மரியாதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரியாதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 மே, 2026

டாக்டர் ஜி.ராஜூ மறைவு – ஆசிரியர் கி.வீரமணி இறுதி மரியாதை


மறைவு

சென்னை, மே 14- மறைந்த டாக்டர் ராஜூ (வயது-94) அவர்களின் உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மரியாதை செலுத்தினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களோடு பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை ஒன்றாகப் படித்த ஆசிரியரின் நண்பர் (கடலூர்க்காரர்) மறைந்த டாக்டர் ஜி.ராஜூ (வயது-94) அவர்கள் நேற்று (13.5.2026) மறைவுற்றார். அவரது உடல் நுங்கம்பாக்கம் பள்ளி சாலையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களும் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

டாக்டர் ஜி.ராஜூ அவர்களின்  துணைவியாரிடமும், மகன் ரா.பிரபாகரிடமும், குடும்பத்தாரிடமும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இரங்கலும் ஆறுதலும் கூறினார்.

உடன் தென் சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, எம். வரதன் ஆகியோர் இருந்தனர்.

- விடுதலை நாளேடு, 14.05.26




செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

அறிஞர் அண்ணாவின் 57 ஆவது நினைவு நாள்: அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் மலர்வளையம் வைத்து மரியாதை (சென்னை, 3.2.2026)

 


அறிஞர் அண்ணாவின் 57ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து தமிழர் தலைவர் மரியாதை!

சென்னை, பிப்.3- தந்தை பெரியார் அவர்களின் தலைமை மாணாக்கன், தி.மு.க.வின் நிறுவனர், தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் 57ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2026) சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார், பொறியாளர் ச.இன்பக்கனி, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், கிராமப்புற பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், போளூர் பன்னீர்செல்வம், சிதம்பரம் செல்வரத்தினம், மேனாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் சிறப்பு உதவியாளர் எழுத்தாளர் முத்துவாவாசி, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், துணைச் செயலாளர் கோவீ.ராகவன், சூளைமேடு இராஜேந்திரன், தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், இராமச்சந்திரன், சோழிங்கநல்லூர் மாவட்டக் கழக செயலாளர் தமிழினியன், காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன், கொடுங்கையூர் கோ.தங்கமணி, தங்க தனலட்சுமி, பழனிபாலு, முரளி, க.கலைமணி, விஜய், மகேஷ், கணேசன், அசோக்குமார், பெரியார் மாணாக்கன் மற்றும் கழகத் தோழர்கள் திரளாகப் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.


வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்து திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் அதுவே அண்ணாவுக்கு நாம் செய்யும் பெருமை

அண்ணா நினைவு நாளில், தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

சென்னை, பிப்.3 –  வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்து திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம். அதுவே அண்ணாவுக்கு நாம் செய்யும் பெருமை என்று தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

அறிஞர் அண்ணாவின்57ஆம் ஆண்டு  நினைவு நாளான இன்று (3.2.2026) சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவரது பேட்டியின் விவரம் வருமாறு:

‘‘பெரியாரோடு இருந்த காலமே
எனக்கு வசந்த காலம்!’’

‘நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார்’ என்று  பேரறிஞர் அண்ணா அவர்கள், முதலமைச்சரானவுடன் தாம் எழுதிய தந்தை பெரியார் பிறந்த நாள் ‘விடுதலை’ மலர்க் கட்டுரையில் குறிப்பிட்டார்.  ‘‘நான் இன்றைக்கு முதலமைச்சர்  நாற்காலியில் அமர்ந்தது பெருமையாகப் பலருக்குத் தோன்றலாம். ஆனால், நான் பெரியாருடன் பிரச்சாரத்தைத் தொடங்கி, காடு மேடெல்லாம் அவரோடு சென்ற காலம் இருக்கிறதே, அதுதான் என்னுடைய வசந்த காலம்’’ என்று பூரிப்போடு குறிப்பிட்டார்.

முதலமைச்சர் பொறுப்பை ஏற்றவர், நேரிடையாகத் தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்து, வாழ்த்துகளைப் பெற்று, அவர் நடத்தி வந்த அந்த ஆட்சி, இன்றைக்கும் பாதை மாறாமல், கலைஞர் அவர்கள் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த நேரத்திலும் சரி, அதுபோல், இன்றைய ஒப்பற்ற முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் பொறுப்பேற்று, ஒரு முழுக் கட்டம் முடிந்து, அடுத்தக்கட்டத்தை நோக்கி விரைந்து போகக் கூடிய இந்தக் காலகட்டத்திலும் சரி, சிறப்பாக அந்த உணர்வைப் பெருக்கிக் கொண்டு போகிறார்.

அண்ணா வகுத்த அந்தத் திட்டங்கள்,

அண்ணா கொடுத்த முழக்கங்கள்!

சில நேரங்களில்,  சில ஆட்சிகள்  அருகிக்கொண்டு போகும். ஆனால், அண்ணா வகுத்த அந்தத் திட்டங்கள், அண்ணா கொடுத்த முழக்கங்கள், இன்றைக்குப் பெருக்கல் இருக்கிறதே தவிர,  மற்றபடி சுருக்கலிலோ, வழுக்கலிலோ இல்லை. அதைச் செய்கின்ற ஒரு  நல்ல ‘திராவிட மாடல்’ ஆட்சி இன்றைக்குத் தொடர்கிறது.

எனவேதான், அண்ணாவை நாம் போற்றுகிறோம், அண்ணாவைப் பின்பற்று கிறோம். அண்ணா வகுத்தப் பாதையில் அயராது உழைக் கிறோம். அண்ணாவினுடைய முப்பெரும் சாதனைகள் என்றைக்கும் நிரந்தரமானவை. அதற்கு எடுத்துக் காட்டாக, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில்கூட, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக் கின்ற அணியை வெற்றி பெறச் செய்வதன் மூலமாகத் தான், அண்ணாவுக்குச் சிறப்பான ஒரு பெருமையை நாம் உண்டாக்குகின்றோம் என்று அர்த்தம்.

அண்ணா வகுத்த பாதையினுடைய தனிச் சிறப்பு!

அண்ணா உருவாக்கிய கட்டடம் மணல் மேடு அல்ல. அது கற்பாறை, தொடரும். அதுதான் அண்ணா வகுத்த பாதையினுடைய தனிச் சிறப்பு. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அதை நிரூபிக்கும். அதை உலகத்திற்கு அறிவிக்கும்.

செய்தியாளர்: ஒரு பக்கம் நட்சத்திரங்கள் தொடங்கி இருக்கக்கூடிய புதிய கட்சி; இன்னொரு பக்கம் வலிமையான வலதுசாரி கூட்டமைப்பு – இன்றைய காலகட்டத்திற்கு தமிழ்நாட்டில் என்ன மாதிரியான ஓர் அரசியல் தேவைப்படுகிறது? என்ன மாதிரியான நிலைப்பாடு மக்களிடம் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: தேர்தல் முடிந்தவுடன், வலது – ‘‘சாரி’’ என்று சொல்வார்கள்.

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

-விடுதலை நாளேடு, 3.2.26

திங்கள், 22 செப்டம்பர், 2025

நடிகவேள் எம்.ஆர். இராதா மனைவி கீதா மறைவு : தமிழர் தலைவர் மரியாதை

நடிகவேள் எம்.ஆர். இராதா மனைவி கீதா மறைவு : தமிழர் தலைவர் மரியாதை


செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலுவின் வாழ்விணையர் மறைவு : தமிழர் தலைவர் இறுதி மரியாதை



திராவிடர் கழகம்

தி.மு.க. பொருளாளர் டி. ஆர்.பாலு அவர்களின்  வாழ்விணையர்  –  தொழில்துறை அமைச்சர்
டி.ஆர்.பி. ராஜா அவர்களின் தாயார் பா. ரேணுகாதேவி அவர்கள் இன்று (19.8.2025) மறைவுற்றார் என்பதற்கு வருந்துகிறோம். கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்கள் அம்மையாரின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.  டி.ஆர். பாலு அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இரங்கலும், ஆறுதலும்  தெரிவித்தார்.

