புரட்சிக்கவிஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புரட்சிக்கவிஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 ஏப்ரல், 2026

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 136-ஆவது பிறந்த நாள் அவரின் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை!

ஆசிரியர், திராவிடர் கழகம்

சென்னை, ஏப்.29- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 136ஆவது ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2026) காலை 10.30 மணியளவில் சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக சட்டத்துறைத் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ்,  பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், சி.வெற்றிச்செல்வி, அ.சுதா அன்புராஜ், தங்க.தனலட்சுமி, த. இளவரசி, மரகதமணி, மு.பவானி, திராவிட இலக்கியா, திராவிட எழில், பூவை செல்வி, தங்கமணி, பெரியார் இனியா,  பெரியார் ஆதவன்.

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், வழக்குரைஞர் சண்முகப்பிரியன், சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் கரு.அண்ணாமலை, செயலாளர் சுப்பிரமணியன், அரும்பாக்கம் சா.தாமோதரன்,  பழனிபாலு, அய்ஸ் அவுஸ் அன்பு, எம்.ஆர்.மாணிக்கம், பெரியார் மாணாக்கன், சூளைமேடு பி.டி.சி.ராஜேந்திரன், சூளைமேடு சேகர், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்தின்.

கொடுங்கையூர் கோ.தங்கமணி, கோவர்த்தன், ப.கோபாலகிருஷ்ணன், செல்லப்பன், கவிஞர் வீரமுத்து, முரளி, மகேஷ், தமிழ்ச்செல்வன், தாம்பரம் சு.மோகன்ராஜ், மகேந்திரன், சுப்பிரமணியன், அப்துல்லா மற்றும் பெருந்திரளான கழகத் தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

- விடுதலை நாளேடு, 29.04.26

ஞாயிறு, 7 ஜூலை, 2024

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விழா மூன்று நாள் விழா! - 20, 21, 22.4.1989

 

இயக்க வரலாறான தன் வரலாறு(234) : 

உண்மை இதழ்

அய்யாவின் அடிச்சுவட்டில்

கி.வீரமணி


 புரட்சிக் கவிஞர்

பாரதிதாசன்


புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விழா மூன்று நாள் விழாவாக 20, 21, 22.4.1989 ஆகிய நாள்கள். இரண்டு நாள் விழா, சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. மூன்றாவது நாள் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. நிறைவு விழா கூட்டத்தில் தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். விழாவில், சோ.ஞானசுந்தரம், ஜஸ்டிஸ் திரு.பி.வேணுகோபால், காவிரிச்செல்வன் உள்ளிட்ட கழக நிருவாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் நான் உரையாற்றும்போது, சட்டமன்றத்தில் கலைஞர் தாக்கப்பட்டதை நினைத்து நினைத்து ரத்தக் கண்ணீர் வடித்து வருகிறோம் என்று கண்டித்து உரையாற்றினேன்.

புரட்சிக்கவிஞர் விழாவில் டாக்டர் கலைஞர் அவர்கள் உரையாற்றும்போது, புதுவைத் தாக்குதலுக்கு தந்தை பெரியாரின் மருந்துத் துளிகள், சட்டசபைத் தாக்குதலுக்கு வீரமணியின் கண்ணீர்த் துளிகள், என் இதயத்தில் ஏற்பட்ட புண்ணுக்கு, தாய்க் கழகம் தரும் மருந்துத் துளிகள் என்றும் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

மூன்று நாள் விழாவிலும், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பெரியார் நூலக வாசகர் வட்டம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த நிருவாகிகள் உறுதுணையுடன் விழா சிறப்பாக நடைபெற்றது.


புரட்சிக் கவிஞர் விழாவில் கலைஞர் அவர்களுக்கு சிறப்பு செய்கிறார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

 முதுபெரும் மூதாட்டியார் திருமதி. சிவகாமி சிதம்பரனார் அவர்கள் மறைவு

முதுபெரும் மூதாட்டியார் திருமதி. சிவகாமி சிதம்பரனார் அவர்கள் முடிவு எய்தினார்கள். ரத்த அழுத்தத்தினால் கடந்த சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர்களுக்கு 31.5.1989 அன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறக்க நேரிட்டது.

