வியாழன், 18 ஜூலை, 2024

கல்விவள்ளல் காமராசர் 122ஆவது பிறந்த நாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

 

விடுதலை நாளேடு

சேலம், ஜூலை 15- கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2024) பகல் 12 மணியளவில் சேலம் இரண்டாம் அக்ரகாரம் பழைய ஆனந்த் ஓட்டல் அருகில் உள்ள காமராசர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னையில்…
கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாளை ஒட்டி இன்று காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா சாலை பெரியார் பாலம் (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள காமராசர் சிலைக்கு திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் மாலை அணிவித்தும், படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, வழக்குரைஞர் சு.குமாரதேவன், மயிலைடி.ஆர்.சேதுராமன், வடசென்னை மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், கொடுங்கையூர் கழக தலைவர் கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, பொறியாளர் ஈ.குமார், கணேசன், பெரியார் நூலக வாசகர் வட்டப் பொருளாளர் ஜனார்த்தனம், க.செல்லப்பன் ஆகியோரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் சார்பில்…
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் கோ.கருணாநிதி, ஏ.இராஜசேகரன் (அய்.ஓ.பி.), முருகன் (சி.பி.சி.எல்), எஸ்.நடராசன் (யூனியன் வங்கி), டி.இரவிக்குமார் (யூனியன் வங்கி), கே.இராமமூர்த்தி (அய்.சி.எப்), எஸ்.அன்புகுமார் (அய்.சி.எப்) ஆகியோர் காமராசர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கழகத்தின் சார்பில் காமராசர் படத்திற்கு மலர் தூவி மரியாதை

கல்வி வள்ளல் காமராசரின் 122ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2024) சென்னை அண்ணாசாலை பெரியார் பாலம் அருகிலுள்ள சிலைக்கு திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமசேரன், மாலை அணிவித்தார். உடன்: கோ. கருணாநிதி, பொறியாளர் ச. இன்பக்கனி, வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி மற்றும் கழகத் தோழர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக