வியாழன், 19 பிப்ரவரி, 2015

உயர் நீதிமன்றத்திலே சமூகநீதிகோரி ஆர்ப்பாட்டம்

நீதிமன்றத்திலே சமூகநீதிகோரி வீதி மன்றத்திலே போராடுகிறோம்







நீதித்துறையில் சமூகநீதி கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்



சென்னை, பிப்.19_ சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியை 

வலியுறுத்தி இன்று (19.2.2015) 

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழர் தலைவர் தலைமையில் 

மாபெரும்

 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் பார்ப்பன நீதி பதிகள் நியமிக்கப்படுவதை 

எதிர்த்தும்

வாய்ப்பு மறுக் கப்பட்ட 

பிரிவினருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையிலும்

மதுரையிலும் இன்று (19.2.2015) 

திராவிடர் கழகம் பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை 
நடத்தியது.

தென் சென்னை மாவட்டம் சார்பில் ஆர்பாட்டத்தில் தோழர்கள் பங்கேற்றனர்.

தென்சென்னை:இரா.வில்வநாதன்(மாவட்ட 

தலைவர்) செ.ர.பார்த்தசாரதி 


(மாவட்டச் செயலாளர்)
மு.ந.மதியழகன், (மாவட்ட அமைப்பாளர்)

எம்.பி.பாலு(பொதுக் குழு உறுப்பினர்)

கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், சி.செங்குட்டுவன்

கோ.மஞ்சநாதன், மு.சண்முகப்பிரியன், ச.மாரியப்பன், க.வெற்றிவீரன்

மு.பவானி, வி.வளர்மதி, ஈழ.முகிலன்,.ச.மகேந்திரன்


நீதிமன்றத்திலே சமூகநீதிகோரி வீதி மன்றத்திலே போராடுகிறோம்

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் உரை

 சென்னை, பிப்.19- உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கடைபிடிக்க வேண்டும் பார்ப்பன ஆதிக்கபுரியாக மாறுவதைத் தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் நடத்தும் இந்தப் போராட்டமும், தொடக்கமே தவிர முடிவல்ல; வெற்றிகிட்டும் வரை போராடுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (19.2.2015) காலை நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்குத் தலைமை வகித்து உரை யாற்றுகையில் அவர் கூறியதாவது:
உயர்நீதிமன்றத்தினுடைய மொத்த இடங்கள், நீதிபதிகளுடைய மொத்த எண்ணிக்கை 60 இடங்களாகும். இதில் 19 நீதிபதிகளுடைய இடங்கள் காலியாக ஆகி ஒருவர் காஷ்மீரத்தினுடைய தலைமை நீதிபதியாக சென்றுள்ள நிலையில் 18 நீதிபதிகளை நிரப்ப வேண்டும். தேக்கமடைந்து பைசல் ஆகாத வழக்குகள் உடனடியாக தீர்த்து வைக்கப்பட்டு வழக்காடிகளுடைய நலனை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு மிகப்பெரிய அளவிலே, இங்கே இருக்கக்கூடிய நீதித்துறையிலே நீதிபதிகளுடைய எண்ணிக்கை உடனடியாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்  இதில் சமூகநீதி கடைபிடிக்க வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு - நியாயமான கோரிக்கை.
இங்கே வடக்கே இருந்து வந்திருக்கக்கூடிய தலைமை நீதிபதியாக இருக்கிற ஒரு பார்ப்பன நீதிபதி  மிகத் தந்திரங்களைக் கையாளுகிறாரே என்பதைக் கண்டித்து நியாயங்கள் வழங்க வேண்டும், சமூக நீதி நிலைநாட்ட வேண்டும். இந்த மண் பெரியார் மண். இந்த மண் சமூக நீதி மண். அந்த வகையிலே முழுக்கமுழுக்க நடைபெற வேண்டும் என்று சொல்லி திராவிடர் கழகத்தின் சார்பிலே மத்திய மாநில அரசுகளுக்கும், நீதித்துறைக்கும் சேர்ந்து அவர்கள் கண் விழிக்க வேண்டும். இது மக்களுடைய போராட்டம். நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மட்டும் நடத்தும் போராட்டம் அல்ல என்பதை யெல்லாம் எடுத்துக் காட்டுவதற்காக எல்லோரும் இணைந்து, திராவிடர் கழகம் இதனை முன்னெடுத்தாலும் கூட, அனைத்து இயக்கங் களும் சேர்த்து நடத்துவகிறோம். சமூகநீதியிலே நம்பிக்கை உள்ள அனைத்து இயக்கங்கள் திராவிடர்கழகம், தி.மு.க., அதேபோல பாட்டாளி மக்கள் கட்சி, அதேபோல மற்ற அமைப்புகள், சமூக நீதி அமைப்புகள், வழக்குரைஞர்கள் சங்கங்கள், அமைப்புகள் இப்படிப் பல அமைப்புகளும் இதிலே இருக்கின்றன.
சிலபேர் இங்கு நேரிடையாக கலந்துகொள்ளும் வாய்ப்பு இல்லாமல்கூட இருக்கலாம். ஆனால், எல்லோருமே இந்தக் கொள்கைக்கு உடன்பாடாக இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய இந்த நிகழ்ச்சிக்கு வருகைதந்து, மிகச் சிறப்பான வகையிலே இதிலே கலந்துகொண்டுள்ளனர்.
