செவ்வாய், 31 டிசம்பர், 2019

எழுந்தது எதிர்க்கட்சியினரின் மாக்கடல் பேரணி!

வீழ்ந்திடும் த்பாசிச குடியுரிமைத் திருத்த மசோதா

தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழர் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

சென்னை, டிச.23  மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை எதிர்த்து இன்று சென்னையில் நடத்தியது வெறும் பேரணியல்ல, மக்கள் கடலின் மாபெரும் அணிவகுப்பு!

மத்திய பா.ஜ.க. பாசிச அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து இன்று (23.12.2019) காலை சென்னையில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் எந்தவிதமான ஆழ்ந்த பரிசீலனை, பார்லிமெண்டரி செலக்ட் கமிட்டி போன்றவைகளின் பரிசீலனைக்கூட இல்லாமல், தடா லடியாக தங்களுக்குள்ள பெரும்பான்மை என்ற ஒரே பலத்தினைப் பயன்படுத்தி, அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்த கதையாக குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.

வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வலுப் பெற்றன. டில்லி, உத்தரபிரதேசம், கருநாடகா ஆகிய மாநிலங்களில் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உயிரிழப்பு களும் நிகழ்ந்தன.

தமிழகத்திலும் குடியுரிமை சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. எதிர்க்கட்சிகள் குடியுரிமை சட் டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த பேரணிக்கு அனுமதி கேட்டு தி.மு.க. சார்பில் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக் கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் பேரணிக்கு அனுமதி அளிக்கவில்லை.

இருப்பினும் தடையை மீறி திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என்று தி.மு.க. சார்பில் தெரிவிக் கப்பட்டது. இதற்கிடையே பேரணிக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் தி.மு.க. பேர ணிக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. அதே நேரத்தில் அமைதியான முறையில் பேரணியை நடத்த வேண்டும் என்றும் வன்முறை ஏற்பட்டால் தலைவர்களே பொறுப்பு என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.

இதனை தொடர்ந்து தி.மு.க. பேரணி இன்று (23.12.2019)  காலை திட்டமிட்டபடி நடைபெற்றது.

தாளமுத்து நடராசன்

மாளிகையிலிருந்து...

எழும்பூரில் உள்ள தாளமுத்துநடராசன் மாளிகை அருகில் இருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரையில் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக இன்று காலை 8 மணியில் இருந்தே தி.மு.க. தொண் டர்கள் தாளமுத்து நடராசன் மாளிகை அருகே குவியத் தொடங்கினார்கள்.

தோழமைக் கட்சிகளான திராவிடர் கழகம், ம.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க் சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.அய்., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

பேரணியில் பங்கேற்க 98 அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபடி ஏராள அமைப்புகளை சேர்ந்த வர்களும், மாணவர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேரணியில் பங்கேற்பதற்காக 10.15 மணி அளவில் வந்தார். பின்னர் கூட்டணி கட்சி தலைவர்களை கைகுலுக்கி அவர் வரவேற்றார். இதையடுத்து முக.ஸ்டாலின் தலைமையில் உடனடியாக பேரணி தொடங்கியது.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, பீட்டர் அல்போன்ஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன்.

மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் செயலாளர் ராமகிருஷ்ணன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், அய்.ஜே.கே. கட்சி பொதுச்செயலாளர் சத்தியசீலன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஆகிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், எம்.பி.கள் கனிமொழி, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், கதிர்ஆனந்த், தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி, மற்றும் மு.க.தமிழரசு, நடிகர் அருள்நிதி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, பூங்கோதை, மாவட்ட செயலாளர்கள் சேகர்பாபு, ஜெ.அன்பழகன், மாதவரம் சுதர்சனம், தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பேரணியில் நடந்து சென்றனர்.

இம்மாபெரும் கண்டனப் பேரணியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் சென்னை மண்டலம், வடசென்னை, தென்சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள், செயலாளர்கள், கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

நாஞ்சில் சம்பத் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் பேரணியில் கலந்து கொண்டனர்.

பேரணியின் முன் வரிசையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 13 கட்சிகளின் தலைவர்களும் அணிவகுத்துச் சென்றனர்.

பேரணியில் பங்கேற்பவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. ஆகியோர் அவ்வப்போது அறிவிப்புகளை வழங்கிக் கொண்டே இருந்தனர்.

குடியுரிமை சட்ட நகலையோ, கொடும்பாவிகளையோ யாரும் எரிக்கக்கூடாது என்று கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டது.

தாளமுத்து நடராசன் மாளிகையில் இருந்து புறப் பட்ட பேரணி லேங்ஸ் கார்டன் ரோடு, புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியத்தை சென்றடைந்தது.

அங்கு தலைவர்கள் பேசுவதற்காக தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஏறிய தலைவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும் ஒலிமுழக்கங்களை எழுப்பினார்கள்.

அதசியம் - ஆனால், உண்மை!

கண்டனப் பேரணியில் அய்யப்பப் பக்தர்களும், காவி உடையுடன் பங்கேற்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து முழக்கமிட்டு வந்தனர்.

'படை பெருத்தது - பார் சிறுத்தது' குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து மக்கள் கடலின் எழுச்சிப் பேரணி (சென்னை, 23.12.2019)



Smaller Font

- விடுதலை நாளேடு, 23.12.19

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி திராவிட மாணவர் கழகத் தோழர்கள் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டுப் போராட்டம்!

சென்னை. டிச. 21- குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி, திராவிட மாணவர் கழகஜத்தின் சார் பில் சாஸ்திரி பவன் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் மாநில மாணவரணிச் செயலாளர் ச.பிரின்சு நன்னாரெசு பெரியார் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப் பையும் மீறி, நாடளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடிரிமைத் திருத்தத் சட்டத்தை மத்தியில் உள்ள பி.ஜே.பி அரசு நிறைவேற்றியது. இதனை எதிர்த்து நாடெங்கிலும் மாணவர்கள் கடுமையான போராட்டத்தை முன் னெடுத்தனர்! அதன் தொடர்ச்சியாக திராவிட மாணவர் கழகத்தினர், அதன் மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் மத்திய அரசின் அலுவலகமான சாஸ்திரிபவன் அலுவலகத்தை 19-.12.2019 காலை 11 மணி அளவில் முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்! எதிர்பாராத இந்தப் போராட்டத்தால் அந்தப்புகுதியில் சற்று நேரம், போக்குவரத்து நெரிச லும், பரபரப்பும் ஏற்பட்டது!

முற்றுகை! மறியல்! சிறை!

கல்லூரி சாலையில் உள்ள வானி யல் ஆயுவு மய்யத்திலிருந்து ஆர்ப் பாட்டம் தொடங்கியது! பிரின்சு என்னாரெசு பெரியார் மத்திய அர சைக் கண்டித்து முழக்கமிட்டபடியே வர, தோழர்களும் உணர்ச்சிபூர்வமாக முழக்கங்கள் இட்டபடியே பின் தொடர்ந்தனர்! கல்லூரி சாலையில் தொடங்கிய இந்த ஊர்வலம் ஹேடோசு சாலை வழியாக சென்று, சாசுத்திரிபவனை அடைந்தது! அங்கு சாஸ்திரிபவன் அலுவலகத்தின் முதன்மை வாயில் முன்பாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவலர்கள் குவிந்தவுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்! அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர் களை காவல் துறையினர் கைது செய்து, வள்ளுவர் கோட்டம் சாலை யில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத் திற்கு எதிரில் உள்ள, ஏபிவிபி திருக் கோயில் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

சிறைக்குள்ளும் அறிவுரையாடல்!

கைது செய்து செய்யப்பட்டத் தோழர்கள், தாங்கள் திராவிடர் கழ கத்திற்கு எப்படி வந்தோம்  என்ப தைப்பற்றி தனிதனியாக விவரித்தனர். கழகத்தின் பேச்சாளர் சே.மெ. மதிவதனி ஆசிரியரின் சிறப்புகளைப் பற்றி மாணவரணித் தோழர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் பேசினார். மாணவரணித் தோழர்கள் அனை வரும் தனித்தனியாக ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். ஆவடி விஜய் ஜாதி, அதன் தன்மைகள், அதை மக்கள் இன்னமும் புரிந்துகொள்ளாமல் இருப்பதால் ஏற்படும் தொல்லைகள் பற்றி விரிவாகப் பேசினார். அதைத் தொடர்ந்து புழல் அறிவுமாணன் பகுத்தறிவு, மூடநம்பிகை ஒழிப்புப் பாடல்களைப் பாடி தோழர்களை உற்சாகப்படுத்தினார். இந்நிகழ்வை பெரியார் களம் தலைவர் தோழர் இறைவி நெறிப்படுத்தினார். பிற்பக லில் கைதானவர்களை பொதுச்செய லாளர் வீ.அன்புராஜ், மண்டலச் செய லாளர் தே.செ.கோபால் ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தினார். மாலை 6 அளவில் தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, மாநில அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம், தாம்பரம் மாவட் டத் தலைவர் பா.முத்தையன், செய லாளர் கோ.நாத்திகன், தாம்பரம் நகரச் செயலாளர் சு.மோகன்ராஜ், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், பெரியார் சுயமரி யாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி,  பொன் னேரி வே.அருள், ஆவடி மாவட்ட இ¬ளைஞரணிச் செயலாளர் வி. சோபன்பாபு, தாம்பரம் ரூபன் தேவ ராஜ், புழல் அறிவுமாணன், பூந்தமல்லி சுரேசு, பூந்தமல்லி நகர அமைப்பாளர் மணிமாறன், பூவை சு.வெங்கடேசன், ஆவடி மாவட்ட மாணவரணிச் செய லாளர் வெற்றி, ஆவடி இளைஞரணித் தோழர் இ.தமிழ்மணி, திருவொற்றியூர் இளைஞரணித் தோழர் இரா.சதீசு,  மண்டல மாணவரணித் தலைவர் இர.சிவசாமி, பெரியார் களம் தலை வர் இறைவி, தென்சென்னை மாவட்ட மாணவரணித் தலைவர் வி.விசுவாசு, மாணவரணித் தோழர்கள் பொ.இ. பகுத்தறிவு, ஆவடி மாவட்ட மாண வரணித் தலைவர் செ.பெ.தொண் டறம், சென்னை மண்டல மாணவர ணிச் செயலாளர் வ.ம.வேலவன், வட சென்னை மாவட்ட மாணவரணிச் செயலாளர் சு.தமிழ்செல்வன், சி.பிர பாகரன், கோயம்பேடு மா.திருமால், மாநிலக்கல்லூரி மாணவர் வை.கு. நிரஞ்சன், சோலவரம் பா.சக்கரவர்த்தி, தரமணி கோ.மஞ்சநாதன், ஊரப் பாக்கம் பி.சீனிவாசன், சட்டக்கல்லூரி மாணவர் செ.பிரவீன்குமார், திரு வள்ளூர் மு.மேகலா, மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மே.மதி வதனி, செங்குன்றம் கவு.ஜெகத்விஜய குமார், ஆகியோர் கைது செய்யப்பட் டனர்.

-  விடுதலை நாளேடு, 21.12.19


கிரகண மூடநம்பிக்கையை முறியடிக்கும் நிகழ்ச்சி (சென்னை, 26.12.2019)

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், Parthasarathy Rationalist உட்பட, புன்னகைப்பவர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், வானம் மற்றும் வெளிப்புறம்


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், Anbu உட்பட, புன்னகைப்பவர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறம்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், Parthasarathy Rationalist மற்றும் Vilvanathan R உட்பட, பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உணவு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் சாப்பிடுகின்றனர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உணவு


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார்

26.12.19 முற்பகல் நிகழ்ந்த சூரிய மறைப்பின் (கிரகணத்தின்) பொழுது மூட நம்பிக்கையை ஒழிக்கும் வகையில் பெரியார் திடல் வாயிலில் உணவு உண்டு மகிழ்ந்தோம்!


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், புன்னகைப்பவர்கள்
இந்தக் கடமையைத்தான் திராவிடர் கழகம் செய்து கொண்டுள்ளது; மூளையைப் பிடித்த கிரகணம் நீங்குவதுதான் உண்மை விடுதலை
கிரகண மூடநம்பிக்கையை விளக்கி தமிழர் தலைவர் அறிக்கை
* சூரிய கிரகணம் - சந்திர கிரகணம் இயற்கையின் நிகழ்வு
* இதில் மூடநம்பிக்கைகளைப் புகுத்துவது வெட்கக்கேடு!

* விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்கிறது அரசமைப்புச் சட்டம்

சூரிய கிரகணம் என்பது இயற்கை யில் நிகழக்கூடிய ஒன்றே! இதில் மூடநம்பிக்கையைப் பரப்பி வருகிறார் கள். இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ மக்களிடத்திலே விஞ்ஞான மனப்பான் மையை வளர்க்கவேண்டும் - இது ஒவ்வொரு குடிமகனின் கடமை என் கிறது - அந்தக் கடமையை திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் செய்து கொண்டிருக்கிறது என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:
கிரகணங்கள் (eclipses) என்பவை சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை - பூமி, சூரியனை சுற்றி வரும்போது - ஒரே நேர்கோட்டில் வரும்போது ஏற்படும் மறைப்புகள் ஆகும்; குறிப்பிட்ட நேரத் திற்குப் பிறகு அது விலகிவிடும்; வழக்கம் போன்ற வெளிச்சம் பூமியில் உள்ளோ ருக்குக் கிடைக்கும்.
இதை அறிவியலில் - விஞ்ஞான வகுப் பில் நமது மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தாலும்கூட தேவையற்ற புராண மூடநம்பிக்கைக் குப்பைகளையும் நமது மாணவர்கள், இளம்பிஞ்சுகள் உள்ளத்தில் அச்சுறுத்தும் வகையில், கற்பனைக் கட்டுக் கதைகளைப் பரப்பி, மூடநம்பிக்கைகளைப் பரப்பி, அதன் தோஷம் நீங்க, தர்ப்பைப் புல்லை, சட்டிப் பானை முதல் வீட்டில் எல்லா இடங்களிலும் போடவேண்டும்; பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து ‘‘கிரகண தோஷம்'' நீங்கிட மந்திரம் ஜபித்து, தானம் வழங்கவேண்டும் என்றும்,
கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாதா?
அந்தக் கிரகணத்தில் பெண்கள் குறிப் பாக கர்ப்பிணிப் பெண்கள் - வெளியே வரக்கூடாதென்றும், இன்னும் பல மூட நம்பிக்கைகளை அடுக்கடுக்காய் மூளைக்கு விலங்கு போட்டு, நமது மூளையில் ஏற்றி வைத்துள்ளார்கள்.
கிரகணம்பற்றி விஞ்ஞான பாடம் எடுக்கும் ஆசிரியர்களே, வீட்டில் குளிப்பது, தர்ப்பைப் புல்லைப் போடுதல் முதலிய சடங்குகளுக்குள் சரணாகதி அடைவது மகாவெட்கக்கேடு! தந்தை பெரியார் கூறு வதுபோல், படிப்பிற்கும், பகுத்தறிவிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை; வெறும் தேர்வு - மதிப்பெண் படிப்பினால் காதொடிந்த ஊசி அளவுக்குக்கூடப் பயனில்லை!
‘ராகு, கேது என்ற பாம்புகள்' விழுங்கு வதுதான் புராணக் கதை!
அதுமட்டுமா?
சூரியனுக்குக் குழந்தை பிறக்குமா?

