மாணவரணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாணவரணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 செப்டம்பர், 2024

தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதா? தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுப்பதா? ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம்!


புதன், 19 ஜூன், 2024

ஒன்றிய அரசு நீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம் (சென்னை – 18.6.2024)


 

இனியும் தேவையா நீட்? ஒன்றிய அரசு ‘நீட்’டை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

Published June 19, 2024, விடுதலை நாளேடு

 

இனியும் தேவையா நீட்? ஒன்றிய அரசு ‘நீட்’டை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள், மாணவர்கள் ஒலிமுழக்கம் (சென்னை வள்ளுவர்கோட்டம், 18.6.2024)

இனியும் தேவையா நீட்? ஒன்றிய அரசு ‘நீட்’டை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் ஒலிமுழக்கம்!

Published June 19, 2024, விடுதலை நாளேடு


ஒன்றிய அரசு ‘நீட்’டை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் கண்டன எழுச்சி உரை

Published June 19, 2024

சென்னை, ஜூன் 19- திராவிட மாணவர் கழகம் சார்பில் ஒன்றிய அரசு ‘நீட்’டை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (18.6.2024) மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

மருத்துவக் கல்வியில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். நீட் உள்ளிட்ட எவ்வித நுழைவுத் தேர்வும் கூடாது என்று ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.

மேலும் நீட் தேர்வின் மோசடிகள், குளறுபடிகளை புள்ளிவிவரத் தகவல்களுடன் அம்பலப்படுத்தினார்கள். கிராமப்புற, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவச் செல்வங்கள் மருத்துவக்கல்வியை தடுக்கின்ற, தடை செய்வதே நீட் தேர்வின் நோக்கம் என்பதை எடுத்துக்காட்டி, மாணவர்களின் கல்வி உரிமை பறிப்பு, மாநில உரிமை பறிப்பு என நீட் தேர்வின் பெயரால் ஒன்றிய அரசின் அதிகார ஆணவத்தை எடுத்துக்காட்டி, அந்த உரிமைகளை மீட்பதில் தொடர்ச்சியாக போராடி வருகின்ற திராவிடர் கழகத்துடன் இணைந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் வெற்றி பெறும்வரை போராடுவோம், வெற்றி பெறுவோம் என்று தலைவர்கள் உறுதிபட கூறினார்கள்.

ஒன்றியத்தில் பா.ஜ.க. அரசு அமைந்த பிறகே நீட் தேர்வு திணிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு கூடாது, நீட்டிலிருந்து விலக்கு அளிக்கின்ற தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதலை அளிக்க வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையில், நீட் தேர்வு எதிர்ப்புப்போராட்டத்தின் அடுத்த கட்டமாக நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகனப் பேரணிகள் 5 குழுக்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 11.7.2024 அன்று தொடங்கி கல்வி வள்ளல் பச்சைத்தமிழர் காமராசர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளான 15.7.2024 அன்று சேலத்தில் நிறைவு பெறும் என்றும், அனைத்துக்கட்சியினரும் நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகனப் பேரணிக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றும், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்களிடம் நீட் கூடாது என்பதற்கான விழிப்புணர்வை இந்த பேரணிமூலம் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

திராவிட மாணவர் கழக மாநில பொறுப்பாளர்கள் செ.பெ.தொண்டறம், வி.தங்கமணி, நா.ஜீவா, த.சிவபாரதி, சு.இனியன், ச.மணிமொழி, மு.இராகுல், க.அறிவுச்சுடர், வெ.இளஞ்செழியன், பா.கவிபாரதி, சு.ச.திராவிடச் செல்வன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

திராவிட மாணவர் கழக மருத்துவக் கல்லூரி மாநில அமைப்பாளர் ப.நீலன் வரவேற்றார்.
திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன் தலைமையேற்று உரையாற்றினார்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார்.

கழகப் பொருளாளர் வீ.குமரேசன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ கஜேந்திரபாபு, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச். ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநிலப் பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முகம்மது அபுபக்கர், மதிமுக கொள்கை விளக்க அணி மாநிலச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியக் குழுஉறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன், திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன சிறப்புரை ஆற்றினார்.

புத்தக வெளியீடு

“‘நீட்’ சமூகநீதியைச் சாகடிக்கும் கண்ணாடி” என்னும் ரூ. 5 மதிப்பிலான புத்தகம் – 100 புத்தகங்கள் கொண்ட தொகுப்பை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து கழகத் தோழர்கள் உள்பட ஏராளமான வர்கள் பெற்றுக்கொண்டனர்.

கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, நீலன், ஊமை.ஜெயராமன், அரூர் இராஜேந்திரன், மேலூர் எரிமலை, சேலம் பூபதி, தாம்பரம் ப.முத்தையன், எழிலன், ஈரோடு த.சண்முகம் உள்பட பலரும் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் இராபர்ட் புரூஸ், மேனாள் மாவட்ட நீதிபதி இரா.பரஞ்ஜோதி, தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் செயலாளர் மா.செல்வராஜ், கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, முனைவர் மஞ்சுளா செல்வம், விழிகள் வேணுகோபால், துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ். மாநில ப.க. துணைத் தலைவர் பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், தலைமைக்கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால் உள்பட கழகப்பொறுப்பாளர்கள், தி.மு.க., மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.

திராவிட மாணவர் கழக சட்டக் கல்லூரி மாநில அமைப்பாளர் து.இளமாறன் நன்றி கூறினார்.

