விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 31 மே, 2024

விடுதலைச் சிறுத்தைகளின் விருதுகள் வழங்கும் விழா (அருள் மொழிக்கு பெரியார் ஒளி விருது)



விடுதலை நாளேடு
Published May 26, 2024

விடுதலைச் சிறுத்தைகளின் விருதுகள் வழங்கும் விழா
எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது
திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழிக்கு ‘பெரியார் ஒளி’ விருது வழங்கல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில் நேற்று (25.5.2024) நடைபெற்றது. இதில் திரைக் கலைஞர் பிரகாஷ்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா மேனாள் மாநிலத் தலைவர் எஸ்.என்.சிக்கந்தர், கல்வெட்டியல் அறிஞர் எ.சுப்பராயலு ஆகியோருக்கு விசிக தலைவர்
தொல். திருமாவளவன் விருதுகளை வழங்கினார். உடன்: விசிக பொதுச் செயலாளர்கள் சிந்தனைச்செல்வன், துரை.ரவிக்குமார், சட்டப் பேரவை உறுப்பினர்கள் எஸ்.எஸ். பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்டோர்.

சென்னை, மே 26 விடுதலைச் சிறுத்தைகள் விருதுகள் வழங்கும் விழா நேற்று (25.5.2024) மாலை சென்னை காமராசர் அரங்கில் நடை பெற்றது. இதில் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழிக்கு பெரியார் ஒளி விருதை எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் வழங்கி சிறப்பித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா – 2024 சென்னை தேனாம்பேட்டை யில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று (25.5.2024) நடைபெற்றது. விழாவுக்கு விசிக தலைவர் மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் வரவேற்புரையாற்றினார். பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் எம்.பி. வாழ்த்துரை வழங்கினார். முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் மு.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமாவளவன் விருதாளர்களின் தகுதியுரையை வாசித்தார்.
7 பேருக்கு விருது: இதையடுத்து, நடப்பாண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது – நடிகர் பிரகாஷ்ராஜ், ‘மார்க்ஸ் மாமணி விருது – இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்துக்கு ‘காமராசர் கதிர்’, திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் அருள் மொழிக்கு ‘பெரியார் ஒளி, சமூக செயற்பாட்டாளர் பேராசிரியர் ராஜ் கவுதமனுக்கு ‘அயோத்திதாசர் ஆதவன்’, வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா மேனாள் மாநிலத் தலைவர் எஸ்.என்.சிக்கந்தருக்கு ‘காயிதேமில்லத் பிறை’, கல்வெட்டியலறிஞர் எ.சுப்பராயலுவுக்கு ‘செம்மொழி ஞாயிறு’ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை விசிக தலைவர் தொல். திருமாவளவன் வழங்கினார். விருதாளர் ராஜ்கவுதமன் உடல்நிலை காரணமாக வர இயலாத தால் அவரது உறவினர் ஜெகநாதன் விருதை பெற்றுக் கொண்டார். இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்தின் மகள் பேராயர் கதிரொளி மாணிக்கம், சமூக செயற்பாட்டாளர் பேராசிரியர் ராஜ்கவுதமனின் உறவினர் ஜெகநாதன் ஆகியோர் விழாவில் பேசினர். இறுதியாக விசிக தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் பேருரை ஆற்றினார். விழாவில் விசிக துணை பொதுச்செய லாளர் கள் வன்னியரசு, ஆதவ் அர்ஜுன், தலைமை நிலையச் செயலாளர்கள் பால சிங்கம், தகடூர் தமிழ்ச் செல்வன், மாநில அமைப்புச் செயலாளர் லயன் ஆர்.பன்னீர்தாஸ், 190-ஆவது வட்டச் செய லாளர் சிட்டு (எ) ஆமோஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வியாழன், 9 மார்ச், 2023

தமிழர் தலைவருக்கு விருது, சென்னை பெரியார் திடலில் காணொலியில் தோழர்கள் பங்கேற்பு

 

சென்னை பெரியார் திடலில் காணொலியில் தோழர்கள் பங்கேற்பு

சென்னை, செப். 27- கனடா நாட் டின் டொராண்டோ நகரில் சமூகநீதிக்கான 3ஆவது பன் னாட்டு மனிதநேய மாநாட்டில் காணொலி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரை ஆற்றினார்கள்.  

இரண்டாம் நாளில் (25.9.2022) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்க ளுக்கு கனடா மனிதநேய அமைப்பின் சார்பில்  2022ஆம் ஆண்டுக்கான ‘மனிதநேயர் சாதனை விருது’ (2022 Humanist Achievement Award) வழங் கப்பட்டது.

கனடா மனிதநேயர் அமைப்பின் (Humanist, Canada) சார்பில் 2022ஆம் ஆண் டுக்கான “மனிதநேயர் சாதனை விருதினை” (2022 Humanist Achievement Award) மார்ட் டின் ஃபிளிர்த் வழங்கினார். திராவிடர் கழகப்பொருளாளர் வீ.குமரேசன்அமெரிக்கா பெரியார் பன்னாட்டு மய்ய பொருளாளர் அருள்செல்வி பாலகுரு,  ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அமெரிக்கா பெரியார் பன் னாட்டு மய்யத்தின்  இயக்குநர் மருத்துவர் சிகாகோ சோம.இளங்கோவன், முனைவர் கண்ணபிரான்  ரவிசங்கர் மற் றும் மாநாட்டில் பங்குபெற்ற பல்வேறு அமைப்புகளின் பேரா ளர்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்தனர். 

