செவ்வாய், 28 ஜனவரி, 2020

சோழிங்கநல்லூர் கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

கிராமம்தோறும் கழக பிரச்சார கூட்டங்கள்

சோழிங்கநல்லூர் கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

சோழிங்கநல்லூர், ஜன. 20- சோழிங்க நல்லூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், மாவட்ட செயலாளர் விடுதலை நகர் பி.சி.ஜெயராமன் ஆகியோர் முன்னி லையில் மிக சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கத்தில் தாம்பரம் மாவட்ட துணைத் தலைவர் கு.ஆறுமுகம் அவர் களின் வாழ்விணையர் ஆ.மல் லிகா என்கிற சந்திரா அவர்களின் மறைவையொட்டி அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து மகளிர் அணி தோழர் ஜெ.தேவி சக்திவேல் வாழ்விணை யர்களின் அன்பு மகன் பொற்ச்செழியன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, விடுதலை சந்தா வழங் குதல்,தந்தை பெரியார் பிறந்தநாள் கூட்டங்கள் நடத்துவது, ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் கூட்டங்கள் நடத்துவது, கிராமம் தோறும் கழக பிரச்சார கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமையுரையில் கழகத்தின் வரலாறு, பார்ப்பனர்கள் தொல்லைகள் எதிர்ப்புகள் (பார்ப்பனர் கொடுக்குகளை தந்தை பெரியார் முறியடித்த விதம்) தந்தை பெரியார் அவர் களின் உழைப்பு, ஆசிரியர் அவர் களின் தற்போதைய கடுமையான உழைப்பு, எதிர் காலத்தில் ஏற்படும் இடர்பாடுகள், ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா இயக்கத்தால் ஏற்படும் தொல்லைகள், மனுதர்ம சாஸ் திரத்தினால் ஏற்படும் சங்கடங்கள், தந்தை பெரியார் அவர்களுக்கு கூட்டங்களில் ஏற்பட்ட அவமானங்கள் அதனால் திராவிட தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்ட வளர்ச்சி மாற்றங்கள், அறிவியல் விஞ்ஞானம் விழிப்புணர்வு ஆகி யவைகளை நம் சமூகம் பெற்று குறிப்பாக நம் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறி நம் பிள்ளைகள் மூலம் பிரச்சாரம் செய்து நம் பிள்ளைகளையும் இந்த சமூகத்தையும் காப்பாற்றுவோம் என்று கூறி தொடக்க உரையை மிக நேர்த் தியாக முடித்தார்.

பங்கேற்றோர்

மாநில அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாநில பகுத்தறி வாளர் கழக தலைவர்  அ.த. சண்முக சுந்தரம், சென்னை மண்டல தலைவர் தி.இரா.இரத்தினசாமி, சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், தாம்பரம் மாவட்ட செயலாளர். கோ.நாத்தி கன், சீ.லட்சுமிபதி, குழ.செல்வராஜ், விழுப்புரம் மண்டல செயலாளர், விஜய்ஆனந்த், மடிப்பாக்கம். பாண்டு ,நடராசன், அப்துல் சத்தார், நித்யானந்தம், நி.அனுசா, ந.குண சேகரன், பாக்கிய லட்சுமி, ம.நந்தினி, ஜெ.குமார், பொழிச் சலூர் வி.சரவணன், ஜெ.தேவி, ம.சக்தி வேல், வேலு கோபாலகிருஷ்ணன், வே.மணிகண்டன், ம.சுமதி, அருணா, த.யாழ்திலீபன், இராமநாததிலகம், மதிவதனி, கனிமொழி, தரணி, ஆர்.விஜயா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலந்துகொண்ட அனை வருக்கும் மதிய உணவாக ஆட் டுக்கறி பிரியாணி, வறுத்த மீன், சிக்கன் 65, அழித்த முட்டை, கேரட், வெள் ளரிக்காய், வெங்காயம், ஆகியவை கலந்த தயிர் பச்சடி, ரவா கேசரி, மற்றும் ரசம் சோறு ஆகியவை வழங்கி திக்கு முக்காட வைத்தார் 82வயதான இளைஞர் சுறுசுறுப்பின் சிகரம் ஆர்.டி.வீரபத் திரன் அவர்கள். நிகழ்ச்சியை சிறப்பாக அமைத்தனர் ஆர்.டி.வீரபத்திரன் குடும் பத்தினர்.