திருமதி. சிவகாமி சிதம்பரனார் அவர்கள், தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சாமி.சிதம்பரனார் அவர்களின் துணைவியார் ஆவார்கள். திருமதி சிவகாமி சிதம்பரனார் திருமணம் தந்தை பெரியார் தலைமையில் நடந்த விதவைத் திருமணமாகும். திராவிடர் கழகத்தின் சார்பில் மலர்வளையம் வைத்து இரங்கல் அறிக்கை வாசிக்கப்பட்டது. நான், துணைவியார் மோகனாவுடன் சென்று மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினேன். சென்னை மாவட்ட தி.க. தலைவர் எம்.பி.பாலு மற்றும் பெரியாரணித் தொண்டர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

சாமி சிதம்பரனார் மற்றும் துணைவியார் சிவகாமி


புதன், 3 ஜூலை, 2024

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா (27, 28, 29.4.1990)

 27, 28, 29.4.1990 ஆகிய மூன்று நாள்கள்  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவின் முதல் நாள் நிகழ்வு 27.4.1990 அன்று தென்சென்னை திராவிடர் கழகத்தின் சார்பில் மயிலையில் நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வு 28.4.1990 அன்று வடசென்னை திராவிடர் கழகத்தின் சார்பில் புதுவண்ணாரப் பேட்டையில் சிறப்புற நடந்தது. நிறைவு விழா  சென்னை, கலைவாணர் அரங்கில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பெரியார் நூலக வாசகர் வட்டம் அமைப்புகள் சார்பில் எழுச்சியும் மகிழ்ச்சியும் குலுங்க நடைபெற்றது. கழகக் குடும்பங்கள், பொதுமக்கள், நிரம்பி வழியும் வண்ணம் தமிழர்கள் கூடியிருந்தனர்.

முதல்வர் கலைஞருக்கு “மகளிர் உரிமை ஆட்சி மாண்பாளர்” என்னும் பட்டம் மகளிரணியினரால் அளிக்கப்படுகிறது. உடன் ஆசிரியர் கி.வீரமணி 

 விழாவில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் கலந்துகொண்டார்கள். தமிழ்நாட்டுப் பெண்கள் முன்னேற்றத்திலும், தந்தை பெரியார் கண்ணோட்டத்திலும் மகளிர் உரிமைக்கான சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பிலும், மகளிரணி சார்பிலும் தமிழக பெண்குலத்தின் சார்பிலும், “மகளிர் உரிமை ஆட்சி மாண்பாளர்’’ என்னும் பட்டம் அளிக்கப்பட்டது. அரங்கம் அதிர்ந்தது கையொலிகளால்.

 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவில் மகளிரணி கலந்து கொண்டு சிறப்பித்த காட்சி

விழாவில், உரையாற்றும்போது, “தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் என்று நடைமுறையில் இருக்கும் ஆண்டு அமைப்பு மாற்றப்பட்டு, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றம் செய்யப்பட்டு திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கை மேற்கொள்ளத் தமிழக முதல்வர் அவர்கள் ஆணை பிறப்பிக்க வேண்டும்“ என்று கோரிக்கை வைத்தேன். உடனே பதில் அளித்த முதல்வர் கலைஞர் அவர்கள், “தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் முதல் துவக்க வேண்டும் என்று இளவல் வீரமணி குறிப்பிட்டார். தளபதி வீரமணியின் சிந்தனையையும், சிந்தையில் தேக்கி, மற்றவர்களையும் கலந்து பேசி அறிவிக்கப்படும் என்றும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

இயக்க வரலாறான தன் வரலாறு(236) : 

அக்டோபர் 16-31 2019

அய்யாவின் அடிச்சுவட்டில்…


கி. வீரமணி

திங்கள், 29 ஏப்ரல், 2024

புரட்சிக்கவிஞரின் 134 ஆவது பிறந்த நாள்: திராவிடர் கழகம் சார்பில் மரியாதை



Published April 29, 2024, விடுதலை நாளேடு

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் – தனிச்சிறப்பு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கொள்கைகளை நாடெங்கிலும் எடுத்துச் செல்லுவோம்! திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் செய்தியாளர்களுக்கு பேட்டி

