செவ்வாய், 29 நவம்பர், 2016

தமிழர் தலைவர், ஆசிரியர் பிரச்சார ஊர்தி நிதி வழங்கல்

தென்சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் கழகத் தோழர்கள் ரூ.27,500 நிதியை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர். உடன் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன், மாநில மாணவரணிச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்.
-விடுதலை,29.11.16

திங்கள், 28 நவம்பர், 2016

வேன் நிதி வழங்குதல்.....


தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் செங்குட்டுவன் ரூ.5000/-- நிதியை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் வழங்கினார். உடன் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் மற்றும் தோழர்கள்.
-விடுதலை,26.11.16

வெள்ளி, 25 நவம்பர், 2016

நடக்க இருப்பவை நுங்கம்பாக்கம் எம்.நடராஜன் முதலாண்டு நினைவேந்தல்

நடக்க இருப்பவை

நுங்கம்பாக்கம் எம்.நடராஜன் முதலாண்டு நினைவேந்தல்

26.11.2016 சனிக்கிழமை

சென்னை: மாலை 5 மணி

இடம்: ஓட்டல் ராஜ் பவன், கங்காதீசுவரர் சாலை, புரசைவாக்கம், சென்னை

வரவேற்புரை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்டச் செயலாளர்)

தலைமையுரை: பெ.செல்வராசு (மாநில தி.தொ.க.)

நினைவேந்தல் சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

பாராட்டுரை: இரா. வில்வநாதன் (மாவட்டத் தலைவர்), கோ.வீ.ராகவன் (துணைத் தலைவர்), சி.செங்குட்டுவன் (துணைத் தலைவர்), டி.ஆர்.சேதுராமன் (துணைச் செயலாளர்), க.தாமோதரன் (துணைச் செயலாளர்), நுங்கம்பாக்கம் வெற்றிவீரன், நா.மதிவாணன்,
க.தமிழினியன், துரை.ராவணன்

நன்றியுரை: பத்மாவதி நடராசன்.