- விடுதலை நாளேடு 20 1 20

நீட் தேர்வு ஒழிப்பு பரப்புரைக் கூட்டம் வசூல் பணியில் ஒரு நெகிழ்ச்சியான தருணம்!

30.1.2020 அன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொள்ளும் "நீட்" தேர்வு ஒழிப்பு பரப்புரைக் கூட்ட துண்டறிக்கை கொடுத்து வசூல் பணியில் புரசை அன்புச் செல்வன், பசும்பொன்செந்தில் குமாரி, பவானி, வேலவன், விஸ் வாஷ் ஆகியோருடன் நாங் களும் ஈடுபட்டிருந்த போது, ஒரு பாட்டியை சந்தித் தோம். அந்த பாட்டி  ஒரு நாளுக்கு மேல் தாங்காத கீரை வியாபாரம் செய்கிறார். அந்த பாட்டியிடம் பரப்புரை கூட்ட துண்டறிக்கை  கொடுத்தவுடன், அதில், தந்தை பெரியார் படம் இருப்பதை பார்த்த மாத்திரத்தில் எதுவும் யோசிக்காமல் ரூ.50 கொடுத்தவுடன் அதிர்ந்து போனோம்.

திருப்பிகொடுக்க முனைந்தபோது "பெரியாருக்காக மகிழ்ச்சி யோடு கொடுக்கிறேன்" என்று சொன்னதும் வியந்தோம். நன்றி! பாட்டி அவ்வளவுதான் எங்களால் சொல்லமுடிந்தது.

அய்யாவே உங்கள் பணி மகத்தானது!

இடம்: சென்னை, கலைஞர் கருணாநிதி சாலை, எம்.ஜி.ஆர் நகர் (சந்தை) மார்கெட்

செய்தி: கழகத் தோழர் அரும்பாக்கம்  தாமோதரன்

- விடுதலை நாளேடு 28 1 20

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் மயிலாப்பூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாவட்ட தலைவர் வில்வநாதன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. (16.01.2020) தென் சென்னை மாவட்ட துணை செயலாளர் டி.ஆர். சேதுராமன், இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, பொறியாளர் ஈ. குமார், மு. சண்முகப்பிரியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

- விடுதலை நாளேடு 17 1 20

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 16.01.2020 முற்பகல் 9.00மணி அளவில் சென்னை மாங்காட்டில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது,  பூவை பகுதி தலைவர் பெரியார் மாணாக்கன், க.தமிழ்ச்செல்வன், பூவை மணிமாறன், பகுத்தறிவாளர் கழக மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- விடுதலை நாளேடு 19 1 20

தென்சென்னையில் பொங்கல் விழா

தமிழ்ப் புத்தண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு 15.01.2020 காலை 10.45 மணி அளவில் தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தலைவர் இரா. வில்வநாதன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு அனனவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. தென் சென்னை மாவட்ட செயலாளர்  செ.ர.பார்த்தசாரதி, அமைப்பாளர் மு.ந. மதியழகன், துணைத்தலைவர்கள் சி. செங்குட்டுவன், டி.ஆர். சேதுராமன், துணைச் செயலாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன் , க. தமிழ்ச்செல்வன், ஆயிரம்விளக்கு மு.சேகர்,  பூந்தமல்லி மணிமாறன் மற்றும் இளைஞரணி செயலாளர் ந.மணித்துரை, மு. சண்முகப் பிரியன், ஈ.குமார்,  மந்தைவெளி சிவகுமார் பிடிசி.இராஜேந்திரன், அரும்பாக்கம் எம்.பிரகாசம் ஆகியோரும் பங்கேற்றனர்.