Published April 29, 2024

சென்னை, ஏப்.29 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் என்பது தனிச் சிறப்பாகும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கொள்கைகளை நாடெங்கிலும் எடுத்துச் செல்லுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்.
இன்று (29-4-2024) புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர் களின் 134 ஆம் ஆண்டு பிறந்த நாள். அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில் இந்த ஆண்டு புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா என்பது கூடுதல் சிறப்பாகும்.
ஒரு காலகட்டத்தில் ‘சுப்பிரமணிய துதி’ பாடிய புரட்சிக் கவிஞர், மயிலாடுதுறையில் தந்தை பெரியார் அவர்களது உரையைக் கேட்டு, மறுமலர்ச்சிப் பெற்று, ‘‘புரட்சிக்கவிஞராக” அவர் மாறினார் என்பது முக்கியமான வரலாறாகும்.

புரட்சிக்கவிஞரின் படைப்புகள்
காலத்தை வென்று நிற்கக்கூடியவை!
அவருடைய படைப்புகள் எல்லாம் காலத்தை வென்று நிற்கக்கூடியன.
‘‘நல்ல இமயம், நலங்கொழிக்கும் கங்கை நதி
வெல்லத் தமிழ்நாட்டின் மேன்மைப் பொதியமலை,
செந்நெல் வயல்கள், செழுங்கரும்புத் தோட்டங்கள்,
தின்னக் கனிகள், தெவிட்டாப் பயன்மரங்கள்,
இன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில்
முப்பத்து முக்கோடி மாந்தர்கள் மொய்த்தென்ன?
செப்பும் இயற்கைவளங்கள் செறிந்தென்ன?
மூடப்பழக்கம், முடிவுற்ற கண்ணுறக்கம்
ஓடுவதன்றோ? உயர்வதென்றோ? நானறியேன்”
என்று எதை எடுத்தாலும், புரட்சிக்கவிஞர் அவர்கள், தந்தை பெரியார் சிந்தனையோடு அளித்திருக்கிறார்.
புரட்சிக்கவிஞரின்
வரிக்கு ஈடாகாது!
தந்தை பெரியாரைப்பற்றி சொல்லு கின்றபொழுது,
‘‘தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்!”
என்றார்.


சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் – தனிச்சிறப்பு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கொள்கைகளை நாடெங்கிலும் எடுத்துச் செல்லுவோம்! திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் செய்தியாளர்களுக்கு பேட்டி

Published April 29, 2024

சென்னை, ஏப்.29 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் என்பது தனிச் சிறப்பாகும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கொள்கைகளை நாடெங்கிலும் எடுத்துச் செல்லுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்.
இன்று (29-4-2024) புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர் களின் 134 ஆம் ஆண்டு பிறந்த நாள். அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில் இந்த ஆண்டு புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா என்பது கூடுதல் சிறப்பாகும்.
ஒரு காலகட்டத்தில் ‘சுப்பிரமணிய துதி’ பாடிய புரட்சிக் கவிஞர், மயிலாடுதுறையில் தந்தை பெரியார் அவர்களது உரையைக் கேட்டு, மறுமலர்ச்சிப் பெற்று, ‘‘புரட்சிக்கவிஞராக” அவர் மாறினார் என்பது முக்கியமான வரலாறாகும்.

