-விடுதலை,16.12.16
சென்னை, டிச. 19- தென் சென்னை மாவட்டக் கழக இளைஞரணித் தோழர் கு.செல்வேந்திரன் - மு.புவனேசுவரி வாழ்க்கை இணை ஏற்பு விழா, 15.12.2016 அன்று மாலை 6.30 மணியள வில் சென்னை சைதாப்பேட்டை எஸ்.பி.எஸ். திருமண மண்ட பத்தில் சிறப்பாக நடைபெற் றது.
தென் சென்னை மாவட்டக் கழக இளைஞரணித் துணைத் தலைவர் மு.முகிலன் வரவேற் புரையாற்றினார். தலைமைக் கழக சொற்பொழிவாளர் செ.தமிழ்சாக்ரடீஸ் அறிமுகவுரை வழங்கினார்.
கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மணவிழாவிற்குத் தலைமை வகித்து, மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழி யினை ஏற்கச் செய்து, இணை ஏற்பு நிகழ்வினை நடத்தி வைத்து அறிவுரையாற்றினார்.
தென் சென்னை மாவட்டக் கழகத் தலைவர் இரா.வில்வ நாதன், சென்னை மண்டல கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, கழகப்பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசினர்.
மணவிழாவிற்கு தலைமை வகித்து நடத்தி வைத்த கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்களுக்கு மணமக்கள் குடும்பத்தார் பயனாடை அணி வித்து சிறப்புச் செய்தனர்.
மணமகன் கு.செல்வேந்தி ரன் கழக கொள்கை வழி நடக்க ஊக்கிய அவரது பெற்றோர் சு.பெ.குமார் - நீலாவதி, சகோ தரியார் சாந்தி மற்றும் மண மகள் மு.புவனேசுவரி தாயார் மு.லட்சுமி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.
மணவிழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த் திய கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு மணமகன் கு.செல்வேந்திரன் பெரு மகிழ்வுடன் பயனாடை அணிவித்து சிறப்பித்தார்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழ கப் பிரச்சார செயலாளர் வழக் குரைஞர் அ.அருள்மொழி மற் றும் கழகப் பொறுப்பாளர்க ளுக்கு மணமக்கள் குடும்பத்தி னர் பயனாடை அணிவித் தனர்.
மணவிணீழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பறை இசை முழக்கத்துடன் குழுமிய கழகத் தோழர்களும், மணமக்கள் குடும்பத்தினர் உற் சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழர் தலைவரை வரவேற் கும் விதமாக சைதை அண்ணா சாலை சந்திப்பிலும், மண விழா மண்டபத்திலும் டிஜிட் டல் பேனர்களும், சாலையின் இருபுறங்களில் கழகக் கொடி களுடன் கூடிய கம்பங்களும் நிறுவப்பட்டிருந்தன.
மண விழாவில் மாநில கழக மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் பொழிசை கண்ணன், சென்னை மண்டல கழக செயலாளர் வி.பன்னீர் செல்வம், கழகப் பொதுக்குழு உறுப்பினர்களான சைதை எம்.பி.பாலு, நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், எண்ணூர் வெ.மு.மோகன், சவுந்தரி நட ராசன், வடசென்னை மாவட் டக் கழகத் தலைவர் வழக்கு ரைஞர் சு.குமாரதேவன், சைதை வள்ளியம்மாள் பாலு, தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர்கள் மயிலை டி.ஆர்.சேதுராமன், சா.தாமோதரன், துணைத் தலைவர் கோ.வீ.இராகவன், சைதை தென்றல், ப.ஆனந்தன், தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் ப.முத்தய்யன், செய லாளர் கரசங்கால் நாத்திகன், முன்னாள் செயலாளர் அனகை ஆறுமுகம், மண்டல கழக இளைஞரணிச் செயலாளர் இர.சிவசாமி, மாவட்டக் கழக இளைஞரணி துணைச் செயலாளர் சுரேசு, தமிழினியன், விடுதலை நகர் சி.ஜெயராமன், மாநில கழக வழக்குரைஞரணி அமைப்பா ளர் ஆ.வீரமர்த்தினி, வழக் குரைஞர் ந.விவேகானந்தன், வழக்குரைஞர் ம.வீ.அருள் மொழி, மாநில கழக மாண வரணி துணை செயலாளர் நா.பார்த்திபன், வடசென்னை மாவட்டக் கழக செயலாளர் தே.ஒளிவண்ணன், துணை செயலாளர் கி.இராமலிங்கம், இளைஞரணி தலைவர் புரசை சு.அன்புச் செல்வன், செய லாளர் தளபதி பாண்டியன், துணைத் தலைவர் மங்களபுரம் பாசுகர், மகளிர் பாசறை செய லாளர் த.மரகதமணி, செஞ்சி ந.கதிரவன், பெரியார்திடல் சுரேசு, வை.கலையரசன், கலை மணி, திருநின்றவூர் அருண், வேப்பம்பட்டு கழகத் தலைவர் சிவ.இரவிச்சந்திரன், செயலா ளர் பட்டாளம் பன்னீர்செல்வம், கும்மிடிப்பூண்டி மாவட்டக் கழக இளைஞரணி செயலாளர் க.ச.க.இரணியன், பொன்னேரி ப.க. தோழர் கே.வினோத், திரா விடர் மகளிர் பாசறை செல்வி, கார்க்காத்தகுடி ஊராட்சி மன் றத்தலைவர் கா.சேகர், மலர் விழி - நெடுங்கிள்ளி, பெரியார் களம் இறைவி, பெரியார் சுய மரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந் தில்குமாரி, கலைத்துறை பொறுப் பாளர் செ.கனகா, வழக்குரை ஞர் ம.வீ. அருள்மொழி, இங் கர்சால் பெரியார் சாக்ரட்டீஸ், புரூனோ, இனியரசன், ஈழ முகிலன், பொறியாளர் ஈ. குமார், புரசை பாலமுருகன், ஆவடி பன்னீர், சூளைமேடு கோ.வீ.ராகவன், சைதை மு.ந. மதியழகன், பெரியார் மாணாக் கன், க.வெண்ணிலா, இ.சீர்த்தி, கலைமதி, தமிழ்ச்செல்வி, பவானி, ரேவந்த், க.ஆற்றல் அரசி, தமிழீழம், பெரியார் பிஞ்சுகள் ஆ.பிரியவர்சினி, ஆ.ஆதவன், சித்தார்த் புருனோ மற்றும் கழகப் பொறுப்பாளர் களும், தோழர்களும் கலந்து கொண்டனர்.
மணவிழாவில் கழக இளை ஞரணித் தோழர் மு.சண்முகப் பிரியன் இணைப்புரை வழங் கினார். தென் சென்னை மாவட்ட இளைஞரணி செய லாளர் ச.மகேந்திரன் நன்றி கூறினார்.
விடுதலை,19.12.16
விடுதலை,13.12.16