செங்குட்டுவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செங்குட்டுவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 ஜூலை, 2023

தென் சென்னை துணைத் தலைவர் சி. செங்குட்டுவன் அவர்களுக்கு பாராட்டு


மன்னார்குடி மாவட்டம் வடுவூரில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் சிலை, சாலை மேம்பாட்டு பணியின் காரணமாக தென்பாதி ஊராட்சி மன்றம் வழங்கிய இடத்தில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு 09.07.2023 அன்று வெகு சிறப்பாக திறக்கப்பட்டது.
சிலை சீரமைப்பு பணி முழுமையையும் தன் சொந்த செலவில் செய்து கொடுத்த தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் துணை தலைவர் சி. செங்குட்டுவன் அவர்களை 14.07.2023ஆம் நாள் மாலை தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பாராட்டி, தலைவர் இரா வில்வநாதன் அவர்கள் பயனடை அணிவித்தார். உடன் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் மற்றும் சி.செங்குட்டுவன் அவர்களின் இணையரும் பங்கேற்றனர்.
விடுதலை நாளேடு, 26.07.2023

செவ்வாய், 6 டிசம்பர், 2022

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் வடுவூர் சி.செங்குட்டுவன் - உமா மகேஸ்வரி குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு நன்கொடை

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் வடுவூர் சி.செங்குட்டுவன் - உமா மகேஸ்வரி குடும்பத்தின் சார்பில் ரூ.25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 29.11.2013).