- விடுதலை நாளேடு 19 1 20

வெள்ளி, 10 ஜனவரி, 2020

பிறந்த நாள் நன்கொடை

சைதை கே..வாசுதேவன் அவர்கள் தனது பிறந்தநாள்  (வயது 57)  மகிழ்வாக 07.01.2020 அன்று  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்துகளைப் பெற்று விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 1000 வழங்கினார்.

- விடுதலை நாளேடு, 8.1.20

நாடெங்கும் தந்தை பெரியார் நினைவுநாள் நிகழ்வுகள் (24.12.2019)

- விடுதலை நாளேடு 7.1.20

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

கு.அய்யாத்துரை சந்தா வழங்கல்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் கு.அய்யாத்துரை  10 அரையாண்டு சந்தாக்களை வழங்கினார். (சென்னை 4.1.2020)
- விடுதலை நாளேடு,5.1.2020

வியாழன், 2 ஜனவரி, 2020

நீதிபதி மோகன் மறைவு சமூக நீதிக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு : தமிழர் தலைவர்

சென்னை, டிச.28, உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.மோகன் நேற்று (27.12.2019) மாலை மறைவுற்றார். திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (28.12.2019) காலை  7.40 மணிக்கு  சென்னை இராஜாஅண்ணாமலைபுரத் தில் அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து  மரியாதை செலுத்தினார். அவர் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் கூறியதாவது:

மாண்பமை நீதிபதியார் தலைசிறந்த மனிதநேயராக, சீரிய பகுத்தறிவுவாதி யாக  வாழ்ந்த  உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜஸ்டிஸ் மோகன் அவர்கள் ஆவார்கள். தந்தைபெரியார் அவர்களு டைய இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் தொடர்பு கொண்டிருந்தவர். அதன்மூல மாக தந்தைபெரியார் அவர்களுடைய பற்றுக்கு ஆளானவர். அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், முதல்வர் காம ராஜர்  போன்ற பெருந்தலைவர்களெல் லாம் மதிக்கக்கூடிய அளவிற்கு அவர் தன்னுடைய உழைப்பால் உயர்ந்தவர்.

சட்டக்கல்லூரியிலே எங்களைப் போன்றவர்கள் படித்தபோது, எங்க ளுக்கு ஆசிரியராக இருந்தவர். பிறகு, எப்போதும் இறுதியில் மறைகின்ற வரை யில் எங்களுக்கு வழிகாட்டியாகவும், நல்ல ஆலோசகராகவும் என்றைக்கும் இருந்தார்கள். அவர்களுடைய பண்பு நலன் என்பது மிகவும் தெளிவானது. அந்த வகையில் அவருடைய இழப்பு என்பது, அவருடைய தீர்ப்புகள் எல்லாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப் புகள் என்கிற காரணத்தால், நீதித் துறைக்கும் மட்டுமல்ல அந்தப் பேரி ழப்பு; மனிதநேயத்துக்கு ஏற்பட்ட, சமூக நீதிக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு. என்றாலும், நாம் இயற்கையை வெல்ல இயலவில்லை என்ற காரணத் தால், ஆறுதலடையவேண்டியது பகுத் தறிவா ளர்களது கடமை. எனவே, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவர் களுக்கு வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில்  துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், சட்டத்துறை தலைவர் த. வீரசேகரன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் த. யாழ்திலீபன், தென் சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மணிதுரை, அமைப்பாளர் சிவசீலன், மந்தைவெளி சண்முகப்பிரியன், பா. சிவகுமார், தேனாம் பேட்டை பாஸ்கர் மற்றும் தோழர்கள் உடன் சென்றனர்.

ஆசிரியர் அறிக்கை

அந்தோ, ஜஸ்டீஸ் எஸ்.மோகன் மறைந்தாரே!

