ஞாயிறு, 14 ஜூன், 2020

மயிலை நொச்சி குப்பம் பகுதியில் துயர்துடைப்பு பணி- விடுதலை நாளேடு, 11.6.20 

 
9.6.20 முற்பகல் 11.00 மணி அளவில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மயிலை நொச்சி குப்பம் பகுதியில் கரோனா நோயின் தாக்கத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டிருந்தவர்களுக்கு அய்ந்தாவது முறையாக மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் அவர்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப் பொருள்களை வழங்கினார்.

திருவல்லிக்கேணி பகுதியில் பாதிக்கப்பட்டோருக்கு துயர்துடைப்பு பணி

- விடுதலை நாளேடு, 5.6.20
தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 25.5.20 முற்பகல் 11.00 மணி அளவில் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதியில் கரோனா வைரசு நோய் தாக்கப்பட்டு மருத்துவ மனையில்  குடும்பத் தலைவர்கள் சிகச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால், யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த, தனிமைபடுத்தப்பட்ட குடும்பத்தினருக்கு  தங்களால் இயன்ற உணவு(அரிசி,பருப்பு போன்ற மளிகை பொருள்கள்) பொருள்களை  இரண்டாம் கட்டமாக  கொடுத்து உதவினார்  தென் சென்னை மாவட்ட தலைவர் இரா வில்வநாதன் அவர்கள்.  

கழகத்தின் சார்பில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பணி

-விடுதலை நாளேடு, 19.5.20


தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 16.5.20 முற்பகல் 10.00 மணி அளவில் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதியில் கரோனா வைரசு நோய் தாக்கப்பட்டு மருத்துவ மனையில்  குடும்பத் தலைவர்கள் சிகச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால், யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த, தனிமைபடுத்தப்பட்ட குடும்பத்தினருக்கு  தங்களால் இயன்ற நிவாரண (அரிசி,பருப்பு போன்ற மளிகை பொருள்கள்) உதவிகளை தென் சென்னை மாவட்ட தலைவர் இரா வில்வநாதன் அவர்கள் வழங்கினார். அய்ஸ் அவுஸ் சதீஸ் உடன் இருந்து பணியாற்றினார்.
மேலும் நிவாரண பணிக்காக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

சனி, 13 ஜூன், 2020

ஜெ.அன்பழகனுக்கு நமது வீர வணக்கம்!திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் அறிக்கை
சகோதரர் ஜெ.அன்பழகனுக்கு
நமது வீர வணக்கம்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மாவட்டத் தூண்களில் ஒன்று சாய்ந்து விட்டது. தனது தந்தையார் (பழக்கடை ஜெயராமன் அவர்கள்) காலத்திலிருந்து தி.மு.க.விலேயே கொள்கைச் செடியாக வளர்ந்து, மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர், மாவட்டச் செயலாளர், கட்சிக் கூட்டமானாலும், சட்டமன்றக் கூட்டமானாலும், எப்பிரச்சினையையும் தெளிவுடனும், துணிவுடனும் பேசி, செயல்பட்ட ஒப்பற்ற ஒரு செயல்வீரர் ஜெ.அன்பழகன் (வயது 62) ஆவார்.
கடந்த சில நாள்களுக்குமுன் அவரது உடல்நிலை மோசமடைந்து மீண்டும் குணமடைந்தார் என்ற செய்தி நமக்கெல்லாம் ஆறுதல் தந்தது. என்றாலும், தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி கூறுவதுபோல், இயற்கையின் கோணல் புத்தி அவரைப் பறித்துக் கொண்டது - இறுதிவரை தொண்டாற்றியவர் அவர்.
இது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டும் இழப்பு அல்ல; சிறந்த ஜனநாயகவாதியாகக் கடமையாற்றிட்ட வீரனின் இழப்பு என்பதால், ஜனநாயகத்திற்கும், பொதுவாழ்விற்கும் ஈடற்ற இழப்பு.
சீரிய பண்பாளர்; எப்போதும் நம்மிடம் தனது தந்தையின் ‘மிசா’ காலத்து நண்பர் என்ற மரியாதை கலந்த அன்புடனும், பண்புடனும் பழகிய பான்மைமிக்க ஒரு சகோதரன்.
அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், தி.மு.க. தலைவருக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தாய்க்கழகமான திராவிடர் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
அவருக்கு நமது வீரவணக்கம்!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
10.6.2020 சென்னை

-விடுதலை நாளேடு, 11.6.20மயிலை நொச்சி நகர் பகுதியில் துயர் துடைப்பு பணி

விடுதலை நாளேடு,7.6.20


5.6.20 மு.ப.10.00 மணி அளவில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மயிலை நொச்சி நகர் பகுதியில் கரோனா நோயின் தாக்கத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டிருந்தவர்களுக்கு மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் அவர்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப்பொருட்களை வழங்கினார்.வி.பெரியசாமி மறைவு


தஞ்சாவூர் ஒன்றியம் புது மாத்தூர் பெரியார் பெருந்தொண்டர் வி.பெரியசாமி (வயது-89) அவர்கள் 1.6.20 அன்று மறைவுற்றார். சென்னை கிழக்கு அண்ணா நகரில் உள்ள அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரின் உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் 2.6.20 பிற்பகல் 4.00மணி அளவில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் செ.ர.பார்த்தசாரதி அவர்கள் மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். உடன் தென் சென்னை துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், வடசென்னை மாவட்ட இளைஞரணித்தலைவர் தளபதி பாண்டியன், ஆவடி மாவட்ட கழகத்தோழர் பா.முத்தழகு, இரசல், அமைந்தகரை சாம்பீம்பெரியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரும்பாக்கத்தில் "விடுதலை" ஏட்டிற்கு 86வது பிறந்தநாள் விழா

1.6.20 முற்பகல் 10 .00 மணி அளவில் தென் சென்னை அரும்பாக்கம் பகுதி பெரியார் நெடுஞ்சாலையில் உள்ள சா.தாமோதரன் அவர்கள் இல்லத்தின் வாயிலில் விடுதலை நாளேட்டின் 86வது பிறந்த நாள் விழா கேக் வெட்டி, இனிப்பு வழங்கி சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வை முன்னிட்டு
தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி அவர்கள் தலைமையிலும் துணைச் செயலாளர் கோ.வீ. ராகவன் அவர்கள் முன்னிலையிலும் தென் சென்னை மாவட்ட தலைவர் இரா .வில்வநாதன் அவர்கள் கழகக் கொடியை ஏற்றிவைத்தார்.
வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன் அவர்கள் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்.
கும்முடிப்பூண்டி மாவட்ட இளைஞரணித் தலைவர் சோழவரம் சக்கரவர்த்தி,
அரும்பாக்கம் எம். பிரகாசம், க.திருச்செல்வம், அண்ணாநகர் ஆகாஷ், அமைந்தகரை சாம்பீம் பெரியார், மற்றும் பலர் பங்கேற்றனர்.
துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா தாமோதரன் அவர்கள் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.