இந்த போராட்டம் என்பது தானே உருவானது அல்ல. இது ஒரு திணிக்கப்பட்ட போராட்டம். தேவையான அளவுக்கு முறைப்படி தலைமை நீதிபதி பரிந்துரை செய்திருந்தால், இதுபற்றி வழக்குரைஞர்கள் நீதிமன்றத் தைப் புறக்கணிக்கவோ, எதிர்த்துக் குரல் கொடுக்கவோ, இப்படி தெருக்களிலே நின்று நீதிப்போராட்டம் வீதிப் போராட்டமாக  மாற வேண்டிய அளவுக்கு வரவேண்டிய அவசியமோ ஏற்பட்டிருக்காது.
அணுகுமுறையிலே தவறானது. நம்முடைய நாடு ஜனநாயக நாடு. இந்த நாட்டிலே வழக்குரைஞர்கள் என்பவர்கள் நீதிமன்றத்துக்கு முன்னாலே சென்று வாதாடவேண்டியவர்கள் தங்களுடைய உரிமைகளை, அரசியல் சட்டம் வழங்கி உள்ள உரிமைகளை அவர்கள் பாதுகாக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையிலே விகிதாச்சரத்துக்கும் மேலாக பார்ப்பனர்களை அவர்கள் திணித்துக்கொண்டிருக்கிறார்கள். பல்வேறு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர், இதுவரையிலே நீதிமன்றத்தை எட்டிப் பார்க்காதவர்கள் உண்டு. ஒரு காலத்திலே எங்களுடைய வழக்குரைஞர்கள் தகுதி உள்ளவர்கள் இல்லை என்று சொன்னார்கள், திறமை உள்ளவர்கள் இல்லை என்று சொன்னார்கள். இப்போது எண்ணற்றவர்கள் இருக் கிறார்கள். அனுபவம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். இன்றைக்கு பார் கவுன்சில் ஆனாலும், வழக்குரைஞர்கள் சங்கம், அட்வகேட் அசோசியேசன்  ஆனாலும் அதிலே பொறுப்பு வகிப்பவர்கள் எல்லாம் பார்த்தீர்களேயானால் அத்துணை பேரும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த, நிறைய வருமானமுள்ள, ஏராளமான வழக்குகளை வாதாடுவதற்கு உள்ள, அத்தனைத் திறமை உள்ள வழக்குரைஞர்கள் இருக் கிறார்கள்.
நீதித்துறை மனு நீதித்துறையாக மாறலாமா?
பழைய காலத்தைப் போல வெறும் பார்ப் பனர்கள் உயர் ஜாதிக் காரர்கள்தான் என்றிருப் பார்கள் என்ற நிலை இல்லை.  இங்கே தலைமை நீதிபதியாக வந்திருக்கிறவர் வடக்கே இருந்து வந்திருக் கிறவர். அவர் இந்த மண் ணுடைய மனோபாவத்தை தெரிந்துகொள்ள வேண்டும். இதேபோலத்தான் வடக்கே இருந்து, பம்பாயில் இருந்து வந்த ஒரு பார்ப்பன நீதிபதி  அவர் பார்ப்பனர்கள் 6 பேரை எம்ஜிஆர் இருந்த காலத்திலே அவர் பரிந்துரை செய்திருந்தார். உடனடியாக இதேபோல திராவிடர் கழகம் உயர்நீதிமன்றத்துக்கு முன்னாலேயே சென்று நாங்கள் மிகப்பெரிய கிளர்ச்சியை  செய்ததுமட்டுமல்ல. மனுவையே கொடுத்தோம். மிகப் பெரிய கிளர்ச்சியாக வெடிக்கும் என்று அரசாங்கத்துக்கு செய்தி சென்றது. அரசாங்கத்திலே ஒரு சொற்றொடரை சட்டத் துறையிலே பயன்படுத்தி பரிந்துரை செய்தார்கள் மத்திய உள்துறைக்கு. என்ன அந்த சொற்றொடர் என்று சொன்னால் சாய்ல் சைக்காலஜி ஆப் தமிழ்நாடு என்ற சொற்றொடரை அவர்கள் பயன்படுத்தினார்கள்.
தமிழ்நாட்டினுடைய மண்ணின் மனோபாவம் என்னவென்றால் சமூக நீதி. இந்த சமூக நீதியை மாற்றிவிட முடியாது. எனவே, இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி, அந்த 6 பார்ப்பனர்களை தலைமை நீதிபதிபரிந்துரைத்ததைத் திருப்பியனுப்பி, பிறகு  மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தார்கள். ஒரேயொரு பார்ப்பனர்தான் அதிலே வரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.
