தியாகராயநகர் பெரியார் சிலைக்கு
மாலை அணிவிப்பு
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக தியாகராய நகர் தந்தை பெரியார் சிலைக்கு தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, காப்பாளர் மு.ந. மதியழகன் பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ. ராகவன், துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன் ஆகியோர் முன்னிலையிலும் மாலை அணிவிக்கப்பட்டது.
அரும்பாக்கம் சா.தாமோதரன்,எம்.டி.சி. இராஜேந்திரன், ஆட்டோ சேகர், இளைஞரணி தலைவர் ந.மணிதுரை, இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா. மாரிமுத்து மற்றும் அமைந்தகரை மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக பெரியார் பாலம் சிம்சன் எதிரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு 17.9.26 முற்பகல் 11.45 மணி அளவில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ. ராகவன் ஆகியோர் முன்னிலையிலும் மாலை அணிவிக்கப்பட்டது. இனிப்பு வழங்கப்பட்டது.
சூளைமேடு நல்.இராமச்சந்திரன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ச.மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதியில் தந்தை பெரியார் படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதியில் 17.9.26 நண்பகல் 12 .10 மணியளவில் தந்தை பெரியார் படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன் இனிப்புகளை வழங்கினார். மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன், ஆகியோர் முன்னிலையிலும் மாலை அணிவிக்கப்பட்டது.
இளைஞரணி துணைத் தலைவர் ச.மகேந்திரன், இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா. மாரிமுத்து மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.
கடற்கரை காமராஜர் சாலையில் பெரியார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது- நொச்சிநகர்
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக மயிலாப்பூர், காமராசர் சாலையில் உள்ள அனைத்து இந்திய வானொலி நிலையத்தின் வாயிலுக்கு அருகில் 17.9.26 நண்பகல் 12 .30 மணியளவில், தந்தை பெரியார் படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன், ஆகியோர் முன்னிலையிலும் மாலை அணிவிக்கப்பட்டது.
இளைஞரணி துணைத் தலைவர் ச.மகேந்திரன், இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா. மாரிமுத்து மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.
மந்தைவெளி செயின்மேரிசு பாலம் அருகில்
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக 17.9.26 பிற்பகல் 1.15 மணியளவில், மந்தைவெளி பகுதியை சேர்ந்த 'வன்னியம்பதி குடியிருப்பு' பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து தலைமையில், இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் ச.மகேந்திரன் முன்னிலையில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மாலை அணிவித்தார்.
பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன் தலைமையில்
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.
தோழர்கள் பங்கேற்றனர்.
தந்தை பெரியார் நினைவிடம் -17.9.26




























