வெள்ளி, 26 மே, 2023

மயிலை எஸ்.முரளி (தி.மு.க.) விடுதலை சந்தா ரூ.10 ஆயிரம் தமிழர் தலைவரிடம் வழங்கினார்

விடுதலை சந்தா

14

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை திமுக மயிலை கிழக்குப் பகுதிச் செயலாளர் எஸ்.முரளி சந்தித்து விடுதலை சந்தா தொகை ரூ.10 ஆயிரம் வழங்கினார். உடன்: தொழில் முனைவர் பி.எஸ்.ராஜ், 124ஆவது வட்ட திமுக பொறுப்பாளர் மா.ப.அன்பு,  தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டத் துணைத் தலைவர் மயிலை சேதுராமன், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி உள்ளனர். (சென்னை, 25.5.2023)


செவ்வாய், 23 மே, 2023

விடுதலை வாழ்நாள் சந்தா- சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு பத்து விடுதலை வாழ்நாள் சந்தா உறுதி செய்யப்பட்டது


 5

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையில் திமுக மாநில இளைஞரணி  செயலாளர்  உதயநிதி ஸ்டாலினின் தனி உதவியாளர் செந்திலை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன் ஆகியோருடன் சந்தித்து சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு பத்து விடுதலை வாழ்நாள் சந்தாவினை உறுதி செய்தனர்.

திராவிடர் கழகத்தின் அமைப்பு - செயல்முறைத் திட்டங்கள்

 

 13.5.2023 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்களுள் நிறைவான தீர்மானம் கழக அமைப்பு - நிர்வாக முறையில் காலத்துக்கேற்ற வகையில் புதிய மாற்றங்களும் செயல்முறைகளும் வடிவமைத்துள்ளது. 

நடப்பில் இருந்து வந்த மண்டல தலைவர்கள், செயலாளர் என்ற அமைப்பு முறை நீக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று கழக மாவட்டங்களில் கழகப் பணிகளை முடுக்கி விடவும் மாவட்டக் கழக - ஒன்றிய நகர கிளைக் கழகப் பொறுப்பாளர்களுடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டு, கழக செயல்பாடுகளில் புதிய இரத்தம் பாய்ச்சும் வகையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. 

தலைமைக் கழகத்தைப் பொறுத்தவரையில் பொதுச் செயலாளர்கள் ஒருங்கிணைப்புப் பணிகளைக் கவனித்துக் கொள்வார்கள். (மானமிகு வீ. அன்புராஜ், டாக்டர் துரை. சந்திரசேகரன் ஆகியோர்) மற்ற மாநில பொறுப்பாளர்களுக்கும் - மாறி மாறி இதில் இணைந்து - மாதத்தில் இத்தனை நாட்கள் தலைமைக் கழகத்தில் இருக்கும் வகையில் திட்டமிடப்படும்.

மாநில ஒருங்கிணைப்பாளர்களாக தோழர்கள் தஞ்சை 

இரா. ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன் ஆகியோர் பணியாற் றுவார்கள். அவர்களுக்கென்று பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தோழர்கள் பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி ஆகிய இருவரும் துணைப் பொதுச் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டனர். 

ஏற்கெனவே பொறியாளர் ச. இன்பக்கனி, துணைப் பொதுச் செயலாளராக இருந்து பணியாற்றி வருகிறார்.

மற்றபடி ஏற்கெனவே இருந்த மாநிலப் பொறுப்பாளர்கள் அவர்களுக்குரிய பணிகளை மேற்கொள்வார்கள்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை அரசியல், தேர்தலில் பங்கேற்காத மாபெரும் சமூகப் புரட்சி இயக்கம்.

அதே நேரத்தில் அரசியல் எக்கேடு கெட்டால் என்ன? என்று அலட்சியப் போக்கில் இயங்காமல், யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைவிட யார் வரக் கூடாது என்பதில் விழிப்புடன் கருத்து செலுத்தி, மக்கள் சிந்தனையைக் கூர் தீட்டும் பிரச்சார இயக்கம்.

இதன் அணுகுமுறை, பிரச்சாரம் - போராட்டம் என்பதாகும். இந்தியாவிலேயே சமூக விழிப்புணர்ச்சியில் தலை சிறந்த நிமிர்ந்த மாநிலமாக தமிழ்நாடு ஒளி வீசுகிறது என்றால், அதற்குக் காரணம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும் அவரால் தோற்றுவிக்கப்பட்டு, தொடர்ந்து வீறுடன் செயல்பட்டு வரும் திராவிடர் கழகமுமேயாகும். 

மக்கள் பிறப்பின் அடிப்படையில் உயர்வு  - தாழ்வு என்று பேதப்படுத்தப்பட்டு, பிளவுபடுத்தப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டுக் கிடக்கும் அவல நிலையை மாற்றி "பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடம்" என்ற தந்தை பெரியாரின் ('குடிஅரசு' 11.11.1944) சமத்துவக் கோட்பாட்டில் நின்று, அனைவருக்கும் அனைத்தும் என்ற இலக்கை அடைய சுயநலம் பாராது, எந்த ஒரு நியாயமான உரிமையைப் பெறுவதாக இருந்தாலும், அதற்குரிய விலையைக் கொடுத்தாக வேண்டும் என்ற உறுதியோடு, தொண்டாற்றக் கூடிய கருப்பு மெழுகுவர்த்திகளுக்கு மறுபெயர்தான் திராவிடர் கழகமும், அதில் அணி வகுக்கும் கழகத் தோழர்களும்.

