ஞாயிறு, 25 ஜூலை, 2021

சென்னை மண்டலக் கலந்துரையாடலில் தீர்மானங்கள் நிறைவேற்றம்!

 நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தந்தை பெரியார் பிறந்தநாள் சுவரெழுத்துப் பிரச்சாரம்!

கழகக் கொடிகள் ஏற்றம்பெரியார் பிஞ்சு சந்தாக்கள் சேர்ப்பு!

சென்னை மண்டலக் கலந்துரையாடலில் தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னைஜூலை 23 தந்தை பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடுவதைத் திட்டமிடுவதற்காக சென்னை மண் டலக் கழகத்தின் சார்பில் கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றதுஇதில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை வழங்கினார்.

தந்தை பெரியாரின் 143 ஆம் ஆண்டு பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவதற்காக சென்னை மண் டலத்தின் சார்பில் 18.7.2021, ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 6 மணிக்கு ஒரு கலந்துரையாடல் காணொலிக் கூட் டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுகுறித்த நேரத்தில் நிகழ்ச்சி தொடங் கியதுஆவடி மாவட்டத்தின் அமைப் பாளர் உடுமலை வடிவேல் கடவுள் மறுப்பும்இணைப்புரையும் வழங்கி னார்.

அதைத் தொடர்ந்து சென்னை மண்டலச் செயலாளர் தே.செ.கோபால் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார்பின்னர் மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் நோக் கவுரையாக அறிவாசான் தந்தை பெரியாரின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடவும்கழகத்தின் ஆக்கப் பணிகள் மேற்கொள்வது குறித்தும் பேசி தொடக்கவுரையை நிறைவு செய்தார்.

கழகத்தின் துணைப் பொதுச்செய லாளர் இன்பக்கனிமாநில மகளி ரணிப் பாசறையின் அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனிசெய லாளர் வழக்குரைஞர் பா.மணியம்மைமண்டலமாவட்டத் தலைவர்கள்செயலாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்துதந்தை பெரியாரின் பிறந்த நாளை கோலாகலமாகக் கொண் டாடும் வழிமுறைகள் பற்றிய தங்களின் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண் டனர்.

இறுதியில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார்.

அவர் தமது உரையில்இந்தியா முழுமையும் தற்போது தந்தை பெரி யாரின் தேவையை உணர்ந்திருக்கும் இந்த சூழலில்வருகிற தந்தை பெரி யாரின் 143 ஆம் பிறந்தநாளை கடந்த ஆண்டைவிடவும் மிகச்சிறப்பாகக் கொண்டாட.வேண்டும் என்று குறிப் பிட்டார்.

நிகழ்வில் இளைஞரணிமாணவர் கழகம்மகளிர் பாசறை,  தொழிலாள ரணிபகுத்தறிவாளர் கழகம் உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் கலந்துகொண்டனர்.இறுதியாக மாநில மாணவர் கழகச் செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார் நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.

முன்னதாக சென்னை மண்டலத்தி லுள்ள ஏழு மாவட்டங்களில் நூற்றுக் கும் மேற்பட்ட இடங்களில் சுவரெழுத்து எழுவதென்றும்ஒவ்வொரு மாவட் டத்தின் சார்பிலும் 100 பெரியார் பிஞ்சு சந்தாக்களை பெற்று தருவதென்றும்தமிழ்நாடு முழுவதிலுமுள்ள தந்தை பெரியாரின் சிலைகளை மூடியுள்ள கூண்டுகளை அகற்ற தமிழ்நாடு அர சுக்கு வேண்டுகோள் விடுப்பதென்றும் மூன்று தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

வியாழன், 22 ஜூலை, 2021

நலம் விசாரிப்பு - நன்கொடை

 

சுயமரியாதைச் சுடரொளிகள் மேனாள் மேலத் தஞ்சை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் குடந்தை எம்.எல்.பத்மாவதி - ராமமூர்த்தியின் தங்கை -  தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவர் மயிலை டி.ஆர்.சேதுராமன் அவர்களின் துணைவியார் டி.எஸ்பிரேமா சிறிது காலமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்தகவல் அறிந்து அவரை நேரில் சென்று தென் சென்னை கழக பொறுப்பாளர்கள் உடல் நலம் விசாரித்தனர்.

டி.ஆர்.சேதுராமன் - டி.எஸ்பிரேமா ஆகியோர் தங்களது 49ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு  (15.7.2021)  நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000/- த்தை நன்கொடையாக தென் சென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களிடம் வழங்கினர்.

செவ்வாய், 6 ஜூலை, 2021

பணி ஓய்வு பாராட்டு - ‘வாழ்வியல் சிந்தனைகள்' நூல் வழங்கல்


கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கத் துணைத் தலைவர்  கோ.குமாரி 38 ஆண்டுகள் மறைமலை நகர் 'கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புரோ டக்ட்'   தொழிற்சாலையில் பணியாற்றி 12.6.2021ஆம் நாள் பணி ஓய்வு பெற்றார். 

பணி ஓய்வு பாராட்டு நிகழ்ச்சி 12.6.2021 பிற்பகல் 3.00 மணி அளவில் தொழிற்சாலை வளாகத்தில் தொழிற்சாலை மேலாளர் எ.பாலமுருகன் தலை மையில் நடைபெற்றது. உயர்நிலை அலுவலர்கள் காணொலி வாயிலாக கலந்துகொண்டு பாராட் டினர். தொழிற்சங்கம் சார்பில் கோ.குமாரியை பாராட்டி சால்வை அணிவித்து கேடயம் வழங்கப் பட்டது.  சங்க தலைவர் த.ரமேஷ், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி,  பி.தங்கமணி ஆகியோர் சிறப்பு செய்தனர். தொழிற்சாலை அலுவலர்கள் மற்றும் சாரா லீ டிடிகே தொழிலாளர் நல சங்க பொறுப் பாளர்களும் தொழிலாளர்களும் கலந்துகொண்டு சிறப்பு செய்து பாராட்டி வழியனுப்பிவைத்தனர். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 'வாழ் வியல் சிந்தனைகள்' நூல் வழங்கப்பட்டது.

கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதிக்கு பணி ஓய்வு பாராட்டு


கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கச்  செயலாளரும் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக செயலாளருமான செ..பார்த்தசாரதி அவர்கள் 37 ஆண்டுகள் மறைமலை நகர் 'கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புரோடக்ட்'   தொழிற் சாலையில் பணி யாற்றி 05.06.2021ஆம் நாள் பணி ஓய்வு பெற்றார்பணி ஓய்வு பாராட்டு நிகழ்ச்சி 05.06.2021 பிற்பகல் 3.00 மணி அளவில் தொழிற்சாலை வளாகத்தில் தொழிற்சாலை மேலாளர் பால முருகன் தலைமையில் நடைபெற்றதுதொழிற்சங்கம் சார்பில் செயலாளர் செ.பார்த்தசாரதியை பாராட்டி பயனாடை அணிவித்து கேடயம் வழங்கப்

பட்டது.  சங்க தலைவர் .ரமேஷ்,, பொருளாளர் கா.நாகராஜ்துணைத்  தலைவர் கோ.குமாரிதுணைச் செயலாளர் .கருணாநிதிபி.தங்கமணி ஆகியோர் சிறப்பு செய்தனர்தொழிற்சாலை அலுவ

லர்கள் மற்றும் சாரா லீ டிடிகே தொழிலாளர் நல சங்க பொறுப்பாளர்களும் தொழிலாளர்

களும் கலந்து கொண்டு சிறப்பு செய்து பாராட்டி வழியனுப்பி வைத்தனர்.