புரட்சிக்கவிஞரின் படைப்புகள்
காலத்தை வென்று நிற்கக்கூடியவை!
அவருடைய படைப்புகள் எல்லாம் காலத்தை வென்று நிற்கக்கூடியன.
‘‘நல்ல இமயம், நலங்கொழிக்கும் கங்கை நதி
வெல்லத் தமிழ்நாட்டின் மேன்மைப் பொதியமலை,
செந்நெல் வயல்கள், செழுங்கரும்புத் தோட்டங்கள்,
தின்னக் கனிகள், தெவிட்டாப் பயன்மரங்கள்,
இன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில்
முப்பத்து முக்கோடி மாந்தர்கள் மொய்த்தென்ன?
செப்பும் இயற்கைவளங்கள் செறிந்தென்ன?
மூடப்பழக்கம், முடிவுற்ற கண்ணுறக்கம்
ஓடுவதன்றோ? உயர்வதென்றோ? நானறியேன்”
என்று எதை எடுத்தாலும், புரட்சிக்கவிஞர் அவர்கள், தந்தை பெரியார் சிந்தனையோடு அளித்திருக்கிறார்.
புரட்சிக்கவிஞரின்
வரிக்கு ஈடாகாது!
தந்தை பெரியாரைப்பற்றி சொல்லு கின்றபொழுது,
‘‘தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்!”
என்றார்.

தந்தை பெரியாரைப்பற்றி எத் தனையோ கவிஞர்கள் பாடியிருந் தாலும், புரட்சிக்கவிஞரின் வரிக்கு ஈடாகாது.
ஆகவே, புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் மறைந்தாலும், அவர் படைத்த சுயமரியாதைக் கொள்கைகளை நாடெங்கிலும் எடுத்துச் செல்லுவோம்.
இந்த ஆண்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு என்கின்ற முறையில், புரட்சிக்கவிஞரின் பிறந்த நாளுக்குத் தனிச் சிறப்பாகும்.
வாழ்க புரட்சிக்கவிஞர்!
வெல்க அவருடைய கொள்கைகள்!
– இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

மாலை அணிவிப்பு
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 134ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2024) காலை 10 மணியளவில் சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் தலைமையில் மலர் மாலை அணிவிக்கப்பட்டு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பொருளாளர் வீ. குமரேசன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலச் செயலாளர் சுப. முருகானந்தம், தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ. கோபால், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன், துணைச் செயலாளர் சா. தாமோதரன், சோழிங்கநல்லூர் மாவட்ட காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன், பிசி. ஜெயராமன், மடிப்பாக்கம் ஆனந்தராஜ், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், காப்பாளர் கி. இராமலிங்கம், கோ. தங்கமணி, திருவொற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு. மோகன், கவிஞர் செல்வ மீனாட்சிசுந்தரம், பூவிருந்தவல்லி க.ச. பெரியார் மாணாக்கன், பொதுக் குழு உறுப்பினர் சி. வெற்றிச்செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பூவை செல்வி, சீர்த்தி, செ.பெ. தொண்டறம், தங்க. தனலட்சுமி, வி. யாழ்ஒளி, க. கலைமணி, மு. இரா.மாணிக்கம், சோமசுந்தரம், பெ. செந்தமிழ்ச்செல்வன், அம்பேத்கர் மக்கள் முன்னணி தலைவர் திண்டிவனம் சிறீராமுலு, பொதுச் செயலாளர் பிரபாகரன், சஞ்சய், கவின், யுகேஷ் ப. சிவகுமார், திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் இரா. வேதாசலம், பொறியாளர் இராமச்சந்திரன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பேரன் இளமுருகு (சரஸ்வதி கண்ணப்பன் மகன்) விக்னேஷ் ஆகியோர் பங்கேற்று புரட்சிக் கவிஞருக்கு மரியாதை செலுத்தினர்.

ஞாயிறு, 8 மே, 2022

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 132ஆம் ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை


சென்னை, ஏப்.29 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 132ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2022) காலை 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்திருக்கும் அவர்தம் சிலைக்கு திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மாலை அணிவித்தும் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச. இன்பக்கனி, மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் பாபநாசம் மோகன், வழக்குரைஞர் சு. குமாரதேவன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், சென்னை மண்டல செயலாளர் கோபால், சி.வெற்றிச் செல்வி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, பெரியார் மாணாக்கன், பூவை செல்வி, மு. பவானி, மயிலை சேதுராமன், தரமணி மஞ்சு நாதன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணை செயலாளர் கோ.வீ. ராகவன், சைதை மதியழகன், வி. தங்கமணி, சோ. சுரேஷ், கலைமணி, மயிலாடுதுறை மாவட்டச் செய லாளர் கி.தளபதிராஜ், மயிலை சந்திரசேகரன், மு. சண்முகபிரியன், ச.மகேந்திரன், கற்பகம், சின்னராசு ஆகியோர் இந்நிகழ்வில்  பங் கேற்று சிறப்பித்தனர்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிலைக்கு பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புரட்சிக் கவிஞரின் பேரன் கோ. பாரதி, ஜெகதீசன் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  தமிழர் தலைவருக்கு கவிஞர் கோ. பாரதி அவர்கள் புரட்சிக் கவிஞரின் புத்தகத்தை அளித்து மகிழ்ந்தார்.

செவ்வாய், 11 மே, 2021

புரட்சிக் கவிஞர் படத்திற்கு மாலை அணிவிப்பு

புரட்சிக் கவிஞர் படத்திற்கு மாலை அணிவிப்பு

புரட்சி கவிஞரின் பிறந்தநாளை முன்னிட்டு தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் காமராஜர் சாலையில் உள்ள சிலைக்கு  மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் கோ.வி. ராகவன், பொறியாளர்.ஈ. குமார், சண்முகப்பிரியன், விசித்ரா, மணிதுரை, மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாகையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் படத்திற்கு பகுத்தறிவாளர்கழகம், திராவிடர்கழகம், பாவேந்தர் மன்றம் சார்பில் மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது

வெள்ளி, 4 மே, 2018

புரட்சிக்கவிஞர் பிறந்த நாளில் சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை



சென்னை, ஏப். 29 புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 128ஆம் பிறந்த நாள் விழாவையொட்டி இன்று (29.4.2018) காலை 10.30 மணிக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள புரட்சிக்கவிஞர் சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மாலை அணிவித்தார். கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன்,  திராவிடர் வரலாற்று ஆய்வுமய்ய செயலாளர் ந.க.மங்கள முருகேசன், கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், கவிஞர் பொன்னடியான், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.அழகிரிசாமி, பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் (கல்லூரிகள்)  எஸ்.அருட்செல்வன்,  பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர்  (பயிற்சி நிறுவனங்கள்) இரா.கலைச்செல்வன், பகுத் தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர்கள் (பள்ளி கல்வி) சி.இரமேஷ், வா.தமிழ்பிரபாகரன், ஆத்தூர் மாவட்ட  பகுத்தறிவாளர் கழக தலைவர் வா.முருகானந் தம், வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி,   சி.வெற்றிசெல்வி, பசும்பொன் செந்தில்குமாரி, தி.வே.சு. திருவள்ளுவன், எண்ணூர் மோகன், வட சென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன், செயலாளர் தே.ஒளிவண்ணன், துணைச் செயலாளர் செம்பியம் கி.இராமலிங்கம், கொடுங்கையூர் செயலாளர் தே.சே.கோபால், செம்பியம் தலைவர் ப. கோபால கிருட்டிணன், செயலாளர் டி.ஜி. அரசு, அமைப்பாளர் தி.செ. கணேசன், புது வண்ணை ஏ. மணிவண்ணன், பிரபாகரன், தருமபுரி விஜயன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன்,  ந.கதிரவன், தென்சென்னை சி.செங் குட்டுவன், அரும்பாக்கம் சா. தாமோதரன், தரமணி மஞ்சநாதன், வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், செயலாளர் சுரேஷ், புரசை பகுதி இளைஞரணி காரல் மார்க்ஸ், அம்பேத்கர், விமல்ராஜ், அமுதரசன், யாழ் திலீயன் மங்களபுரம் பா.பார்த்திபன், பெரியார் மாணாக் கன், சக்திவேல், முரளி, சுதன், குமார், ஒளிப்படக் கலைஞர் சிவக்குமார், மாணவரணி லட்சுமணன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

-  விடுதலை நாளேடு,29.4.18