பேதங்களுக்கு மூல காரணமாக இருப்பது கடவுளாக இருந்தாலும், மதமாக இருந்தாலும், வேதங்களாக இருந்தாலும் சாஸ்திரங்கள், இதிகாசங்கள், புராணங்களாக இருந்தாலும் சரி - ஏன் அரசமைப்புச் சட்டமாக இருந்தாலும் சரி, அவற்றை எதிர்ப்பதும், எரிப்பதும் திராவிடர் கழகத்தின் நடைமுறை செயல்முறையாகும்.

இக்கொள்கையை ஏற்றுக் கொண்டு களத்தில் நின்று போராடுவோர் ஒருவகை, கருப்புச் சட்டை அணியாமல் கழகத்தில் உறுப்பினர்களாக இல்லாமல், அதே நேரத்தில் இந்த இயக்கத்திற்குக் கண்ணுக்குத் தெரியாமல் வேராக இருக்கக் கூடியவர்கள் இன்னொருவகை - இதனைத்தான் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் Visible, Invisible Members  என்று வெகு நேர்த்தியாகக் கூறுவார். 

இந்துத்துவா என்றும் இந்து ராஜ்ஜியம் என்றும், ராமராஜ்ஜியம் என்றும் நாட்டில் ஒரே மதம் தான் என்றும் கூறக் கூடிய காவிக் கூட்டம் (சங்பரிவார்) ஆட்சி அதிகார பீடத்தில் அமர்ந்து பார்ப்பனீய ஆதிபத்தியத்தை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், திராவிடர் கழகத்தின் பணி, செயல்பாடு தமிழ் மண்ணையும் தாண்டி இந்தியத் துணைக் கண்டத்திற்கே தேவையான ஒன்றாகி விட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குக்கிராமம் உட்பட கழகக் கொடி விடுதலை, பிரச்சாரம் என்பவை முகவரியாக இருக்க வேண்டும் என்று ஈரோடு தீர்மானம் வழிகாட்டியுள்ளது.

இதில் ஒரு வியக்கத்தக்க உண்மை என்னவென்றால் தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தின் கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்காதவர்கள்கூட, கழகத்தின் சமூகநீதி உள்ளிட்ட கொள்கைகளை வலுவாகப்பற்றிக் கொண்டு தந்தை பெரியாரை நெஞ்சில் நிறுத்திக் கொண்டு இருப்பதுதான்!

ஆம், தந்தை பெரியார் கொள்கை என்பது ஒரு வாழ்க்கை நெறி - வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் ஈரோட்டுப் பாதை.

இதன் அவசியத்தை உணர்ந்து தான் கழகம் இல்லாத ஊரே இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு இயக்க அமைப்பு முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவை பதவிகள் அல்ல - கடமையாற்றும் பொறுப்புகளாகும்.

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு - மானமும் அறிவும் மனிதனுக்கழகு - ஆண் - பெண் சரிநிகர் இவற்றை வேண்டாம் என்று யார்தான் கூற முடியும்?

கழகத்தில் புதிய பொறுப்பேற்றுள்ள கருஞ்சட்டையினரே பம்பரமாகச் சுழன்று, தேனீக்களாகப் பறந்து பறந்து பணியாற்றுவீர்! இது திராவிட பூமி, பெரியார் மண் என்பதை நிலை நாட்டுவீர்! நூறாண்டைக் கண்ட இயக்கம் இளமை இரத்தத்தோடு, துடிப்போடு தந்தை பெரியார் பணி முடிப்போம் தமிழர் தலைவர் தலைமையில் அணிவகுப்போம்!

ஈரோடுதானே எப்பொழுதும் வழிகாட்டக் கூடியது - இப்போதும் வழிகாட்டியுள்ளது.

புதன், 17 மே, 2023

ஈரோடு - சிறப்புத் தீர்மானம் -2

  

கடந்த 13ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் சிறப்புத் தீர்மானம் ஒன்றை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் முன்மொழிந்தார். அத்தீர்மானத்தை அனைவரும் எழுந்து நின்று கரஒலி எழுப்பி வரவேற்று வழிமொழிந்தனர்.

அத்தீர்மானம் வருமாறு:

"சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, சேரன்மாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழா, சிந்துவெளி அகழாய்வுகள் மூலம் திராவிடர்களின் தொன்மை வரலாற்றை வெளிப் படுத்திய சர்ஜான் மார்ஷலின் ஆய்வு நூற்றாண்டு ஆகிய தந்தை பெரியார் - நமது இயக்கம் தொடர்புடைய நூற்றாண்டு விழாக்கள் அடுத்தடுத்து வரும் நிலையில், அவற்றின் அடிப்படை நோக்கம்- ஜாதி - தீண்டாமை ஒழிந்து சமத்துவ சமுதாயம் அமைக்கும் பணியில் வெற்றி காண்பதற்கான தந்தை பெரியாரின் தொடர் போராட்டம், போர்க்குணம் - இவற்றின் உள்ளடக்கம், முக்கிய அம்சங்கள், தியாகச் சுவடுகள் - இவற்றால் ஏற்பட்ட சமூக மாற்றங்களை மக்கள் மத்தியில் - குறிப் பாக, சிறப்பாக இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதற்கான முன் முயற்சித் திட்டங்களை வகுத்து, வெகு மக்களைப் பெரும் அளவில் ஈர்க்கும் வகையிலும் - இவற்றின் தாக்கம் அனைத்து மாநிலங்களிலும் பரவும் வண்ணமும் சிறப்பாக நடத்துவது என்றும், 