இன்றைக்கு மீண்டும் இதே சூழ்நிலை. அதுமட்டும் அல்ல. இன்னொரு வித்தை என்ன என்று சொன்னால், ஏற்கெனவே 6 பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். அதைத்தான் இங்கே சொன்னார்கள். வெறும் 2 சதவிகிதம் இருக்கிறவர்களுக்கு பல மடங்கு இடம். அதுமட்டுமல்ல, கேந்திரமாக இருக்கின்ற இடம். பரிந்துரை செய்ய வேண்டிய இடத்திலே இருக்கிறார்கள். சார்பு நீதிமன்றத்திலே; தேர்வு செய்யும் இடத்திலும் அவர்கள்தான் இருக்கிறார்கள்; என்று தேர்வுத் தாளை திருத்துவதிலேயிருந்து, அடுத்து வருவதிலிருந்து, வீட்டுக்கு அனுப்புவதிலிருந்து எல்லாவற்றையும் சாமர்த்தியமாக  தந்திரமாக  செய்துகொண்டிருக்கிறார்கள்.
எனவே, இதைக் கண்டித்தாக வேண்டும் என்ற நிலையை அவர்கள்தான் உருவாக்கி இருக்கிறார்கள். சமூக நீதி என்பது அரசியல் சட்டம் வழங்கி இருக்கிற அடிப்படை உரிமை.
வழக்குரைஞர்களோ, நாங்களோ, இங்கு வந்திருப் பவர்களோ ஏதோ தயவைக் கேட்கவில்லை. நாங்கள் யாரிடமும் பிச்சைக் கேட்கவில்லை. நாங்கள் யாரிடமும் சலுகை கேட்கவில்லை. அரசியல் சட்டத்திலே நீங்கள் பிரமாணம் செய்திருக்கிறீர்கள். அந்த அரசியல் சட்டத்தைக் காட்டித்தான் பதவியில் இருக்கிறீர்கள். அந்த அரசியல் சட் டத்தைச் செயல் படுத்துங்கள். இதைத்தான் சொல்லு கிறோம்.
இதுமாதிரி விசித்திரம் உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இருக்காது. அரசியல் சட்டத்தின் பிரிவுகளை செயல் படுத்துங்கள் என்று இங்கே இருக்கின்ற வழக்குரைஞர்கள் கேட்கிறோம்.  அதுமட்டுமல்ல. நிர்வாகம் என்பதே கூட இப்போது ரைட் ஆப் இன்பர்மேசன் ஆக்ட் என்று கொண்டுவந்ததன் நோக்கம் என்ன? டிரான்ஸ்பரன்சி என்று சொல்லக்கூடிய வெளிப்படை நம்பகத்தன்மைவெளிப்படையான தன்மை இருக்க வேண்டும் என்பதுதான் ஜனநாயகத்தினுடைய அடித்தூண்.
அந்த ஜனநாயகத்தின் தூண்களில் முக்கியமான மூன்று தூண்களில் ஒன்று நீதித்துறை. எனவே, இந்த நீதித்துறை மனுநீதித் துறையாக மாற்றப்படக்கூடாது. இது மனுநீதிக் காலம் அல்ல. இது ஜனநாயகக் காலம். இது பெரியார் மண், அண்ணா, காமராஜர், கலைஞர், எம்ஜிஆர் ஆண்ட மண். இன்னும் எந்தக்கட்சிவேண்டுமானாலும் ஆளலாம். ஆனால், சமூக நீதியில் கைவைக்கும் துணிவு எந்தக் கட்சிக்காரனுக்கும் கிடையாது. இதுதான் தமிழ்மண்ணின் அடிப்படைத் தத்துவம்.
இதை வடக்கே இருந்து வந்திருக்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு மந்திராலோசனை செய்யக்கூடிய இந்த நாட்டு பார்ப்பனர்களுடைய யோசனைகளை அவர்கள் கேட்டால், அவர்கள் நிலை வெறுக்கத் தகுந்ததாகிவிடும்.
எனவேதான் இன்றைக்கு வந்திருக்கிற அறிஞர் பெருமக்கள், வழக்குரைஞர்களை திராவிடர் கழகத்தின் சார்பில் நாங்கள் பாராட்டுகிறோம். இவர்களுடைய
வெளிப்படையான போராட்ட உணர்வை நாங்கள் வெகுவாக பாராட்டி, இந்த உணர்வை எடுத்துச்செல்லுங்கள். இந்தச்சுடரை தாங்கிய கரங்கள் ஒருபோதும் தாழக்கூடாது. நாம் வெற்றிபெறுகின்ற வரையிலே நாம் போராடியாக வேண்டும்.
