கருப்புக் கொடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருப்புக் கொடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 ஏப்ரல், 2026

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கருப்புக் கொடி ஏற்றி – கருப்புச் சட்ட நகலை எரித்தார்

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

சென்னை, ஏப். 16- இன்று (16.4.2026) காலை 11 மணியளவில் திராவிடர் கழக அலுவலகத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பாகக் கொண்டு வருகின்ற சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்து கருப்புக் கொடி ஏற்றியும், கருப்புச் சட்டத்தின் நகலை எரித்தும் முழக்கமிடப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஒழித்துக் கட்டி மனுஸ்மிருதியைச் சட்ட மாக்கும் பேராபத்துக்கான அடித்தளமே இன்று (16.4.2026) நாடாளுமன்றத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வரும் தொகுதி மறு சீரமைப்பு சட்டத் திருத்தம்.

இதைக் கொண்டு வரும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசின் சூழ்ச்சியை முறியடிக்கும் உரிமைப் போரின் பெரு முழக்கமாக இன்று (16.4.2026) காலை 11 மணியளவில் சென்னை வேப்பேரியில் திராவிடர் கழக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் கருப்புக் கொடி ஏற்றிய கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியாரின் சிலைக்கு முன்பாக கருப்புச் சட்ட மசோதாவின் நகலை தீ வைத்து எரித்தார்.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

ஒன்றிய பா.ஜ.க. அரசு நாடாளு மன்றத்தில் தொகுதி மறுவறையறை தொடர்பாக கொண்டு வரப்படும் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்து கண்டன ஒலி முழக்கமிடப்பட்டது.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், பொன்னேரி வி.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், இராமு, திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, இணைச் செயலாளர் சோ.சுரேஷ், கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், த.சீ.இளந்திரையன்,

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

வடசென்னை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், திருவொற்றியூர் கணேசன், கோ.தங்கமணி, ப.கோபாலகிருஷ்ணன், சி.காமராஜ், பேராசிரியர் பெரியார் செல்வி, பசும்பொன், கவுதமி, த.மரகதமணி, மு.பவானி, தங்க.தனலட்சுமி, இறைவி, உத்திரா, த.இளவரசி, த.திராவிட இலக்கியா, தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, அரும் பாக்கம் சா.தாமோதரன், ஆவடி மாவட்டக் கழகத் தலைவர் கார்வேந்தன், செயலாளர் இளவரசன், சரவணன், சீனு நடராசன், முத்துகிருஷ்ணன், மேற்கு சென்னை மாவட்ட கழகத் தலைவர் கரு.அண்ணாமலை, தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் இரா.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், கருப்பைய்யா, குணசேகரன், மதியழகன், சீர்காழி ராமண்ணா, சோழிங்கநல்லூர் மாவட்ட காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன், தலைவர் வே.பாண்டு, செயலாளர் நா.தமிழினியன், மற்றும் திரளான தோழர்கள் பங்கேற்று கண்டன ஒலி முழக்கங்களை எழுப்பினர்.

-விடுதலை நாளேடு, 16.04.26

சென்னை, ஏப். 16- இன்று (16.4.2026) காலை 11 மணியளவில் திராவிடர் கழக அலுவலகத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பாகக் கொண்டு வருகின்ற சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்து கருப்புக் கொடி ஏற்றியும், கருப்புச் சட்டத்தின் நகலை எரித்தும் முழக்கமிடப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஒழித்துக் கட்டி மனுஸ்மிருதியைச் சட்ட மாக்கும் பேராபத்துக்கான அடித்தளமே இன்று (16.4.2026) நாடாளுமன்றத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வரும் தொகுதி மறு சீரமைப்பு சட்டத் திருத்தம்.

இதைக் கொண்டு வரும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசின் சூழ்ச்சியை முறியடிக்கும் உரிமைப் போரின் பெரு முழக்கமாக இன்று (16.4.2026) காலை 11 மணியளவில் சென்னை வேப்பேரியில் திராவிடர் கழக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் கருப்புக் கொடி ஏற்றிய கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியாரின் சிலைக்கு முன்பாக கருப்புச் சட்ட மசோதாவின் நகலை தீ வைத்து எரித்தார்.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

ஒன்றிய பா.ஜ.க. அரசு நாடாளு மன்றத்தில் தொகுதி மறுவறையறை தொடர்பாக கொண்டு வரப்படும் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்து கண்டன ஒலி முழக்கமிடப்பட்டது.

சனி, 6 ஜூலை, 2024

திராவிடர் கழகத்தின் சார்பில் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனுக்கு கருப்புக் கொடி - 9.11.1991( இசையின்பன் - செந்தில்குமாரி திருமணம்)

இயக்க வரலாறான தன் வரலாறு(241) : 

உண்மை இதழ்

அய்யாவின் அடிச்சுவட்டில் …

கி.வீரமணி

 காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டுக்குத் துரோகம், மண்டல் கமிஷன் பிரச்சினையில் மத்திய அரசின் துரோகம்,  குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் ஆரம்பத்திலிருந்தே போட்டு வந்த முட்டுக்கட்டை, குடியரசுத் தலைவரை சந்திக்கச் சென்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சந்திக்க மறுத்த அநீதி ஆகியவற்றைக் கண்டிக்கும் வகையில் திராவிடர் கழகத்தின் சார்பில் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனுக்கு கருப்புக் கொடி காட்ட 9.11.1991 அன்று என் தலைமையில் அனைத்து மாவட்டங்களி லிருந்தும் தோழர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்திற்கான காரணங்களை விளக்கிப் பேசினேன். கழகத் தோழர்களுடன் கைதாகி சிறை சென்றேன்.

 காவிரி நீர்ப் பிரச்சனையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க மறுத்த குடியரசுத்தலைவருக்கு ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் கருப்புக் கொடி காட்டும் காட்சி.

 கைதாகி மீனம்பாக்கம் முத்து திருமண மண்டபத்தில் இருந்த போது பெரியார் பேருரையாளர் பேராசிரியர் அ.இறையன் _ திருமகள் ஆகியோரின் செல்வன் இசையின்பன் மதுரை முனியசாமி _ பொன்னுத்தாய் ஆகியோரின் மகள் செந்தில்குமாரி(தற்போதைய பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்) ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்தேன். உரிமைப் போரில் கைது செய்யப்பட்டிருந்த போது நடைபெற்ற இந்தத் திருமணம் ஏடுகளில் பரபரப்பானது.

 இசையின்பனுக்கு செந்தில்குமாரி மோதிரம்

அணிவிக்கும் காட்சி