கலந்துகொண்டோர்

மகளிரணி சி.வெற்றிசெல்வி, தங்க.தனலட்சுமி, பூவை செல்வி, பசும்பொன், வி.வளர்மதி, நர்மதா, அஜந்தா, மு.பவானி, த.மரகதமணி, சீர்த்தி பகலவன், பெரியார் பிஞ்சு மகிழன், பகுத்தறிவு, அன்புச்செல்வி, தங்கமணி, பெரியார்செல்வி, லட்சுமி, ராணி, மகாலட்சுமி, தமிழ்மதி

தென்சென்னை மாவட்டம்:

இரா.வில்வநாதன், (மாவட்ட தலைவர்) செ.ர.பார்த்தசாரதி, (மாவட்ட செயலாளர்) கோ.வீ.ராகவன் (மாவட்ட துணைச் செயலாளர்), சா.தாமோதரன், (மாவட்ட துணச் செயலாளர்) மு.இரா.மாணிக்கம், (ப.க.,தலைவர், தென்சென்னை), பா.இராசேந்திரன், எம்..டி.சி. அரங்க.இராசா, ந.மணிதுரை (மாவட்ட இளைஞரணி செயலாளர்), பெரியார் யுவராஜ், (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), இரா.மாரிமுத்து, (மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்), ந.இராமச்சந்திரன் (சூளைமேடு), இரா.ரவி (சைதாப்பேட்டை). எம்.டி.சி.செல்வம், பி.டி.சி. இராஜேந்திரன்

வடசென்னை மாவட்டம்:

தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால், மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், காப்பாளர் கி.இராமலிங்கம், கோ.தங்கமணி, மாவட்ட இளைஞரணி தலைவர் நா.பார்த்திபன், அயன்புரம் துரைராசு, சு.அரவிந்த்குமார், சி.காமராஜ், ஆ.துரை இராவணன், ச.இராசேந்திரன், மா.டில்லிபாபு

திருவாரூர்:

அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), தேவ.நர்மதா, அழகேசன், தீபன் ராஜ், லட்சுமி, நிரஞ்சன், இன்பதமிழ், தீரன், ஆதீஷ், ராகேஷ், அறிவுச்சுடர், குருநாதன், அறிவழகன், தினோ, குருமூர்த்தி, அஷ்வின், குமரன், அபி.

நாகை:

மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, சட்டக்கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன், மாவட்ட மாணவர் கழக தலைவர் மு.குட்டிமணி, வேதை அய்யப்பன், சுரவின், சஞ்சீவிராஜன், சிறீதர், குரு, சீறீராம், கிருஷ்ணா, சந்தோஷ், அரிஅரன், இனியவன், முத்துக்குமார்.

மேட்டூர்: சு,கபிலன், தினகரன் (விசிக)

அறந்தாங்கி: பகுத்தறிவு மு.பால்ராஜ்

தஞ்சை: இரா.செந்தூரபாண்டியன், அன்பு வீரமணி, நிலவன்

ஓசூர்: வனவேந்தன், சித்தாந்தன், தருண்

மதுரை: எரிமலை (மாவட்ட தலைவர்), முத்துகருப்பன், கலைச்செல்வி (மகளிரணி செயலாளர்)

தருமபுரி: அரூர் இராஜேந்திரன், அ.தமிழ்ச் செல்வன் திண்டிவனம் பாபு, காரைக்குடி என்னாரெசு பிராட்லா, அரக்கோணம் சோமசுந்தரம்,

தாம்பரம்: ப.முத்தையன் (மாவட்ட தலைவர்), கோ.நாத்திகன் (மாவட்ட செயலாளர்), சு.மோகன்ராஜ், மாடம்பாக்கம் அ.கருப்பையா, ஊரப் பாக்கம் சீனிவாசன், இரா.உத்திரகுமார், பொழிசை கண்ணன், கூடுவாஞ்சேரி மா.இராசு, படப்பை சந்திரசேகர், சீர்காழி இராமண்ணா, ந.கதிவரன், இராமாபுரம் ஜெ.ஜெனார்த்தனம், கு.சோமசுந்தரம், தனசேகர். சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு.

ஆவடி: மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன், மாவட்ட செயலாளர் க.இளவரசன், பெரியார் மாணாக்கன், க.தமிழ்ச் செல்வன், சு.வேல்சாமி, முகப்பேர் முரளி, கன்னடபாளையம் தமிழரசன், மு.ரகுபதி, இரா.வேல்முருகன், சுந்தர்ராஜன், இரணியன் (எ) அருள்தாஸ், மணிமாறன், சந்திரபாபு, சின்னப்ப தமிழர், உடுமலை வடிவேல், க.கலைமணி, வை.கலையரசன், வழக்குரைஞர் பன்னீர்செல்வம், கொரட்டூர் இரா.கோபால், வெங்கடேசன், அ.வெ.நடராசன், சி.வச்சிரவேலு, திராவிடமணி, நாகராஜ், தமிழ்மணி, இசக்கி, தங்கதுரை.

காஞ்சிபுரம்: அ.வெ.முரளி (மாவட்டத் தலைவர்), கி.இளையவேள் (மாவட்ட செயலாளர்), பா.இளம்பரிதி (மாவட்ட ப.க. செயலாளர்), போளூர் பன்னீர்செல்வம்,

செங்கல்பட்டு: செங்கை சுந்தரம் (மாவட்ட தலைவர்), பகுத்தறிவு, கலைப்பிரிவு தலைவர் கலைவாணன், பகலவன், அ.பா.கருணாகரன், கு.பிச்சைமுத்து மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 9 ஜூலை, 2023

குடந்தை மாணவர் அணி மாநாட்டில் தென் சென்னை தோழர்கள்

8.7.18 மாலை குடந்தை மாநகரத்தில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக பவழ விழா மாநாட்டின் பேரணியில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் அணிவகுத்த போது...

