திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 மார்ச், 2026

சோ.சுரேஷ் – மு.பவானி இணையேற்பு விழா : தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்


திராவிடர் கழகம்
மதுரை கோ.புதூர் பரசுராமன்பட்டி வ.சோமு – சோ.புஷ்பம் ஆகியோரின் மகன் சோ சுரேஷ் – சென்னை மயிலாப்பூர் நொச்சி நகர் நினைவில் வாழும் ர.முத்து – மு.குணசுந்தரி ஆகியோரின் மகள் மு.பவானி இருவரின் இணையேற்பு விழாவை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: மோகனா வீரமணி, ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார், பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மதுரை மாவட்டத் தலைவர் முருகானந்தம், செயலாளர் சுரேஷ், தென் சென்னை மாவட்டத் தலைவர் வில்வநாதன் மற்றும் இரு இல்லத்தார். (மதுரை கோ.புதூர் சிறீ ராதா லட்சுமி பேலஸ், 8.3.2026)

-விடுதலை நாளேடு,8.3.2026

https://www.youtube.com/live/HuwC6FJ7Z7c?si=sr7h-hho-vbnC3n4

செவ்வாய், 8 ஜூலை, 2025

கு.பா. தமிழினி – சு. ஆகாஷ் மகோதர் வாழ்க்கை இணையேற்பு விழா

கு.பா. தமிழினி – சு. ஆகாஷ் மகோதர் வாழ்க்கை இணையேற்பு விழா

தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி – கோ. குமாரி இணையரின் மகள் கு.பா. தமிழினி, எம்.எஸ்.ஜெ. சுந்தர் – எம்.எஸ்.ஜி. உஷா சுந்தர் இணையரின் மகன் சு. ஆகாஷ் மகோதர் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவிற்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் தலைமை வகித்து இணையேற்பு நிகழ்வை நடத்தி வைத்தார். உடன்: கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்ெமாழி, கழகப் பொருளாளர் வீ. குமரேசன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் குடும்பத்தினர். (சென்னை, 6.7.2025)

- விடுதலை நாளேடு, 06.07.2025