சூரியனுக்கும், குந்திதேவிக்கும் பிறந்த குழந்தைதான் கர்ணன் என்ற பாரத (பாதக) கதை.
சூரியனுக்கும், சந்திரனுக்கும் 27 பெண் டாட்டிகள் என்பது, சந்திரன் பெற்ற சாபத் தால்தான் தேய்பிறை - பிறகு வேண்டிக் கொண்டதால் வளர்பிறை என்ற  பூகோள அடிப்படை அறிவையே கெல்லி எறியும் விஞ்ஞானத்திற்கு எதிரான அஞ்ஞானக் கதைகள்!
படித்தவர்கள் பலர்கூட ஜோதிடத்தை நம்பி நாசமாகிறார்கள்; ஏடுகள் ராசி பலன், வார பலன், நாள் பலன் எல்லாவற்றிற்கும், ஆங்கில ஆண்டுக்கும் பிறந்த நாளை வைத்து, இந்த கிரக பலன் கூறுவது எவ்வளவு வேடிக்கையும், விந்தையும் நிறைந்தது! இதில் கூடுதல் வெட்கக்கேடு - கம்ப்யூட்டர் ஜோதிடமாம்!  அஞ்ஞானத்தை விஞ்ஞானத்தின்மூலம் பரப்பும் வெட்கக்கேடு!
வானியல் வேறு; ஜோதிடம் வேறு!
வானவியலை (Astronomy) பகுத்தறிவா ளர்களான நாங்கள்  முழுக்க முழுக்க ஏற் கிறோம். ஆனால், ஜோதிடம் என்ற Astrology  என்பது போலி விஞ்ஞானம் (Pseudoscience). 9 கிரகங்களா,8 கிரகங் களா? புதிய கிரகங்கள் ஏராளம் உள்ளனவே - அவற்றிற்கென்று ஜோதிடத்தில் இடம் இல்லையே! செவ்வாய்த் தோஷம் பேசி, அதை நம்பி பல பெண்களின் திருமண வாழ்க்கையைக்கூட இழந்து தற்கொலை வரை செல்லும் கொடுமை உள்ள நாட்டில், செவ்வாய்க் கோளில் நாம் ஏவிய ஏவுகணை ராக்கெட்டுகள் வெற்றிகரமாகத் திரும்பி னவே - அதுவும் ஒரு செவ்வாய்க்கிழமை யிலே - அதைக் கண்ட பிறகாவது, திருந்த வேண்டாமா? மூடநம்பிக்கை இருளிலி ருந்து பகுத்தறிவு வெளிச்சத்திற்கு வர வேண்டாமா?
அரசமைப்புச் சட்டம்

என்ன கூறுகிறது?
நமது அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ பிரிவு, குடிமக்களின் அடிப்படைக் கடமை களில் ஒன்றான,
அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல்,
கேள்வி கேட்டு ஆராயும் பண்பு, மனித நேயம், சீர்திருத்தம் இவைகளைப் பரப்ப கட்டளை இட்டுள்ளதே!
அதன்மீது பிரமாணம் எடுத்தவர்கள் பரப்புகிறார்களா? பகுத்தறிவாளர்களும், இடதுசாரிகளும், முற்போக்காளர்களும் தானே அதைச் செய்கிறார்கள். ஆட்சியா ளர்கள் இதை கேலிக் கூத்தாக்கி மூடநம் பிக்கையை முழு மூச்சுடன் பரப்பும் பணி யில் ஈடுபடுவது அரசமைப்புச் சட்ட பிர மாண உறுதிமொழிக்கு விரோதம் அல்லவா?
மூளைக் கிரகணம் நீங்கவேண்டும்
இவர்களைப் பிடித்த ‘‘மூளைக் கிர கணம்'' எப்போது நீங்குமோ அப்போதுதான் உண்மை விடுதலை! விடுதலை!!

கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
26.12.2019
கேள்விக்கென்ன பதில்?

சூரிய கிரகணத்தின்போது இந்துக் கோவில்கள் மட்டும் மூடப்படுவதேன்?

சூரிய கிரகணத்தின்போது கோவில்களின் நடை மூடப்பட்டு, கிரகணம் முடிந்த பின்னரே திறக்கப்படுகிறது!
ஏன் இந்து கடவுள்களுக்கு மட்டும்? மற்ற மதக் கடவுள்களுக்கு இல்லை. மாதாக் கோவில், பள்ளிவாசல் - மசூதிகள் ஏன் மூடப்படுவதில்லை?
அந்தக் கடவுள்களுக்கு மட்டும் ‘பயம்' இல்லையா? ‘தோஷம்' பிடிக்காதா?
வேடிக்கையாக இல்லையா?

கிரகண மூடநம்பிக்கை முறியடிப்பு நிகழ்ச்சியின் விவரம் 5 ஆம் பக்கம் காண்க
அறிவியல் ஆர்வமிகுதியில் பெண்கள், குழந்தைகள் பெரியார் திடலில் குவிந்தனர்
சூரிய கிரகணத்தின்போது மூடநம்பிக்கைகள் முறியடிப்பு

மூடநம்பிக்கை முறியடிப்பு நிகழ்வில் கழகக் குடும்பங்களோடு தமிழர் தலைவர் உணவருந்தினார்


சென்னை,டிச.26, சூரிய கிரகண மூடநம்பிக் கைகளை முறியடிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர்கழகம் சார்பில் இன்று (26.12.2019) காலை நடத்தப் பட்டது.  நிகழ்ச்சியை திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்தார்.
செந்தமிழ் சேகுவேரா அறிவியல் விளக்கங் களை எடுத்துரைத்தார். இளைஞர்கள், மாண வர்கள், குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராள மானவர்கள் பெரிதும் ஆர்வத்துடன் திரண்டிருந் தார்கள்.  கிரகணத்தின்போது சூரியனை பாது காப்பான கண்ணாடியால் அனைவரும் கண்டு பயன் பெற்றனர்.
சூரியகிரகண மூடநம்பிக்கைகளை முறி யடிக்கும் நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று சிற்றுண்டி அருந்தினார்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, துணைப்பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி,  பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால் வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத் தய்யன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலா ளர்கள் செ.ர.பார்த்த சாரதி,கோ.நாத்திகன், தி.செ. கணேசன்,  விடுதலைநகர் ஜெயராமன் மற்றும் சி.வெற்றி செல்வி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பெரியார் களம் இறைவி, சவுந்தரி நடராசன், தங்க.தனலட்சுமி, மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, வழக்குரைஞர் ந.விவேகானந்தன், சென்னை மண்டல இளை ஞரணி  செயலாளர் இர.சிவசாமி, பெரியார் சமூகக் காப்பு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் சோ.சுரேஷ், மகளிரணி நூர்ஜகான், சுமதி கணேசன், பெரியார் சுயமரி யாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, பூங்குழலி, ஆ.வெங்கடேசன், திண்டிவனம் சிறீராமுலு, திருவண்ணாமலை கவுதமன், தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், சீனுவாசன், புரசை சு.அன்புச்செல்வன்,  மடிப்பாக்கம் பாண்டு, கொரட்டூர் பன்னீர்செல்வம், கொடுங்கையூர் கோ.தங்கமணி, திராவிடர் மாணவர் கழகத்தினர் உள்பட கழகத் தோழர்கள், பொதுமக்கள் பெருந் திரளாக திரண்டிருந்தனர். கருவுற்ற பெண்கள் வெளியே வரக்கூடாது என்கிற மூடநம்பிக்கையை முறியடித்து சீர்த்தி - பகலவன் இணையர் தமிழர் தலைவருடன் சூரிய கிரகணத்தின்போது உணவருந்தினார்கள்.
"செய்வதையே சொல்கிறோம், சொல்வதையே செய்கிறோம்" என்று மூடநம்பிக்கை முறியடிப்பு நிகழ்ச்சி எழுச்சியுடன் பெரியார் திடலில் கழகத் தோழர்களால் சிறப்பாக ஏற்¢பாடு செய்யப்பட்டது.
அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. அரும்பாக்கம் சா.தாமோதரன் சிக்கன் பிரெட் அளித்தார். வானவியல் காட்சி திரையிடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நடை பெற்றது. பெரியார் பிஞ்சுகளுக்கான ஓவியப் போட்டியும் நடத்தப்பட்டது.
- விடுதலை நாளேடு 26 12 19

திங்கள், 23 டிசம்பர், 2019

திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் தந்தை பெரியார் நினைவு நாள் அமைதி ஊர்வலம்

தந்தை பெரியார் நினைவு நாளில் திராவிடர் கழகத்தின் சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றன.  24.12.2019 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு  சென்னை அண்ணாசாலையில் (சிம்சன் அருகில்) அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை வழியாக பெரியார் திடலை அடைகிறது. திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள்  உள்ளிட்ட பலரும் ஊர்வலத்தில் பங்கேற்கின்றனர்.

பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அமையப்பெற்றுள்ள 21அடி உயர பெரியார் முழு உருவச்சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  தலைமையில் மாலை அணிவிக்கப் படுகிறது.

பெரியார் நினைவிடம், அன்னை மணியம் மையார் நினைவிடம், சுயமரியாதை சுட ரொளிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் கழகத் தோழர்கள் உறுதிமொழி ஏற்கின்றனர்.

மாலை நிகழ்ச்சிகள்

தந்தை பெரியார் நினைவு நாளில் பெரியார் விருது வழங்கும் விழா, புத்தக வெளியீட்டு விழா 24.12.2019 அன்று மாலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெறுகிறது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையேற்று நூல்களை வெளியிட்டு, விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.

திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரை ஆற்றுகிறார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் முன்னிலை வகிக்கிறார்.

நூல் வெளியீட்டு விழா

புலவர் பா.வீரமணி தொகுப்பில் ஆசிரியர் கி.வீரமணியை பதிப்பாசியராகக் கொண்டு, ‘பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்’ 3 தொகுதி நூல்கள் வெளியிடப்படுகின்றன.

‘பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்’ 3 தொகுதி நூல்களின் நன்கொடை மதிப்பு ரூ.750. பெரியார் நினைவு நாளில் சிறப்புத்தள்ளுபடியில் ரூ.600க்கு வழங்கப்படுகிறது.

பெரியார் விருது வழங்கும் விழா

பெரியார் பன்னாட்டமைப்பு இயக்குநர் சிகாகோ மருத்துவர் சோம.இளங்கோவன், புதுக் கோட்டை மருததுவர் சூ.செயராமன், தோழர் திருமுருகன்காந்தி ஆகியோருக்கு பெரியார் விருது வழங்கப்படுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தோழர் இரா.நல்லக்கண்ணு, முனைவர் மு.நாக நாதன், புலவர் பா.வீரமணி ஆகியோர் உரையாற் றுகின்றனர். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்குகிறார். திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி நன்றி கூறுகிறார்.

பெரியார் மணியம்மை மருத்துவமனையில்

இலவச பொது மருத்துவ முகாம்

24.12.2019 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை சென்னை பெரியார் திடலில் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் இலவச பொது மருத்துவ முகாம் பெரியார் நினைவு நாளையொட்டி நடைபெறுகிறது.

 

புதன், 18 டிசம்பர், 2019

தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா (சுயமரியாதை நாள்) - கோட்டூர்

மாநிலம் முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா (சுயமரியாதை நாள்)

நீட் - "புதிய கல்விக் கொள்கையை" எதிர்த்து தெருமுனை பரப்புரைக் கூட்டங்கள்

சென்னை, டிச.18 தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடை பெற்ற தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா (சுயமரியாதை நாள்) ‘நீட்', ‘புதிய கல்விக் கொள்கையை' எதிர்த்து தெருமு னைப் பரப்புக் கூட்டங்கள் நடைபெற்றன.

நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:


அவர்களின்

தென் சென்னை - கோட்டூர்

தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த கோட்டூர் அங் காடி பகுதியில் 07.12.2019 அன்று மாலை 6.00 மணி அளவில் தொடங்கி திராவிடர் கழகம் - இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 87ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கூட்டம்  ந.மணித்துரை  (மாவட்ட இளைஞரணி செயலாளர்)   தலைமையிலும்  இரா.வில்வ நாதன் (தென்சென்னை மாவட்டத் தலைவர்), செ.ர.பார்த்த சாரதி (மாவட்ட செயலாளர்), டி.ஆர்.சேதுராமன் (மாவட்ட துணை தலைவர்), கோ.வீ.ராகவன் (மாவட்ட துணை செய லாளர்), சா.தாமோதரன் (துணை செயலாளர்),   மற்றும் மு.இரா.மாணிக்கம் (தலைவர், தென் சென்னை, பகுத்தறிவாளர் கழகம்) ஆகியோர் முன்னிலையிலும் சிறப்புடன் நடை பெற்றது.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ந.சிவசீலன் வரவேற்புரையாற்றினார். முன்னதாக 'இனநலம் கலைக் குழு'வை  சேர்ந்த பிரின்சு என்னாரசு பெரியார், இறைவி, து. கலைச்செல்வன், உடுமலை வடிவேலு ஆகியோரின்  கலை நிகழ்ச்சி நடைபெற்றது .

ஓவியா அன்புமொழி (மண்டல மகளிரணி செயலாளர்), ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), வீ.குமரேசன் (பொருளாளர்), ஆளூர் ஷாநவாஸ் (துணைப் பொதுச் செயலாளர், விடுதலை சிறுத்தை கட்சி)  ஆகியோர் உரையாற்றியதற்கு பின் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பணிகளைப் பாராட்டி அனைவரும் பேசினர். 31 சி சட்டம் வடிவமைத்துக் கொடுத்து ஒன்பதாவது அட்டவணையில் 69 சதவிகித பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை  மூன்று பார்ப்பனர் களை கொண்டே சேர்க்க வைத்து சாதனை படைத்தவர், ஏராளமான  மாநாடுகளையும் போராட்டங்களையும் நடத்தி  மண்டல் குழு அறிக்கையை அமலாக்க செய்தவர்,  அரசால் தமிழுக்கு ஆபத்து, இந்தி திணிப்பு, கல்வி உரிமை பறிப்பு, வேலைவாய்ப்பு பறிப்பு போன்ற  தமிழர்களின் உரிமைகள் தமிழ்நாட்டின் உரிமைகள்  பறிக்கப்படும் நிகழ்வுகளின் போதெல்லாம் குரல் கொடுத்து போராட்டங்களை நடத்தி  தமிழர் தலைவர் என்றென்றும் சாதனை படைத்து வருகிறார், சாதனைகளை பாராட்டும் வகையில் அமெரிக்க மனிதநேய அமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியுள்ளது என  சுட்டிக் காட்டினர். பிஜேபி அரசின் தமிழர் விரோத செயல்களையும் பார்ப்பனர்களின் உயர்வுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்டோரின் இட ஒதுக்கீட்டை பறிப்பது குறித்தும் விளக்கி பேசினர்.

வி.பன்னீர்செல்வம் (அமைப்பு செயலாளர்), தே.செ. கோபால் (மண்டல செயலாளர்), சு.குமாரதேவன் (வட சென்னை மாவட்டத் தலைவர்), ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்), ஆர்.டி.வீரபத்திரன் (சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர்), அடையாறு த.க.நடராசன், வடசென்னை மாவட்ட செயலாளர் கணேசன்,  வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் கி.இராமலிங்கம், சோழிங்கநல்லூர் மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழினியன், வட சென்னை ப.க. அமைப்பு செயலாளர் ஆ.வெங்கடேசன், பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை செயலாளர்), வடசென்னை இளை ஞரணி தலைவர் தளபதி பாண்டியன்,  புரசை சு.அன்புச்செல் வன், பொழிசை கண்ணன், தரமணி கோ.மஞ்சநாதன், அ. அன்பு, வி.வளர்மதி, வி.தங்கமணி, வி,யாழ்ஒளி, பி.அஜந்தா, மு.பவானி, ஈ.குமார், மு.சண்முகப்பிரியன்,  பெரியார் சேகர், தாம்பரம் நகர செயலாளர் மோகன்ராஜ், குன்றத்தூர் சி.பரசுராமன் குன்றத்தூர் மு.திருமலை பூந்தமல்லி க.தமிழ்ச் செல்வன், சோழபுரம் சக்கரவர்த்தி,  சோழபுரம் ந.கஜேந்திரன், சு. தமிழ்ச்செல்வன், டி.தமிழ்ச்செல்வன், ஜி.டி.எம்.யாசிர், தமிழ ன் பிரபாகரன்,அ.தில்ரேஸ் பானு, எ.ஜெயவர்மன், சிறுத்தை சாகீர், மு.அய்ஸ்வர்யா, பா.முத்தழகு  மற்றும் சென்னை மண்டல கழகத் தோழர்கள் பெருமளவு பங்கேற்று இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பொதுமக்கள் பெருமளவில் வந் திருந்து கருத்துகளைக் கேட்டு பாராட்டு தெரிவித்தனர்.