ஞாயிறு, 8 மே, 2022

திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடலில் பங்கேற்ற மாணவர்கள் கழகத் தலைவருடன்

திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடலில் பங்கேற்ற மாணவர்கள் கழகத் தலைவருடன் மாவட்ட வாரியாக குழு படம் (1.5.2022, சென்னை, பெரியார் திடல்)


திராவிட மாணவர் கழக மாநிலக் கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமாக நடந்து கொள்ளும் தமிழ்நாடு ஆளுநரைத் திரும்பப் பெறுக றீஉச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் நடை பாதைக் கோயில்களை அகற்றாதது ஏன்?

மதவாதம், ஜாதி அடையாளக் கயிறுகளை கையில் கட்டுதல், ஷாகா பயிற்சிகளை தடை செய்க

இயக்க வெளியீடுகளைப் பரப்பிடுக, மாணவர் கழகத்தை வலுவாக்குக திராவிட மாணவர் கழக மாநிலக் கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

சென்னை, மே 3- திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் நேற்று (1.5.2022)காலை 10 மணிக்கு பெரியார் திடல் நடிகவேள் எம். ஆர். ராதா மன்றத்தில் சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக துணை அமைப்பாளர் தமிழ்செல்வன் கடவுள் மறுப்பு கூறி கூட்டம் தொடங்கியது. அனைவரையும் மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா. செந்தூரபாண்டியன் வரவேற்று உரையாற்றினார். 

மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் நோக்க உரை நிகழ்த்தினார். தொடர்ந்து மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் சார்பில் மாநிலத் துணைச் செயலாளர் க ச.அஜிதன், பொறியியல் கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் வி. தங்கமணி, சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் க.கா. வெற்றி, கோவை மண்டல மாணவர் கழக செயலாளர் மு. ராகுல், தருமபுரி மாவட்ட மாணவர் கழக தலைவர் இ. சமரசம், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மாணவர்  புதுக்கோட்டை செல்வ சூர்யா, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மீன்வள ஆராய்ச்சி நிலையம் மாணவர் ஒக்கநாடு மேலையூர் கவிபாரதி, சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவர் நாகர்கோயில் இசை செல்வி , பிரசிடன்ஸ்சி கல்லூரி மாணவர் காரமடை அன்புமதி ஆகியோர் உரையாற்றினர். தொடர்ச்சியாக நாகை இளமாறன், கோவை யாழினி ஆகியோர் தீர்மானத்தை முன்மொழிந் தனர். அரங்கத்தில் உள்ள அனைத்து மாணவத் தோழர்கள் எழுந்து நின்று கை ஒலி எழுப்பி தீர்மானத்தை வழிமொழிந்தார்கள். 

திராவிட மாணவர் கழக
மாநில புதிய பொறுப்பாளர்கள்

மாநில செயலாளர்: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

மாநில அமைப்பாளர்: இரா.செந்தூர்பாண்டியன்

மாநில துணைச் செயலாளர்: ச.அஜிதன்

மாநில துணைச் செயலாளர்: நா.ஜீவா

மாநில துணைச் செயலாளர்: அ.ஜெ.உமாநாத்

மாநில துணைச் செயலாளர்: செ.பெ.தொண்டறம்

மாநில துணைச் செயலாளர்: மு.ராகுல்

மாநில துணைச் செயலாளர்: ச.மணிமொழி

மாநில துணைச் செயலாளர்: வெ.இளஞ்செழியன்

மாநில துணைச் செயலாளர்: பா.கவிபாரதி

கருநாடக மாநிலம்

தலைவர்: மா.முனியப்பன்
செயலாளர்: மா.கவியரசன்

திராவிட மாணவர் கழக
மண்டல புதிய பொறுப்பாளர்கள்

சென்னை: சு.தமிழ்ச்செல்வன்
காஞ்சிபுரம்: மோ.பகுத்தறிவாளன்
வேலூர்: க.வெங்கடேசன்
தருமபுரி: இ.சமரசம்
கடலூர்: ப.பண்பாளன்
விழுப்புரம்: எஸ்.இ.ஆர்.திராவிடபுகழ்
சேலம்: ச.திராவிட முருகன்
ஈரோடு: த.சிவபாரதி
கோவை: வெ.யாழினி
திருச்சி: க.சசிகாந்த்
அரியலூர்: சு.ச.திராவிடச்செல்வன்
தஞ்சாவூர்: ச.சற்குணன்
திருவாரூர்: மு.இளமாறன்
புதுக்கோட்டை: நே.குட்டிவீரமணி
சிவகங்கை: அ.பிரவீன்முத்துவேல்
திண்டுக்கல்: வி.சு.பெரியார்மணி
நெல்லை: சு.இனியன்

திராவிட மாணவர் கழக மாநிலக் கலந் துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம்  எண் 1:

நீட் எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு ஆகியவற்றை முன்னிறுத்தி, கொளுத்தும் கோடையில் 

21 நாள்கள் பரப்புரைப் பெரும்பயணம் மேற் கொண்டு இந்த முழக்கங்களை மக்களிடம் ஆழ விதைத்து, ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்து எழுச்சியை ஏற்படுத்தியிருக்கும் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, தமிழர் தலைவரின் இந்த முழக்கங்களை வென்றெடுக்க தலைவர் இடும் ஆணைகளைச் செய்து முடிப்போம் என்று இக் கூட்டம் உறுதி கூறுகிறது.