வரலாற்றையே புரட்டிப் போட்ட இந்த நிகழ்வுகள் நமது இயக்க வரலாற்றில் முதன்மையானதும், மிக மிக முக்கிய மானதும், திராவிட சித்தாந்தத்தின் தனித்தன்மையும் உடையது என்ற காரணத்தால் நமது தோழர்கள் பெரும் அளவில் ஒத்துழைப்புத் தந்து வரலாறு போற்றும் விழாக் களாக இவற்றை நடத்துவது என்று இப்பொதுக் குழு உணர்ச்சிப் பெருக்கோடு தீர்மானிக்கிறது."

தந்தை பெரியார் மற்றும் நம் இயக்கத் தொடர்புடைய இந்த நூற்றாண்டு விழாக்கள் என்பவை வரலாற்றைப் புரட்டிப் போட்டவையேயாகும். 

தந்தை பெரியார் 1925 நவம்பர் 22ஆம் நாள் காங்கிரசை விட்டு வெளியேறிய நிலையில் சுயமரியாதை இயக்கம் கண்டார்.

இன்னும் சொல்லப் போனால் காங்கிரசில் இருந்த போதே தன்மான கருத்துகளையும், இனமான சிந்தனைகளையும், பகுத்தறிவு எண்ணங்களையும் மக்கள் மத்தியில் பரப்பிட 'குடிஅரசு' என்னும் வார இதழை அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே 2.5.1925 அன்று தொடங்கினார்.

காங்கிரசை விட்டு தந்தை பெரியார் வெளியேறியதற்கே காரணம் - தொடர்ந்து அக்கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்த நிலையிலேயே பார்ப்பனர் அல்லாதார்க்கும் இட ஒதுக்கீடு என்ற வகுப்புரிமை கோரும் கருத்தை வலியுறுத்தியும் - மாநாடுகளில் தீர்மானங்களைக் கொண்டு சென்றும் - வலியுறுத்திய நிலையில் காங்கிரஸ் என்பது, அக்கால கட்டத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கப் பிடியில் இருந்த காரணத்தால், அத்தீர்மானங்களை நிறைவேறச் செய்யாமல் பார்த்துக் கொண்டனர்.

1925 நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற 31ஆம் காங்கிரசு மாநாட்டின் இரண்டாவது நாளில் வகுப்புரிமை தீர்மானத்தை தந்தை பெரியார் கொண்டு சென்ற நிலையில், பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் - இவ்வளவுக்கும் அம்மாநாட்டிற்கு தந்தை பெரியாரின் அருமை நண்பர் திரு.வி.க. தலைமை வகித்திருந்த போதிலும் - அவரும் பார்ப்பனர் தம் சூழ்ச்சிக்குப் பலியாக -  தந்தை பெரியார் அம்மாநாட்டில் கொண்டு சென்ற தீர்மானம் அனுமதிக்கப்படவே இல்லை.

காங்கிரசில் இருந்து கொண்டே, 'இனி பார்ப்பனர் அல்லாதாருக்கு வகுப்புரிமையைப் பெற்றுத் தர வாய்ப்பில்லை என்பதைத் திண்மையாக உணர்ந்த நிலையில், காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார் தந்தை பெரியார், என்பதுதான் வரலாறு.

தந்தை பெரியார் எந்தக் காரணத்துக்காக காங்கிரசை விட்டு வெளியேறினாரோ, அந்தக் காரணம் இப்பொழுது காரியமாகி விட்டதைப் பார்க்கிறோம்.

தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடும், ஒன்றிய அரசில் பட்டியலின மக்களுக்கு 22.5 விழுக்காடும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடும் சட்ட ரீதியாகக் கிடைக்கப் பெற்றன என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

வருணாசிரமமும், ஜாதி ஒழிப்பும் என்று வருகிற போது - பார்ப்பனர்களை எதிர்ப்பதோடு, அது  நின்று விடவில்லை; காந்தி யாரையுமே எதிர்க்க வேண்டிய நிலை, சுயமரியாதை இயக்கத்திற்கு ஏற்பட்டது.

காந்தியார் பேசுகிறார்: "ஒவ்வொரு வருணத்தாருக்கும் ஒவ்வொரு தர்மம் விதிக்கப்பட்டிருக்கிறது. அவரவருக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை அந்தந்த வருணத்தார் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது, அவர்கள் உயர்ந்த வர்களாகிறார்கள். பிராமணனுக்குச் சில தர்மங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை அவன் சரிவர நிறைவேற்றும் போது, அவன் உயர்ந்தவனாகிறான். ஜனசேவையே பிராமணனுடைய முக்கிய தர்மம். எளியவர்களைப் பாது காப்பது ஷத்திரியனுடைய தர்மம்.

