ஆதித்தனார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆதித்தனார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 செப்டம்பர், 2026

தினத்தந்தி' நாளிதழின் நிறுவனர் சி.பா. ஆதித்தனாரின் 122ஆம் பிறந்த நாள் திராவிடர் கழகத்தின் சார்பில் சிலைக்கு மாலை அணிவிப்பு


திராவிடர் கழகம்

'தினத்தந்தி' நாளிதழின் நிறுவனரும், தமிழ்நாடு சட்டப் பேரவையின் மேனாள் தலைவருமான சி.பா. ஆதித்தனார் அவர்களின் 122ஆம் பிறந்த நாளான இன்று (27.9.2026) காலை 11 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு, சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த சி.பா. ஆதித்தனார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், தென் சென்னை மாவட்டக் கழகத் தலைவர் இரா. வில்வநாதன், துறையூர் சிவா, க.கலைமணி, மகேஷ், நிலவன், யுகேஷ், முரளி, பத்மநாதன் மற்றும் தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

- விடுதலை நாளேடு,27.09.26

வியாழன், 3 அக்டோபர், 2024

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ‘தமிழன் கால்வாய்‘ என்று அழைத்தவர் ஆதித்தனார்!


விடுதலை நாளேடு
Published September 27, 2024

அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதே வரலாற்று நினைவுச் சின்னமாக இருக்கும் ஆதித்தனாருக்கு!
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்து

சென்னை, செப்.27 சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ‘தமிழன் கால்வாய்‘ என்று அழைத்தவர் ஆதித்தனார்! அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதே ஆதித்தனாருக்கு வரலாற்று நினைவுச் சின்னமாக இருக்கும் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சி.பா.ஆதித்தனாரின் 120 ஆவது பிறந்த நாளான இன்று (27.9.2024) சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:

ஆதித்தனாரின் மாமனார் ஓ.இராமசாமி
மதிக்கத்தக்க சாதனையாளர் அய்யா ஆதித்தனார் அவர்கள். தந்தை பெரியார் அவர்களுக்கும், ஆதித்த னார் அவர்களுக்கும் மிகப்பெரிய அளவிற்கு நெருக்கம் உண்டு. அதுமட்டுமல்ல, சுயமரியாதை இயக்கத்தி னுடைய நூற்றாண்டு இந்த ஆண்டு. மலேயாவிலும், சிங்கப்பூரிலும் சுயமரியாதை இயக்க நிகழ்வுகளை தந்தை பெரியார் அவர்களை அழைத்து, சிறப்பாக நடத்தியவர் ஆதித்தனார் அவர்களுடைய மாமனார் திரு.ஓ.இராமசாமி அவர்களாவார்கள்.
அப்படி அந்தக் காலத்திலேயே தந்தை பெரியார் அவர்களால் ஈர்க்கப்பட்டு, தமிழ்நாட்டிற்கு வந்த பிறகும் கூட, தந்தை பெரியார் – ஆதித்தனார் உறவு என்பது, பக்கத்து வீட்டு உறவைவிட தாண்டிய ஒன்றாகும்.
கொள்கையால், தமிழின உணர்வால் அவர்கள் இணைக்கப்பட்டவர்கள் – அப்படிப்பட்டவருடைய உணர்வு – தமிழ்நாட்டினுடைய உரிமைகளுக்காக – ஆதித்தனாருடைய போராட்டங்கள் மறக்கப்பட முடியாதவை.

‘‘தமிழன் கால்வாய்’’ என்று அழைத்தவர்
குறிப்பாக, ரூ.2000 கோடிகளுக்கு மேல் செலவழிக்கப்பட்டு, பிறகு அது இராமர் சேது பாலம் என்று போலித்தனமாகச் சொல்லி, நிறுத்தி வைக்கப்பட்ட நிலை இப்போது! அந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை, ‘‘தமிழன் கால்வாய்’’ என்று அழைத்த பெருமை, ஆதித்தனார் அவர்களுக்கே உண்டு.
அந்தத் ‘‘தமிழன் கால்வாய்’’ மீண்டும் தொடங்கப்பட வேண்டும். அந்தத் திட்டம் நிறைவடைவதற்கு இன்னும் 23 கிலோ மீட்டர்தான் மீதம் உள்ளது.

புதன், 27 செப்டம்பர், 2023

சி.பா. ஆதித்தனாரின் 119-ஆவது பிறந்த நாள் திராவிடர் கழகம் சார்பில் சிலைக்கு மாலை அணிவிப்பு


17

'தினத்தந்தி', நாளிதழின் நிறுவனர், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மேனாள் தலைவர் சி.பா. ஆதித்தனார் அவர்களின் 119ஆவது பிறந்த நாளான  இன்று (27.9.2023) சென்னை எழும்பூரில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு, சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.  இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர்கள் ச. இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், ஆவடி மாவட்ட கழகத் தோழர்கள் வஜ்ஜிரவேல், சுந்தரராஜன், உடுமலை வடிவேல், க.கலைமணி, மகேஷ், யுகேஷ், சதீஷ் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

செவ்வாய், 27 செப்டம்பர், 2022

சி.பா.ஆதித்தனாரின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாள்! சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை


சென்னை, செப்.27 ‘தினத்தந்தி' நாளிதழின் நிறுவநரும் - தமிழ்நாடு மேனாள் அமைச்சருமான சி.பா.ஆதித்தனார் அவர்களின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (27.9.2022) காலை எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகம் சார்பில் மலர்மாலை அணிவித்தும், அவரது படத்திற்கு மலர் தூவியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி, துணைத் தலைவர் சா.தாமோதரன், அய்ஸ்அவுஸ் அப்துல்லா,  

வே.சிறீதர், பா.சிவகுமார், க.கலைமணி, முத்துலட்சுமி, அன்பரசன், அருள், உடுமலை வடிவேல், மகேஷ், கணேஷ் மற்றும் தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

வெள்ளி, 1 ஜூலை, 2022

சி.பா.ஆதித்தனாரின் 41ஆவது நினைவுநாள்: சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை


தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் மேனாள் சட்டப்பேரவைத் தலைவர் சி.பா.ஆதித்தனாரின் 41ஆவது நினைவுநாளான நேற்று (24.5.2022) திராவிடர் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல கழக செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட கழக துணைத் தலைவர் கி.இராமலிங்கம், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, வடசென்னை மாவட்ட கழக அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன்,  புகைப்பட கலைஞர் பா.சிவகுமார், த.மரகதமணி, மு.பவானி, அன்புச்செல்வி, சந்திரசேகரன்