தீர்மானம் எண் 2: 

பள்ளி மாணவர்கள் மத்தியில் தந்தை பெரியாரை மிகப்பெரிய அளவில் அறிமுகப் படுத்தி, பகுத்தறிவு - இன உணர்வூட்டிய "பெரியார் 1000 வினா‍-விடைப் போட்டி"யை வரும் கல்வி ஆண்டில் தமிழ்நாடு, புதுச்சேரி இரண்டு மாநிலங்களிலும் அனைத்துப் பள்ளி களிலும் நடத்தி, பல லட்சம் மாணவர்களைப் பங்கேற்கச் செய்திட‌முழு வீச்சில் செயலாற்றுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. 

தீர்மானம் எண் 3:

மாணவர்களின் கல்வி உரிமையை மோச மாகப் பாதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கையை மறைமுகமாகப் புகுத்துவதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு இக் கூட்டம் கண்டனத்தைப் பதிவு செய்கிறது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் தமிழ் நாடு அரசு உறுதியாக இருந்திட வேண்டும் என்றும், அதற்கு மாற்றாக உருவாக்கப்படும் மாநில கல்விக் கொள்கையில் சமூகநீதி, பாலியல்நீதி, அறிவியல் மனப்பான்மையுடன் அனைவருக்கும் கல்வி என்ற நிலையை உரு வாக்கவும், கல்வித் துறையில் எந்த வகையிலும் மதவாதச் சக்திகள் நுழைந்துவிடா வண்ணம் எச்சரிக்கையுடன் திட்டம் வகுக்கவும் தமிழ்நாடு அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 4: 

நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி தமிழ்நாடு அரசு, சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன் வரைவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், இரண் டாம் முறையும் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் ஆளுநரின் செயலுக்கு திராவிட மாணவர் கழகம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. எட்டுக் கோடி மக்களின் மன உணர்வை, சட்ட உரிமையை மதிக்காமல், அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொள்ளும் ஆளுநருக்கு உரிய வழிகாட்டுதலை வழங்கி 'நீட்' விலக்கு சட்டத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதலைப் பெற்றுத் தர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இக் கூட்டம் வலியுறுத்துகிறது. அரசியல் சட்ட விரோதமாக நடந்துகொள்ளும் ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 5:

மாநிலப் பல்கலைக் கழகங்களுக்குத் துணைவேந்தரை நியமிக்கும் விவகாரத்தில், அதிகாரத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு தன்னிச்சையாகச் செயல்பட்டு வரும் ஆளுநர் களின் செயல் கூட்டாட்சித் தத்துவத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானதாகும். இந்நிலையில் தமிழ்நாடு அரசே பல்கலைக்கழகத் துணை வேந்தரை நியமிக்கும் வகையில் சட்டம் நிறை வேற்றப்பட்டிருப்பது பறிக்கப்பட்டிருக்கும் உரி மையை மீட்டெடுக்கும் முக்கியமான பணி என்று இக் கூட்டம் கருதுகிறது. அதற்கான சட்டத்தை நிறைவேற்றியுள்ள தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் இக் கூட்டம் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 6:

நீட்டைத் தொடர்ந்து கியூட் என்னும் பெயரால் நுழைவுத் தேர்வை, மத்தியப் பல் கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தி, படிப் படியாக அனைத்து நிலைகளிலும் கொண்டுவர நினைக்கும் ஒன்றிய அரசின் சதித் திட்டத்தை முறியடிக்க தமிழர் தலைவரின் ஆணையேற்று தொடர்ந்து போராடுவது என்று தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் எண் 7:

அ) உக்ரைன்‍- ரஷ்யப் போரின் காரணமாக மருத்துவம் உள்ளிட்ட பல படிப்புகளிலும் பாதிக் கப்பட்டிருக்கும் மாணவர்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசு மேற் கொள்ள வேண்டும் என்றும், அதற்கு ஒன்றிய அரசு எவ்வகையிலும் தடையாக இருக்கக் கூடாது என்றும் இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

ஆ) கால்நடை மருத்துவப் பல்கலைக் கழ கத்தில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சித் தொகையினை, பிற மருத்துவ மாணவர்களுக்கு இணையாக ரூ.25,000ஆக தமிழ்நாடு உயர்த்தித் தர வேண்டும் என்று இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

இ) இரு பாலருக்கும் தனித் தனி வகுப்புகள் என்பது, தொடக்க காலத்தில் பெண்களைக் கல்விக் கூடங்களுக்கு அழைத்துவர‌த் தேவைப்பட்டிருந்தாலும், இன்றைய சூழலில் அந்நிலை அவசியமற்றது என்றும், பாலியல் நீதியும், சமத்துவச் சிந்தனையும் வளர அனைத்துப் பாலரும் இணைந்து பயிலும் முறையே சரியானது என்றும் திராவிட மாணவர் கழகம் கருதுகிறது. எனவே அனைத்துப் பாலரும் இணைந்து பயிலும் கல்விச் சூழலையே தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.

