப்பாட்ட உரையாற்றி னார்கள்.

மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டத் தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

தமிழர் தலைவர் நிறைவுரை

நாடு முழுமைக்கும் Ôநீட்Õ தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். தமிழ்நாட் டுக்கு Ôநீட்Õ தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். இதை மத்திய அரசு செய்யவேண்டும். மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.  இது கரு ணையோ, சலுகையோ அல்ல. அரச மைப்புச்சட்டத்தின்படி மாநில அரசின் உரிமையாகும். தமிழக அரசு குறைந்த பட்சம் அனைத்துக்கட்சிக்கூட்டத்தை கூட்டி இருக்கவேண்டும். மாநில உரிமை, ஜனநாயக உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக கட்சி, ஜாதி, மத பேதங்களின்றி ஒரே உணர்வு படைத்த மேடை இது. நீட்¢ தேர்விலிருந்து விலக்கு பெறும்வரை கலையாத மேடை இது.

1.6 விழுக்காடு மட்டுமே சிபிஎஸ்இ படிப்பவர்கள். 98.4 விழுக்காடு மாண வர்கள் மாநிலப் பாடத் திட்டத்தின்படி படிக்கிறார்கள். நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அரசமைப்புச்சட்டத்தின் படி உரிமை உள்ளது.

நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்து ரையில் விரும்பாத மாநிலங்களக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று உள்ளது.

தமிழ்நாட்டில் எதிர்ப்பே இல்லாமல் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டன.  இந்திய மருத்துவ கவுன்சி லைக் கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டுவருகின்ற திட் டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும்.

முதுநிலை மருத்துவக்கல்வியில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நூறு விழுக்காடு இடம் அளிக்கப்பட வேண் டும். பணிபுரியும் அரசு மருத்துவர்க ளுக்கு 50 விழுக்காடு அளிக்கப்படும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப் படவேண்டும். அடுத்து மாணவர்களின் கிளர்ச்சி தொடரும். மக்களின் போராட் டங்களைக் கொண்ட வீதிமன்றங்களைப் போல், நீதிமன்றங்களிலும் அனைத்து கட்சிகளின் சார்பில் வழக்கு தொடுப் போம். வெற்றி பெறுவோம். சட்டப்படி உரிமைகளை நிலை நிறுத்துவோம்

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் நன்றி கூறினார்.

திராவிடர் கழகம், திமுக, சிபிஅய், சிபிஎம், மதிமுக, காங்கிரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, முசுலீம் அமைப் புகள், சமூகநீதிக்கட்சிஉள்ளிட்ட பல் வேறு அமைப்புகளின் சார்பிலும் கொடி களுடன் ஏராளமானவர்கள் மக்கள் பெருந் திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண் டனர்.

- விடுதலை நாளேடு,5.2.18