ஆட்சியர் அலுவலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆட்சியர் அலுவலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 செப்டம்பர், 2025

சென்னையில் திராவிட மாணவர் கழகம் (DSF) நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கழகத் துணைத் தலைவர் கண்டன உரையாற்றினார்


திராவிடர் கழகம்

ஒன்றிய பா.ஜ.க. அரசின் யூ.ஜி.சி. (UGC) வெளியிட்டுள்ள (LOCF) காவி வரைவு அறிக்கையைக் கண்டித்து

சென்னை, செப்.8 ஒன்றிய பா.ஜ.க. அரசின் யூ.ஜி.சி. (UGC) வெளியிட்டுள்ள  (LOCF) காவி வரைவு அறிக்கையைக் கண் டித்து சென்னையில் திராவிட மாணவர் கழக (DSF) நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் கண்டன உரையாற்றினார்.

ஒன்றிய பாஜக அரசின் யூ.ஜி.சி. (UGC)  வெளியிடப்பட்டுள்ள எல்.ஓ.சி.எஃப் (LOCF) காவி வரைவு அறிக்கையைக் கண்டித்து இன்று (8-9-2025) காலை 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசு திணித்த தேசியக் கல்விக் கொள்கையின் விளைவாக நாளும் கல்வித்துறையின் மீது தாக்குதல்கள் நடைெபற்ற வண்ணம் இருக்கின்றன.

திராவிடர் கழகம்

அண்மையில் பல்கலைக்கழக மானியக் குழுவால் (‘UGC – University Grants Commission’) வெளியிடப்பட்ட LOCF எனப்படும் ‘கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் கட்டமைப்பு’ வரைவு பாரம்பரிய பாரத அறிவை முன்னிறுத்துதல் என்ற பெயரில் பிற்போக் குத்தனமான காவிக் கொள்கையின் கூறுகளை வெளிப்படையாகக் கொண்டி ருக்கிறது. ‘‘இந்தப் பாடத்திட்டத்தில் சூரிய சித் தாந்தம் போன்றவற்றைக் கொண்டு வந்து, யுகங்கள், கல்பங்கள் முதல் பிரம்மாவின் நாள் (பிரம்ம வர்சா) வரையிலான அண்ட காலச் சுழற்சிகளையும், விஷ்ணு வர்சா, சிவ வர்சா போன்ற தெய்வீக சுழற்சிகளையும் விளக்கும் பாடங்கள் இடம் பெறுமாம். இடம்பெற வேண்டுமாம்.

‘ஜோதிடம் அறிவியல் அல்ல’ என்று நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டனரே!  இன்றும் அறிவியல்படி நிரூபிக்க முடியாத முட்டாள்தனத்தின் முடைநாற்றம் வீசும் மோசடியை மாணவர்களுக்குத் திணிக்கப்போகிறார்களா? சில ஆண்டுகளுக்கு முன்னால் நோபல் பரிசு பெற்றவரான அறிவியல் அறிஞர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், ஜோதிடம் என்பது போலித்துறை என்று வெளிப் படையாக அறிவித்தாரே! அதைத்தான் இந்த 21ஆம் நூற்றாண்டில் மாணவர்களுக்குக் கற்றுத்தரப் போகிறார்களா?

அண்மையில் இந்தியாவின் சுதந்திர நாள் விழாவின் போதும், இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட காந்தியார், சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் ஆகியோருடைய படங்களுக்கு மேல் சாவர்க்கரின் படத்தைப் போட்டு தங்களது ஹிந்துத்துவ புத்தியை காட்டிக் கொண்டனர் ஒன்றியத்தை ஆளும் பாஜகவினர்.

எனவே இந்த ஒன்றிய பாஜக அரசின் எல்.ஓ.சி.எப் வரைவு அறிக்கையை கண்டித்து திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், சென்னை, விழுப்புரம், சேலம், திருச்சி, மதுரை, தஞ்சை ஆகிய தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் 8.9.2025 அன்று நடை பெறும்’’ என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 4.9.2025 அன்று அறிவித்தார். அதன்படி இன்று (8.9.2025) மேற்கண்ட முக்கிய நகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திராவிடர் மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, மகளிர் பாசறைத் தோழர்கள் உள்பட அனைத்து அணிகளின் தோழர் – தோழியர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று ஒன்றிய பாஜக அரசின் காவிக் கொள்கை திணிப்பைக் கண்டித்து ஒலி முழக்கமிட்டனர்.

கழக துணைத் தலைவர் கண்டன உரை நிகழ்த்தினார்

இந்த ஆர்ப்பாட்ட விளக்க கண்டன உரையை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நிகழ்த்தினார். பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் தேவ.நர்மதா  ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்  தே.செ.கோபால் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பெரியார் யுவராஜ் வரவேற்புரையாற்றினார்.

