செங்கல்பட்டு, மறைமலைநகரில் அக்டோபர் 4அன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர். அதன் விவரம் வருமாறு:-
சூளைமேடு, சென்னை
தென்சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் 23.08.2025 அன்று மாலை 6.30 மணி அளவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம்; சூளைமேடு, சவுராஷ்டிரா நகர், முதல் தெருவில் சூளைமேடு பகுதி கழகத் தலைவர் நல்.இராமச்சந்திரன் தலைமையிலும், தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட துணைச் செயலாளர் கரு.அண்ணாமலை, மாவட்ட இளைஞரணி தலைவர் ந.மணிதுரை மற்றும் மாவட்ட இளை ஞரணி செயலாளர் பெரியார் யுவ ராஜ் ஆகியோர் முன்னிலையிலும் நடை பெற்றது.
பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி தொடக்க உரையாற்றினார்.முன்னதாக மாலை 5.30 மணி அளவில் அறிவு மாணனின் கொள்கைப் பாடல்களுடன் ‘இசை நிகழ்ச்சி’ நடைபெற்றது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 112ஆவது வட்ட செயலாளர் த.பரி சிறிது நேரம் உரையாற்றினார்.
மாவட்ட துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்ததின் விளைவால் ஏற்பட்ட பயன்களை எடுத்துக் கூறி உரையாற்றினார்.
அடுத்து உரையாற்றிய திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் பா.மணியம்மை சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி மற்றும் திராவிடர் கழகம் போன்றவை மக்களுக்காக ஆற்றிய பணிகளை பட்டியலிட்டு கூறினார்.
திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன் தந்தை பெரியாரின் தொண்டினையும், தந்தை பெரியார் அவர்கள் இட ஒதுக்கீட்டிற்காக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய தையும், தந்தை பெரியாரின் இட ஒதுக்கீடு கொள்கையை நீதிக் கட்சி ஏற்றத்தையும், இட ஒதுக்கீட்டிற்கான அடித்தளத்தை அமைத்ததையும், முத்தையா அவர்கள் இட ஒதுக்கீட்டை சட்டம் ஆக்கியதையும் எடுத்துக் கூறி, இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பட்ட தடைகளையும், போராட்டங்களையும், இட ஒதுக்கீட்டிற் காக இந்திய அரசியல் சட்டம் திருத்தப் பட்டதையும், படிப்படியாக இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்ட வரலாற்றையும் கூறி, ஆசிரியருக்கு கி.வீரமணி அவர் களால் 69% இட ஒதுக்கீடு இந்திய அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு பாது காக்கப்பட்டதையும் விரிவாக எடுத்துக் கூறி செங்கல்பட்டு மாநாடு வெற்றி அடைய அனைவருக்கும் அழைப்பு விடுத்து சிறப்பு உரையாற்றினார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 109 ‘அ’ வட்ட செயலாளர் டேவிட் இன்பராஜ், பொன்சீலன், கிருஷ்ணன், 109 ‘அ’ வட்ட பகுதி பிரதிநிதி ஆர்.சேகர், நீலகண்டன், சிவா, போஸ்டல் பாஸ்கர், பரமேஸ்வரி, சாந்தி, தென்சென்னை மாவட்ட கழக மகளிர் அணி தலைவர் வி. வளர்மதி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.பவானி, செயலாளர் பி.அஜந்தா, ஆர். தமிழ்ச்செல்வி, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, ஆவடி மாவட்ட கழகத் துணை தலைவர் வை. கலையரசன், எம்ஜிஆர் நகர் வெ.கண்ணன், அரங்க.ராசா, வடசென்னை க.செல்லப்பன், அய்ஸ் அவுஸ் உதயா, சூளைமேடு ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக எம்.டி.சி.பா.இராஜேந் திரன் நன்றியுரையாற்றினார்.