உங்கள் எல்லோருக்கும் வரவேற்பு சொல்லுவதற்காகத்தான் இங்கே வந்திருக் கிறேன். நாம் இதுவரையில் எடுத்து வைத்துள்ள பிரச்சினைகளில் தோற்றதே கிடையாது. அதை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். வெற்றி வேண்டுமானால் கொஞ்சம் காலம் தாழ்ந்து இருக்கலாம். ஆனால், தோல் வியே கிடையாது. அதைப்புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
வெறும் உயர்நீதிமன்றத்தினுடைய நீதிபதிகளை நிரப்புவதுமட்டும் இந்த நோக்கமல்ல. விடுதலையில் சில செய்தி களை இது உண்மையா? என்று எழுதி இருக்கிறோம். அதைப்பார்க்க வேண்டும். அதாவது மாவட்ட நீதிபதிகள், சார்புத் துறையிலே இருக்கக்கூடியவர்களுக்கான தேர்வுகள் என்று வருகிறபோது , அதிலே ஒரு குறிப்பிட்ட பார்ப்பன நீதிபதிதான் எல்லாம் செய்வார் என்று சொல்லக்கூடிய நிலை இருக்கிறது என்று வழக்குரை ஞர்கள் மத்தியிலே மிகப்பெரிய அளவில் பேச்சு அடிபடுகிறது. அதுமட்டுமல்ல.
கலைஞர் ஆட்சிக்காலத்திலே இங்கு வர முடியாத ஒரு ஜாதி வெறிப்பார்ப்பனருக்கு கடும் எதிர்ப்பு இருந்தது. அவர் பஞ்சாப் புக்குப் போனார். பஞ்சாபிலே நீதிபதியாக இருக்கிறவர் இங்கே வாரந்தவறாமல் வந்து, அவர்தான் இங்கே தமிழ்நாட்டிலே இவரை அனுப்புங்கள், அவரை அனுப் புங்கள், இந்த பார்ப்பனரைத் தேர்ந் தெடுங்கள், இவரை அனுப்பாதீர்கள் என்று சொல்லக்கூடிய அளவில் இருக் கிறார் என்று பரவலாகப் பேச்சு அடி படுகிறது. அது உண்மையாக இருக்கக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். அப்படி இருந்தால், அதைவிடக் கண் டனத்துக்கு உரியது வேறு கிடையாது.
ஏற்கெனவே 3 மாவட்ட நீதிபதிகளை வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். ஒரு மாவட்ட நீதிபதியை பின்சி கிரவுண்ட் என்று சொல்லக்கூடிய அளவிலே  அவர் அரசியல் செல்வாக்குள்ள ஒருவரை சந் தித்தார் என்று ஏதோ ஒரு போலிக் காரணத்தைச் சொல்லி, ஒரு பிற்படுத் தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவரை வெளியே அனுப்பி இருக்கிறார்கள்.
உருவத்தால் பலர் உள்ளத்தால் ஒருவரே!
இதைப்பற்றியெல்லாம் தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக் கூட்டங் களை நடத்திட உள்ளோம்.  திராவிடர் கழகம் ஒத்த கருத்துள்ளவர்களை, கட்சி, ஜாதி வேறுபாடுகள் இல்லாமல்  எல் லோரையும் அழைத்து மிகப்பெரிய மக்கள் கிளர்ச்சியாக வெடிக்கக்கூடிய அளவிற்கு செய்ய இருக்கிறோம் என்பதை எடுத்துச் சொல்லி இங்கு வந்திருக்கிற எல்லோ ருக்கும் எங்கள் அன்பான வரவேற்பை திராவிடர்கழகத்தின் சார்பில் சொல்லி, அத்துணை வழக்குரைஞர்கள், நமக் குள்ளே அரசியல் ரீதியாக அணுகு முறைரீதியாக பல்வேறு வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால், சமூகநீதியைப் பொறுத்தவரையிலே நாங்கள் உருவத் தால் மாறுபட்டாலும், உள்ளத்தால் ஒரு வரே என்பதைத்தான் வலியுறுத்த  கடமைப்பட்டிருக்கிறோம்.
இந்தக்குரல் இங்கே தொடங்கி இருக்கிறது. இது முடிவல்ல. தொடக்கம். அதைத்தான் மேலே இருக்கிறவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.