ஜெயவர்மன் என்பவர் புதிய கழக உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார் .

இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.

சனி, 7 டிசம்பர், 2019

மேனாள் மேயர் வை.பாலசுந்தரம் மறைந்தாரே! தமிழர் தலைவர் கி.வீரமணி இரங்கல்

அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர்  வை.பாலசுந்தரம் (வயது 76) உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த சில நாள் களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (6.12.2019) மறைந்தார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
சட்டமன்ற திமுக உறுப்பினராகவும், சென்னையின் மேயராகவும் பதவி வகித்தவர்.
அவரை இழந்து வாடும் அவரது மனைவி பவானி, மகள் அனுப்பிரியா மற்றும் குடும்பத்தாருக்கும், அவர் இயக்கத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும்  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
7.12.2019
குறிப்பு: தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் மறைவுற்ற வை.பா. உடலுக்கு மரியாதை செலுத்துகின்றனர்.

நேற்று (07.12.19) பிற்பகல் 1.30 மணி அளவில் தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த, 06.12.19ம் நாள் மறைவுற்ற மேனாள் மேயர் வை.பாலசுந்தரம் அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகம் சார்பில் தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் அவர்கள் மாலைவைத்து மரியாதை செலுத்தினார். உடன்  தென் சென்னை மாவட்ட செயலாளர்  செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், ஆயிரம்விளக்கு மு.சேகர் மற்றும் இளைஞரணி செயலாளர் ந.மணித்துரை ஆகியோரும் பங்கேற்றனர். தமிழர் தலைவர் ஆசிரியரின் இறங்கல் அறிவிக்கை அனைவருக்கும் வழங்கப்பட்டது.

வியாழன், 28 நவம்பர், 2019

மாநில இளைஞரணி- மாணவர் கழகக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம்

தமிழர் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு

5,000 ‘விடுதலை' சந்தாக்களை அளிக்க முடிவு

சென்னை, நவ. 24- திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 87ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 5,000 ‘விடுதலை' சந்தாக்களை சேர்ப்பது என்று திராவிடர் கழக மாநில இளைஞரணி, மாணவர் கழகக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திராவிடர் கழகத்தின் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டை

திராவிடர் கழகத்தின் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டையின் முதல் பிரதியை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர்கள் வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி  மற்றும் பன்னீர்செல்வம், வழக்குரைஞர் சு.குமாரதேவன், பிரின்சு என்னாரெசு பெரியார், இளந்திரையன், செந்தூரபாண்டியன் ஆகியோர் வழங்கினர் (சென்னை பெரியார் திடல், 24.11.2019).

இன்று (24.11.2019) காலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில இளைஞரணி, மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1:

அய்.அய்.டி. மாணவியின் சந்தேக மரணமும் -

அரசு செய்ய வேண்டிய நடவடிக்கையும்

சென்னை அய்.அய்.டி.யில் மதவாத - ஜாதிய நெருக்கடியின் காரணமாக மரணிக்க நேர்ந்த ஃபாத்திமா லத்தீப்புக்கு இக்கூட்டம் தனது இரங்கலைத் தெரிவிப் பதுடன், இதன் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை காலந்தாழ்த்தாமல் கைது செய்து உரிய தண்டனையைப் பெற்றுத் தருமாறு தமிழ்நாடு அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற நிறுவனங்கள் பார்ப்பன ஆதிக்கக் கூடாரமாக இருப்ப தால், இந்நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் சேர்க்கையிலும், பேராசிரியர்கள் நியமனத்திலும் இடஒதுக்கீடு முழுமையான அளவில்   பின்பற்றப்பட உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

அய்.அய்.டி. போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் இருப்பதே மேற்கண்ட மரணங்கள் தூண்டப்படுவதற்கு முக்கிய காரணம் என்ப தால், இது மிகமிக முக்கியம் என்பதையும் இக்கூட்டம் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்  2:

விருது பெற்ற

தமிழர் தலைவருக்கு பாராட்டு

செப்டம்பர் 22 ஆம் தேதி அமெரிக்காவில் நடை பெற்ற மாநாட்டில் அமெரிக்க மனிதநேய சங்கத்தின்; (American Humanist Association)  சார்பில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு “மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்”(Humanist Life Time Achievement Award) விருது வழங்கி சிறப்பித்தமைக்கு திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் தனது மகிழ்ச்சியைத் தெரி வித்துக் கொள்வதுடன், விருது பெற்ற தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகளையும், பெருமகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 3:

தலைமைச் செயற்குழு கூட்ட தீர்மானங்களை செயல்படுத்துதல்

நவம்பர் 11 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

மாநில இளைஞரணி - மாணவர் கழகக் கூட்டத்தில் திரண்டிருந்த தோழர்கள் (சென்னை பெரியார் திடல், 24.11.2019)

தீர்மானம் 4:

‘விடுதலை' சந்தா

இன உரிமை மீட்பு ஏடான ‘விடுதலை'க்கு பெரு மளவில் புதிய சந்தாக்களை சேர்த்தும், பழைய சந்தாக் களைப் புதுப்பித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் 87 ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக 5,000 ‘விடுதலை' சந்தாக்களை வழங் குவது எனவும், மாவட்டக் கழகப் பொறுப்பாளர் களோடு கழக இளைஞரணி, மாணவர் கழக பொறுப்பாளர்கள் இணைந்து பணியாற்றுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 5:

“சுயமரியாதை நாள்”

தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்களை உலக மயமாக்கும் பணியில் தன்னை முழுமையாக அர்ப் பணித்தும், சமூகநீதிக்கு அவ்வப்போது ஏற்படும் ஆபத் துக்களை தடுத்திட இந்திய அளவிலும், தமிழகத்திலும் ஓயாது களத்தில் நின்று போராடி வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 87 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை டிசம்பர்-2 ‘‘சுயமரி யாதை நாளாக'' கொண்டாடும் வகையில் மரக்கன்றுகள் நடுவது, குருதிக்கொடை வழங்குவது, மருத்துவ முகாம் நடத்துவது, பள்ளி மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது, உள்ளிட்ட மனித நேய பணிகளை மேற்கொள்வதுடன் நாடெங்கும் கழகக் கொடிகளை ஏற்றி, கொள்கை பிரச்சாரக் கூட்டங் களை நடத்தி எழுச்சியுடன் கொண்டாடுவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 6:

‘நீட்' புதிய கல்விக் கொள்கையை

ரத்து செய்க!

கிராமப்புற மாணவர்களை பாதிக்கும், சமூக நீதிக்கு விரோதமான ‘நீட்' மற்றும் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யுமாறு மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தமிழர் தலைவர் 87 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு (சுயமரியாதை நாள்) டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் ‘நீட்', புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் நடைபெறும் பரப்புரை தெருமுனைக் கூட்டங் களை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 7:

பெரியார் சமூக காப்பு அணி பயிற்சி

திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக தோழர்களை  உடல்வலிவு, உள்ள உறுதி, சகிப்புத் தன்மை உள்ளவர்களாக உருவாக்கிடவும், பேரிடர் காலங்களில் அவதியுறும் மக்களுக்கு உத விடும் நோக்கோடும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் பல ஆண்டுகளுக்கு முன் தொடங் கப்பட்ட பெரியார் சமூக காப்பு அணி மீண்டும் புதுப்பிக்கப்பட்டு புது மிடுக்குடன் செயல்பட்டு வருகின்றது.  2020 ஆண்டில் நாடு முழுவதும் பரவலாக பெரியார் சமூக காப்பு அணி பயிற்சி முகாம்களை நடத்திடுவது, மாவட்டத்திற்கு குறைந்தது 50 இளைஞர்களை பெரியார் சமூக காப்பு அணி பயிற்சி பெற்ற இளைஞர்களாக உருவாக்குவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 8:

திராவிட மாணவர் கழக தென் மண்டல மாநாடு

திராவிட மாணவர் கழக தென்மண்டல மாநாட் டினை தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் மிக எழுச்சியுடன் நடத்துவது எனவும் ஏராளமான மாண வர்களை பங்கேற்கச் செய்வது எனவும் முடிவு செய் யப்படுகிறது.

தீர்மானம் 9:

திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு

திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட் டினை 2020 மே மாதம் 16 ஆம் தேதி அரியலூரில் மாபெரும் பேரணியுடன் மிக எழுச்சியுடன் நடத்து வது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 10:

மத்திய தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படும் மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மறுப்புக்கு கண்டனம்

நாடு முழுவதும் உள்ள சுமார் 30,774 மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான இடங்களுக்கு அகில இந்திய ‘நீட்' பீ.ஜி. தேர்வு ஜனவரி மாதம் நடத்திட மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான குறிப்பாணையை நவம்பர் ஒன்றாம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 30,774 இடங்களில் 50 சதவிகிதம் மத்திய அரசே கவுன்சிலிங் மூலம் இடத்தை நிரப்பும். இப்போது உள்ள இட ஒதுக்கீடு நடைமுறையின்படி 50 சதவிகிதம் பொதுப் பிரிவிலும், 22.5 சதவிகிதம்  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடியினருக்கும், 27 சதவிகிதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசோ - அதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படும் என்றும், மாநில அரசின் கட்டுப்பாட் டில் உள்ள கல்லூரிகளில் இருந்து பெறப்படும் இடங் களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கத் தேவை இல்லை என்றும் குறிப் பிட்டுள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் மாநில அரசின் நிதியில் நடத்தப்படும் மருத்துவக்கல்லூரி இடங்களை எடுத்துச்சென்று தமிழ்நாட்டின் பெரும் எண்ணிக்கையில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு பட்டை நாமம் சாத்துவதா? மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு திராவிடர் கழக இளைஞரணி, திரா விட மாணவர் கழகம் வன்மையானக் கண்டனத்தை தெரிவிக்கிறது. உடனடியாக இந்த அறிவிப்பை திரும்பப் பெற்று பிற்படுத்தப்பட்டவருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய மத்திய அரசை இக்கூட் டம்  வலியுறுத்து கிறது. தவறினால் ஒத்தக்கருத் துள்ளவர்களை ஒன்று திரட்டி, தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவிக் கும் எந்தவித போராட்டத்தையும் சந்திக்க திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் தயார் என தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 11:

2020 பிப்ரவரியில் திருச்சியில் மதவெறி-ஜாதி வெறி முறியடிப்பு மனிதநேய மாநாட்டை நடத்திட திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (11.11.2019) எடுக்கப்பட்ட முடிவை வர வேற்று, தேவை யான ஒத்து ழைப்பு அனைத்தையும் அளிப்பது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

- விடுதலை நாளேடு, 24.11.19

சனி, 23 நவம்பர், 2019

நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி

* அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகத்தின் முன்னாள் தலைவரும் நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழகத் தோழருமான எம்.நடராஜன் அவர் களின்  4ஆம் நினைவுநாளையொட்டி (26.11.2019) அவரது துணைவியார் பத்மாவதி அவர்கள் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் ரூ.10 ஆயிரம், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு வழங்கினார். அந்நாளை அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகம் நினைவு கூர்கிறது.

 

நடராஜனின் 4ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது இணையர் பத்மாவதி கழகத் துணைத் தலைவரிடம் நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதியாக ரூ.10,000/- காசோலை வழங்கினார்.  உடன்: சோழிங்கநல்லூர் துணைச் செயலாளர் தமிழ்இனியன். (சென்னை பெரியார் திடல் 23.11.2019)

- விடுதலை நாளேடு 23 11 19

வியாழன், 21 நவம்பர், 2019

சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமை செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்

‘நீட்'டை ரத்து செய்க! உயர்ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டை நீக்குக!


சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமை செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்

சென்னை, நவ.11 ‘நீட்' மற்றும் புதிய கல்விக் கொள்கை நீக்கம் - நடைபாதைக் கோவில்களை அகற்றக் கோரியும் - தலைவர்களின் சிலைகளை அவமானப்படுத்துவோர்மீது நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும் - பாபர் மசூதி தொடர்பான வழக்கில்- மசூதியை இடித்தது சட்ட விரோதம் - நீதிமன்ற தீர்ப்புபடி விரோதம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதால், சம்பந்தப்பட்டவர்கள்மீதான வழக்கைத் துரிதப்படுத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும் என்ற தீர்மானம் உள்பட 10 தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் தலைமையில் சென்னை பெரியார் திடலில்  இன்று (11.11.2019) காலை நடைபெற்ற திராவிடர் கழக தலைமை செயற் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1:

இரங்கல் தீர்மானம்

திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினரும், சட்ட எரிப்புப் போராட்ட வீரருமான முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மயிலாடுதுறை கோ.அரங்கசாமி (வயது 93, மறைவு 25.10.2019 - உடற்கொடை அளிக்கப்பட்டது).

பெரியார் பெருந்தொண்டர் மயிலாடுதுறை மா.க.கிருட்டிண மூர்த்தி (வயது 84, மறைவு 19.9.2019 - உடற்கொடை வழங்கப்பட்டது).

பகுத்தறிவு எழுத்தாளர், நூல்கள் பலவற்றின் ஆசிரியர் காரைக்குடி புலவர் பழம்நீ (வயது 88, மறைவு 31.10.2019 - உடற்கொடை வழங்கப்பட்டது).

கபித்தலம் பெரியார் பெருந்தொண்டர் தி.கணேசன் (வயது 73, மறைவு 3.10.2019),

திருச்சி  மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் மணப்பாறை திருமால் (வயது 93, மறைவு 28.10.2019),

வடசென்னை கழக மூத்த மகளிரணி வீராங்கனை பொன்.இரத்தினாவதி (வயது 83, மறைவு 6.11.2019 - உடற்கொடை வழங்கப்பட்டது) ஆகியோரின் மறைவிற்கு இச்செயற்குழு தனது இரங் கலைத் தெரிவித்துக் கொள்வதுடன்,  இவர்களின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் இச்செயற் குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 2 (அ):

‘‘நீட்'' தேர்வு நீக்கப்படவேண்டும்

மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு ‘நீட்' என்னும் நுழைவுத் தேர்வு திணிக்கப்படுவதால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி வருவது கண்கூடு. ‘நீட்' தேர்வுக்கு முன் - பின் இவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் பெற்ற இடங்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது இந்த உண்மை மிகவும் திடுக்கிட வைக்கிறது.

மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கப் பெற்றவர்கள் ஓராண்டு, ஈராண்டு ‘நீட்' கோச்சிங் வகுப்புகளில் சேர்ந்து படித்ததும், அதற்காக பல லட்சம் ரூபாய் செலவிட்டிருப்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவக் கல்வி என்பது எட்டாக் கனியாக இருப்பது இதன்மூலம் உறுதியாகிறது.