ஈ) அரசு கடலூர் மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டுள்ள‌ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு, பிற அரசு மருத்துவக் கல்லூரிகளைப் போலவே கட்டணத்தை அறிவித்து, அம் மாணவர்களின் கல்வி தடையின்றி தொடர தமிழ்நாடு அரசு உதவிட வேண்டும் என்றும் இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 8: 

திராவிட மாணவர் கழகத்தை வலுப்படுத்தி, புதிய மாணவர்களை இணைக்கும் வகையில், பள்ளி ‍கல்லூரி மாணவர்களிடையே சந்திப்புக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துவது என்றும், அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் திராவிட மாணவர் கழகக் கிளை அமைப்புகளை உருவாக்கிடுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 9:

விடுதலை ஆசிரியர் பணியில் 60 ஆண்டுகள் என்னும் அரிய சாதனையைப் படைத்திட்ட தமிழர் தலைவர் அவர்களுக்கு நம் நன்றிக் கடனைச் செலுத்திடும் வகையில் 60,000 சந்தாக்கள் திரட்டித் தரும் பெரும் பணியில் திராவிட மாணவர் கழகமும் ஈடுபட்டு நம் பங்கை நிறைவு செய்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 10:

அறிவைப் பரப்பி வளர்ந்த நம் இயக்கத்தின் ஏடுகளாம் விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு,The Modern Rationalist, திராவிடப் பொழில், திராவிட நாற்று மின்னிதழ் ஆகியவற்றை வெகு மக்களிடம், குறிப்பாக மாணவர்களிடம் கொண்டு செல்வதை முதன்மைப் பணியாகக் கொள்ள வேண்டுமென திராவிட மாணவர் கழகத் தோழர்களை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 11:

சமூக வலை தளங்களில் தந்தை பெரியார் கருத்துக்களையும், இயக்கச் செயல்பாடுகளையும் மறுக்கப்பட வேண்டியவற்றை மறுக்கும் தகவல்களையும் தவறாது பதிவு செய்யுமாறு கழக மாணவர்களை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 12:

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நடக்கும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்றவற்றில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று கழக  மாணவர்களை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 13:

மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஹிப்பொக்ரெடிக் உறுதிமொழி எடுப்பதற்குப் பதிலாக மஹரிஷி சரக் சாபக் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்ற தேசிய மருத்துவக் கவுன்சிலின் ஆணையைத் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்கவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். நேற்று (30.4.2022) மதுரை மருத்துவக் கல்லூரியில் நடந்திருப்பது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள், தமிழ்நாடுஅரசின் ஒப்புதலின்றி நடப்பதும், ஒன்றிய அரசின் அத்துமீறிய தலையீடும் தடுக்கப்படவேண்டும், தவறியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இக் கூட்டம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.

(இத் தீர்மானத்தை நிறைவேற்றியபின் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வெளிவந்தது. எனவே தீர்மானத்தைத் திருத்தி பின் வரும் வரிகளைச் சேர்த்து தமிழர் தலைவர் அவர்களே முன்மொழிந்தார்கள்.)

சமஸ்கிருத உறுதிமொழி எடுக்கக் காரணமாக இருந்தவர்கள் மீது விளக்கம் கோரப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து, முதல் கட்டமாக மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வரைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்து நடவடிக்கை எடுத்துள்ள தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் இக் கூட்டம் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 14:

கரோனா பெருந்தொற்று முடிந்து மீண்டும் பள்ளிகள் தொடர்ந்து நேரடியாக இயங்கத் தொடங்கியுள்ள சூழலில், மாணவர்கள் - ஆசிரியர் உறவிலும், பள்ளிகளின் அன்றாட நிகழ்வுகளிலும் உளவியல் சிக்கல்கள் எழுவதையும் அக்கறையோடு இக் கூட்டம் கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. மாணவர்களுக்கு உரிய உளவியல் ஆலோசனைகள் வழங்கி நெறிப்படுத்தவும், அதற்குத் தேவையான பயிற்சியையும், விளையாட்டு, கலை நிகழ்வுகள், தனித்திறன் போட்டிகள் மூலம் அவர்களின் பல்துறைத் திறமைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சிகள் மூலமும் இந்நிலை சரியாக்கப்படவேண்டும் என்றும் இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. பள்ளி-கல்லூரி மாணவர்கள் எவ்வித போதைப் பழக்கங்களுக்கும் ஆளாகிவிடாமலும் அவர்களை நெறிப்படுத்துவதும், அதற்குத் தேவையான அளவில் சமூக விரோத சக்திகளின் செயல்பாட்டை காவல்துறை மூலம் கட்டுப்படுத்துவதும் அவசியம் என்றும் இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 15:

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஜாதி - மதவாதச் சிந்தனையையும், அணி திரட்டலையும் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஜாதி அமைப்புகளும், அதன் பின்னணியில் இருக்கும் இந்துத்துவ சக்திகளும் செயலாற்றிக் கொண்டிருப்பது தமிழ்நாட்டுக்கு ஆபத்தை உருவாக்கக் கூடியதாகும். ஜாதிக் கயிறுகள் கட்டுவதில் நடக்கும் பிரச்சினைகளால் ஒரு மாணவர் கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி வருத்தத்திற்கும், ஆழ்ந்த கவனத்திற்கும் உரியதாகும். பள்ளிகளில் ஷாகா, யோகா என்ற பெயர்களில் ஊடுருவ நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்., ஏ.பி.வி.பி. போன்ற மதவெறி அமைப்புகளுக்கும், பல்வேறு பெயர்களில் இயங்கும் அதன் மறைமுக அமைப்புகளுக்கும் இடம்தந்துவிடாமல் இவர்களின் நடவடிக்கை உளவுத்துறை மூலம் கண்காணிக்கப்படவேண்டும். மாணவர்கள் மத்தியில் மதரீதியாக பிரிவினையைத் தூண்டிய பிற மாநில சம்பவங்கள் நமக்குத் தரும் எச்சரிக்கைகளை நாம் ஒதுக்கிவிட இயலாது. சமத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை, அறிவியல், பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கு பள்ளிகளில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். 