அந்தத் தர்மத்தை அவன் செய்யும்போது, அவன் மற்றெல்லோரிலும் மேம்பட்டவனாகிறான். இம்மாதிரியே இதர வருணத்தினர்களும் தத்தமக்கு ஏற்பட்ட தர்மங்களை, கடமைகளை செய்கையில், அவர்கள் உயர்ந்தவர்களா கிறார்கள். இப்படி இருக்கையில் உயர்வு - தாழ்வு எங்கிருந்து வருகிறது? வர்ணசிரம தர்மமானது. சமுதாய நலத்தை ரட்சிப்பதற்காகவே ஏற்பட்டது. மற்றபடி ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை ரட்சிப்பதற்கு ஏற்பட்டதல்ல." - காந்தியார்  1927இல் மைசூரில் பேசிய பேச்சுதான் இது.

இதுகுறித்து பெங்களூருவில் காந்தியாரைச் சந்தித்து மூன்று மணி நேரம் விவாதம் செய்திருக்கிறார் தந்தை பெரியார்.

எந்த வருணாசிரம தர்மத்தை காந்தியார் தூக்கிப் பிடித்தாரோ, அந்த வர்ணாசிரம கொள்கையுடைய சக்திகளே காந்தியாரைப் படுகொலை செய்தன என்பதும் காலத்தின் கல்வெட்டு.

காந்தியாரை நான்தான் கொன்றேன் என்று ஒப்புக் கொண்ட நாதுராம் கோட்சே என்ற சித்பவன் பார்ப்பான், வருணாசிரம தர்மத்தை உற்பத்தி செய்தவன் என்று பெருமை அடித்துக் கொள்ளும் அந்தக் கிருஷ்ணனின் கீதையிலிருந்தே சுலோகத்தை எடுத்துக்காட்டி நியாயப்படுத்தினான் என்பது அடிக்கோடிட்டுக் கவனிக்கத்தக்கதாகும்.

இன்றைக்குத் தமிழ்நாட்டு அளவில் வருணாசிரம விரியனின் கொட்டம் அடங்கி இருக்கிறது - பெயருக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டுள்ள ஜாதி பட்டங்கள் மறைந்திருக்கலாம்; ஜாதிப் பட்டங்களை போட்டுக் கொள்வதற்கு வெட்கப்படுகிறார்கள் என்றால் அதற்கு விழுமிய காரணம் தந்தை பெரியாரும் அவர் கண்ட சுயமரியாதை இயக்கமும், பிரச்சாரமும்தானே!

இப்பொழுது மீண்டும் அந்த வருணாசிரமத்தை உயிர்க் கருவாகக் கொண்ட ஹிந்து ராஜ்ஜியத்தை ராமராஜ்ஜியத்தை உருவாக்கும் சக்திகள் இந்தியாவின் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்துள்ள நிலையில் - சுயமரியாதை இயக்கத்தில் ஜாதி ஒழிப்புக் கொள்கையின் வீச்சு முன்னிலும் வேகமாகத் தேவைப்படுகிறது.

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவாக இருந்தாலும் சரி, தீண்டாமை ஒழிப்புக் களமான வைக்கம் போராட்டத்தின் வெற்றி விழா நூற்றாண்டாக இருந்தாலும் சரி, சேரன் மாதேவி குரு குலப் போராட்டமாக இருந்தாலும் சரி,  இந்தியாவையே தன் பக்கம் ஈர்க்கும் நூற்றாண்டு விழாவாக நாம் நிமிர்ந்து நின்று கொண்டாட வேண்டும் என்ற மிக முக்கியமான தீர்மானத்தை கழகத் தலைவர்  மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களே முன்மொழிந்துள்ளார். 

இது ஒரு கட்சிக்கான விழாவாக அல்ல; மனித சமத்துவம் விரும்பும் அனைவருக்கும் அனைத்தும் என்னும் சமதர்மம் விரும்பும் ஒவ்வொரு மனிதனும் இந்த நூற்றாண்டு விழாக்களுக்குக்  கை இணைக்க வேண்டும்!

ஈரோட்டுத் தீர்மானம் இந்தியத் துணைக் கண்டத்திற்கே ரோடு போடும் சமத்துவ சமதர்ம சுயமரியாதைப் பார்வை கொண்டதாகும். அந்த வகையில் ஈரோட்டில் கடந்த சனிக்கிழமையன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிறைகுடமாகும்!

ஈரோட்டுத் தீர்மானம் (1)

  

கடந்த 13.5.2023 சனியன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டம் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பு வாய்ந்ததாகும்.

முதல் சுயமரியாதை மாநில மாநாடு செங்கற்பட்டில் 1929இல் நடைபெற்றது.

அம்மாநாட்டில் தான் "மக்கள் தங்கள் பெயர்களோடு ஜாதி அல்லது வகுப்பைக் காட்டுவதற்காகச் சேர்க்கப்படும் பட்டங்களை விட்டு விட வேண்டுமென்று இம்மாநாடு பொது ஜனங்களைக் கேட்டுக்  கொள்கிறது" என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, அம்மாநாட்டிலேயே ஜாதிப் பட்டங்களைச் சேர்த்து அதுவரை அழைக்கப்பட்டு வந்த சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் அவர்கள் நாடார் பட்டத்தைத் துறந்தார்.