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், செயலாளர் ந.இராஜேந்திரன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், ஆவடி மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், கும்முடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன், செயலாளர் ஜெ.பாஸ்கரன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் செம்பியன், மாவட்டச் செயலாளர் நரசிம்மன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வே. பாண்டு, செயலாளர் உ.விஜய் உத்தமன்ராஜ், மாநில மகளிரணி துணைச் செயலாளர்கள் இறைவி, பெரியார் செல்வி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன்  ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.

திராவிட மாணவர் கழகம், இளைஞரணி, திராவிட மகளிர் பாசறை ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்ட நிறைவில் வடசென்னை மாவட்ட மகளிர்  பாசறைத் தலைவர் த.மரகதமணி நன்றியுரையாற்றினார்.

விடுதலை நாளேடு; 8.9.25


சென்னை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்

தென்சென்னை: இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, மு.சண்முகப்பிரியன்,  கரு.அண்ணாமலை, சா.தாமோதரன், பெரியார் யுவராஜ், இரா.மாரிமுத்து, அ.அன்பரசன், மு.இரா.மாணிக்கம், ந.மணித்துரை.

வடசென்னை: தே.சே.கோபால், புரசை சு.அன்புச்செல்வன், புகழேந்தி, வழக்குரைஞர் மு.வேலவன், சு.துரை ராஜ், கோபால கிருஷ்ணன், ச.ராஜேந்திரன்,  தி.செ.கணேசன், கோ.தங்கமணி, சி.காமராஜ், இராமு, அருள், மகேஷ் மற்றும் கி.தளபதிராஜ் (மயிலாடுதுறை),

தாம்பரம் மாவட்டம்: ப.முத்தையன், கோ.நாத்திகன், சு.மோகன்ராஜ், குணசேகரன், மறைமலைநகர் சிவக்குமார், கூடுவாஞ்சேரி இராசு,

கும்முடிப்பூண்டி மாவட்டம்: புழல் த.ஆனந்தன், சோழவரம் ப.சக்கரவர்த்தி, பொன்னேரி அருள், வடகரை உதயகுமார், ஓவியர் ஜனாதிபதி, ந.கஜேந்திரன்,

ஆவடி மாவட்டம்: வெ.கார்வேந்தன், க.இளவரசன், இரணியன், திராவிடமணி அ.வெ.நடராசன், முகப்பேர் முரளி, ஆவடி ஜெயராமன், சுந்தராஜ், வஜிரவேல்,  புஷ்பா, திருநின்றவூர் ரகுபதி, அம்பத்தூர் கு.சங்கர், கொரட்டூர் இரா.கோபால், ஆவடி தமிழ்மணி, அம்பத்தூர் முத்துகிருஷ்ணன், சரவணன், ராமலிங்கம், தேவேந்திரபாபு, உடுமலை வடிவேல், பெரியார் மாணாக்கன்,

மகளிரணி: இறைவி, பெரியார் செல்வி, மு.பசும்பொன்,  புஷ்பா, அமலாசுந்தரி, நர்மதா, மணிமொழி, இராணி, வெண்ணிலா, முகப்பேர் செல்வி, ராணி ரகுபதி, பூவை செல்வி, மு.செல்வி, த.மரகதமணி, வி.வளர்மதி, பி.அஜந்தா, இளவரசி, தங்க.தனலட்சுமி, செ.பெ.தொண்டறம்.

விடுதலை நாளேடு; 9.9.25


யூடியூப் காணொலி




வியாழன், 5 செப்டம்பர், 2024

தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதா? தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுப்பதா? ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம்!


வெள்ளி, 20 மே, 2022

மத்திய பல்கலைக் கழகங்களுக்கு கட்டாய நுழைவுத் (CUET) தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

 

திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!


சென்னை, ஏப். 12,- மத்திய பல்கலைக் கழகங்களுக்கு கட்டாய நுழைவுத் தேர்வை (CUET)  நுழைத்துள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் இன்று (12.4.2022) காலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

"ஒன்றிய அரசின்கீழ் இயங்கும் பல்கலைக் கழக மானிய குழு 2022-2023ஆம் கல்வியாண்டு முதல், அம்மானியக் குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும், இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை (National Testing Agency - NTA)   நடத்தும் பொது பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு  (Common University Entrance Examination - CUET) மூலம் மட்டுமே நடைபெறும் என்று அறிவித்துள்ளது. 

+2 தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் பொது பல்கலைக் கழக நுழைவுத் தேர்வில் (CUET) மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் எனவும், மாநிலப் பல்கலைக் கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் விரும்பினால் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மாநில  அரசுகளின் உரிமையினை நிலை நாட்டும் பொருட்டு மத்திய பல்கலைக் கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேர்வதற்காக நடத்தவிருக்கும் பொது பல்கலைக் கழக நுழைவுத் தேர்வினை நடத்த கூடாது என்றும், இதை புகுத்தியுள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும் திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் 

கி.வீரமணி அவர்கள் அறிவித்திருந்தார்.