தமிழ்நாட்டின் தலைசிறந்த சட்டநிபுணர்களில் ஒருவரும், தந்தை பெரியார் அவர்களின் சமூகத் தொண்டால் ஈர்க்கப் பட்டவரும், சீரிய பண்பாள ருமான நீதியரசர் ஜஸ்டீஸ் எஸ்.மோகன் (வயது 90) இன்று (27.12.2019) மறைந்தார் என்ற செய்தியை தொலைக்காட்சி களின் மூலம் அறிந்தபோது, சொல்லொணாத் துயரமும், துன்பமும் அடைந்தோம்!

மாணவப் பருவத்திலேயே திராவிடர் இயக்கத்தாலும், தந்தை பெரியார் அவர்களாலும் ஈர்க்கப்பட்டு, சட்டக் கல்லூரி விரிவுரையாளராகவும், பிறகு அரசு வழக்குரைஞராகவும், அதன்பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, கருநாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, பிறகு உச்சநீதிமன்ற நீதிபதி போன்ற பெரிய பொறுப்புகளையெல்லாம் வகித்து, தனது சட்ட ஞானத்தின் மூலம் புகழ்பெற்ற தீர்ப்புகளை வழங்கிய மனிதநேயர்.

சட்டக் கல்லூரியில் அவரது மாணவர்களில் ஒருவன் நான். அப்போதிலிருந்து சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் மாணவர் - ஆசிரியர் - நண்பர் என்ற நட்புரிமையுடன் நாங்கள் பழகியவர்கள்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, காமராசர், முத்தமிழ் அறிஞர் கலைஞர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். முதலிய பல தலைவர்களின் பேரன்பிற்குப் பாத்திரமானவர்.

தமிழறிஞர் புலவர் மா.நன்னன், உடுமலைப்பேட்டையில் நண்பர் கே.ஏ.மதியழகன் ஆகியோரது குடும்பத்திற்கும் மிக நெருக்கமானவர்.

அவரது பிறந்தநாள் விழாவினை சிறப்புடன் சென்னையில் பெருவிழாவாக நடத்தினோம்.

மானமிகு. கலைஞரின் வீரவணக்க நாளில் அவரது உரை முத்திரை பதித்த ஒன்று.

அவர் ஓர் அரிய எழுத்தாளர். சிறந்த கவிஞரும்கூட! ஆங்கிலம், தமிழில் புலமையும் வாய்ந்தவர். அவரது பண்பாடு அனைவரையும் ஈர்க்கும் ஒன்றாகும். சீரிய பகுத்தறிவாளர்! தமிழக மூதறிஞர் குழுவின் தலைவராக இருந்தவர்.

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவருக்கு நமது இயக்கச் சார்பில் வீரவணக்கம்!

- கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

27.12.2019

- விடுதலை நாளேடு, 28.12.19

சென்னை மண்டலத்தில் துணைத்தலைவர் தலைமையில் விடுதலை சந்தா சேர்ப்புப் பணிகள் தீவிரம்!

சென்னை.டிச, 28- சென்னை மண்டலத்தில் சந்தா சேர்க்கும் பயணத்தில் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கலந்துகொண்டு சேகரித்தார்.

விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 87ஆம் ஆண்டு பிறந்தநாளை, விடுதலை சந்தாக்களை சேகரித்துக் கொண்டாடுங்கள் என்று அறிவித்ததை யொட்டி, பல்வேறு மாவட்டங்களில் சந்தா சேர்ப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை மண்டலத்தில் உள்ள 8 மாவட் டங்களில் சந்தா சேகரிப்பதற்காக கடந்த 18-.12.2019, புதன்கிழமை அன்று பெரியார் திடலில் தொடங்கி மீண்டும் பெரியார் திடலியே முடியும் வகையில் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   இந்தப் பயணத்தில் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கலந்து கொண்டார். அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டலச் செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் வெங்கடேசன், உடுமலை வடிவேல் ஆகியோர் உடன் சென்றனர்.

பெரியார் திடலும், புழலும்!