சிவகங்கை வழக்குரைஞர் இராமச்சந்திரன் சேர்வைப் பட்டத்தைத் தூக்கி எறிந்தார்.

மாநாட்டில் விருதுநகர் நாடார்கள் சமைத்துப் பரிமாறுவார்கள்.   அனைவரும் சமமாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று முன் கூட்டியே அறிவிக்கப்பட்டு, அவ்வாறே நடத்தப்பட்டதே! அந்தக் கால கட்டத்தில் இது சாதாரணமானதா?  

சுயமரியாதை இயக்கத்தின் இரண்டாவது மாநாடு இதே ஈரோட்டில்தான் - எம்.ஆர். ஜெயகர் தலைமையில் மாநாடு நடைபெற்றது (10.5.1930).

அம்மாநாட்டிலும் இதே நோக்கத்தைக் கொண்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

தீண்டாமை என்னும் கொடுமை மனித தர்மத்திற்கு விரோதமென்று இம்மாநாடு கருதுவதுடன், ஜனசமூகத்தில் எந்த வகுப்பார்க்கும், பொது உரிமைகளை மறுக்கும் பழக்க வழக்கங்களை உடனே ஒழிக்க வேண்டுமென்றும், பொது ரஸ்தாக்கள், குளங்கள், கிணறுகள், தண்ணீர்ப் பந்தல்கள், கோயில்கள், சத்திரங்கள் முதலிய இடங்களில் சகலருக்கும், சகல உரிமைகளையும் வழங்க வேண்டுமென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது என்று இதே ஈரோட்டில் இன்றைக்கு 93 ஆண்டுகளுக்குமுன் முடிவு செய்யப்பட்டது. 

வெறும் தீர்மானத்தோடு முடங்கிப் போய் விடவில்லை. நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் (திராவிட இயக்க ஆட்சியில்) இந்த வகையில் பல ஆணைகளும் கொண்டு வந்து செயல்படுத்தப்பட்டன.

ஈரோட்டில் (13.5.2023) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த ஆணையையும் எடுத்துக் காட்டினார்.

"எந்தப் பொதுச் சாலையிலோ, தெருவிலோ, அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும். தடுக்க முடியாது என்பதையும், எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும் அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் - இருந்தாலும் இவைகளில் எல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்டு என்பதையும் சென்னை அரசாங்கம் ஒப்புக் கொண்டு, அதைத் தீர்மானமாக நிறைவேற்றி, எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாகாக்களுக்கும் அனுப்பப்பட்டது. (அரசு ஆணை எண் 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி 25.9.1924).

1936 வாக்கில் இந்த வகையில் 9614 பள்ளிகள் வழிக்குக் கொண்டு வரப்பட்டன. தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அவர்களால் இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டு நீதிக்கட்சி ஆட்சியில் (பனகல் அரசர் முதன்மை அமைச்சர்) நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சி பிற நகராட்சி மாவட்ட நாட்டாண்மைக் கழகங்கள் போன்றவை நடத்தும் பள்ளிகளில் இன்னும் மிகுதியாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் பள்ளியில் பயிலுவோர் பட்டியலை அனுப்பும்போது, பள்ளியில் சேர்க்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர் பற்றிய விவரங்களையும் அனுப்ப வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது பனகல் அரசரைப் பிரதமராகக் கொண்ட நீதிக்கட்சி ஆட்சி (G.O.No.205 Dated: 11.2.1924 Law [Education] Department) 

இவற்றை எல்லாம் எடுத்துச் சொல்லுவதற்குக் காரணம் இந்த 2023ஆம் ஆண்டிலும் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மலத்தை வீசிய கொடுமை நிகழ்வது கண்டு வெட்கப்பட வேண்டாமா!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் திட்டம் கழகத்தில் இருக்கிறது. 

கடந்த சனியன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் வைக்கம் நூற்றாண்டு விழா பற்றி முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

1925 நவம்பர் 29இல் வைக்கத்தில் நடைபெற்ற வெற்றி விழாவுக்குத் தந்தை பெரியார் தலைமையேற்க அன்னை நாகம்மையாரும் பங்கு கொண்டார்.

இந்த நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம் என்றால், இன்னும் ஜாதீய கொடுமைகள் தலை தூக்குகின்றனவே - அவற்றின் நச்சு ஆணிவேரை நசுக்கிப் பொசுக்கும் விழிப்புணர்வை  ஏற்படுத்த உறுதியாக செயல்பட வேண்டும் என்பதே!

திங்கள், 15 மே, 2023

நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைச் செயலாளர் ஜி.நாகப்பன் மறைவு

வருந்துகிறோம்
தென் சென்னை மாவட் டத்தை சேர்ந்த நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைச் செயலாளர் ஜி.நாகப்பன் அவர்கள் 14.05.2016 முற்பகல் 10.00 மணியவில்  காலமானார் (வயது 94). அவருக்கு நான்கு மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர்.