தீர்மானம் எண் 16:

உச்சநீதிமன்றத்தாலும், உயர்நீதிமன்றங்களாலும், பல முறை கண்டிக்கப்பட்டும் கூட நடைபாதைக் கோயில்கள் இன்னும் நிறையத் தோன்றுவதும், சிறிய பொம்மைகள் வைக்கப்பட்ட இடங்களில் அவை விரிவாக்கப்பட்டு கோயில்களாக உருவாவதும், அரசுக் கல்வி நிலையங்களிலும், பல்கலைக்கழக வளாகங்களிலும் கோயில்கள் கட்டப்பட முயற்சிகள் எடுக்கப்படுவதும் தடுக்கப்பட வேண்டும். நடைபாதைகளில் கடவுள் பொம்மைகளை வைத்து, அவற்றை வழிபாட்டிடங்களாக மாற்றி மெல்ல மெல்ல மதவெறியாளர்கள் அப் பகுதிகளை ஆக்கிரமிப்பதும், பொது அமைதிக்கு ஆபத்தான சூழலை உருவாக்க முயற்சிப்பதும் கடந்து செல்லக் கூடியவையல்ல. அவற்றை சட்டரீதியாகத் தடுத்திட இருக்கும் வாய்ப்புகளை அரசு பயன்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுத்தல் அவசியம் என்று இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

அனைத்து தீர்மானங்களையும் நிறைவேற்றும் வண்ணம் அனைவரும் பலத்த கரவொலி எழுப்பினர்.

மாநில மாணவர் கழக செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் உரையாற்றினர். பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் வருங்காலத்தில் மாணவர்களாக புதிய செயல்பாடுகளையும் பயிற்சிப் பட்டறைகளை மற்றும் பெரியார் 1000  நடத்துவது தொடர்பாக  புதிய தொழில்நுட்பம் மூலமாக பிரச்சாரத்தை மாணவர்களிடம் கொண்டு செல்லும் திட்டத்தையும் எளிமையாக எடுத்து உரையாற்றினார். 

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பயிற்சி முகாமில் வகுப்புகள் எடுப்பதுபோல் பல வரலாற்று உண்மை செய்திகளை மாணவர்களுக்கு எடுத்து உரையாற்றினார். 

கூட்டத்தில் நிறைவுரையாக மாணவர்களுக்கு வழிகாட்டுதல் உரையாக வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுச்சி உரை ஆற்றினார்.

திருவாரூர் மண்டல மாணவர் கழக செயலாளர் அ.ஜெ.உமாநாத் அனைவருக்கும் நன்றி கூறினார். 

புதிய மாநில,மண்டல பொறுப்பாளர்களை கூட்டத்தில் மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அறிவித்தார். கூட்டம் மதியம் 3.00 மணி அளவில் நிறைவடைந்து மாவட்டந் தோறும் வருகை புரிந்த மாணவர் கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியருடன்  மாவட்ட வாரியாக ஒளிப்படத்தை எடுத்துக் கொண்டனர்.



திங்கள், 4 ஜனவரி, 2021

திராவிட மாணவர் கழக மண்டல புதிய பொறுப்பாளர்கள்

 திராவிட மாணவர் கழக மண்டல புதிய பொறுப்பாளர்கள் 

மண்டலம் பெயர் 
சென்னை வ.வேலவன் 
காஞ்சிபுரம் மோ.பகுத்தறிவாளன் வேலூர் க.வெங்கடேசன் 
தருமபுரி மா.செல்லதுரை 
கடலூர் ஆர்.பி.பண்பாளன் விழுப்புரம் த.பகவான்தாஸ் 
சேலம் இதமிழர் தலைவர் 
ஈரோடு தா.சிவபாரதி 
கோவை மு.ராகுல் 
திருச்சி க .சசிகாந்த் 
அரியலூர் செ.வெற்றிசெல்வன் தஞ்சை ச.சற்குணம் 
திருவாரூர் அ.ஜெ.உமாநாத் புதுக்கோட்டை இரா.குமார் சிவகங்கை அ.பிரவின் முத்துவேல் திண்டுக்கல் வி.சு.பெரியார் மணி மதுரை சு.சித்தார்த் 
நெல்லை அ.வ.சவுந்தரபாண்டியன் 

திராவிட மாணவர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் 
தஞ்சாவூர் 
தலைவர் இரா .கபிலன் 
செயலாளர் ஜெ.மானவீரன் அமைப்பாளர் ரா.மகேந்திரன் 

திருச்சி 
தலைவர் ந.கண்ணன் 
செயலாளர் ஆ . அறிவுசுடர் 
அமைப்பாளர் க.அயாழினி 

பட்டுக்கோட்டை 
தலைவர் சு.ரஞ்சித்குமார் அமைப்பாளர் கே.நாடிமுத்து க.ரூபன் 

திருவாரூர் 
தலைவர் எம் . கோபிநாத் 
செயலாளர் ஏ . அருண்பிரபாகரன் அமைப்பாளர் மு.க.ஹரிணி 

தலைமை நிலையம் , 
திராவிடர் கழகம்

செவ்வாய், 12 மே, 2020

திராவிடமாணவர் கழக மாநில கலந்துரையாடல்




படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், திரை மற்றும் உட்புறம்


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 7 பேர், உரை
#திராவிடமாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக(03.05.2020) நடைபெற்றது.
#தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்துகொண்டு #வாழ்வியல் வழிகாட்டுதல் உரையை சிறப்புரையாற்றினார்
#80 க்கு அதிகமான மாணவர் தோழர்கள் பங்கேற்றார்கள்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், உரை

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

சத்துணவிலும் மதநஞ்சைக் கலக்காதே!