பெரியார் திடலில் உள்ள பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்திலிந்து தொடங்கியது முதல் கட்டப்பயணம்! திருமண நிலையத்தின் சார்பில், அதன் இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி மற்றும் இசையின்பன் இருவரும் முதல் கட்டமாக  24 ஆண்டு சந்தாக்கள் கொடுத்து பயணத்தைத் தொடங்கி வைத் தனர். உற்சாகமாகத் தொடங்கிய பயணத்தில் இரண் டாவதாக கும்மிடிப்பூண்டி மாவட்டத் தோழர்கள் ஆண்டு சந்தா 7, ஆறுமாத சந்தா 6 ஆக 13 சந்தாக்களைக் கொடுத்தனர்! இதில் மாவட்டத் தலைவர் புழல் ஆனந்தன், இளைரணித் தலைவர் சக்ரவர்த்தி, சோழ வரம் ஒன்றியத் தலைவர் கஜேந்திரன், புழல் ஒன்றித் ததலைவர் வடகரை ஜெகத்விஜயகுமார், செயலாளர் வடகரை உதயகுமார், சோழவரம் ஒன்றித்தலைவர் இரணியன், தி.மு.க.வைச் சேர்ந்த செங்குன்றம் திரா விடமணி, பெரியார் தாய்தமிழர் இயக்கம் ஒருங் கிணைப்பாளர் சீனிவாசன் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டு துணைத்தலைவரை வரவேற்று சிறப்பித்தனர்.

ஆவடியில் சந்தாக்களும்!

புதிய தோழர்கள் இணைப்பும்!

அங்கிருந்து ஆவடி மாவட்டத்திற்கு வந்தது பயணக்குழு, ஆவடியில் ஆண்டுசந்தா 24, ஆறுமாத சந்தா 12 ஆக மொத்தம் 36 சந்தாக்கள் வழங்கப்பட்டன! இதில் மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, செயலா ளர் க.இளவரசன், இளைஞரணித் தலைவர் கார்வேந் தன், இளைஞரணிச் செயலாளர் சோபன்பாபு, ஆவடி நகரக்கழகச் செயலாளர் முருகன், கொரட்டூர் பகுத் தறிவுப் பாசறை ஒருங்கிணைப்பாளர் கோபால், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பகுத் தறிவு, பெரியார் மாணாக்கன், செல்வி, மணிமாறன், வெங்கடேசன், மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதில் சிறப்பாக பணியாற்று கின்ற தோழர்களுக்கு துணைத்தலைவர் ஆடையணி வித்து மரியாதை செய்தார்! அம்பத்தூரைச் சேர்ந்த ரத்தினம் தனது இணையர் காயத்திரி இருவரும் துணைத்தலைவர் முன்னிலையில் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டனர்!

துணைத்தலைவருடன்

அளவளாவிய பெரியார் பிஞ்சுகள்!

அங்கிருந்து தாம்பரம் நோக்கி குழு புறப்பட்டது. தாம்பரத்தில் 15 ஆண்டு சந்தாக்களும், 9 ஆறு மாதச் சந்தாக்களுமாக மொத்தம் 24 சந்தாக்கள் வழங்கப் பட்டன. மாவட்டத் தலைவர் பா.முத்தையன் துணைத்தலைவருக்கு ஆடையணிவித்து சிறப்பித்தார். நிகழ்வில் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், மண்டல இளைஞரணித் தலைவர் சிவசாமி, பொழி சைக் கண்ணன், கரைமாநகர் சுரேசு, மோகன்ராஜ், மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். பொரியார் பிஞ்சுகள் அமுதன், யாழினி இருவரும் தனது நண்பர்களை துணைத்தலைவருக்கு அறிமுகம் செய்வித்து மகிழ்ந்தனர்.

நெருக்கடியிலும் தொடர்ந்த பயணம்!