15.05.2016  முற்பகல் 11.00 மணியளவில் நுங்கம்பாக்கம் ஜெயலட்சுமிபுரம் 4வது தெருவிலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு சென்று நுங்கம்பாக்கம் இடுகாடு அடைந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி அவர்கள் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன், நுங்கம்பாக்கம் பகுதி தலைவர் மு.கோபால் மற்றும் அரும்பாக்கம் க.தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஜி.நாகப்பன் அவர்களின் உடலுக்கு மாலை அணிவித்தனர். மற்றும் முன்னால் மாமன்ற உறுப்பினர் வ.கணேசன் மற்றும் பகுதி திமுக பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து இறுதி ஊர்வலத்தில்  கலந்து கொண்டனர்.

16.05.2016, விடுதலை நாளேடு

ஞாயிறு, 14 மே, 2023

ஈரோடு - பொதுக் குழு தீர்மானம் எண்: 15 மாநிலத் தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் மற்றும் புதிய பொறுப்புகள்


நேற்று (13.5.2023)  ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட கழக அமைப்பு முறை, தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணிகள். 

தலைவர் : தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

துணைத் தலைவர் :கலி.பூங்குன்றன்

செயலவைத் தலைவர்:சு.அறிவுக்கரசு

பொருளாளர்:வீ.குமரேசன் (மாவட்டங்கள் பொறுப்பு):வேலூர், இராணிப்பேட்டை

பொதுச்செயலாளர்:வீ.அன்புராஜ் (தலைமைக் கழக ஒருங்கிணைப்புகள்)

பொதுச்செயலாளர்:முனைவர் துரை.சந்திரசேகரன்

(தலைமைக் கழக ஒருங்கிணைப்புகள்)

பொறுப்பு மாவட்டங்கள் (சிதம்பரம், கடலூர்)

பிரச்சாரச் செயலாளர்:வழக்குரைஞர் அ.அருள்மொழி

கழக வெளியுறவுச் செயலாளர்:கோ. கருணாநிதி 

மாநில ஒருங்கிணைப்பாளர்: தஞ்சை இரா.ஜெயக்குமார்:மாநில அளவில் பயிற்சிப் பட்டறைகள், ஒருங்கிணைப்பு, உறுப்பினர் சேர்க்கை, தலைமைக் கழகப் பணிகள்,மேலும் பொறுப்பு ,மாவட்டங்கள் கோவை, திருப்பூர், தாராபுரம், பொள்ளாச்சி)

மாநில ஒருங்கிணைப்பாளர் : உரத்தநாடு இரா.குணசேகரன் :

மாநில ஒருங்கிணைப்பாளர்(கழகத் தலைவரின் சுற்றுப் பயண  ஒருங்கிணைப்பு, கழகத் தலைவரின் தனிப் பணி பொறுப்புகள்)

(பொறுப்பு மாவட்டங்கள்)  நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி

துணைப் பொதுச் செயலாளர் :ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

(மாணவர், இளைஞரணி  ஒருங்கிணைப்பு) 

(பொறுப்பு மாவட்டங்கள்) தாம்பரம், செங்கல்பட்டு

துணைப் பொதுச் செயலாளர் :பொறியாளர் ச.இன்பக்கனி

(மகளிரணி ஒருங்கிணைப்பு)

துணைப் பொதுச் செயலாளர் :வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

(மகளிர் பாசறை ஒருங்கிணைப்பு)

திராவிடர் கழக வழக்குரைஞரணி

தலைவர் :  த.வீரசேகரன்

மாநில தொழிலாளரணி

செயலாளர் :திருச்சி மு.சேகர்

(பொறுப்பு மாவட்டங்கள்) திண்டுக்கல், பழனி

தஞ்சாவூர், கும்பகோணம்

2. லால்குடி ப. ஆல்பர்ட் :  லால்குடி, கரூர், துறையூர்

3.தருமபுரி ஊமை.ஜெயராமன்  : கிருஷ்ணகிரி, ஓசூர், 

தருமபுரி, திருவண்ணாமலை 4. ஈரோடு த.சண்முகம் : கோபி, மேட்டுப்பாளையம்,   ஈரோடு, நீலகிரி

5. மதுரை வே.செல்வம் :மதுரை மாநகர் மதுரை புறநர், தூத்துக்குடி

6. பொன்னேரி வி.பன்னீர்செல்வம்: திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஆவடி

7. பழ.பிரபு :திருப்பத்தூர், அரூர்

8. இல.திருப்பதி :இராஜபாளையம், விருதுநகர்

9. ஆத்தூர் அ.சுரேஷ்:ஆத்தூர், நாமக்கல்

10. புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி : புதுச்சேரி, காரைக்கால்

. காஞ்சி பா. கதிரவன் :  காஞ்சிபுரம், செய்யாறு

12. திண்டிவனம் தா.இளம்பரிதி : விழுப்புரம், கள்ளக்குறிச்சி

13. பொறியாளர் இரா.கோவிந்தராசன் : அரியலூர், பெரம்பலூர்

14. சென்னை தே.செ.கோபால் : தென்சென்னை, வடசென்னை,  சோழிங்கநல்லூர்

15. திருத்துறைப்பூண்டி

சு.கிருஷ்ணமூர்த்தி                        :  நாகப்பட்டினம், மயிலாடுதுறை,  திருவாரூர்

