கரோனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கரோனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 மே, 2023

திருவண்ணாமலை மாவட்டம் திராவிடர் கழக பொறுப்பாளர் டி.எஸ் கவுதமன் கரோனாவால் மறைவு - தென் சென்னை திராவிடர் கழகத்தின் சார்பில் உடல் அடக்கம்!

திருவண்ணாமலை மாவட்டம் திராவிடர் கழக பொறுப்பாளர் டி.எஸ் கவுதமன் சென்னை திருவல்லிக்கேணி அவரது மகள் வீட்டில் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தாக்குதலால் மறைவுற்றார் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் உடனிருந்து அடக்கம் செய்யப்பட்டது. 10.5.2021 பகல் 12 மணி

ஞாயிறு, 7 மே, 2023

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

 


தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருளை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் வழங்கினார்.

-விடுதலை நாளேடு,19.06.21

செவ்வாய், 29 ஜூன், 2021

தென்சென்னை மாவட்டக் கழகம் சார்பில் நூறு பேருக்கு கரோனா கால உதவி



மயிலை நொச்சி நகர் பகுதியில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்கள் நூறு பேருக்கு உணவுப்பொருட்கள், கரோனா தடுப்பு உபகரணங்கள் கழக பொதுச்செயலாளர் வீ அன்புராஜ் ஏற்பாட்டில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 26.6.2021 அன்று வழங்கப்பட்டது  மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் கழக தோழர்கள் உடனிருந்தார்கள்

சனி, 16 மே, 2020

கழகம் சார்பில் செங்கல்பட்டு அருகில் வாழ்வாதாரம் இழந்தோறுக்கு நிவாரணப் பணி


கழகம் சார்பில் செங்கல்பட்டு அருகில் வாழ்வாதாரம் இழந்தோறுக்கு நிவாரணப் பணி

கரோனா தடுப்பு அறிவிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்த செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துறை கூற்றோடு அருகிலுள்ள 'கோடி தண்டலம்' என்ற ஊரில் உள்ள குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி 06.05.20 முற்பகல் 11.00 மணி அளவில் அப்பகுதியில் உள்ள பின் மாஸ்டர் இன்ஞினியரிங்கு (Bin master Engineering) தொழிற்கூடத்தின் மூலம் பெறப்பட்ட ஒரு லட்ச ரூபாய் பெறுமானமுள்ள 25 கிலோ அரிசி மூட்டைகளை குடும்பம் ஒன்றுக்கு தலா 25 கிலோ அரிசி வீதம் 125 குடும்பங்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும் வழங்கப்பட்டது. திராவிடர் கழகம் சார்பில் தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி மற்றும் ஆயிரம்விளக்கு மு.சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செங்கல்பட்டு பொருளாளர் எழிலரசன் மற்றும் நடராஜபுரம் வரதன் ஆகியோர் பங்கேற்றனர்.

- விடுதலை நாளேடு, 9.5.20