துணைத்தலைவர் இரவில் வெளியூர் பயணம் மேற்கொள்ளவிருக்கும் சூழலில், தாம்பரத்தில் இருந்து கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தென் சென்னையில் இருக்கும் மு.ந.மதியழகன் இல்லத்திற்கு விடுதலை சேகரிப்புக்குழு சென்றது! அங்கு மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், அமைப்பாளர் மு.ந.மதியழகன், அரும்பாக்கம் தாமோதரன், செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி, மஞ்சநாதன், ப.க. மாணிக்கம், கோ.வி.ராகவன், நீடாமங் கலம் கூத்தரசன், மயிலை சேதுராமன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அங்கிருந்து பயணக் குழு தொடங்கிய இடமான பெரியார் திடலுக்குத் திரும்பியது. அங்கு வடசென்னை மற்றும் எண்ணூர் மாவட்டங்கள் சந்தாக்களைக் கொடுத்தனர். வட சென்னை சார்பாக 9 ஆண்டு சந்தாக்களும், எண்ணூர் சார்பாக ஆறு மாத சந்தாக்கள் 7 ம் கொடுக்கப்பட்டது. இதில் எண்ணூர் மாவட்டத் தலைவர் மோகன், வடசென்னை மாவட்டச் செயலாளர் கணேசன், ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். நேரம் காரணமாக சோழிங்கநல்லூர் மாவட்டத்திற்கு செல்ல இயலவில்லை. ஆக மொத்தம் ஆண்டு சந்தாக் கள் 84 ம், ஆறுமாத சந்தாக்கள் 26 மாக மொத்தம் 117 சந்தாக்கள் சேகரிக்கப்பட்டன.

-  விடுதலை நாளேடு 28 12 19

புதன், 1 ஜனவரி, 2020

திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் அமைதி ஊர்வலம்

தந்தை பெரியார்  நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

சென்னை,டிச.24 தந்தை பெரியாரின் 46 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (24.12.2019) திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் கழகப்பொறுப்பாளர்கள் பங்கேற்ற அமைதி ஊர்வலம் எழுச்சியுடன் நடைபெற்றது.

தந்தை பெரியார் நினைவு நாளான இன்று (24.12.2019) காலை 9.45 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) அமையப்பெற்றுள்ள தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தந்தை பெரியார் வாழ்க, அன்னை மணியம்மையார் வாழ்க, தமிழர் தலைவர் வாழ்க, தமிழர் தலைவர் தலைமையில் தந்தை பெரியார்  பணிமுடிப்போம் என கழகத் தோழர்களின் முழக்கங்கள் வானைப் பிளந்தன.

அண்ணாசாலை சிம்சன் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து அமைதி ஊர் வலம் தொடங்கியது. சிந்தாதிரிப்பேட்டை, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை  வழியே பெரியார் திடலை அமைதி ஊர்வலம் அடைந்தது.

வைகோ - திருமாவளவன் - ஜி.இராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் (சி.பி.எம்.) மரியாதை

பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலையில் அமைந் துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு கழக மகளிர் தோழர்கள் மாலை அணிவித்தனர்.

பெரியார் திடலில் அமைந்துள்ள 21 அடி உயர தந்தை பெரியார் முழு உருவ சிலைப்பீடத்தில் மலர் மாலை வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

கழகத் துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி மகளிர் சார்பில் மலர் வளையம் வைத்தார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் பெரியார் நினை விடம், அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உறுதிமொழி கூற, அனைவரும் தொடர்ந்து கூறி உறுதி யேற்றனர்.

அன்னை மணியம்மையார்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, திருமதி மோகனா வீரமணி, சிங்கப் பூர் நா.மாறன், கவிதா, கழகத் துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம்,  பெரியார் பன்னாட்டமைப்பு இயக்குநர் சிகாகோ மருத்துவர் சோம.இளங் கோவன், மயிலை நா.கிருட்டிணன், த.க.நடராசன், சென்னை மண்டலத் தலைவர்  தி.இரா.இரத்தினசாமி, மண்டல செயலாளர் தே.செ.கோபால், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென்சென்னை மாவட்டத் தலை வர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் நீலாங்கரை ஆர்.டி.வீர பத்திரன், திருவள்ளூர் ஜெய.தென்னரசு மற்றும் ஆவடி, கும் மிடிப்பூண்டி,தென்சென்னை, வடசென்னை, தாம் பரம் உள்ளிட்ட சென்னை மண்டல கழகப் பொறுப் பாளர்கள்,  தோழர்கள், மகளிர் தோழர்கள், பெரியார் பிஞ்சுகள் என அனைவரும் தந்தை பெரியார் நினைவு நாளில் அணிதிரண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் அமைதி ஊர்வலத்தில் பங்கேற்று, பெரியார் நினைவிடத்தில் உறுதியேற்றனர்.