அதன்படி 31.3.2022 அன்று திருவாரூரில் அமைந்திருக்கும் மத்திய பல்கலைக் கழகம் முன்பும், 11.4.2022 அன்று புதுச்சேரி அண்ணாசாலையில் அண்ணாசிலை அருகிலும், இன்று (12.4.2022) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலும் திராவிட மாணவர் கழகத்தின் மாநில செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்  நடைபெற்றன.  

சென்னை மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் அருகில்  இன்று (12.4.2022) காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்த அறவழி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்று திராவிட மாணவர் கழக பொறியியல் கல்லூரி மாநில  அமைப்பாளர் வி. தங்கமணி உரையாற்றினார்.திராவிட மாணவர் கழகத்தின் சட்டக் கல்லூரி மாநில துணை அமைப்பாளர் சு. தமிழ்ச்செல்வன், பொறியியல் கல்லூரி மாநில துணை அமைப்பாளர் இ.ப. இனநலம், சென்னை மண்டல திராவிட மாணவர் கழக செயலாளர் வ.ம. வேலவன், வடசென்னை மாவட்ட மாணவர் கழக தலைவர் த.பர்தின், செயலாளர் இரா. பாலாஜி, ஆவடி மாவட்ட மாணவர் கழகத் தலைவர் செ.பெ. தொண்டறம், செயலாளர் சி. அறிவுமதி, தென் சென்னை மாவட்ட மாணவர் கழகத் தலைவர் வி.விஸ்வாஸ், செயலாளர் பா. அறிவுச்செல்வன்,  தாம்பரம் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் அனகை பிரபாகரன், செயலாளர் மோ. பிரபாகரன், கும்மிடிப்பூண்டி மாவட்ட மாணவர் கழகத் தலைவர் நீ. குணசேகரன், செயலாளர் இரா. ஜெகன், சோழிங்நல்லூர் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ஜெ.குமார், செயலாளர் சரவணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்ட கண்டன உரையை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி ஆகியோர்  நிகழ்த்தினர்.

முன்னதாக திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா. செந்தூரப் பாண்டியன் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி தொடக்க உரையாற்றினார். நிறைவாக திராவிட மாணவர் கழக சட்டக் கல்லூரி மாநில துணை அமைப்பாளர் செ. பிரவீன்குமார் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, அமைப்புச் செயலாளர்கள் ம.துரை வே. செல்வம், வி. பன்னீர்செல்வம், சென்னை மண்டல கழகத் தலைவர் தி.இரா. ரத்தினசாமி, செயலாளர் தே.செ. கோபால், வடசென்னை மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு. மோகன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி, கோ.வீ. இராகவன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த. ஆனந்தன், வடசென்னை மாவட்ட அமைப்பாளர் புரசை அன்புச்செல்வன்,

சென்னை உயர்நீதிமன்ற கழக வழக்குரைஞர் ஆம்பூர் ஜெ.துரைசாமி, பெரியார் களம் இறைவி, பசும்பொன் செந்தில்குமாரி, மு.பவானி, த. மரகதமணி, அருணா வெண்ணிலா, அரும்பாக்கம் சா. தாமோதரன், நெய்வேலி வெ.ஞானசேகரன், சோழிங்கநல்லூர் மாவட்ட செயலாளர் ஜெயராமன், திராவிட தொழிலாளர் கழக தோழர்கள் பாலு, ராமலிங்கம், ராஜீ மற்றும் க. அன்புமணி, க. தமிழ்ச்செல்வன், அமைந்தகரை மோகன்,  க.கலைமணி, பிரபாகரன், ஆனந்தன், உள்ளிட்ட கழக தோழர் - தோழியர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

ஒலி முழக்கங்கள்

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி  முழக்கங்கள் வருமாறு:

— ஒன்றிய அரசே பா.ஜ.க. அரசே கல்வித்துறையை அழிக்காதே!

— புகுத்தாதே புகுத்தாதே! தேசிய கல்விக் கொள்கையை புகுத்தாதே!

— திணிக்காதே! திணிக்காதே! மத்தியப் பல்கலைக் கழகங்களில் நுழைவுத் தேர்வைத் திணிக்காதே!

— அழிக்காதே அழிக்காதே பள்ளிக் கல்வியை அழிக் காதே!

— கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிக்க நுழைவுத் தேர்வா? நுழைவுத் தேர்வா?

— மேற்படிப்புக்கு GATE அய்ப் போட்டான், IIT  க்கு JEE   ன்னான், மருத்துவத்துக்கும் NEET  அய்ப் போட்டான், மிச்சமிருக்கும் படிப்புக்கெல்லாம் CUET ன்னு தடை யைப் போட்டா மாணவர் நாங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து உடைத்து எறிவோம் தடைகள் அனைத்தையும்!

— அனுமதியோம் அனுமதியோம் நுழைவுத் தேர்வுகளை அனுமதியோம்! 

என ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.