கனடா மாநாட்டு அரங்கி லும், சென்னை பெரியார் திடலில் காணொலியிலும் கலந்துகொண்ட தோழர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி, தந்தைபெரியார் வாழ்க, அன்னை மணியம்மையார் வாழ்க, தமிழர் தலைவர் வாழ்க என முழக்கமிட்டனர்.

சென்னை பெரியார் திட லில் காணொலியில் விருதைப் பெற்றுக்கொண்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரை யாற்றினார்.

விருதினைப் பெற்றுக் கொண்ட தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் மோகனா அம்மையாருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன், துணைப்பொதுச்செயலா ளர் பொறியாளர் ச.இன்பக் கனி,  சி.வெற்றிசெல்வி உள் ளிட்ட மகளிர் அணியினர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் வர லாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுரு கேசன்,மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி, மகளிர் பாசறை த.மரகதமணி, ஆடிட் டர் இராமச்சந்திரன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், சென்னை மண்டல செயலாளர் தே.செ. கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கோ.வீ. ராகவன், செங்குட்டுவன், அரும்பாக்கம் சா.தாமோதரன், தமிழ்செல்வன், வடசென்னை மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், செயலாளர் தி.செ.கணேசன், அமைப்பாளர் புரசை அன்புசெல்வன், ஆவடி மாவட்ட செயலாளர் க.இள வரசன், அமைப்பாளர் உடு மலை வடிவேல், இளைஞரணி பொழிசை கண்ணன், சோ.சுரேஷ், தளபதி பாண்டியன், க.கலை மணி, கார்வேந்தன், சைதை தென்றல், விழிகள் வேணு கோபால், பெரியார் நூலக வாசகர் வட்டம் ஜனார்த்தனம், தென்சென்னை பகுத்தறிவா ளர் கழகம் மாணிக்கம், ச.இராஜசேகரன், வெ.ஞானசேக ரன், வழக்குரைஞர் தமிழ்செல் வன் உள்பட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

விருது பெற்றதைப் பாராட்டி கழகத் துணைப் பொதுச் செய லாளர் பொறியாளர் ச.இன்பக் கனி, சென்னை மண்டல கழக செயலாளர் கொடுங்கையூர் கோபால், தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன் ஆகியோர் தலா ரூ. 1000 (ஆயிரம்) நன்கொடை வழங் கினர்.


 

சனி, 12 பிப்ரவரி, 2022

கோட்சே - ஆப்தே பெயரில் பாரத ரத்னா விருதா? திராவிடர் கழக ஆர்ப்பாட்டத்தில் உரை

சனி, 17 ஆகஸ்ட், 2019

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற தமிழாற்றுப்படை விருதுகள் செங்கை பூ.சுந்தரத்திற்கு "பெரியார் விருது" வழங்கி சிறப்பிப்பு


செங்கற்பட்டு, ஆக. 17- தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் காஞ்சிபுரம் - செங்கற்பட்டு மாவட்டங்கள் வழங்கும் தமிழ்சான்றோர்களுக்கு தமிழாற்றுப்படை விருதுகள் வழங்கும் விழா 15.8.2019 அன்று 11 மணிக்கு செங்கற்பட்டில் புத்தக அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்திய - ரஷ்ய கலாச்சார நட்புறவு கழகத்தின் பொது செயலாளர் ப.தங்கப்பன் (அய்ஆர்சியு எப்எஸ்) 27 விருதாளர்களுக்கு விருது வழங்கினார். ஓவியக்கவி நா.வீரமணி அவர் கள் தலைமையில் விருது பெற்றவர்கள்.
1) காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் செங்கை பூ.சுந்தரம் - பெரியார்  விருது
2) குரு.சம்பந்தம் - தொல்காப்பியர் விருது
3) ம.ச.முனுசாமி - அவ்வையார் விருது
4) கோ.வெள்ளைச்சாமி - வள்ளலார் விருது
5) வெற்றிக்கண்ணன் - அண்ணா விருது
6) இ.மணிவாசகன் - பாரதிதாசன் விருது
7) நாகை மனோகரன் - திருமூலர் விருது
8) த.கு.கருணாநிதி - கலைஞர் விருது
9) அமுதகீதன் - மறைமலை அடிகள் விருது
10) கோஸ்வா சாம்டேனியல் - கால்டுவெல் விருது
11) பாரதி ஜிப்ரான் - புதுமைப்பித்தன் விருது
12) சா.கா.பாரதிராஜா - இளங்கோவடிகள் விருது
13) தோ.ருக்மாங்கதன் - பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் விருது
14) மல்லை தமிழச்சி - ஜெயகாந்தன் விருது
15) தயானி அன்பு - ஆண்டாள் விருது
16) கோ.செழியன் - கபிலர் விருது
17) பேராசிரியர் கிள்ளிவளவன் - பாரதியார் விருது
18) இராம.மாணிக்கம் - அப்பர் விருது
19) சு.பழனிச்சாமி - கம்பர் விருது
20) அசோகன் - ஜெயங்கொண்டார் விருது
21) உமர்தாசன் - அப்துல் ரகுமான் விருது
22) முத்து கிருட்டிணன் - கண்ணதாசன் விருது
23) நா.மணிமாறன் - வைரமுத்து விருது
24) சிவக்குமார் - வைரமுத்து விருது
25) செந்தமிழ் - வைரமுத்து விருது
26) வல்லம் சோமு - வைரமுத்து விருது
27) சந்திரசேகர் - உ.வே.சா. விருது
கு.ராஜா, அ.அசோக் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். பிரவீன், மோகன், முத்துகிருட்டிணன், மா.பாலகிருட்டிணன், சுனில்குமார், எழிலரசன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
- விடுதலை நாளேடு, 17. 8 .19