மகளிரணி, மகளிர் பாசறை, திராவிட தொழிலாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்டம், பெரியார் மணியம்மை மருத்துவ மனை, திராவிடன் நிதி,  பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் தந்தை பெரியார் நினைவிடம், அன்னை மணியம்மை யார் நினை விடம், சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. - மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

சென்னை அண்ணா சாலை சிம்மன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், இந்திய மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலங்களவை உறுப்பினர்  டி.கே.ரங்கராஜன், மேனாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.துணை செயலாளர் வீரபாண்டியன், செயற்குழு உறுப் பினர் பெரியசாமி, மாவட்ட செயலாளர்கள் ஏழுமலை, எம்.எஸ்.மூர்த்தி, ஏ.அய்.ஒய்எஃப் வெங்க டேசன், ஒடுக்கப்பட்டோர் அமைப்பு சிவா, தமிழ்நாடு பழங்குடி மக்கள் தேசிய நிர்வாகக்குழு அய்.உசேன் இருந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் செல்வம் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பொறுப் பாளர்கள் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

மதிமுக

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மல்லை சத்யா, ஜீவன் உள்ளிட்ட மதிமுக பொறுப்பாளர்கள் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியார் நினைவு நாளில் பெரியார் படம் ஊர்வலம், நினைவிடத்தில் மரியாதை (சென்னை - 24.12.2019)

அமெரிக்காவிலுள்ள  பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில்  அதன் இயக்குநர் சிகாகோ டாக்டர்சோம. இளங்கோவன் , தந்தை பெரியார், சுயமரியாதை சுடரொளிகள்  நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

சிங்கப்பூரிலுள்ள பெரியார் சமூக சேவை  மன்றத்தின் சார்பில் அதன் உறுப்பினர் நா. மாறன், கவிதா மாறன் ஆகியோர் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

திராவிட தொழிலாளரணியின் சார்பில் செல்வராசு, தமிழினியன், பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் மயிலை. நா. கிருஷ்ணன், சத்திய நாராயணசிங் ஆகியோர் மலர் வளையம் வைத்தனர்.

மகளிரணியின் சார்பில் தந்தை பெரியார் நினைவிடத்திலும், பெரியார் மருத்துவமனையின் சார்பில் அன்னை மணியம்மையார் நினைவிடத்திலும் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

மகளிர் பாசறையின் சார்பில் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை.

புதுமை இலக்கிய தென்றல் சார்பில் வழக்குரைஞர் வீரமர்த்தினி, த.கு. திவாகரன், மறைமலை இலக்குவனார்,  அண்ணா திராவிடர் மக்கள் முன்னேற்றக் கழகத்தினர்   பெரியார் நினைவிடத்தில் மரியாதை.

மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா, பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோர் தந்தைபெரியார் நினைவு நாளில் பெரியார் திடலுக்கு வருகை தந்து தமிழர்தலைவரை சந்தித்தனர் (24.12.2019)

ஆந்திராவை சேர்ந்த  (SSF) அமைப்பினர் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தபின் தமிழர் தலைவரைச் சந்தித்தனர் (24.12.2019)

பெரியார் பிஞ்சுகளுடன் பெரியார் சிலைக்கு  மாலை வைத்து  மரியாதை.

திராவிட  மாணவர் கழகத்தினர் பெரியார் நினைவிடத்தில் மரியாதை.

விடுதலை நாளேடு, 24.12.2019