16. இராமேஸ்வரம்

கே.எம்.சிகாமணி : சிவகங்கை, காரைக்குடி ,இராமநாதபுரம்

17. க.சிவா :கம்பம், தேனி

18. கா.நா.பாலு : சேலம், மேட்டூர்

தலைவர் : வெ.தமிழ்ச்செல்வன்

செயலாளர் : ப.செந்தில்குமார்

இராஜபாளையம் மாவட்டம்

தலைவர் : பூ.சிவக்குமார்

செயலாளர் : இரா.கோவிந்தன்

ஆவடி மாவட்டம்

தலைவர் : வெ.கார்வேந்தன்

செயலாளர் : க.இளவரசன்

வேலூர் மாவட்டம்

தலைவர் : இரா.அன்பரசன்

செயலாளர் : உ.விசுவநாதன்

கழக காப்பாளர்கள்

பொத்தனூர் க. சண்முகம் 

பெங்களூர் வீ.மு.வேலு 

சத்துவாச்சோரி கணேசன்

ஆத்தூர் ஏ.வே.தங்கவேல்

அருப்புக்கோட்டை அ.தங்கசாமி

தஞ்சாவூர் வெ.ஜெயராமன்

கோவை - வசந்தம் கு.இராமச்சந்திரன் 

தூத்துக்குடி ஏ.லீலாவதி

மண்ணச்சநல்லூர் பி.என்.ஆர்.அரங்கநாயகி

சென்னை க.பார்வதி

வில்லிவாக்கம் கு.தங்கமணி

மண்ணச்சநல்லூர் உடுக்கடி அட்டலிங்கம்

வேலூர் தா.நாகம்மாள்

தூத்துக்குடி வீ.தவமணி

திண்டுக்கல் கொ.சுப்பிரமணியம்

சைதாப்பேட்டை எம்.பி.பாலு 

ஒக்கூர் சா.முருகையன் 

திங்கள்சந்தை வெ.சுப்பிரமணியம் 

நெல்லை சி.வேலாயுதம் 

காரமடை சாலைவேம்பு சுப்பையன்  

கோபி கு இரா. சீனிவாசன்

சிவகங்கை வழக்குரைஞர் ச.இன்பலாதன்

காஞ்சிபுரம்  டி.ஏ.ஜி. அசோகன்

வாடிப்பட்டி எஸ்.தனபாலன்

தாம்பரம் தி.ரா.இரத்தினசாமி

அரக்கோணம் பு.எல்லப்பன்

தருமபுரி அ.தமிழ்செல்வன்

சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன்

ஆத்தூர் விடுதலை சந்திரன்

கோபி பெ. இராசமாணிக்கம் 

ஆயக்காரன் புலம் கி. முருகையன்

ஆலங்குடி பெ. இராவணன்

கரூர் வே. ராஜூ

கூடலூர் கருப்புச்சட்டை நடராசன் 

தூத்துக்குடி ஆசிரியர் சு. காசிராஜன்

நெய்வேலி அரங்க. பன்னீர்செல்வம்

குடியாத்தம் வி. சடகோபன்

தஞ்சாவூர் மு. அய்யனார்

வேட்டவலம் பி. பட்டாபிராமன்

சிவகளை மா. பால்இராஜேந்திரம்

திருநெல்வேலி இரா. காசி

சேலம்  பழனி. புள்ளையண்ணன்

காரைக்குடி சாமி. திராவிடமணி

மதுரை தே. எடிசன்ராசா

தென்காசி  சீ. டேவிட் செல்லத்துரை

சங்கராபுரம்  ம. சுப்புராயன்

ஆவடி பா.தென்னரசு

குடியாத்தம் ஈஸ்வரி சடகோபன்

கும்பகோணம் ஜெயமணி குமார்

திருச்சி கிரேசி

திருத்தணி மா.மணி 

செந்துறை சு.மணிவண்ணன் 


புதுப்பிக்கப்பட்ட திராவிடர் கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் - 2023

திராவிடர் கழக மகளிரணி பொறுப்பாளர்கள்

வடசென்னை 

தலைவர்: க.சுமதி

செயலாளர்: யுவராணி 

தென்சென்னை 

தலைவர்: வளர்மதி

செயலாளர்: அஜந்தா 

ஆவடி 

தலைவர்: பூவை செல்வி

செயலாளர்: ஜெயந்தி 

கும்மிடிப்பூண்டி 

தலைவர்: மு ராணி 

செயலாளர்: நதியா சக்கரை

தாம்பரம்

தலைவர்: இறைவி

செயலாளர்: நூர்ஜஹான்

செங்கல்பட்டு 

தலைவர்: ஆனந்தி

செயலாளர்: சவுந்தரி கருணாகரன்

காஞ்சிபுரம் 

தலைவர்: உஷா

செயலாளர்: ஜானகி

வேலூர்

தலைவர்: ந தேன்மொழி 

செயலாளர்: சி லதா

தருமபுரி

தலைவர்: நளினி கதிர் 

செயலாளர்: சி.முனியம்மாள் 

கிருஷ்ணகிரி 

தலைவர்: மு.இந்திராகாந்தி 

செயலாளர்: ஜான்சிராணி 

ஓசூர்

தலைவர்: செல்வி செல்வம்

செயலாளர்: கண்மணி 

அரூர் 

தலைவர்: த முருகம்மாள் 

செயலாளர்: சுசீலா

ஆத்தூர்

தலைவர்: அமிர்தம் அம்மாள் 

செயலாளர்: முத்துலட்சுமி 

கோவை

தலைவர்: கலைச்செல்வி 

செயலாளர்: 