1985ஆம் ஆண்டு நடைபெற்ற ஈழத் தமிழர் ஆதரவு போராட்டத்தில், சிறை சென்றவரான சென்னை சூளைமேட் டைச் சேர்ந்த திமுக வழக்குரைஞர் பா.கரிகாலன் (எ) மணி அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (30.8.2024) அவரது துணை வியார் ம.புஷ்பா மணி, மகள்கள்: க.கவிதா கணேசன், க.சரண்யா, கணேஷ் பிரபு, பேரன் பேத்திகளான மாஸ் ஜி.கே.ஆகாஷ், கவுதம், ஜி.எஸ். ஆதித்வருண், ஜி.கே. அட்சய நிவாசினி, ஜி.எஸ்.தருண்மித்ரன் ஆகியோர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
சூளைமேடு, மே 12- தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 4.05.2024 மாலை 6.30 மணி அளவில் சூளைமேடு சவு ராட்டிரா நகர் முதல் தெருவில் சூளைமேடு பகுதி தலைவர் நல். இராமச்சந்திரன் தலைமையி லும் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டத் துணைச் செயலாளர், சா.தாமோ தரன் மற்றும் தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.இரா.மாணிக்கம் ஆகியோர் முன்னிலையிலும் சுயமரியாதை இயக்க நூற் றாண்டு தொடக்க விழா விளக்க பரப்புரை தெருமுனைக் கூட் டம் நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலா ளர் கோ.வீ.ராகவன் வரவேற்பு ரையாற்ற, மாவட்டச் செயலா ளர் செ.ர.பார்த்தசாரதி தொடக்க உரையாற்றினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு. சண்முகப்ரியன் மற்றும் மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் ஆகியோர் விளக்கவு ரையாற்றினர். மாநில கிராமப்புற பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் அவர்கள் சுயமரியாதை இயக்கம் எப்படி தொடங்கியது, எதற்காக தொடங்கியது. சுயமரியாதை இயக்கத்தை தொடங்க வேண் டும் என்ற உணர்ச்சி தந்தை பெரியாருக்கு எப்படி எப்பொ ழுது தோன்றியது. சுயமரியாதை இயக்கம் தோன்றியிராவிட் டால் நம்முடைய நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தி ருக்கும் என்பதை வடநாட்டு ஆதாரங்களை சுட்டிக்காட்டி யும், தந்தை பெரியார் சுயமரி யாதை இயக்கத்தை தோற்றுவிப் பதற்கு முன்பாக இருந்த நிலை மையை எடுத்துக்காட்டியும், தந்தை பெரியாரின் வாழ்க்கை யில் ஏற்பட்ட அனுபவங்களை எடுத்துக்காட்டி சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவிக்க அவைகளே உந்து சக்தியாக அமைந்தது என்பதையும் விளக்கி கூறினார்.
தந்தை பெரியார் தொடங்கிய ‘குடிஅரசு’ இதழ் மூலமாகவே முதலாவதாக சுயமரியாதை பிரச்சாரம் தொடங்கப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக சுயமரி யாதை இயக்கம் தோற்றுவிக்கப் பட்டது. அந்த இயக்கம் பிறகு திராவிடர் கழகமாக இன்று வரை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க கோட் பாடுகளை அடிப்படையாக வைத்து இன்று பல கட்சிகள் தோன்றி செயல்பட்டு வருகின்றன.
மனித உரிமைகள் போற்றப் படவில்லை, மனிதன் மனிதனாக மதிக்கப்படவில்லை, மனிதனுக் கான அடிப்படை உரிமைகள் வழங்கப்படவில்லை, எல்லாம் எல்லாருக்கும் என்ற நிலை இல்லை, பார்ப்பனர்களுக்கு அடிமையாக பார்ப்பன தத்து வங்களுக்கு அடிமையாக மட்டுமல்ல பார்ப்பனர்களையே கடவுளாக வணங்கும் நிலையில் இருந்தார்கள் . இந்திய ஒன்றியமாக வெள் ளைக்காரர்களால் ஒன்றிணைக் கப்பட்ட இந்த இந்திய நாட்டில் இருக்கின்ற இது போன்ற பிரச்சினைகளை முன்வைத்து நமது தமிழ்நாட்டை மய்யமாகக் கொண்டு சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் தொடங்கினார்.
பல பெயர்களில் உலகில் பல கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால் இங்கே தந்தை பெரியார் ஒருவர்தான் சுயமரியாதை இயக்கம் என்ற பெயரில் சமூகப் புரட்சி இயக்கத்தை தொடங்கினார். சுயமரியாதை தான் மனிதனுக்கு முக்கியம் என்று உலகத்திற்கு உணர்த்தி யவர் தந்தை பெரியார். ‘மனிதன் என்றால் மானம் உள்ளவன் தான்!’ என்று மனிதனுக்கு விளக்கம் அளித்தார் தந்தை பெரியார்.