சென்னை உயர்நீதிமன்ற மாண்பமை நீதிபதிகள்  கிருபாகரன், வேல்முருகன் இந்த யதார்த்த உண்மைகளை சுட்டிக்காட்டி ‘நீட்'டை நீக்குவது அவசியம் என்ற பொருள்படும்படி நீதி மன்றத்தில் அறிவித்ததையும் கவனத்தில் கொண்டு, ‘நீட்' தேர்வை ரத்து செய்யுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசும் இந்த உண்மைகளை உள்வாங்கிக் கொண்டு, வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இந்த வகையில், ‘நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளித்திடும் வகையில் மத்திய அரசை வலியுறுத்திப் புதிய மசோதா ஒன்றை நிறைவேற்றவேண்டும் என்று இச்செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவரும் கட்சி வேறுபாடின்றி அரசுக்கு இந்த வகையில் துணை நிற்பர் என்றும் இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

‘நீட்' தேர்வு ரத்து செய்யப்படவில்லை என்ற பட்சத்தில், தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் சமூக நீதியில் அக்கறை கொண்ட அனைத்துக் கட்சிகளையும், சமூக அமைப்புகளையும் ஒருங்கிணைத்து,  தீவிரமான பிரச்சாரம், பெரிய அளவிலான போராட்டம் என்ற இருமுனை அணுகுமுறைகளைக் கடைப் பிடிப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 2 (ஆ):

27 சதவிகித இட ஒதுக்கீடு!

மாநிலங்களிலிருந்து மத்திய தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படும் மருத்துவக் கல்விக்கான 50 விழுக்காடு இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதும், அதேநேரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்ற பெயரால் உயர்ஜாதியினருக்கு (EWS) 10 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதும் - அப்பட்டமான  சமூக அநீதியும், உயர்ஜாதி ஆதிக்க மனப்பான்மையும் கொண்ட மனுதர்ம சிந்தனைப் போக்கே என்று இச்செயற்குழு திட்டவட்டமாக சுட்டிக்காட்டுவதுடன், சட்டப்படியான ஒதுக்கீடு பிரிவினருக்கு - குறிப்பாக பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடங்கள் கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 3:

தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு

மத்தியில் உள்ள பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தேசியக் கல்விக் கொள்கை ஒன்றை செயல்படுத்திட முனைந்துள்ளது.

பல்வேறு இனங்கள், கலாச்சாரங்கள், பருவ நிலைகள் சூழ்ந்த பல மாநிலங்களைக் கொண்ட இந்தியா என்பது ஒரு துணைக் கண்டமேயாகும். இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற  அடிப்படையில் தவறான புரிதலோடும், கண்ணோட்டத்துடனும் இந்தியா முழுமைக்கும் ஒரே வகையான தேசிய கல்வி என்ற முறையில் பாடத் திட்டத்தைத் திணிப்பது, இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மூன்று மொழிகளை மூன்றாம் வகுப்பு அளவிலேயே திணிப்பது - அய்ந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசுப் பொதுத் தேர்வு நடத்துவது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படவே முடியாத அநீதிகளாகும்.

மத்திய அரசின் தேசிய கல்வித் திட்டம் என்பது தமிழ்நாடு அரசின்இருமொழிக் கொள்கைக்கு விரோதமானதுஎன்பது ஒருபுறம்;  அய்ந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர் களுக்கு அரசுப் பொதுத் தேர்வு என்பது பிஞ்சு உள்ளங் களில்கல்வியின்மீதுஅச்சத்தையும், எதிர்ப்பையும்ஏற்படுத் தும் ஆபத்தான ஒன்றாகும். உள ரீதியான பாதிப்பை இளம் பிள்ளைகள் மத்தியில் ஏற்படுத்தும் என்று கல்வியாளர்களும் கூறி வருவது கருத்தூன்றி கவனிக்கத்தக்க தாகும்.

அரசு தேர்வில் வெற்றி பெறவில்லையெனில் குலத் தொழிலை நோக்கி மாணவர்களை விரட்டும் மறைமுகமான ஏற்பாடாகவே மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையைக் கருதிட வேண்டியுள்ளது.

கலைக் கல்லூரிகளில் சேருவதற்குக்கூட இனி நுழைவுத் தேர்வு என்பது ஆபத்தான ஏற்பாடாகும்; கல்வியில் இடையில் நிற்கும் (டிராப் அவுட்ஸ்) எண்ணிக்கையைத்தான் அதிகரிக்கும் என்பதையும் தொலைநோக்கோடு இச்செயற்குழு எச்சரிக்கிறது.

நூற்றுக்கு நூறு அனைவரும் கல்வி வளர்ச்சி பெறவேண்டும் என்பதுதான் அரசின் கொள்கையாகவும், செயல்பாடாகவும் இருக்கவேண்டுமே தவிர, கல்வி வளர்ச்சியைத் தடுப்பதாகவோ, முட்டுக்கட்டை போடுவதாக இருக்கக்கூடாது என்பதையும் இச்செயற்குழு மத்திய - மாநில அரசுகளுக்கு அறிவுறுத்துகிறது.

அரசனை விஞ்சிய விசுவாசியாக வரும் கல்வி ஆண்டி லேயே 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்ற தமிழ்நாடு அரசின் அவசர அலங்கோல நடவடிக்கைக்கு இச்செயற்குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, அந்த முடிவை உடனடியாக கைவிடுமாறும் இச்செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கிட ஏற்பாடு செய் யப்பட்டுள்ள குழுவானது கல்வியாளர்களைக் கொண்டதுமல்ல என்பதால், இந்தத் திட்டத்தை அடியோடு கைவிட்டு, மாநில அரசுகளின் பொறுப்பில் கல்வித் திட்டத்தை ஒப்படைக்குமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது. தமிழ்நாடு அரசும் இந்த வகையில் மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் என்றும் இச்செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 4:

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையின் வீழ்ச்சியும் - மதவாத திசை திருப்பலும்!

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையும், நடவடிக்கை களும் பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திட்டு, அதன் காரணமாக சிறு, நடுத்தர தொழில்கள் நசிந்தும், பெரிய எண்ணிக்கையில் வேலையிழப்பும் ஏற்பட்டு நாடே நிலை குலையும் ஒரு சூழ்நிலையில், மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில், மதவாதத்தை முன்னிறுத்துவது, ஆளும் கட்சியே வன்முறைகளைத் தூண்டுவது என்பதல்லாமல் நாட்டின் ஒற்றுமைக்கும், மதச்சார்பின்மைக்கும், சமூகநீதிக்கும், அமைதிக்கும், ஜனநாயக உணர்வுக்கும் பெரும் அச்சுறுத்தலாக முடியும் என்று இச்செயற்குழு எச்சரிக்கிறது.

அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் ஜனநாயகப் பாதையில், மதச்சார்பின்மை, சமூகநீதி, அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புச் சிதையாமல், சோசலிசப் பாதையில் பயணிக்க உரிய மாற்றங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 5:

பள்ளியில் மதம், ஜாதி அடையாளங்கள் கூடாது

பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் ஜாதி, மத மாச்சரி யங்களைத் தூண்டும் வகையில் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைக்கும் தமிழ்நாடு அரசு துணை போகக்கூடாது என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

குறிப்பாக ஜாதியைக் குறிக்கும் வண்ண வண்ண கயிறுகள் கட்டி பள்ளிக்கு வருவதற்குத் தடை விதிக்கப்படவேண்டும் என்று இச்செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. சங் பரிவார்கள், கல்விக் கூடங்களில் தலையிடுவது - நுழைவது கட்டாயம் தடுக்கப்படவேண்டும் என்றும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 6:

பாபர் மசூதியும் - உச்சநீதிமன்றத் தீர்ப்பும்!

450 ஆண்டுகால வரலாறு படைத்த பாபர் மசூதி இடிப்புத் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 9.11.2019 அன்று அளித்த தீர்ப்பு - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை, விஞ்ஞான மனப்பான்மை என்பனவற்றை சோதனைக்கு உட்படுத்திய தீர்ப்பாகவே இச்செயற்குழு கருதுகிறது.

இந்தத் தீர்ப்பு என்பது யாருக்கும் வெற்றி - தோல்வி இல்லை என்று கூறுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்றே!

மதக் கலவரங்கள் வெடித்துவிடக் கூடாது என்ற கண் ணோட்டத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது என்றாலும், பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்பது சட்ட விரோதம் என்றும், நீதிமன்றத் தீர்ப்புக்கு விரோதம் என்றும் உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பில் திட்டவட்டமாக கூறியிருப்பதால், 27 ஆண்டுகளாக இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள்மீதான விசாரணை நடந்து வருவதால், மேலும் காலதாமதம் செய்யாமல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள்மீதான வழக்கு விசா ரணையை - இப்பொழுது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள வழக்கினை 40 நாள்கள் தொடர்ந்து விசாரித்தது போலவே, பாபர் மசூதி இடிப்புத் தொடர்பான வழக்கையும் விரைவாக நடத்தி, குற்றமிழைத்தவர்கள்மீதான தண்டனை உறுதி செய்யப்பட ஆவன செய்யுமாறு மத்திய அரசையும், உச்சநீதிமன்றத்தையும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தாமதிக்கப்பட்ட தீர்ப்பு என்பது மறுக்கப்பட்ட ஒன்றே என்பதையும் இச்செயற்குழு நினைவூட்டுகிறது.

தீர்மானம் எண் 7:

சிலைகளை அவமதிக்கும், கலவரத்தைத் தூண்டும் சங் பரிவார்கள்மீது நடவடிக்கை தேவை!

மக்களால் போற்றத்தக்க மதிப்பு வாய்ந்த தலைவர்களின் சிலைகளுக்கு காவி சாயம் பூசுவது, அவமதிக்கும் வகையில் சாணியை வீசுவது, செருப்பு மாலை சூட்டுவது போன்ற அநாகரிக செயல்பாட்டில் ஈடுபடுவது என்பது - பி.ஜே.பி. மற்றும் சங் பரிவார்களின் தொடர் நடவடிக்கையாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் திருவள்ளுவரையும் அவமதிக்கும் போக்கு கலவரத்தை உண்டாக்கவேண்டும் என்ற கெட்ட நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது - சங் பரிவார்களின் கடந்தகால நடவடிக்கைகளை அறிந்தவர்களுக்கு மிக நன்றாகவே தெரிந்த ஒன்றாகும்.

இவ்வாறு சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் குற்றவாளிகளைக் காலம் தாழ்த்தாமல் சட்டப்படி தண்டிக்க வகை செய்யவேண்டும் என்று தமிழ்நாடு அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 8:

நடைபாதைக் கோவில்கள் - அரசுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள கோவில்களை அகற்றுக!

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் அடிப்படை யிலும், ஏற்கெனவே மத்திய - மாநில அரசுகள் பிறப்பித்த ஆணையின் அடிப்படையிலும் அனைத்து நடைபாதைக் கோவில்களையும், அரசுக்குச் சொந்தமான இடங்களில் எழுப் பப்பட்டுள்ள அனைத்து மதக் கோவில்களையும் உடனடியாக அகற்றுமாறு மத்திய - மாநில அரசுகளை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 9:

சட்டம் - ஒழுங்கு நிலை

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பது பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது என்பதற்கு - அன்றாடம் வெளிவரும் தகவல் களே சாட்சியங்களாக அமைந்துள்ளதால், சட்ட - ஒழுங்கை நிலை நிறுத்துவதில் முழு கவனம் செலுத்துமாறு தமிழ்நாடு அரசை இச்செயற்குழுக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 10:

மதவெறி - ஜாதி வெறி முறியடிப்பு மனிதநேய மாநாடு

திருச்சியில் 2020 பிப்ரவரி முதல் வாரத்தில் மதவெறி - ஜாதி வெறி முறியடிப்பு மனித நேய மாநாட்டை சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

- விடுதலை நாளேடு 11 11 19

வெள்ளி, 8 நவம்பர், 2019

உலக அரசியலைப் பேசியவர் தந்தை பெரியார் - அ.அருள்மொழி

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரைக் கொண்டாடுவோம், தந்தை பெரியாரை நம் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்போம்

கழக பிரச்சார செயலாளர்  வழக்குரைஞர்  அருள்மொழி உரை

சென்னை, நவ.1  நேதாஜி சிறந்த வீரர்; ஆனால், ஹிட்லர் கொடியவன் என்பது நேதாஜிக்கு எப்படிப் புரியாமல் போனது. வெள்ளைக்காரன் செய்கிற கொடுமைகளை விட, ஹிட்லர் செய்கிற கொலைகள் எவ்வளவு மோசம் என்று உலக அரசியலைப் பேசியவர் தந்தை பெரியார் என்றார் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக் குரைஞர் அருள்மொழி அவர்கள்.

தந்தை பெரியாரின் 141 ஆம் ஆண்டு

பிறந்த நாள் பொதுக்கூட்டம்

17.9.2019 அன்று சென்னை தியாகராயர் நகரில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 141 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில்  திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

‘‘மயிலாப்பூர் வக்கீல் ஆத்து மாட்டுப்பொண்ணாவேன்''

வழக்காடு மன்றத்திற்குள் நுழைவதற்கே, வெறும் கட்சிக்காரர்களாக சென்று கொண்டிருந்த அந்த நீதிமன்றத்தில், ஒரு அய்யர் வீட்டுப் பெண் பாடுவதாக, பழைய திரைப்படப் பாடல் ஒன்று வரும்; அதில் நான் மகிழ்ச்சியாக ஆடுவேன், பாடுவேன் என்று ஒரு இளம் பெண் சொல்வாள். நாளைக்கு நான் என்ன ஆவேன் என்றால், ‘‘மயிலாப்பூர் வக்கீல் ஆத்து மாட்டுப் பொண்ணாவேன்'' என்று.

ஏனென்றால், வக்கீல் என்றாலே, மயிலாப்பூர் வக்கீல்தான். ஒரு பெண் பாடுகிறாள் என்றால், அவள் மயிலாப்பூர் வக்கீல் ஆத்து மாட்டுப் பொண்ணாவேன் என்கிற அளவிற்கு வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் அவர்களே நிறைந்திருந்த அந்த நீதிமன்றத்தில், வழக்குரைஞராக நுழைந்து, தன்னுடைய வழக்கை தானே வாதாடி, இந்தியாவின் மிகப்பெரிய ஒரு அரசியல் சதித் திட்ட வழக்கை முறியடித்து 2ஜி என்பதை தன்னு டைய பெருமையாக மாற்றிய, மக்களவை உறுப்பினர் எந்நாளும் சிறந்த பகுத்தறிவாளர், நமது மரியாதைக்குரிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கைப் பரப்பு செயலாளர் மானமிகு ஆ.இராசா அவர்களே,

தந்தை பெரியாரின் தேவையை

இந்த உலகம் உணரச் செய்தவர்

தந்தை பெரியார் அவர்கள் 1973 ஆம் ஆண்டு மறைந்தபொழுது, திராவிடர் கழகத்திற்கு ஒரு நெருக் கடியான காலம், அதைத் தொடர்ந்து இந்த நாட்டிற்கே ஒரு நெருக்கடி காலம் வந்தது. இந்த இயக்கத்தின் நெருக்கடியையும், நாட்டிற்கே வந்த நெருக்கடி நிலையையும் எதிர்கொண்டு, அன்னை மணியம்மையார் அவர்கள் இந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றினார். அவர்களுடைய குறுகிய கால அந்தப் போராட்டத்தில், அவர்களோடு துணை நின்று, அன்னை மணியம்மையார் அவர்களும் மறைந்த பிறகு, தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா தொடங்கி, இந்த மாநிலம் முழுவதும் மீண்டும் பெரியார் அலை எழுவதற்குக் காரணமாகவும், இன்று உலகம் முழுக்க தந்தை பெரியாருடைய பெயர் ஒலிப்பதற்கும், இந்தியாவில், எந்த மாநிலத்தில் பிரச்சினை, சுயமரியாதை இல்லை, சமூகநீதி இல்லை என்றாலும், அதற்கு என்ன காரணம் என்றால், அந்த மாநில தலைவர்கள், எங்கள் மாநிலத்தில் ஒரு பெரியார் பிறக்கவில்லை என்று வருத்தப்படுகின்ற அளவிற்கு, தந்தை பெரியாரின் தேவையை இந்த உலகம் உணரச் செய்தவருமான திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களே,

கூடியிருக்கின்ற இன உணர்வுமிக்க பெருமக்களே, அனைவருக்கும் வணக்கம்!

தந்தை பெரியாரின் பிறந்த நாளை

ஏன் கொண்டாடுகிறோம்?

அய்யா அவர்களுடைய பிறந்த நாளை ஏன் நாம் கொண்டாடுகிறோம்? அய்யாவே சொன்னார், இது புகழ் பாடுவதற்கு அல்ல; பஜனை பாடுவதற்கு அல்ல. எங்கள் கொள்கையை எடுத்துச் சொல்வதற்காக. அந்தக் காரணத்திற்காகத்தான் நான் இந்தக் கொண்டாட்டத்தை அனுமதிக்கிறேன் என்று.

அய்யாவைப்பற்றி பேசுவது என்றால், பிரபஞ்சம், அண்டம், பேரண்டம் என்றெல்லாம் சொல்கிறார்கள். வானத்தைப் போல, அதற்குப் பின்னால் என்ன? அதற்குப் பின்னால் என்றால், அது திரையா? இல்லை, அது ஒரு புகை என்கிறார்கள். அது என்னவாக இருக்கிறது என்று தெரியாது.

உலகம் ஒரு கோள். பூமி ஒரு கோள். அதுபோன்று, நிலா ஒரு கோள். 9 கோள்களைத்தான் முன்பு கண்டு பிடித்தார்கள். இன்றைக்கு அதற்கு மேல் கண்டுபிடித்தி ருக்கிறார்கள். ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக இருக் கிறது; அதற்கு உடுமியின் கூட்டம் என்று சொன்னார்கள்.

பேரண்டத்தை தன் மூளையில் சுமந்தவர்

தந்தை பெரியார்

அதனால்தான், விண்ணோடும், உடுக்களோடும் பிறந்த தமிழ் என்று புரட்சிக்கவிஞர் பாடினார்.

நாம் தேடத் தேட, புதிது புதிதாகக் கிடைத்து கொண் டிருக்கின்றன, இந்தப் பேரண்டத்தில். அப்படி ஒரு பேரண்டத்தை தன் மூளையில் சுமந்தவர் தந்தை பெரியார்.

நாம் தேடத் தேட, படிக்க படிக்க, நாம் கற்றுக்கொள்வது புதிதாகவும், இப்படி ஒரு சிந்தனையாளர் உலகத்தில் இருந்திருக்கிறார்களா? என்று ஆராய்ச்சி செய்கின்ற அளவிற்கு, ஒரு பேரறிஞர் இந்த நாட்டில் பிறந்தார், அவ ரைப் படிப்பதன்மூலம், அடுத்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதன்மூலம், இந்த இனத்தை, அறிவில் மேன்மையுறச் செய்யும் பயன் நமக்கு இருக்கிறது. அதனால் தந்தை பெரியாரை நாம் கொண்டாடுகிறோம்.

ஒரு கேள்வி,

அய்யாவினுடைய அறிவு எப்படிப்பட்டது என்றால், நெருப்பில் எதைப் போட்டாலும், அந்த அழுக்கெல்லாம் பொசுங்கி, உறுதியான பொருள் வெளிப்படும். அதுபோல, நம்முடைய அறிவு உறுதியடையவேண்டும் என்றால், அதில் ஏற்படுகின்ற சந்தேகங்கள் எல்லாம் பொசுக்குகிற நெருப்புப் போன்று, அய்யாவினுடைய ஒரு பக்கத்தைப் படித்தால் போதும், சாதாரணமாக உலகத்தில் அறிவியல் மாறுது; மனிதர்கள் நிறைய வளரு கிறார்கள்; உடல் உறுப்புகளை மாற்றிக் கொள்ளலாம்; மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழக்கூடிய காலம் வரும் என்று சொல்லி, கடைசியாக அந்தக் கட்டுரையில் அய்யா சொல்லுகிறார்,

கடவுள் நம்பிக்கை

ஓரளவிற்கு இருந்துதான் தீரும்!

இப்படியெல்லாம் மனிதனுக்கு எல்லா சவுகரியங்கள் கிடைத்த பிறகு, கடவுள் என்கிற நம்பிக்கை இருக்குமா? என்று கேட்டால்,

யாராக இருந்தாலும் என்ன சொல்வார்கள்? தன்னு டைய கொள்கைக்கு சாதகமாகத்தான் சொல்கிறார்கள். ஆனால், அய்யா சொல்கிறார், ‘‘ஓரளவிற்கு இருந்துதான் தீரும்'' என்கிறார்.

அப்படி என்றால், எல்லாமே நிறைவாகி விட்டது என்றால்,  அய்யாதான் இன்னொரு இடத்தில் சொன்னார், ‘‘தேவைகள் அற்றுப்போன இடம், கடவுள் செத்துப் போன இடமாக இருக்கும்'' என்று.

அப்படி, தேவைகள் அற்றுப்போய், மனிதனுக்கு எல்லாம் கிடைத்து மகிழ்ச்சியாக இருந்தால், எதற்கு அவனுக்குக் கடவுள் நம்பிக்கை வேண்டும் என்று கேட்டால், ‘‘அது ஓரளவிற்கு இருந்துதான் தீரும்'' என்று சொல்கிறார்.

தந்தை பெரியாரின் விளக்கம்!

ஏன் இருக்கவேண்டும் என்பதைப்பற்றி சொல்கிறார்,

‘‘மனிதனுக்கு தனக்கு எல்லாம் தெரியும் என்கிற ஒரு அகந்தை உண்டு. எனக்குத் தெரியாது என்று அவனால் சொல்ல முடியாது. ஆகவே, இந்த உலகம் தோன்றியதற் கான காரணத்தையும், சில இயற்கை செயல்களுக்கான காரிய காரணத்தையும், இதற்கு எது  காரணம் என்று கேட்டால், எனக்குத் தெரியாது என்று சொல்ல, மனித னுடைய அகம்பாவம் இடம் கொடுக்காது. ஆகவே, தனக்குத் தெரியாது என்பதற்குப் பதில், ஒரு விடையைக் கண்டுபிடித்து அதற்கெல்லாம் கடவுள்தான் காரணம் என்று சொல்வதற்கு அவனுக்கு ஒரு பதில் கிடைக்கிறது.

ஆகையினால், மனிதனுடைய இந்த அறியாமையை மறைக்கிற அகந்தை இருக்கிறதே, அந்த அகந்தைக் காகவாவது கடவுள் நம்பிக்கை இருந்துதான் தீரும்'' என்றார்.

நண்பர்களே, இப்படி ஒரு சிந்தனையாளரை, புரிந்து கொள்வதற்கே இந்த இனத்திற்கு இன்னமும் பக்குவம் இல்லை. நாம் இன்னமும் அதனை மக்களிடையே எப்படி எடுத்துச்சொல்வது என்று திகைத்து நிற்கிறோம்.

ஆனால், இளைய தலைமுறையினர், புதுமையை விரும்புகின்றவர்கள் தந்தை பெரியாரை எப்படிப் பற்றிக்கொள்கிறார்கள்?

பெரியாரை வியந்து பாடிய பெரியவர்கள்!

அன்றைக்குத் தந்தை பெரியாரை வியந்து பாடிய பெரியவர்கள் இருக்கிறார்கள்.

தீண்டாமைப் பிணி இங்கு வேண்டாமே என்று

அன்று சிறையினில் இளைத்தார் வைக்கத்தில்

செந்தமிழ் காக்கவே அண்ணாவைப்போல்

பல தீரரை அழைத்தார் பக்கத்தில்

ஜாதி வேரைச் சுட்டுத்

தாழ்ந்தவர் உயர்ந்திட

ஓயாது ஊர்தோறும் நடை நடந்தார்

சாகும்போதும் அந்த தந்தை

உழைத்ததுபோல், தமிழரை உயர்த்திட

யார் வருவார்?

இது அன்றைக்குப் பெரியவர்கள் தந்தை பெரியாரைப் பற்றி பாடியது.

பெண்ணே, பெண்ணே

திரும்பிப் பார்

பெரியார் தொண்டை

நினைத்துப் பார்

மண்ணுக்கும் கீழாய்

உனை மதித்தோரின்

மண்டையில் அடித்தார்

பெரியார் பார்

என்று கவிஞர் கலி.பூங்குன்றன் பாடினார்.

பெரியார் அவனுக்குத் தோழன் ஆகிவிட்டார்!

ஆனால், இன்றைக்கு ராப் சீசன். இன்றைய இளைஞர் களுக்கு கவிதை, பாட்டு பாடிக் கொண்டிருக்க நேரம் இல்லை.

ஒரு சின்ன வயது இளைஞர் பாடுகிறார்,

கிழவண்டா,

இவன் கிழவண்டா

தமிழ் இனத்தைத்

திருத்த வந்த

உழவண்டா!

என்று.

என்னடா, அவன், இவன் என்று பாடுகிறாரே என்றால், அவ்வளவு உரிமையாக பெரியார் அவனுக்குத் தோழன் ஆகிவிட்டார்.

இளைஞர்கள் எழுதுகிறார்கள்,

‘‘யோவ் கிழவா! நாங்கள் படிக்கவேண்டும் என்பதற் காகத்தானே இவ்வளவு தூரம் போராடினாய்! நாங்கள் படித்துவிட்டோம், வந்து பாருய்யா!'' என்று.

அப்படி உரிமையோடு இன்றைய இளைஞர்கள் அந்தக் கிழவரை சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

இராவணன் கேட்ட கேள்வியிலே

நீதி தேவனே மயங்கி விழுந்துவிட்டார்

பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘‘நீதிதேவன் மயக் கம்'' எழுதினார். பேராசிரியர் அவர்கள் ‘‘நீதி கெட்டது யாரால்?'' என்று அய்யாவினுடைய நீதிமன்ற உரையை சொன்னார்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘‘நீதிதேவன் மயக் கம்'' எழுதினார். அந்த நீதி தேவனுடைய கோர்ட்டில், இராவணனுடைய வழக்கு மறு விசாரணைக்கு வருகிறது.

இராவணன் கேட்கிறார், ‘‘என்னை அரக்கன் என்றீர்கள்; என்னை இரக்கமில்லாதவன் என்றீர்கள்; இவர்கள் எல்லாம் யார் என்று, தாயைக் கொன்றவனை, பிள்ளைக் கறி கேட்டவனை என்று ஒவ்வொருவராகக் காண்பித்து, இவர்களுக்கெல்லாம் இரக்கம் இல்லையே, இவர்களை ஏன் நீங்கள் அரக்கன் என்று சொல்லவில்லை'' என்று, இராவணன் கேட்ட கேள்வியிலேதான், நீதி தேவனே மயங்கி விழுந்துவிட்டார்.

எங்கள் பேரரக்கர் தலைவர்!

அப்படி மறு விசாரணை செய்யச் சொல்லி, இராவ ணனை, அசுரன் என்று சொன்னவர்களை, இராட்ச சர்களை, இன்றைக்கு நம்முடைய இளைஞர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா? தந்தை பெரியாரை சொல்லுகிறார்கள்,

‘‘எங்கள் பேரரக்கர் தலைவர்'' என்று.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் இறந்த பொழுது, சில பேர் வடை, பாயாசம் வைத்து சாப் பிட்டார்கள்.

அப்பொழுது சொன்னார்கள், எங்கள் அரக்கர் தலை வர், யாருக்காவது அப்படி சொல்ல தைரியம் வருமா? அவர்கள் பெயர் வைத்துக் கொள்கிறார்கள், நாங்கள் அரக்கர் கூட்டமடா என்று.

இப்படி சொல்லுகிற துணிவை அடுத்த தலை முறைக்குக் கொடுத்தவர் யார் என்றால், அன்பாக கிழவர் என்று அழைக்கப்படும் இளைஞர்.

அதை இன்றைக்கு மக்களிடத்திலே நாம் கொண்டு சென்றால், அப்படி ஒரு வரவேற்பை நம்முடைய சிறுவர் களும், இளைஞர்களும் பெறுகிறார்கள், நமக்குக் கொடுக்கிறார்கள்.

ஏன்?

இன்றைக்கு நமக்கு ஏற்படுகிற நெருக்கடி. தந்தை பெரியார் பாராட்டில் வளர்ந்தவர் அல்ல; எதிர்ப்பில் வளர்ந்தவர்.

நாங்கள் பாஷாணத்தில் புழுத்த புழுக்கள் என்று அவர் சொன்னதும், நீங்கள் என்னை நல்லவன் என்று சொல்லி, கடவுள் என்று சொல்லி, தேரிலே தூக்கி வைக் காதீர்கள். என்னை கெட்டவன் என்று சொல்லுங்கள்; அயோக்கியன் என்று சொல்லுங்கள். அப்பொழுதுதான், இவர் என்னதான் சொன்னார் என்று தேடி படிப்பார்கள்; தெரிந்துகொள்வார்கள். நீ நல்லவன் என்று சொல்லி விட்டால், பாராட்டி விட்டுப் போய்விடுவார்கள் என்ப தால், என்னை அயோக்கியன் என்று சொல்லுங்கள் என்று சொல்லுகிற துணிச்சல் கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார்.

இன்றைக்குப் பெரியாரைக் கண்டால்,

எதிரிகள் நடுங்குகிறார்கள்

அதனால்தான், இன்றைக்கு அவரைக் கண்டால், எதிரிகள் நடுங்குகிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத் திலும் நடக்காத எதிர்ப்புப் புரட்சியை, இன்றைக்கு மோடி அரசாங்கம், ஆர்.எஸ்.எஸினுடைய திட்டம் எங்கே சந்திக்கிறது - தமிழ்நாட்டில்தான் சந்திக்கிறது.

இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் எதிர்க் கட்சிகள் இருக்கின்றன; தலைவர்கள் இருக்கின்றனர். ஆனால், ‘‘பாசிஸ்ட் மோடி'', ‘‘ரேசிஸ்ட் மோடி'', ‘‘சாடிஸ்ட் மோடி'' என்று அறிவிக்கின்ற துணிச்சல் தமிழ்நாட்டில், திராவிட இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகத் தினுடைய தலைவருக்குத்தான் இருந்தது.

தந்தை பெரியார் நமக்குக் கொடுத்துச் சென்ற பெருங்கொடை

இந்தியாவில் நடந்த தேர்தலில் அவர்கள் அதிர்ச் சியடைந்த இடம் அதுதான். அவர்களுடைய தேசியக் கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன் னால், இங்கே ஆளுகிற அவர்களுடைய உதவியாளர் கள், அல்லது நம்முடைய ஆட்சியாளர்கள் அவர்களுக்கு  என்ன பெயர் வைப்பது என்று தெரியவில்லை. ஆனால், தேசிய கல்விக் கொள்கைத் திட்டமே இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஆனால், அந்தத் திட்டத்தில் கூறப்பட்ட 5 ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு, 8 ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு என்ற மனக்கோளாறு படைத்த கொடுமையாளர்களுடைய திட்டத்தை, இங்கே உள்ள அரசு நடைமுறைப்படுத்துவோம் என்று சொன்னவுடன், உடனடியாக வந்த எதிர்ப்பு, விமர் சனங்களைக் கண்டு இன்றைக்கு அவர்களை யோசிக்க வைக்கிறது; பின்வாங்க வைக்கிறது. மூன்றாண்டுகளுக்கு இல்லை என்று இன்றைக்கு அவர்கள் அறிவிக்கத் துணிந்திருக்கிறார்கள் என்றால், அந்த எதிர்ப்பு எங்கே இருந்து கிளம்புகிறது? தந்தை பெரியார் போட்ட அடித்தளத்திலிருந்து கிளம்புகிறது.