ஏனிந்த ஆர்ப்பாட்டம்?
கழகத் தலைவர் பேட்டி

சென்னை, பிப்.19- உயர்நீதிமன் றத்தில் நீதிபதி பதவிகள் நியமனம் தொடர்பான இந்த ஆர்ப்பாட்டம் ஏன்? என்பதற்கான காரணத்தை செய்தியாளர்கள் மத்தியில் திராவி டர் கழகத் தலைவர் விளக்கினார். அதன் விவரம் வருமாறு:
சென்னை உயர்நீதிமன்றத் தினுடைய மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 60இல் ஒருவர் காஷ்மீருக்கு தலைமை நீதிபதியாக சென்ற நிலையில் 18 இடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள இடங்களை நிரப்புவதில் சமூகநீதிக் கொள்கை கடைப்பிடிக்க வேண் டும். அது சலுகையோ, பிச்சையோ அல்ல. இந்திய அரசியல் சட்டம் வகுத்திருக்கிற போதிய பிரதிநிதித் துவம்  (அடிக்குவேட்ரெபிரசன் டேசன்) என்ற பிரிவின்கீழும், சமுகநீதியை நிலைநாட்டவேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.
ஜனநாயக நாட்டில் யாரும் கருத்துகளைச் சொல்ல லாம்.  பட்டியலை அனுப்பும்போது, ஒரே பட்டியலை அனுப்பவேண்டும் என்று சொல்லுகிறார்கள். காரணம் என்னவென்றால், திறமை உள்ளவர்களுக்கு என்று ஒரு பட்டியலாம், பிறகு இன்னொரு  பட்டியலாம்.  மற்றவர்கள் எல்லாம் திறமை இல்லாத வர்களைப்போல அவர்கள் சொல்லுவது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.
ஆறு பார்ப்பனர்களை ஒரேயடியாக அனுப்புவ தற்குப்பதிலாக, இரண்டு மூன்றாக பிரித்து அனுப்பி னாலும் மொத்த எண்ணிக்கை அதுதான். இதுவரை உயர்நீதிமன்றத்தையே எட்டிப்பார்க்காத சமூகங்கள், ஜாதிகள் இருக்கின்றன. அவைகளுக்குப் போதிய பிரதிநிதித் துவம் கொடுக்க வேண்டும். அது அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தித் தான் இந்தப் போராட்டம்.
வழக்குரைஞர்கள் போராட்டமாக மட்டுமல்ல, மக்கள் போராட்டமாக அது வெடித்திருக்கிறது. மதுரையிலும் இந்தக் கிளர்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. அனைத்து இயக்கங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
இப்போது நீதிமன்றப் போராட்டம் வீதிமன்றப் போராட்டமாக மாறி இருக் கிறது. இது முதல் கட்டம். மேலும் தொட ரும். நீதி கிடைக்கும்வரை போராடுவோம்.
செய்தியாளர் கேள்வி: புதிய நீதிபதிகள்...?
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பதில்: 6 பேர். ஆறு பேரும் பார்ப்பனர்கள். ஒரே ஜாதிக்காரர்கள். இதுவரை பல்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் நீதிபதியாக, தகுதி உள்ள வழக் குரைஞர்களாக இருந்தும் கூட, அவர்களுடைய பெயர் பரிந்துரைக்கப்பட வில்லை. அதுதான் இப்போது வழக்குரைஞர்களுடைய மிகப்பெரிய குறைபாடு; நியாயமான குறைபாடு.
-விடுதலை,19.2.15

புதன், 18 பிப்ரவரி, 2015

pk இந்தி திரைப்படம்


 pk என்கிற இந்தி திரைப்படம் கடவுள்,மதம் போன்றவற்றை அக்குவேறு ஆணிவேராக அலசும் திரைப் படமாகும். இப்படத்தை பார்க்க இராயப்பேட்டை  எக்ஸ்பிரஸ் அவின்யூ பல்பொருள் அங்காடியில் 19.1.2015ம் நாள் மாலை ஒரு காட்சியே பதிவு செய்யப்ப்பட்டு கழகத் தலைவர் அவர்களுடன் உட்கார்ந்து கழகத்தோழர்கள் பார்த்தனர். தென் சென்னை தோழர்களும் உடன் படம் பார்த்தனர்.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

எம்.பி.பாலுவுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து!



கழகப் பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு அவர்களின் 84ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்.

பிறந்தநாள் காணும் எம்.பி.பாலுவுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார் தமிழர் தலைவர். (17.2.2015)

-விடுதலை,17.2.2015,பக்கம்-3

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

எம.பி.பாலு 84வது பிறந்த நாள்

சென்சென்னை மாவட்டம் சார்பில் இன்று(14.2.15) காலை 8.00மணி அளவில் பொதுக் குழு உறுப்பினர்எம.பி.பாலு அவர்கள் இல்லம்(சைதாப்பேட்டை) சென்று 84வது பிறந்த நாள் வாழ்த்து கூறப்பட்டது.
1.மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன்(மு.ந.மதியழகன் இனிப்புகளை வழங்கினார். கோ.வீ.ராகவன்  சால்வை அணிவித்தார்)
2.மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன் மற்றும் மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி (செ.ர.பார்த்தசாரதி சால்வை அணிவித்தார்)
 3.தியாகராயர் நகர் பகுதி அமைப்பாளர் சி.ஏழுமலை அவர்கள் எம.பி.பாலு மற்றும் அவரின் துணைவருக்கும் சேர்த்து  சால்வை அணிவித்தார். உணவிற்கு சுவையூட்டும் பொருள்க்ள் மற்றும் பழங்களை வழங்கினார்.

4.மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அவர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து கூறினார்.