அழகுக்கு விளக்கம் தந்த பெரியார் ‘மனிதனுக்கு மானமும் அறிவும் அழகு’ என்று கூறினார். இதில் மானத்தை தான் முதன் மைப்படுத்தினார். மனிதன் மனிதனாக இருக்க வேண்டும் என்றால் உலக மொழிகளில் உள்ள சொற்களை எல்லாம் எடுத்து போட்டுப் பார்த்தால் சுயமரியாதை என்ற சொல்லுக்கு இணையாக எந்த சொல்லும் இல்லை என்றார். ஜெயிலுக்கு போகாமல் இருக்க வழக்குரைஞர் வைத்து எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய பலர் தயாராக உள்ள நிலையில் தந்தை பெரியார், சிறைக்கு செல்ல தயங்கியதே கிடையாது. வைக்கத்தில் கை, கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில் சளைக்காமல் கல்லு டைத்தவர் தந்தை பெரியார்.
பார்ப்பனர்களால் கட்ட மைக்கப்பட்ட கடவுள் தத்துவத் தில் கட்டுண்டு ஏமாற்றப்பட்டு, அடிமைத்தன்மையுடனும், கீழ் மக்களாக தமிழர்கள் வாழ்ந்து வருவதையும் விளக்கி கூறி; கட வுளின் பெயரால் நடத்தப்படும் கொடுமைகளையும் ஜாதி முறைகளையும் தகர்க்க தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் மூலமாக பரப்புரை செய்து போராடி வென்று காட்டினார். 1921இல் கணக்கெடுக்கப் பட்ட ஒரு வயது முதல் 12 வயது வரை உள்ள கைம்பெண்கள் பட்டியலை படித்துக் காட்டி திருமண உறவுக்கு தகுதியே இல்லாத பெண்களுக்கு (1 முதல் -12 வயதுள்ள) அம்மா என்றே கூப்பிட தெரியாத ஒரு வயது குழந்தைக்கு திருமணம் செய்து வைத்த கொடுமையை, இந்து மதம் என்ற பெயரில் பார்ப் பனர்கள் செய்து வந்தனர். இதை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் போராடி வெற்றி கண்டது.
நீதிமன்றமே குற்றம் சுமத்தப் பட்ட மனிதன் இறந்து விட் டால், அதோடு முடித்துக் கொள் கிறது. ஆனால் இந்து மதத்தில் மனிதன் இருக்கும் போது மட்டும் சுரண்டப்படுவதில்லை இறந்த பின்பும் சுரண்டப்படு கிறான். சுயமரியாதை இயக்கம் எல்லோரும் படிக்கும் வாய்ப்பை உண்டாக்க வேண்டும், மனி தனை மனிதனாக மதிக்க வேண்டும் சுயமரியாதை உடன் வாழ வேண்டும் என்பதற்காக போராடி எல்லோருக்கும் கல்வி வாய்ப்பு வேலை வாய்ப்பு போன்றவற்றை பெற்று தந்தது. ‘நேக்கு தான் படிப்பு வரும்; நோக்கு வராது!’ என்று பார்ப் பனர்கள் சொன்னார்கள். சுய மரியாதை இயக்கத்தின் பயனால் இந்தியாவின் முதல் நிதி அமைச் சராக சர் ஆர். கே. சண்முகம் செட்டியாரும், முதல் சட்ட அமைச்சராக டாக்டர் அம் பேத்கரும் பொறுப்பேற்றனர். அம்பேத்கர் இந்திய அரசமைப் புச் சட்டத்தையே எழுதி கொடுத்தார். நீதி கட்சி படிக்கும் வாய்ப்பு தந்தது, காமராஜர் வந்தார், கல்வி நீரோடையை திறந்து விட்டார். திராவிட முன்னேற்ற கழகம் வந்தது கல்லூரி வரை படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்தது. தமிழ்நாடு உயர் கல்வியில் 52% , ஆல் இந்தியா டாப் – டாப் 10! பெண்களும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட் டோரும் அதிக மதிப்பெண் வாங்கி முன்னணியில் வந்து கொண்டுள்ளனர். நேக்கு தான் வரும் நோக்கு வராதுன்னு சொன்னிங்களே! நேக்கு வருது; நோக்கு ஏன் வரலை? அறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியாரின் தொண்டை பற்றி கூறும் போது, ‘தூற்றியவர் களின் கண் முன்னே வெற்றியைக் கண்டவர்’என்றார்.