எதையும் அறிவு கண்கொண்டு பார்ப்பதும், எதிர்ப் பதும்தான் தந்தை பெரியார் நமக்குக் கொடுத்துச் சென்ற பெருங்கொடையாகும்.

நண்பர்களே, 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய இரண்டாம் உலகப் போர் 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிந்தது.

உலகம் போர் பற்றி பேசுகிறது; இந்தியாவும் போரால் பாதிக்கப்பட்டது. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் வெல்வார்களா? வீழ்வார்களா? அவர்கள் வென்றால், நமக்கு விடுதலை. தோற்றால் கிடையாது - என்பது ஒரு பக்கம்.

அதேநேரத்தில், இந்தியாவில் பெரிய வீரரான நேதாஜி அவர்கள், பிரிட்டிஷ் அரசை தோற்கடிக்கிறேன் என்று ஹிட்லரோடு கூட்டு வைக்கிறார். இப்படிப்பட்ட நிலையில், இன்றைக்கும் நேதாஜி அவர்களை எல் லோரும் புகழ்கிறார்கள். தந்தை பெரியாரும் புகழ்ந்தார்.

தந்தை பெரியார் நேதாஜியை குறை சொல்லவேயில்லை. அவர் காங்கிரசில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது என்று வருத்தப்பட்டார்.

உலக அரசியலைப் பேசியவர் தந்தை பெரியார்

ஆனால், அந்த நேதாஜியைப் பார்த்து, அவருக்கு வெள்ளைக்காரனைவிட ஹிட்லர் கொடியவன் என்று புரியாமல் போய்விட்டதே என்று எழுதிய தலைவர் தந்தை பெரியார்.

இன்றைக்கும் அய்யோ, நேதாஜி என்று பேசக்கூடாது; இந்தப் பக்கம் விவேகானந்தர்; அந்தப் பக்கம் நேதாஜி. தெய்வ பக்தி - தேசப் பக்தி. இந்த நாடகத்திற்கு நடுவில், நேதாஜி சிறந்த வீரர்; ஆனால், ஹிட்லர் கொடியவன் என்பது அவருக்கு எப்படிப் புரியாமல் போனது. வெள்ளைக்காரன் செய்கிற கொடுமைகளைவிட, ஹிட்லர் செய்கிற கொலைகள் எவ்வளவு மோசம் என்று உலக அரசியலைப் பேசியவர் தந்தை பெரியார்.

அவர் ஏதோ, படிக்காதவர், பள்ளிக்கூடம் போகாதவர் என்பதெல்லாம் கிடையாது. உலக அரசியலைப் படித்துப் பேசினார்; மற்றவர்கள் பேச முடியாத செய்தி களைத் துணிந்து பேசினார். அந்த அறிவும், துணிவும் நம் அடுத்த தலைமுறையினருக்கு வரவேண்டும் என்றால், பெரியாரைக் கொண்டாடுவோம், தந்தை பெரியாரை நம் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்போம்.

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 1.11.19

சனி, 19 அக்டோபர், 2019

'கடவுளை மற மனிதனை நினை' என்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா (செப்.17)








- விடுதலை நாளேடு 25 9 19


‘‘சாமி கும்பிடுறேன்'' என்று வேண்டுமானால் சொல்லித் தொலை; ‘‘கும்பிடுறேன் சாமி'' என்று எவனைப் பார்த்தும் சொல்லாதே என்கிற சுயமரியாதை உணர்வை ஊட்டிய இயக்கம்தான் திராவிட இயக்கம்

தந்தை பெரியாரின் 141 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில்


பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை




சென்னை, அக்.18  ‘‘சாமி கும்பிடுறேன்'' என்று வேண்டுமானால் சொல்லித் தொலை. ‘‘கும்பிடுறேன் சாமி'' என்று எவனைப் பார்த்தும் சொல்லாதே என்கிற சுயமரியாதை உணர்வை ஊட்டிய இயக்கம்தான் திராவிட இயக்கம் என்றார் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் .

தந்தை பெரியாரின் 141 ஆம் ஆண்டு


பிறந்த நாள் பொதுக்கூட்டம்


17.9.2019 அன்று சென்னை தியாகராயர் நகரில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 141 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில்  திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்  அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

மானமிகு தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.இராசா அவர்களே,

திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தம்பி அன்புராஜ் அவர்களே,

திராவிடர் கழகத்தின் பிரச்சார செயலாளர் அருள்மொழி அவர்களே,

கூட்டத்திற்குத் தலைமை ஏற்றிருக்கின்ற அருமை நண்பர் வில்வநாதன் அவர்களே,

மேடையில் அமர்ந்திருக்கின்ற அய்யா ரத்தினசபாபதி அவர்களே,

கூடியிருக்கின்ற அருமைப் பெரியோர்களே, நண்பர்களே, ஊடகவியலாளர்களே, அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எந்த இடத்தில் நின்று தன் கடைசி உரையை தந்தை பெரியார் அவர்கள் ஆற்றினாரோ, அதே சென்னை தியாகராயர் பகுதியில் நடைபெறுகின்ற இன்றைய பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிற ஒரு நல்ல வாய்ப்பினை தந்திருக்கிற ஆசிரியர் அவர்களுக்கு என் நன்றியினை முதலில் பதிவு செய்துகொள்கிறேன்.

‘டைம்ஸ் ஆஃப் இந்தியா'


இந்தக் கூட்டத்திற்கு வந்துகொண்டிருக்கின்றபொழுது, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகையில் இருந்து நாளை காலை வெளியிடுவதற்காக இரண்டு, மூன்று கேள்விகளை முன்வைத்தார்கள்.

அதில் முதல் கேள்வி என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு மணிநேரத்திற்கு முன்பு அமித்ஷா அவர்கள் டில்லியில் பேசியது குறித்து.

ஒரே நாடு, ஒரே கட்சியாம்!


டில்லியில் ஒரு மணிநேரத்திற்கு முன்பு பேசியிருக்கிறார்; இந்தியாவில் பல கட்சி அரசியல் என்பதை மக்கள் வெறுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஒரே நாடு, ஒரே மொழி,

ஒரே நாடு, ஒரே மதம்

ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டிலிருந்து

ஒரே நாடு, ஒரே கட்சி என்கிற இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார்கள்.

‘‘பல கட்சி அரசியலை இந்திய மக்கள் வெறுக்கத் தொடங்கிவிட்டார்கள். பல கட்சி அரசியல் இந்தியாவில் வெற்றி பெறவில்லை என்கிற கருத்து இன்றைக்கு எங்களுக்குப் புரிகிறது'' என்று அமித்ஷா சொன்னதைப்பற்றி ஒரு கேள்வி.

இரண்டாவதாக, இன்றைக்குத்தான் பிரதமர் மோடி அவர்களுக்கும் பிறந்த நாள்.

பெரியார் 141 என்பதுதான் டிரெண்டிங்


‘டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகையிலிருந்து கேட்டார்கள், ஆனால், பெரிய வியப்பாக இருக்கிறது எங்களுக்கு. டுவிட்டர் என்று சொல்லுகிற சமூக வலைதளத்தில், மோடியைக் காட்டிலும், இன்றைக்குப் பெரியார் 141 என்பதுதான் டிரெண்டிங்காக இருக்கிறது.

அவர்கள் இந்தியா முழுவதும் அந்த வாழ்த்துகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பெரியாருக்கான வாழ்த்துகள் கூடியிருப்பதற்கு என்ன காரணம்?'' என்றார்கள். ‘‘மோடிக்கான வாழ்த்துகள் இந்தியா முழுவதும் இருந்து வருகிறது. பெரியாருக்கான வாழ்த்துகள் உலகம் முழுவதும் இருந்தும் வருகிறது. எனவே, அது கூடுதலாகத்தான் இருக்கும்'' என்று சொன்னேன்.

‘‘சாமி கும்பிடுறேன்'' என்று சொல்கிறவர்களைப்பற்றியல்ல;  ‘‘கும்பிடறேன் சாமி'' என்று சொல்கிறவர்களைப்பற்றித்தான்


மூன்றாவது கேள்விதான் முக்கியமான கேள்வி.

பெரியாரின் கொள்கைகள் இன்றைக்கும் பொருத்தமானவையாக, தேவையானவையாக இருக்கின்றனவா என்று கேட்டார்கள்.

இரண்டு வரிகளில் நான் சொன்னேன்,

பெரியாரின் கொள்கைகள் முன் எப்போதையும்விட, இப்பொழுதுதான் கூடுதல் தேவையாக இருக்கின்றன.

சுருக்கமாக சொல்வதென்றால்,

இன்றைக்கு அத்திவரதரிலிருந்து பக்தர்களின் எண்ணிக்கை கூடிவிட்டதே என்று நீங்கள் கவலைப்படவேண்டாம்.

‘‘சாமி கும்பிடுறேன்'' என்று சொல்கிறவர்கள் அன்றைக்கும் இருக்கிறார்கள்; இன்றைக்கும் இருக்கிறார்கள். அவர்களோடு நாங்கள் பேசுகிறோம். அதிலிருந்து மாற்றங்களைக் கொண்டுவர விரும்புகிறோம்.

எங்களுடைய கவலையெல்லாம் ‘‘சாமி கும்பிடுறேன்'' என்று சொல்கிறவர்களைப்பற்றியல்ல - ‘‘கும்பிடறேன் சாமி'' என்று சொல்கிறவர்களைப்பற்றித்தான்.

சாமி கும்பிடுகிறவன் வேண்டுமானாலும், கும்பிட்டுவிட்டுப் போகட்டும்; ஆனால், ‘‘கும்பிடுகிறேன் சாமி'' என்று இன்றைக்கு யாராவது, எவரையாவது பார்த்து சொல்கிறார்களா?

ஒரு கட்டத்தில் பூணூலைப் பார்த்தாலே, ‘‘சாமி'' என்று சொன்னவர்கள் எல்லாம், இன்றைக்கு அவர்களைப் பார்த்தால், ஒரு எள்ளல் சிரிப்போடு பார்க்கிறார்களே, இந்த மாற்றம், இந்த மண்ணில் வந்து சேர்ந்ததற்கு எங்கள் அய்யா, பெரியார் அவர்களும், திராவிடர் கழகமும்தான் காரணம். அதனால்தான் அவர்கள் அவ்வளவு கோபப்படுகிறார்கள்.

சிலைகளே அச்சுறுத்துகிறபொழுது,


கூட்ட மேடைகள் அச்சுறுத்தாதா?


இன்றைக்குக் கவிஞர் பேசுகிறபொழுது சொன்னார்கள், இந்த மேடையில், இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு எத்தனைவிதமான தடைகள் இருந்தன என்று.

இருக்கத்தான் செய்யும்; சிலைகளே அச்சுறுத்துகிறபொழுது, கூட்ட மேடைகள் அச்சுறுத்தாதா?

உலகத்திலேயே ஒருவர் இறந்து போய், 46 ஆண்டுகளுக்குப் பிறகும், எதிரிகளை சிலையாக நின்றும் அச்சுறுத்துகிறார் என்றால், சிலைகளைக் கண்டுகூட, உலகத்தில் அய்யா பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் இரண்டு பேரின் சிலைகளைக்  கண்டு அச்சப்படுகிறார்கள்.

அதற்கு என்ன காரணம் என்றால், பெரியார் வெறும் அறிவாசான் மட்டுமில்லை; அடிப்படையில் அவர் ஒரு போராளி.

பெரியாரிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய செய்தி!


பெரியாரிடத்தில் இருந்து இன்றைக்கு நாம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒரு பெரிய செய்தி எது என்று நான் கருதுகிறேன் என்றால், அவருடைய அறிவார்ந்த செய்திகளை மட்டுமல்ல, அவருடைய போர்க்குணத்தையும் சேர்த்து நாம் ஒவ்வொருவரும் உள்வாங்கிக் கொள்ளவேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.

ஆசிரியர் அவர்களும், மதிப்பிற்குரிய ஆ.இராசா அவர்களும், அருள்மொழியும் வந்திருக்கிறார்கள்; அவர்கள் பேசவேண்டும் என்கிற காரணத்தினால், என்னுடைய நேரத்தை நான் சுருக்கமாக வைத்துக்கொண்டு, இரண்டு, மூன்று செய்திகளை சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன்.

அய்யாவினுடைய போர்க்குணம் எப்படிப்பட்டது என்பதற்காகச் சொல்கிறேன்.

இன்று காலையில், ‘கலைஞர் தொலைக்காட்சியில்' நான் பேசியதை உங்களில் பலர் கேட்டிருக்கலாம்.

ஆனாலும், இங்கே இருக்கிற இந்த வலையொளிகள், தொலைக்காட்சிகள் மூலமாக மக்கள் எல்லோருக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக அந்தச் செய்தியை மறுபடியும் நான் சொல்கிறேன்.

‘‘நீதி கெட்டது யாரால்?''


நான் அறிவேன், இந்தக் கூட்டத்தில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் மலையப்பன் வழக்கு  என்றால் என்னவென்று தெரியும்?

‘‘நீதி கெட்டது யாரால்?'' என்ற ஒரு சிறு நூலாகவே அது வந்திருக்கிறது.

நீதி கெட்டது யாரால்? என்ற புத்தகத்தை படிக்காத இளைஞர்கள் நம்மிடத்தில் இருக்க முடியாது; இருந்தால், இருக்கக்கூடாது. படித்துவிடவேண்டும்; அதனுடைய சுருக்கத்தை மிக சுருக்கமாக நான் சொல்கிறேன்.

மலையப்பன் என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்தவர். இன்றைக்குக் காலையில் நான் சொல்லி முடித்ததற்குப் பிறகு, கூடுதலாகச் சில செய்திகள் - அந்தச் செய்தியைக் கேட்டவர்களிடமிருந்து எனக்குக் கிடைத்தது.

நரிக்குறவர்கள் ஒரு அரசாங்கத்தினுடைய தண்ணீர்த் தொட்டியிலிருந்து தண்ணீர்ப் பிடிப்பதற்கான அனுமதியை வழங்கி மலையப்பன் அவர்கள் உத்தரவிட்டார்.

மலையப்பன் அவர்கள்மீது உள்ள வழக்கு அதுதான். வழக்குரைஞர்கள் மேடையில் இருக்கிறார்கள். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இரண்டு பேரும் பார்ப்பனர்கள்.

அந்த வழக்கில் ஆஜரான அரசாங்க வழக்குரைஞரும் வெங்கடாச்சாரி என்கிற ஒரு பார்ப்பனர்.

1956 நவம்பர் மாதம்


திருச்சியில் பொதுக்கூட்டம்


அந்த வழக்கில் என்ன தீர்ப்பளித்தார்கள் என்றால், அந்த ஆணை செல்லும், செல்லாது என்று சொல்லவில்லை. இப்படிப்பட்ட ஒருவரை ஆட்சியராக அரசாங்கம் எப்படி வைத்துக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் கேட்டார்கள்.

கொதிப்படைந்துபோன அய்யா தந்தை பெரியார் அவர்கள், 1956 நவம்பர் மாதம் திருச்சியில் பொதுக்கூட்டம் போட்டு, மலையப்பனை எப்படி ஆட்சியராக வைத்துக்கொள்ளலாம் என்று நீதிபதிகள் எப்படி கேட்க முடியும்? என்று அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அதை மட்டும் அவர் பேசவில்லை, அவர் சொன்னார், அந்த நீதிபதிகள் உள்நோக்கத்தோடு, இவர் பார்ப்பனரல்லாதவர் என்கிற காரணத்திற்காகவே இப்படி தீர்ப்பை எழுதியிருக்கிறார்கள் என்று சொன்னார்.

‘‘நான் கடவுளையே எதிர்க்கிறேன்;


பிறகு நீதிபதிகளை எதிர்ப்பதற்கு என்ன?''


அப்போதுதான் அய்யாவிடம் கேட்டார்கள்,

‘‘நீங்கள் நீதிபதிகளையே எதிர்க்கிறீர்களா?'' என்று.

அய்யா சொன்னார், ‘‘நான் கடவுளையே எதிர்க்கிறேன்; பிறகு நீதிபதிகளை எதிர்ப்பதற்கு என்ன?'' என்று கேட்டார்.

‘‘கடவுளையே எதிர்க்கிறோம்; பிறகு என்ன நீதிபதி வெங்காயம்.நீதிபதியாக இருந்தாலும், தவறு, தவறுதான்'' என்று அவர் சொன்னதற்குப் பிறகு, அதற்காக அவர்மீது வழக்குத் தொடுக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம்.

அந்த வழக்கில், நீதிபதி இராஜமன்னார் அவர்களும், எஸ்.எஸ்.வி.அய்யர் ஆகிய இரண்டு நீதிபதிகள் விசாரித்தார்கள்.

1957 ஏப்ரல் மாதம், 9 ஆம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் நீங்கள் குற்றவாளி என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? அல்லது வாதாட விரும்புகிறீர்களா? என்று கேட்டபொழுது,

நீதிமன்ற நாடகங்களில்


எனக்கு நம்பிக்கையில்லை


அய்யா சொன்னார், ‘‘இந்த நீதிமன்ற நாடகங்களில் எனக்கு நம்பிக்கையில்லை; நான் வாதாட விரும்பவில்லை. நீங்கள் அனுமதித்தால், எனக்குக் கால அவகாசம் கொடுத்தால், நான் ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறேன்'' என்றார்.

15 நாள் அவகாசத்தில், அய்யா கொடுத்த ஸ்டேட்மெண்ட் இருக்கிறதே, குறித்து வைத்துக் கொள்ளுங்கள், நம்முடைய இதழ்களில், நூலகங்களில் இருக்கிறது - 1957 ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி, அவர் நீதிமன்றத்தில் கொடுத்த அந்த வாக்குமூலத்திற்கு இணையாக, உறுதியான, போர்க்குணம் மிக்க இன்னொரு அறிக்கையை, வாக்குமூலத்தை நாம் பார்க்க முடியாது.

அவர் சொன்னார், உள்நோக்கத்தோடு அந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டது என்றுதான் நான் பேசினேன். இப்பொழுதும் நான் அப்படித்தான் நம்புகிறேன்.

பார்ப்பன நீதிபதிகள் இரண்டு பேரும்


நஞ்சை நெஞ்சில் வைத்திருக்கிறவர்கள்


இன்னொரு செய்தியை சொல்கிறார், ‘‘மலையப்பன்  என்கிற மாவட்ட ஆட்சியரை நான் பார்த்ததுகூட கிடையாது. இங்கே இருக்கிற நீதிபதிகளைப்பற்றி எனக்குத் தெரியாது. அவருடைய வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளையும் நான் பார்த்ததில்லை. ஆனால், ஒன்று தெரியும். ஆட்சியர் மலையப்பன் மிக நேர்மையானவர், நாணயமானவர் என்று சொல்கிறார்கள். அவருடைய வழக்கில் தீர்ப்பளித்த பார்ப்பன நீதிபதிகள் இரண்டு பேரும் நஞ்சை நெஞ்சில் வைத்திருக்கிறவர்கள் என்று சொல்கிறார்கள். அந்தத் தீர்ப்பைப் பார்த்தால், அப்படித்தான் இருக்கிறது.''

ஒரு தீர்ப்பை நீதிபதிகள் எதிராக வழங்கக்கூடாதா என்று கேட்டால், இங்கேதான் பெரியாருடைய அற்புதமான வாதத் திறன் ஒரு தர்க்கம் - ஒரு லாஜிக் இருக்கிறது.

அவர் சொல்கிறார், ‘‘அந்தத் தீர்ப்பில், மலையப்பன் அவர்களுடைய ஆணை செல்லும், செல்லாது என்று சொல்லியிருந்தால், நான் பேசியிருக்கமாட்டேன்.

அந்த ஆணை செல்லும், செல்லாது என்பதுதானே - அதனைத் தாண்டி,  இவரை எப்படி இன்னமும் நீங்கள் ஆட்சியராக வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டால், அவரை வேலையை விட்டு விலக்கவேண்டும் என்பதுதான் அந்தத் தீர்ப்பின் நோக்கமாக இருக்கிறது என்றால், அது உள்நோக்கம் உடையதா? இல்லையா?

பார்ப்பன துவேஷி என்னும் பெயரில் அழைக்கப்படுகிற ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன்


எனவேதான், நான் எதிர்த்தேன். என்னை பார்ப்பன துவேஷி என்கிறார்கள்.

ஆம், பார்ப்பன துவேஷி என்னும் பெயரில் அழைக்கப்படுகிற ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன் நான்.''

அந்த விளக்கத்தைப் பாருங்கள்; பார்ப்பனீயத்தை எதிர்ப்பது என்பது, ஜாதிய அமைப்பை எதிர்ப்பது. ஒரு குறிப்பிட்ட ஜாதியை எதிர்ப்பதல்ல; ஒட்டுமொத்தமாக இந்த ஜாதிய அமைப்பையே எதிர்ப்பது.

‘‘பார்ப்பன துவேஷி என்று அழைக்கப்படுகிற, ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன் நான்; இப்பொழுதும் சொல்லுகிறேன், பார்ப்பனர்கள் நீதிபதியாக இருக்கும் நாடு, கடும்புலி வாழும் காடு.''

எங்கே சொன்னார்?

நீதிமன்றத்திலே சொன்னார்.

அதற்குப் பிறகு கடைசியாகவும் அவர் சொன்னார், நாக்கில் பிழை என்று சொன்னால், வேம்பு இனிக்காது; தேன் கசக்காது.

அதுதான் பார்ப்பனத் தன்மை. அதற்குள் ஆயிரம் பொருள் இருக்கிறது. எதற்காக அவர் சொன்னார்?

பிறவியிலே குற்றம் இல்லை என்றால் தவிர, பார்ப்பனர்களிடம் நேர்மை வராது என்பதை அவர் எடுத்துச் சொன்னார்.

இதுதான் என்னுடைய கருத்து. ‘‘நீங்கள் என்ன தண்டனை தருவதாக இருந்தாலும், நீதிபதிகளின் சித்தம் என் பாக்கியம்'' என்று அது முடிகிறது.

எதற்காக இதனைக் குறிப்பிடுகிறேன் என்றால், அய்யாவின் போர்க் குணத்தையும், அய்யாவை எதிர்க்கிறவர்களுடைய குணத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இன்றைய நிலையோடு நான் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

எங்கள் அய்யா சிங்கம் எங்கே?


‘‘வாய் தவறி வந்துவிட்டது'' என்று சொல்லுகின்ற கோழைகள் எங்கே?


நீதிமன்றத்தைப்பற்றி பேசிவிட்டு, நீதிமன்றத்தில் போய், ‘‘ஆம், நான் அப்படித்தான் பேசினேன்; என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கிறேன் என்று சொன்ன எங்கள் அய்யா சிங்கம் எங்கே?

அய்க்கோர்ட்டாவது என்று பேசிவிட்டு, மக்களிடம் மார்தட்டிவிட்டு, நீதிமன்றத்திற்குப் போய், ‘‘வாய் தவறி வந்துவிட்டது'' என்று சொல்லுகின்ற கோழைகள் எங்கே? இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது எங்கள் அய்யாவைப்பற்றி பேசுவதற்கு.

நீங்கள் சொல்லியிருக்கவேண்டும் அல்லவா - அய்க்கோர்ட்டாவது என்று நான் சொன்னேன் - அது உண்மைதான் - இப்போதும் சொல்கிறேன் என்று நீதிமன்றத்திலே நீ சொல்லியிருக்கவேண்டும் அல்லவா! என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கிறேன் என்று சொல்லியிருந்தால்,  பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக இருக்கின்றவருக்கு இவ்வளவு துணிச்சல் இருக்கிறதே என்று கருதலாம்; ஆனால், நீதிமன்றத்திற்குச் சென்று வாய் தவறி சொல்லிவிட்டேன் என்று பேசிவிட்டு வருகிறவர்களுக்கெல்லாம் அய்யாவைப்பற்றி பேசுவதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது என்று நான் சொல்ல விரும்புகிறேன்.

கான்பூரில் அய்யாவின் உரை!


இன்னும் ஒரே ஒரு செய்தியை நான் சொல்ல விரும்புகிறேன்.

கான்பூருக்குச் சென்று வடமாநில மக்களிடையே அய்யா பேசிய அந்தப் பேச்சு.

நீதிமன்றத்திற்குச் சென்று நீதிபதிகளுக்கு எதிராகப் பேசியதைப்போல, வடநாட்டிற்குச் சென்று வடநாட்டு மக்களுடைய பழக்க வழக்கங்கள், பிற்போக்குத்தனங்களைப்பற்றி அவர்களிடையே பேசினார்.

பிற்படுத்தப்பட்ட இந்து வகுப்பார் சங்க மாநாடு


1944 டிசம்பர் மாதத்தின் கடைசி மூன்று நாள்களில், கான்பூரில் நடைபெற்ற மாநாடு. எந்த அமைப்பின் சார்பில் அந்த மாநாடு நடைபெறுகிறது.

பிற்படுத்தப்பட்ட இந்து வகுப்பார் சங்க மாநாடு.

இந்து வகுப்பார் என்றுதான் அவர்கள் போட்டிருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட இந்து வகுப்பார் நடத்துகின்ற மாநாடு அது.

அந்த மாநாட்டில் பேசுகிறபொழுது அய்யா சொல்லுகிறார்,

இந்து மதத்தை முதலில் விட்டொழியுங்கள்.

எதற்காக இப்போது திரும்பத் திரும்ப நம்மிடையே கேட்கப்படுகின்ற ஒரு கேள்விக்கான விடையை - நான் அதைத்தான் சொன்னேன் -  நீங்கள் கேள்வியை எதையாவது புதிதாகக் கேட்டால்தான், நாங்கள் புதிதாக விடை சொல்ல முடியும்.

1944 இல் எங்கள் அய்யா விடை சொல்லிவிட்ட கேள்விக்கு, நீங்கள் மறுபடியும் மறுபடியும் கேட்டுத் தொலைக்கிறீர்களே!

நீங்கள் இசுலாம் மதத்தை எதிர்ப்பதில்லை, கிறித்துவ மதத்தை எதிர்ப்பதில்லை. இந்து மதத்தை மட்டும் எதிர்க்கிறீர்களே ஏன் என்று இப்பொழுதும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இசுலாம் மதமும், கிறித்துவ மதமும், எல்லா மதமும் கடவுளை ஏற்கிறது; மூடநம்பிக்கை உடையது. நாங்கள் கடவுள் இல்லை என்று சொன்னால், அல்லாவை தவிர என்று அதற்குப் பொருள் இல்லை.

கடவுள் நம்பிக்கையும் மூடநம்பிக்கையும் எல்லா மதங்களுக்கும் உரியது. ஆனாலும், இந்து மதத்தை, நாங்கள் குறிப்பாக எதிர்க்கத்தான் செய்கிறோம். அதற்கு என்ன காரணம்?

இந்து மதத்தின் சிருஷ்டிதான்


இந்த ஜாதிய ஏற்றத்தாழ்வு


1944 ஆம் ஆண்டு கான்பூரில் பேசுகிறபொழுது, அய்யா சொன்ன விடையை நான் சொல்லுகிறேன்.

வேறு எந்த மதத்திலும் இல்லை; இந்து மதத்தின் சிருஷ்டிதான் இந்த ஜாதிய ஏற்றத்தாழ்வு.

ஜாதியினுடைய சிருஷ்டி என்பது அய்யாவினுடைய வார்த்தை.

ஜாதியை சிருஷ்டி செய்தது இந்து மதம்; இந்து மதத்தின் கடவுள்களும், புராணங்களும்தான் ஜாதியை, மக்களுக்குள்ள ஏற்றத் தாழ்வை நிலைக்க வைக்கிறார்கள். எனவே, நான் இந்து மதத்தை எதிர்க்கிறேன் என்றால், அடிப்படையில் ஜாதியை, ஏற்றத்தாழ்வை எதிர்க்கிறேன் என்று பொருள்.

நீங்கள் இந்து மதத்தையும், ஜாதியையும் பிரித்துக் காட்டுங்கள். இந்து மதத்திலும் இன்றைக்கும் பலர் திரும்பத் திரும்ப ஒன்றை விளங்கிக் கொள்ளாமல் கேட்கிறார்கள், இந்து நாடார், கிறித்துவ நாடார் என்று கிறித்துவ மதத்திலும் நாடார் இருக்கிறார்களே என்று. கிறித்துவ மதத்தில் நாடார் இல்லை நண்பர்களே, இந்து மதத்தினுடைய ஏற்றுமதி அது.

இங்கே இருந்துபோன பிறகும், இந்த ஜாதியை விட்டுத் தொலைக்க முடியாத அந்த மனநிலையின் மிச்சம் அது.

நான் கிறித்துவர்கள் மாநாட்டில் பேசுகின்றபொழுதே சொன்னேன், எந்த நிமிடம் வரையில் உங்களுக்கு ஜாதி உணர்வு இருக்கிறதோ, அந்த நிமிடம் வரையில் நீங்கள் கிறித்துவர்கள் இல்லை என்று பொருள். யாராவது தங்களுடைய ஜாதியை நினைத்துப் பார்த்தால், நீங்கள் இன்னமும் கிறித்துவர்களாக மாறவில்லை; வெறுமனே தேவாலயத்திற்குச் சென்று சில சடங்குகளைச் செய்துவிட்டால், கிறித்துவராக மாறிவிடலாம் என்று பொருளாகி விடாது.

பவுத்த மதத்திலே நீங்கள் கலந்துவிட்ட பிறகு, உங்களுக்கு எந்த ஜாதியும் கிடையாது!


அம்பேத்கர் மிகத் தெளிவாக, 1956 இல், மதம் மாறுகிறபொழுது சொன்னார், நேற்றைக்கு வரைக்கும் நீங்கள் எந்த ஜாதியாக வேண்டுமானாலும் இருக்கலாம்; எந்த மதமாக வேண்டுமானாலும் இருக்கலாம். இன்றைக்கு பவுத்த மதத்திற்கு வருகிறபொழுது ஒன்றை முடிவு செய்துகொண்டு வாருங்கள்.

ஆறுகளில், கங்கை உண்டு, காவிரி உண்டு, பல்வேறு ஆறுகள் உண்டு. கடலிலே கலந்துவிட்டதற்குப் பிறகு, இது கங்கை, இது காவிரி என்று எப்படி பிரிக்க முடியாதோ, அப்படி பவுத்த மதத்திலே நீங்கள் கலந்துவிட்ட பிறகு, உங்களுக்கு எந்த ஜாதியும் கிடையாது என்பதை முடிவு செய்துகொண்டு உள்ளே வாருங்கள் என்று அம்பேத்கர் சொன்னார்.

ஆனால், இன்றைக்கு கிறித்துவ மதத்திற்குள்ளும், இசுலாமிய மதத்திற்குள்ளும் போனவர்கள் இன்னமும் சிலர் ஜாதியோடுதான் இருக்கிறார்கள், நாம் அறிவோம்.

ஜாதி உணர்வோடு இருக்கிறவர்கள் யாரும் கிறித்துவர்கள் இல்லை; ஜாதி உணர்வோடு இருக்கிறவர்கள் யாரும் இசுலாமியர்கள் இல்லை. அவன் இந்துவாக இருக்கிறான் என்று பொருள். இதை நான் பல கூட்டங்களில், பாதிரியார்கள் அமர்ந்திருந்த கூட்டத்திலேயே சொன்னேன்.

நாகர்கோவிலுக்கு அருகில், தோப்பூருக்குப் பக்கத்தில் உள்ள இராமானுச்சாரிபுரம் என்ற ஒரு சிறிய கிராமத்திற்குப் போனேன். அங்கே என்னுடைய அப்பாவின் நண்பர் அந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதினால், நான் நாகர்கோவில் கூட்டத்திற்குப் போகின்றபொழுது, அந்த ஊருக்குப் போனேன். அந்தப் பெரியவர் இருக்கிறாரா என்று பார்ப்பதற்காக அந்த ஊருக்குப் போனேன். அந்த ஊரில் இறங்கியவுடன், அவருடைய பெயரைச் சொல்லி, அவர் பெரியவர்; இருப்பதற்கு வாய்ப்பில்லை. என்னுடைய அப்பாவின் வயதையொத்தவர். இருக்கிறாரா? அல்லது அவர் இருந்த வீடு எது என்று கேட்டேன்.

‘‘அவர் பிள்ளைமாரா? நாடாரா?


அந்த மக்கள் என்னைப் பார்த்து ஒரு கேள்வியைத் திரும்பக் கேட்டார்கள். அந்தச் சிறிய கிராமம் முழுவதும் கிறித்துவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

என்னைப் பார்த்துக் கேட்டார்கள், ‘‘அவர் பிள்ளைமாரா? நாடாரா?'' என்று.

ஏன் கேட்கிறீர்கள்? என்றேன்.

இந்தச் சாலைக்கு இந்தப் பக்கம் இருக்கிறவர்கள் எல்லாம் பிள்ளைமார்; அந்தப் பக்கம் இருக்கிறவர்கள் எல்லாம் நாடார்.

அவ்வளவு சிறிய கிராமத்தில் இரண்டு தேவாலயங்கள். ஒரு தேவாலயம் பிள்ளைமாருக்கு உரியது. அதில் நாடாரை அனுமதிக்கமாட்டார்கள். இன்னொரு தேவாலாயம் நாடாருக்கு உரியது; பிள்ளைமார்கள் போகமாட்டார்கள். இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டினை கவனியுங்கள்.

எந்தப் பக்கம் கிறித்துவர்கள் இருக்கிறார்கள்


எனவே, நீங்கள் அதைச் சொன்னால்தான் பதில் சொல்ல முடியும்; இந்தப் பக்கம் பிள்ளைமார்கள் இருக்கிறார்கள்; அந்தப் பக்கம் நாடார்கள் இருக்கிறார்கள் என்று அவர்கள் சொன்னபொழுது,

நான் அடுத்து உடனடியாகக் கேட்டேன், எந்தப் பக்கம் கிறித்துவர்கள் இருக்கிறார்கள் என்று.

எல்லோரும் கிறித்துவர்கள்தான் என்றார்கள்.

இல்லை, இல்லை. நீங்கள் பிள்ளைமார்களாகவும், நாடாராகவும் இருக்கின்றவரையில், இந்துக்களாகத்தான் இருக்கிறீர்கள் என்று பொருள்.

இதை அய்யா சொன்னார், சொல்லுகிறபொழுதே குறிப்பிடுகிறார். இத்தனை பேர் இங்கே நீங்கள் சேர்ந்திருக்கிறீர்கள். உணர்வு உள்ளவர்கள். வடநாட்டிற்கு வருவதற்கு எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. ஆனால், எந்த நம்பிக்கையில் நான் வந்தேன்? 1944 டிசம்பர் மாதத்தில் பேசுகிறார்.

இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்த அம்பேத்கர் அவர்கள் என்னோடு நீண்ட நேரம் உரையாடினார்.

ஜாக் கோரக் மண்டல் என்கிற பஞ்சாப் லாகூரைச் சேர்ந்த அமைப்பின் தலைவரும், அவருடைய செயலாளர் அரிபவன் என்பவர்களும் என்னிடத்தில் சொன்னார்கள், அந்த மூன்று பேரும் சொன்னதின் அடிப்படையில்தான். என்ன சொன்னார்கள்?  வடநாட்டிலும் சமூகநீதிக்கு ஆதரவானவர்கள், ஜாதி எதிர்ப்பு உணர்வாளர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நான் வந்தேன்.

மொழி பேதத்தினாலும், பழக்க வழக்கங்களினாலும், நெடுந்தொலைவு பிரிந்திருப்பதாலும், நமக்குள் ஒத்தக் கருத்துடையவர்கள் ஒன்று சேர முடியாமல் இருக்கிறோம். எனவே, நாம் ஒன்று சேர்ந்து இந்தியாவில் போராடவேண்டிய கட்டமும் இருக்கிறது என்பதை நான் உணர்கிறேன் என்று 1944 ஆம் ஆண்டில் பேசுகிறார்.

கடைசியாக சொல்கிறார்,

நீங்கள் உங்களுடைய அமைப்பின் பெயரிலேயே பிற்படுத்தப்பட்ட இந்து வகுப்பார் என்று போட்டிருக்கிறீர்கள்; இந்துவாக இருக்கின்றவரைக்கும் உங்களுக்கு சமூகநீதி வந்து சேராது. அப்படியானால், எங்கே போவது?

எந்த மதத்திற்குள் போனால், தீண்டாமை உங்களை அண்டாதோ, அந்த மதத்திற்கு நீங்கள் போகலாம்


மதமற்றவனாக இருக்க முடியுமானால், இருங்கள். எதாவது ஒரு மதம் வேண்டும் என்று நீங்கள் கருதுவீர்களானால், எந்த மதம் உங்கள் ஜாதி இழிவைத் துடைக்கிறதோ, எந்த மதத்திற்குள் போனால், தீண்டாமை உங்களை அண்டாதோ, அந்த மதத்திற்கு நீங்கள் போகலாம். அது எந்த மதமாக இருந்தாலும்.

இன்னமும் சொல்லுகிறேன், ஜீவகாருண்ய மதத்திற்கு வேண்டுமானாலும் போய் வாருங்கள்.

எதுவுமில்லை. நாங்கள் ஆரிய, பார்ப்பன எதிர்ப்பாளர்கள், மதத்தின் எதிர்ப்பாளர்கள் என்றால், நீங்கள் மதமற்றவர்கள் என்றால், உங்களை நீங்கள் இனி திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

எங்கே? வடநாட்டில் சென்று பேசுகிறார்.

சமூகநீதியின் மறுபெயர்தான் திராவிடம்


திராவிடத்திற்கு யார் யாரோ விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறானே, பெரியார் திராவிடர் என்று யாரை சொல்லுகிறார்? கான்பூரில் இருக்கும் வடநாட்டவரைகூட, ஆரிய, பார்ப்பனீயத்திற்கு எதிரானவர்கள் என்றால், அவர்களை திராவிடர் என்று சொல்லுங்கள் என்றால், அதற்கு என்ன பொருள்? திராவிடம் என்பது நிலத்தை, இனத்தை, மொழியைக் குறிக்கலாம். ஆனால், திராவிடம் என்பது ஆதிக்கத்தை எதிர்க்கிற, பார்ப்பனீயத்தை எதிர்க்கிற, சமூகநீதியின் மறுபெயர்தான் திராவிடம் என்பதை 1944 ஆம் ஆண்டே பெரியார் சொன்னார்.

அந்த ஆதிக்கத்தைக் கொண்டிருக்கிற, ஏற்றத்தாழ்வைக் கொண்டிருக்கிற, இந்து மதத்தைவிட்டு வெளியேறு என்று சொன்னதற்குக் காரணம், உங்களின் கடவுள் நம்பிக்கையல்ல - உங்களின் மூடநம்பிக்கை மட்டுமல்ல, இந்து மதம் ஜாதியின் கொள்கலனாக இருக்கிறது.

இந்து மதத்தையும், ஜாதியையும் பிரிக்க முடியாது. கர்வாப்சி என்று சொன்னார்களே, கர் என்றால் வீடு; வாப்சி என்றால், வாபஸ். மறுபடியும் தாய்வீட்டுக்குத் திரும்புவது என்று.

பாதர் கஸ்பாரின் பேட்டி


அண்மையில், பாதர் கஸ்பார் அவர்கள் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார், மிகச் சரியாக சொல்லியிருந்தார். நான் தாய் மதத்திற்குத் திரும்புவதைப்பற்றி யோசிக்கிறேன். அதிலொன்றும் சிக்கல் இல்லை. முதலில் எங்கள் தாய் மதத்தைவிட்டு, வைதீகர்களே, பார்ப்பனீயர்களே நீங்கள் வெளியேறுங்கள்; நாங்கள் உள்ளே வருகிறோம் என்றார்.

நீ உள்ளே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறாய்; நீ வெளியேறு, நாங்கள் வருகிறோம் என்று பாதர் கஸ்பாருடைய பேட்டியை நான் பார்த்தேன்.

மக்களுடைய வாழ்வை மேம்படுத்தத் தோன்றிய இயக்கம்தான் திராவிட இயக்கம்


ஆகையினால், கர்வாப்சியில் அவர்களுக்கு என்ன சிக்கல் வந்தது தெரியுமா? நீங்கள் யாரை வேண்டுமானாலும் கிறித்துவனாக ஆக்கலாம்; நீங்கள் யாரை வேண்டுமானாலும், இசுலாமியனாக ஆக்கலாம். நீங்கள் யாரை இந்துவாக ஆக்கினாலும், அவன் பார்ப்பனனா? இடைச்சாதியா? சூத்திரனா? தாழ்த்தப்பட்டவனா? என்பதை முடிவு செய்து நீங்கள் மாற்றவேண்டும். ஜாதியையும், இந்து மதத்தையும் பிரிக்க முடியாது என்பதால், நாங்கள் இந்து மதத்தை எதிர்த்தோமே தவிர, இந்துக்கள் எங்களுக்கு எதிரிகள் இல்லை. திராவிட இயக்கம் தொடங்கியதே யாரைப் படிக்க வைப்பதற்காக? பார்ப்பனரல்லாதவர்கள் என்றால் அவர்கள் யார்? பார்ப்பனரல்லாதவர்களிலே இந்துக்கள் இல்லையா? இந்துக்கள்தான் அத்தனை பேரும். இந்துக்கள் என்று தங்களை நினைத்துக் கொண்டிருக்கின்ற மக்களுடைய வாழ்வை மேம்படுத்தத் தோன்றிய இயக்கம்தான் திராவிட இயக்கம். அறியாமையை விட்டு வெளியில் வாருங்கள்.

நான் முதலில் சொன்னதைப்போல, ‘‘சாமி கும்பிடுறேன்'' என்று வேண்டுமானால் சொல்லித் தொலை. ‘‘கும்பிடுறேன் சாமி'' என்று எவனைப் பார்த்தும் சொல்லாதே என்கிற சுயமரியாதை உணர்வை ஊட்டிய இயக்கம்தான் திராவிட இயக்கம்.

எதிர்க்கருத்துடையவர்களை மதித்தவர் அய்யா!


அய்யா பெரியார் அவர்கள், எதிர்க் கருத்துகளை மதித்தவர்; மாற்றுக் கருத்து உடையவர் என்பதினால், அவர்களை ஒரு நாளும் தூக்கி எறிந்தவர் இல்லை. மிகச் சரியான ஒரு எடுத்துக்காட்டை சொல்லவேண்டுமானால், அய்யா பிறந்த இந்த நாள்தான் திரு.வி.க. அவர்கள் இறந்த நாள். அய்யா பிறந்த இந்த நாள்தான் நடிகவேள் எம்.ஆர்.இராதா இறந்த நாள்.

எம்.ஆர்.இராதா அவர்களாவது நம்மோடு கருத்தில் உடன்பாடு உடையவர். தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் மிகச்சிறந்த பக்திமான். அவர் பெரியார் வீட்டுக்கு ஈரோட்டிற்கு வந்திருந்தபொழுது, ஆற்றுக்குக் குளிக்கப் போன திரு.வி.க. அவர்கள் குளித்துவிட்டு வரும்பொழுது, கரையில் அய்யா உட்கார்ந்திருக்கிறார்.

என்ன நாயக்கர் இங்கே வந்திருக்கிறீர்களே? என்று கேட்கிறார். அவருக்கும் தெரியும் அய்யா ஆற்றில் குளிப்பதற்காக வருகிறவர் இல்லை.

அய்யா சொல்கிறார், ‘‘திருநீர் மூட்டையை நீங்கள் வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டீர்கள்; குளித்தவுடன் பூசுவீர்களே என்பதற்காக எடுத்து வந்தேன்'' என்று சொன்னார். திருநீற்றில் நம்பிக்கை இல்லாத பெரியார்தான் சொன்னார், தன் நண்பருக்கு அந்த நம்பிக்கை உண்டு என்பதற்காக அதனை எடுத்துக்கொண்டு வந்தார்.

திரு.வி.க. அவர்களின் மறைவின்போது...


அதைக் காட்டிலும் இன்னொரு செய்தியை சொல்கிறேன். 1953 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி திரு.வி.க. அவர்கள் மறைந்து போனார். அய்யா உடல்நலம் சரியில்லாமல் ஈரோட்டில் இருக்கிறார். இப்பொழுது இருப்பதைப்போல, விமானங்களில் அரை மணிநேரத்தில் வந்துவிட முடியாது. உடல்நலம் சரியில்லாத நிலையிலும், தன்னுடைய நண்பருடைய இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்னைக்கு வந்தார். இதே கண்ணம்மாபேட்டைதான் என்று நான் நினைக்கிறேன். திரு.வி.க. அவர்களுடைய உடல் அடக்கம் செய்யப்படுகின்ற இடத்தில், பெரியார் இருந்தார். அவரை சார்ந்தவர்கள் கொஞ்சம் தயங்கிக் கொண்டிருந்தார்கள்.

என்ன தயக்கம்? என்று பெரியார் கேட்டார்.

திரு.வி.க. தன்னுடைய விருப்பமாக ஒன்றை எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார். அவருடைய மாணவனான மு.வ.வும், இன்னொருவரும் சைவத் திருமுறைகளைப் பாடவேண்டும் என்று எழுதியிருக்கிறார். அய்யா இருப்பதினால், எங்களுக்குத் தயக்கமாக இருக்கிறது என்றபொழுது,

இதில் என்னங்க தயக்கம்; அவருடைய இறுதி நிகழ்வு, அவருடைய விருப்பப்படிதானே நடக்கவேண்டும் என்று சொன்ன ஜனநாயகவாதி எங்கள் அய்யா பெரியார் அவர்கள்.

கருப்புச் சட்டைகளை எவராலும்


கட்டுக்குள் அடக்கிவிட முடியாது


எதிர்க் கருத்தை மதிக்கிறோம் நாங்கள். இன்றைக்கும் நாம் எதிர்க்கருத்துடையவர்களை பகைவர்களாகக் கருதவில்லை. நம் மக்கள் அத்திவரதரை நோக்கி, ஒரு கோடி பேர் போகிறார்கள் என்றால், அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை நண்பர்களே; வருத்தப்படவும், நம் மக்களிடம் நாம் பேசவும்தான் நிறைய செய்திகள் இருக்கின்றன. பேசுவோம், தொடர்ந்து பேசுவோம். பெரியாரைப் பேசிக்கொண்டே இருப்போம். எத்தனை காவல்துறையின் தடைகள் வந்தாலும், எத்தனை மத்திய அரசின் எதிர்ப்புகள் வந்தாலும், எங்கள் கருப்புச் சட்டைகளை எவராலும் கட்டுக்குள் அடக்கிவிட முடியாது.

பேசுவோம், பேசுவோம்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார்

- விடுதலை நாளேடு 19 10 19