செ முத்துமணி 

திருப்பூர் 

தலைவர்: யாழ் ஈஸ்வரி 

தாராபுரம் 

தலைவர்: சரஸ்வதி 

திருச்சி 

தலைவர்: ரெஜினா

செயலாளர்: சாந்தி 

இலால்குடி 

தலைவர்: தெரேசா

அரியலூர் 

தலைவர்: ராஜாமணி 

தஞ்சாவூர் 

தலைவர்: அல்லிராணி

கும்பகோணம் 

தலைவர்: திரிபுரசுந்தரி 

சிவகங்கை 

தலைவர்: மணிமேகலை சுப்பையா

திண்டுக்கல் 

தலைவர்: பானு

மதுரை மாநகர் 

தலைவர்: இராக்கு தங்கம் 

மதுரை புறநகர் 

தலைவர்: பாக்கியலட்சுமி 

செயலாளர்: கலைச்செல்வி 

நெல்லை

தலைவர்: மஞ்சு 

காரைக்கால் 

தலைவர்: அமுதா


திராவிட மகளிர் பாசறை பொறுப்பாளர்கள்

வடசென்னை 

தலைவர்: த.மரகதமணி 

செயலாளர்: நதியா

தென்சென்னை 

தலைவர்: மு பவானி 

ஆவடி 

தலைவர்: செ. அன்புச்செல்வி

கும்மிடிப்பூண்டி 

தலைவர்: செல்வி 

செயலாளர்: இளையராணி தாம்பரம்

தலைவர்: இரா.சு.உத்ரா

செயலாளர்: அருணா

திருவள்ளூர் 

தலைவர்: பாக்கியலட்சுமி காஞ்சிபுரம் 

தலைவர்: ரேவதி

வேலூர்

தலைவர்: ரம்யா

செயலாளர்: வசுமதி

தருமபுரி

தலைவர்: கா.கவிதா

செயலாளர்: கோகிலா

கிருஷ்ணகிரி 

தலைவர்: பி.வித்யா

செயலாளர்: சி.அஞ்சலி

ஓசூர்

தலைவர்: லதா மணி

செயலாளர்: 

சே.மெ. காவியா

விழுப்புரம் 

தலைவர்: இலக்கியா

திண்டிவனம் 

தலைவர்: தேன்மொழி

செயலாளர்: சாந்தி 

கள்ளக்குறிச்சி 

தலைவர்: ச.இந்துமதி

கடலூர் 

தலைவர்: ரமா பிரபா 

செயலாளர்: க.தமிழேந்தி சிதம்பரம்

தலைவர்: யாழ் சுபா

ஆத்தூர்

தலைவர்: ஜான்சிராணி 

ஈரோடு 

தலைவர்: ம.கவிதா

செயலாளர்: 

கா.ஜீவரத்தினம்

கோபி

தலைவர்: திலகவதி 

செயலாளர்: திவ்யா வெற்றி 

கோவை

தலைவர்: கு.தேவிகா

செயலாளர்: 

செ.தனலட்சுமி 

மேட்டுப்பாளையம் 

தலைவர்: நாகமணி

செயலாளர்: அம்சவேணி திருப்பூர் 

தலைவர்: த.மகுடீஸ்வரி

தாராபுரம் 

தலைவர்: இளவர்ஷினி

செயலாளர்: ச.ராதா

திருச்சி 

தலைவர்: அம்பிகா 

செயலாளர்: த.சங்கீதா

இலால்குடி 

தலைவர்: செல்வி 

பெரம்பலூர் 

தலைவர்: கலைச்செல்வி 

அரியலூர் 

தலைவர்: அம்பிகா 

செயலாளர்: தமிழ்புலி

திருவாரூர் 

தலைவர்: அ.சாந்தி 

தஞ்சாவூர் 

தலைவர்: அஞ்சுகம்

கும்பகோணம் 

தலைவர்: சங்கீதா நிம்மதி 

புதுக்கோட்டை 

தலைவர்: இ.இளவரசி

அறந்தாங்கி 

தலைவர்: மா.செல்வராணி 

திண்டுக்கல் 

தலைவர்: தில்ரேஷ்

மதுரை மாநகர் 

தலைவர்: இரா.தமிழரசி

மதுரை புறநகர் 

தலைவர்: நிலவரசி

தென்காசி 

தலைவர்: கவுதமி

புதுச்சேரி 

தலைவர்: ப.தேவகி

செயலாளர்: 

இரா.கிருபாஷினி

காரைக்கால் 

தலைவர்: தி.அன்பரசி

புதுப்பிக்கப்பட்ட திராவிடர் கழக இளைஞரணி மாநிலப் பொறுப்பாளர்கள் - 2023 மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள்

புதுப்பிக்கப்பட்ட திராவிடர் கழக இளைஞரணி மாநிலப் பொறுப்பாளர்கள் - 2023