சூளைமேட்டில் 43வது திராவிடர் விழிப்புணர்வு மாநாட்டு மாட்சிகள்

சூளைமேட்டில் கடை வசூல்





1.தென் சென்னை மாவட்டம் சூளைமேட்டில் 43வது திராவிடர் விழிப்புணர்வு மாநாடு 9.2.2015 மாலை நடைபெறுவதையொட்டி 8.2.2015 பகல் சூளைமேட்டில் கடை வசூல் நடை பெற்றது. பெரியார் பாதை கடை பகுதியில் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள். மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தரமணி கோ.மஞ்சநாதன், சூளைமேடு பகுதி அமைப்பாளர் செ.இராமச்சந்திரன், கோடம்பாக்கம் பகுதி அமைப்பாளர் ச.மாரியப்பன், மதுரவாயல் பகுதி பொறுப்பாளர் க.பாலமுரளி மற்றும் மதுரவாயல் பகுதி தோழர் ஒருவர் ஆகியார் கடை வசூல் பணியில் ஈடுபட்டனர்.

2.இரண்டாம் நாளாக 9.2.15 பகல் சூளைமேடு நெடுஞ்சாலையில்கடை வசூல் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தரமணி கோ.மஞ்சநாதன், சூளைமேடு பகுதி அமைப்பாளர்கள் செ.இராமச்சந்திரன், அரங்க.சுரேந்தர் ஆகியார் கடை வசூல் பணியில் ஈடுபட்டனர்.
















சூளைமேடு, பிப். 13_ 9.2.2015, திங்கள் கிழமை, மாலை 6 மணி அளவில் தென் 
சென்னை மாவட் டம் சூளைமேடு பகுதியில்சூளைமேடு நெடுஞ்சாலையிலுள்ள காந்தி சிலை அரு கில்  சூளைமேடு பகுதி திரா விடர் கழகம் ஏற்பாட்டில், 43ஆவது திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது.மாவட்டத் துணைச் செயலாளர் கோ.வீ. ராகவன் வரவேற்புரை ஆற்றினார்
சூளைமேடு பகுதி அமைப்பாளர் செ. இராமச்சந்திரன் தலைமையேற்றார்.
மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி
மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர்.சேதுரா மன், மாவட்டத் துணைத் தலைவர் 
சி.செங்குட்டு வன், மாவட்டத் துணைச் செயலாளர் சா.தாமோ தரன் மற்றும் அரங்க. சுரேந்தர் ஆகியோர் முன்னிலையேற்றனர்.
வட மாவட்ட அமைப்பு செயலாளர் வெ.ஞானசேக ரன், மண்டல செயலாளர் 
வி.பன்னீர்செல்வம், இள்ளைஞரணி மண்டல செயலாளர் செ.தமிழ் சாக்ரட்டீஸ்
மாணவரணி மண்டல செயலாளர் ப.மணியம்மை ஆகியோ ரின் உரைக்கு பின் கழக பொதுச்செயலாளர் முனை வர் துரை. சந்திரசேகரன் அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.
செ.கனகா, தரமணி கோ.மஞ்சநாதன், மு.சண் முகப்பிரியன், சி.மகேந்தி ரன்
ஈ.குமார், கூடுவாஞ்ச் சேரி மா.இராசு, ஆசிரியர் சா.இராஜேந்திரன், க. பாலமுரளி
சே.கோபால கிருஷ்ணன், க.பாலமுரு கன், தளபதி பாண்டியன், பீர் முகைதீன்
சோ.பாலு, ஆ.வெங்கடேசன், வாசு தேவன், என்.செல்வம், கே. மோகன், வ.இரவி
என். செல்வக்குமார், இராஜேஷ் மற்றும் பல கழகத் தோழர்களும் 
கலந்துகொண்டனர். பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று விளக்கமும் எழுச்சியும் பெற்ற னர். கோடம்பாக்கம் மாரி யப்பன் அவர்களின் நன்றியுறையுடன் இரவு 10 மணிக்கு கூட்டம் நிறைவடைந்தது.

விடுதலை 13.2.15,பக்கம்-4