சத்துணவிலும் மதவாத நஞ்சா? மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (சென்னை, 25.2.2020)

அதிமுக அரசின் 'அம்மா' உணவகம் மூடும் நிலையில்  இஸ்கான் மத நஞ்சு உணவு திட்டத்திற்கு உதவியா?

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகத் துணைத் தலைவர் தமிழக அரசுக்கு கேள்வி!

சென்னை,பிப்.25, தமிழகத்தில் அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் என்கிற பெயரில் தனியாருக்கு தாரை வார்ப்பதுடன், இந்துத்துவா மதவாத நஞ்சினையும் புகுத்துவதைக் கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  இன்று (25.2.2020) காலை நடைபெற்றது. திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் வி.தங்கமணி வரவேற்றார். வெங்கடேசன், பகுத்தறிவாளன், பரிதின்,  நதியா, தமிழ்ச்செல்வன், விஸ்வாஸ் பவித்ரா, அறிவழகன், இனநலம், பிரபாகரன், தனுஷ், அறிவரசி, அமரன், புத்தன், கவிஞர் ம.ஜ.சந்தீப், வி.சி.தமிழ்நேசன் வீ.தமிழ்ச்செல்வன் வெ.பெரியார் செல்வன், இரா.ராம்குமார், ப.பெரியார் செல்வம், ராஜசேகர், சசிகுமார், அறிவரசன், அறிவழகன், தொண்டறம், அறிவுமதி, விஜய், பிரவீன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர்  இரா.செந்தூர்பாண்டி, திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் த.யாழ் திலீபன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் எ.சிற்றரசு மற்றும் திராவிட மாணவர் கழகத் தோழர்கள் சென்னை மண்டலம் உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள், மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

'சத்துணவிலும் மதவாத நஞ்சா?' எனும் தலைப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமை வகித்து உரையாற்றினார்.

கண்டன  ஆர்ப்பாட்டத்தில் மாநிலக் கழக  அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்க உரையாற்றினார்.

வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் கண்டன உரையைத் தொடர்ந்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு, அதற்குப் பின்னாலே பச்சைத்தமிழர் காமராசர்,  தொடர்ந்து திராவிட இயக்கங்களால் தொடரப்பட்டு வரும் திட்டம் மதிய உணவுத் திட்டம்.

நீதிக்கட்சி  காலத்தில் சென்னையில் மதிய உணவுத்திட்டம், காமராசர் ஆட்சிக்காலத்திலே மதிய உணவுத்திட்டம், கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிகளில் மதிய உணவு பிள்ளைகளுக்கு கொடுத்து, இலவச சீருடை கொடுத்து, இலவச படிப்பு, இலவச புத்தகம், இலவச சைக்கிள் திட்டம், இன்றைக்கு ஆண்டாண்டு காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட மக்களிடையே இருந்து வரும் பிள்ளைகள் படிக்கக்கூடிய ஒரு நல்ல சூழ்நிலை ஏற்பட்டது.

இப்போது காலை உணவு கொடுப்பதற்காக 'இஸ்கான்' என்று ஒரு நிறுவனம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா  அமைப்பு, பிள்ளைகளுக்கு காலை உணவு கொடுப்பதாக சொல்கிறார்கள்.

காலை உணவுதானே கொடுக்கிறார்கள் ஏன் எதிர்க் கிறீர்கள்? என்ற கேள்வி எழலாம்.

காலை உணவு தாராளமாக கொடுக்கட்டும். ஆனால், அந்த நிறுவனங்களின் இந்துத்துவ கொள்கை - காலை உணவுத்திட்டத்திலே இருக்கிறது.

பூண்டு, வெங்காயம் உணவில் இடம் பெறாது என்று சொல்கிறார்கள்.

பெரும்பாலான பிள்ளைகளின் உணவில் இவ்விரண்டும் உண்டு தானே.

உணவிலே இந்துத்துவா கண்ணோட்டத்தோடு சொல்வது என்பது உள்ளபடியே இந்த உணவுத்திட்டத்தாலே அவர் களுடைய மதவாதத்தை திணிக்கின்ற போக்காகவே கருத வேண்டும்.

வெங்காயம் விலை அதிகமானபோது, நாடாளுமன்றத் திலேயே மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நிதிநிலை அறிக்கையின்போது, நான் வெங்காயம் சாப்பிடும் பரம் பரையில் வரவில்லை என்றார்.

அவர்களின் மத எண்ணத்தை, பார்ப்பனிய சிந்தனையை வெகுமக்கள் மத்தியிலே திணிக்கக்கூடியதாக இருக்கிறது. விஞ்ஞான முலாம் பூசுகிறார்கள். என்ன ஆதாரம் உள்ளது?

காலை உணவு என்று கூறி அதில் தங்கள் இந்துத்துவக் கலாச்சாரத்தைத் திணிக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு நிலம், மின்சாரம், குடிநீர் இனாமாக கொடுக்கிறது.

காலை உணவு என்கிற பெயரில் கார்ப்பரேட் மயமாகிறது என்றுதான் சொல்ல வேண்டும். உலகம் முழுவதும் நிதி திரட்டுகிறார்கள் -  ஆதாயம் இல்லாமல் அவர்கள் இதில் இறங்கவில்லை.

மத்தியில் பாஜக அரசு வந்த உடனே மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்றார்கள். அது பிரச்சினை ஆனது. அவர்களின் இந்துத்துவாத் திட்டத்தையொல்லாம் மக்கள் மத்தியில் திணிக்கிறார்கள். அதனுடைய தொடர்ச்சிதான் காலை உணவுத்திட்டத்தில் வெங்காயம், பூண்டு இல்லை என்கிறார்கள். அதனாலேயே நாங்கள் எதிர்க்கிறோம்.

