தமிழகக் குடியரசு கட்சியின் சீரிய தலைவரும், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் கொள்கை களிடத்தில் அழுத்தமான பற்று கொண்டவரும், புத்த மார்க்கத்தை வாழ்வியலாகக் கொண்டவரும் ‘சொல்லின் செல்வர்' என்ற அடைமொழிக்குச் சொந்தக் காரரும், மக்கள் பிரச்சினையில் முன்னின்று போராடக் கூடியவருமான மானமிகு சக்திதாசன் (வயது 92) மறைவு செய்தி அறிந்து வருந்துகிறோம்.

அவரின் அளப்பரும் பொதுத் தொண்டுக்கு வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம்.

குடும்பத்தினருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் ஆறு தலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

10.12.2020

கழகத் துணைத் தலைவர் மரியாதை

சென்னை சேத்துப்பட்டில் உள்ள சக்திதாசன் இல்லத்திற்கு இன்று (11.12.2020) காலை சென்று கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மறைவுற்ற சக்திதாசன் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார். மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென் சென்னை மாவட்ட துணை செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன் உடனிருந்தனர்.