இன்று இந்தியா முழுக்க தந்தை பெரியார் தேவைப்படு கிறார். அன்று தந்தை பெரியா ரின் கொள்கைகளை ஏற்க மறுத்த காங்கிரஸ் கட்சி, இன்று தந்தை பெரியாரின் கொள்கை யின் தாக்கத்தினால் மாறுதல் அடைந்து இந்தியா முழுக்க இக்கொள்கைகளை எடுத்துச் செல்ல முனைப்பு காட்டுகிறது. என்று கூறி தனது சிறப்பு ரையை முடித்தார்.
பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் ஆ.வெங்க டேசன், தென்சென்னை மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.மாரியப்பன், இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, குன்றத்தூர் மு. திருமலை, மா.சண்முகலட்சுமி , எம்.ஜி.ஆர்.நகர் கரு.அண்ணாமலை, ஆவடி மாவட்ட துணை செயலாளர் க.தமிழ்ச்செல்வன், தாம்பரம் நகர தலைவர் சு.மோகன்ராஜ், ஆவடி மாவட்ட க.பாலமுரளி, படப்பை சந்திரசேகரன், எஸ். ஜெயகோபி, ஆர். நீலகண்டன் (திமுக), டி. ராஜா, மா. சண்முக லட்சுமி, ம. மூவேந்தன், ரா. சேகர், பி. வெங்கட்ராமன், ரா. தமிழ்ச்செல்வி, அய்ஸ் அவுஸ் உதயசூரியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். எம்.டி.சி. பா. இரா ஜேந்திரன் நன்றி உரையாற்றினார்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியவர்களின் பற்றாளரும், இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான சூளைமேடு சவுராட்டிரா நகர், 9ஆவது தெரு கோ.பாலகிருஷ்ணன் (வயது 100) 3ஆம் ஆண்டு (2.12.2023) நினைவாக அவரின் மகன்கள் பா.துரை ராஜ், ஆடிட்டர் பா.இராஜேந்திரன் (ஓய்வு) ரூ.500, நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கியுள்ளனர். நினைவு கூரும் குடும்பத்தினர் மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன் - பேத்திகள்.
சென்னை, சூளைமேடு, கில்நகர் பகுதியில் உள்ள 'கேந்திரிய வித்யாலயா' பள்ளியின் பெயர் பலகையில் ஹிந்தி முதலிடத்திலும், தமிழ் மூன்றாம் இடத்திலும் உள்ளதை சுட்டிக்காட்டி படத்துடன் 30.09.2014 'விடுதலை' நாளேட்டில் நான் அனுப்பிய செய்தி வெளியிடப்பட்டது. அப்போதைய ஆட்சி இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இச்செய்தியை மீண்டும் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் 30.09.2023இல் செய்தி வெளியிட்டு இருந்தேன். தற்போதைய திராவிட மாடல் ஆட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்ததின் விளைவாக அறிவிப்புப் பலகை மாற்றப்பட்டு தமிழ் முதலாவதாக இடம் பெற்றுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்த திராவிட மாடல் ஆட்சிக்கு பாராட்டுகள்!
* சென்னை சூளைமேடு சவுராஷ்டிரா நகர் 9ஆவது தெரு வைச் சேர்ந்த இரா.கோமளா (WCS) 17ஆம் ஆண்டு (8.12.2022) நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன் கொடையை அவரது நினைவாக கணவர் பா.இராசேந்திரன், மகள்கள் ஆர்.பிரியதர்சினி-ஆனந்த்குமார், ஆர்.திவ்யா-கோகுல்ராஜ், மகன் ஆர்.வெற்றிச்செல்வன்-வெ.அகிலா, பேத்தி கோ.லக்சிதா, பேரன் கோ.கவின் ஆகியோர் வழங்கினர்.
* தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியவர்களின் பற்றாளரும், இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான சூளைமேடு சவுராட்டிரா நகர், 9ஆவது தெரு
கோ.பாலகிருஷ்ணன் (வயது 97) 2ஆம் ஆண்டு (2.12.2022) நினைவாக அவரின் மகன்கள் பா.துரை ராஜ், ஆடிட்டர்
பா.இராஜேந்திரன் (ஓய்வு) ரூ.500, நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கி யுள்ளனர். மற்றும் நினைவு கூரும் குடும்பத்தினர் மகன்கள், மருமகள் கள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன்- பேத்திகள்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகிய வர்களின் பற்றாளரும், இராணு வத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வருமான சூளைமேடு சவுராஷ்ட்ரா நகர் பி.பாலகிருஷ்ணன் (வயது 96) அவர்களின் முதலாம் ஆண்டு (2.12.2021) நினைவாக அவரின் மகன்கள் பா.துரைராஜ், ஆடிட்டர் பா.இராஜேந்திரன் (ஓய்வு) ரூ.500, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கியுள்ளனர். மற்றும் நினைவு கூரும் குடும்பத்தினர் மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்திகள்.
திராவிடர் கழக நிகழ்ச்சிகளிலும் போராட்டங் களிலும் பங்கேற்றுவரும் சூளைமேடு பிடிசி ராஜேந் திரன் அவர்களின் தந்தையும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் அவர்களின் பற்றாளரும், இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான சூளைமேடு சவுராஷ்ட்ரா நகர் 9ஆவது தெருவை சேர்ந்த கோ.பாலகிருஷ்ணன் (வயது 97) அவர்கள் 2.12.2020 அன்று மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். 3.12.2020 அன்று மாலை 3 மணி அளவில் அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்புக்கு: 9710242747.
சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகரைச் சேர்ந்த கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையை அவரது நினைவாக கணவர் பா.இராசேந்திரன், மகள்கள்: ஆர்.பிரியதர்சினி - ஆனந்த்குமார், ஆர்.திவ்யா - கோகுல்ராஜ், மகன்: ஆர்.வெற்றிச்செல்வன் - வெ.அகிலா, பேத்தி: கோ.லக்சிதா ஆகியோர் வழங்கினர்.
சூளைமேடு, ஜூலை 22- தென்சென்னை மாவட்ட சூளைமேட்டில் எழுச்சியுடன் நடந்தது தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம். 17.7.2019 புதன்கிழமை மாலை 6 மணி அளவில் தென்சென்னை மாவட்ட சூளைமேடு பகுதி திராவிடர் கழகம் சார்பில், சவுராஷ்டிரா நகர், நூங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில், சூளைமேடு பகுதி தலைவர் ந.ராமச் சந்திரன் தலைமையிலும், இரா.வில்வ நாதன், செ.ர.பார்த்தசாரதி, டி.ஆர். சேதுராமன் மற்றும் சா.தாமோதரன் ஆகியோர் முன்னிலையிலும், கோ. வீ.ராகவன் அவர்கள் வரவேற்புரை ஆற்ற மிக எழுச்சியுடன் நடைபெற்றது.
மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் சே.மெ.மதிவதனி, மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மண்டல செயலாளர் தே.செ.கோபால், வட சென்னை செயலாளர் தி.செ. கணேசன், கோ.தங்கமணி, த.தனலட்சுமி, கோ.மஞ்சநாதன், க. தமிழ்ச்செல்வன், மு.சேகர், ஈ.குமார், மு.திருமலை, மு.பாலமுரளி, மு.பவானி, பி.டி.சி.இரா சேந்திரன், கோபாலகிருஷ்ணன், சு. அன்புச்செல்வன், தளபதி பாண்டியன், காரல் மார்க்ஸ் உடுமலை வடிவேலு, பெரியார் மாணாக்கன், அரும்பாக்கம் மகேந்திரன், செகதீசு மற்றும் கழகத் தோழர்களும் கலந்துகொண்டனர். மொதுமக்கள் கருத்துகளை செவி மடுத்து எழுச்சி பெற்றனர்.
மாவட்ட மாணவர் கழகத் தலைவர் வி.விசுவாசு நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத் தார். முன்னதாக இரண்டு நாள்கள் பகுதி முழுவதும் துண்டறிக்கை வழங்கி கூட்டம் குறித்து விளம்பரம் செய்யப்பட்டது.