அம்மா உணவுத் திட்டம் கொண்டு வந்தது அதிமுக அரசு. இப்பொழுது அத்திட்டம்  நசிந்து விட்டது. பெயரளவுக்குத் தான் இருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இலவசம் என்ற பெயரால் மத முக்காடு போட்டு வரும் கலாச்சாரத் திணிப்பு உணவுத் திட்டத்துக்குப் பச்சை கொடிக் காட்டுகிறது அதிமுக அரசு.

கருநாடக மாநிலத்தில்கூட எதிர்ப்பு வெடித்துள்ளது.

இந்த போராட்டம் ஒரு தொடக்கம் என்றார் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ். ஆம் இது வெறும் தொடக்கம்தான். தொடர்ந்து போராடுவோம். இந்துத்துவா திணிப்பு திட்டத்தை திரும்பப் பெறும் வரை போராடுவோம் என்று கண்டன உரையில் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்ட முடிவில் சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர் வ.வேலவன் நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு 25 2 20

திராவிட மாணவர் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்

சென்னை, பிப். 26- சத்துணவிலும் மதவாத நஞ்சா, எனும் தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 25.2.2020 அன்று காலை நடைபெற்றது.

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்  ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேக ரன் தொடக்க உரையாற்றினார். வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரையாற்றினார்கள்.

கண்டன முழக்கமிட்டு ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள்

செந்தூரப்பாண்டியன், யாழ்திலீபன், கா.அமுதரசன், தஞ்சை மான வீரன், துர்காதேவி, விடுதலைஅரசி, தருமபுரி பூபதிராஜா, ஒசூர் க.கா.வெற்றி, உரத்தநாடு முருகேசன், மண்டலக்கோட்டை அரவிந்த், கலையரசன், ஒக்கநாடு மேலையூர் சாமிநாதன், திருவண்ணாமலை ராம்குமார், வடசென்னை வேல வன், எஸ்.தமிழ்செல்வன், செ.பிர வீன், திருவொற்றியூர் இரா.சதீஸ், இ.பவித்ரா, வி.யாழ்ஒளி, விருத்தாச் சலம் அறிவுசெல்வம், தென்சென்னை கு.பா.கவிமலர், தாம்பரம் பரசுரா மன், ஓவியர் சிகரம், யுவராஜ், சட்டக் கல்லூரி மாணவர்கள் க.கோபி, சசி குமார், கவி, தினேஷ், திருச்சி கார்த் திக், பாலாஜி உள்பட மாணவர்கள் பெருந்திரளாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

திராவிடர் கழக பொறுப்பாளர்கள்

கழக துணைப்பொதுச்செயலா ளர் பொறியாளர் ச.இன்பக்கனி, மாநில மகளிரணி செயலாளர் தக டூர் தமிழ்செல்வி, அமைப்புச் செய லாளர் வி.பன்னீர்செல்வம், திரா விடர் வரலாற்று ஆய்வு மய்ய செய லாளர் பேராசிரியர் ந.க.மங்களமுரு கேசன், மண்டல செயலாளர் தே.செ.கோபால், ஒசூர் கண்மணி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், தென்சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டச் செயலா ளர் தி.செ.கணேசன், கும்மிடிப் பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன், ஆவடி மாவட்டச் செயலாளர் க. இளவரசன், அமைப் பாளர் உடுமலை வடிவேல், பெரி யார் சமூகக் காப்பணி மாநில பொறுப்பாளர் சோ.சுரேஷ், தாம்ப ரம் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், சு.மோகன்ராஜ், போரூர் பரசுராமன், இராமேசுவரம் கே.எம்.சிகாமணி, ஊரப்பாக்கம் இரா மண்ணா, சி.சீனிவாசன், பொ.சுமதி, பொய்யாமொழி, கூடுவாஞ்சேரி மா.இராசு, நூர்ஜகான் ராசு, இரா மாபுரம் ஜெனார்த்தனம், ஓவியா அன்புமொழி, மா.குணசேகரன், சோழிங்கநல்லூர் பிசிஜெயராமன், கு.சோமசுந்தரம், க.தமிழினியன், கணேசமூர்த்தி, கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், மு.சேகர், மயிலை பாலு, வி.விக்கி, பிரகாஷ், க.வெற்றி வீரன், ஓவியா, க.தமிழ்செல்வன், பரசுராமன்,  முரசு, பாலு, எண்ணூர் விஜயா மோகன், மணியம்மை, கொடுங்கையூர் கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, பெரியார் களம் இறைவி, பூவை செல்வி, பசும்பொன் செந்தில்குமாரி, தமிழரசி, தென் னரசி, தமிழ்சாக்ரட்டீஸ், பெரியார் மாணாக்கன், க.கலைமணி, வை.கலையரசன், தமிழ்செல்வன், பகுத் தறிவு, சந்திரபாபு, வழக்குரைஞர் பன்னீர்செல்வம், கொரட்டூர் இரா.கோபால், வெ.கார்வேந்தன், முத்தழகு, திருமலை,  திருவண்ணா மலை கவுதமன், கும்மிடிப்பூண்டி செ.உதயக்குமார், அருள், சுகன்ராஜ், இளையராணி, குணசேகரன், பாலு, கஜேந்திரன்,  சோழவரம் சக்ரவர்த்தி, திமுக மாணவரணி விக்னேஷ் உதயன், பாலச்சந்திரன் உள்பட ஏராளமானவர்கள் இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண் டனர்.

- விடுதலை நாளேடு 26.2.20