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்,  தாம்பரம் மாவட்டக் கழகத்  தலைவர் ப.முத்தையன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, தாராசுரம் வை .இளங்கோவன், பொறியாளர் கரிகாலன், தோழர்கள் சூளைமேடு இராமச்சந்திரன், கோவி.ராகவன், பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு. மோகன்ராஜ்,  ராமு, அரும்பாக்கம் சா.தாமோதரன், த. மரகதமணி, உடுமலை வடிவேல், பூவரசன், கணேசன், புகழேந்தி ஆகியோர் கழகத்தலைவருடன் சென்று மரியாதை செலுத்தினர். (சென்னை – 19.8.2025)

- விடுதலை நாளேடு, 19.08.25


வியாழன், 7 ஆகஸ்ட், 2025

முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்தில் கழகத் தலைவர் தலைமையில் கழகத் தோழர்கள் புடைசூழ மரியாதை (சென்னை, 7.8.2025)


திராவிடர் கழகம்

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள்: நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2025) கலைஞரின் நினைவிடத்தில், மருத்துவப் பயனாளியாக பயன்பெற்றுத் திரும்பிய நிலையில், முதன்முதலாக தோழர்கள் புடைசூழ மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஒரத்தநாடு இரா.குணசேகரன்,
ஊமை.ஜெயராமன், வி.பன்னீர்செல்வம் மற்றும் தோழர்கள் உள்ளனர்.

முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு நாள் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை

சென்னை, ஆக.7 முத்தமிழறிஞர் கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முத்தமிழறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2025) காலை 10 மணியளவில் சென்னை கடற்கரை  காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், மருத்துவப் பயனாளியாகப் பயன் பெற்றுத் திரும்பிய நிலையில், முதன் முதலான நிகழ்ச்சியாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பெருந்திரளான கழகத் தோழர்களுடன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், பொருளாளர் வீ. குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி,, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உரத்தநாடு இரா. குணசேகரன், ஊமை ஜெயராமன், வி. பன்னீர்செல்வம், துணைப் ெபாதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில தொழிலாளரணி செயலாளர் திருச்சி மு.சேகர், கலைஞர் அவர்களின் சிறப்பு உதவியாளர் முத்துவாவாசி, மல்லை சத்யா,  மாநில கிராமப்புற பிரச்சார செயலாளர் முனைவர் க. அன்பழகன். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ. கோபால், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ. சுரேசு, மாநில மகளிரணி துணைச் செயலாளர் க. இறைவி, மாநில விளையாட்டு அணி அமைப்பாளர் ம. பூவரசன்,  சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜு, துணைத் தலைவர் சு. இமயவரம்பன், மகளிரணி செயலாளர் வாசந்தி,  தஞ்சை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நெல்லுப்பட்டு அ. இராமலிங்கம், உரத்தநாடு தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் லெனின், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், அரும்பாக்கம் சா. தாமோதரன், அய்ஸ்அவுஸ் அ. அன்பு எம். ரங்கநாதன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப. முத்தையன், தொழிலாளரணித் தலைவர் மா. குணசேகரன், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்ட காப்பாளர் கி. இராமலிங்கம், துணைத் தலைவர் நா. பார்த்திபன், பொதுக் குழு உறுப்பினர்கள் தி.செ. கணேசன், தங்க.தனலட்சுமி, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் த. மரகதமணி,  மாணவர் கழகத் தலைவர் ச.சஞ்சய், தொழிலாளரணித் தலைவர் ஆ.துரைராவணன்,  கொடுங்கையூர் கழகத் தலைவர் கோ. தங்கமணி, செம்பியம் கழகத் தலைவர் ப. கோபாலகிருட்டிணன், பூம்புகார் நகர் கழக அமைப்பாளர் ச. இராசேந்திரன், கண்ணதாசன் நகர் கழக அமைப்பாளர் க. துரை, அண்ணாநகர் ப.சேரலாதன், மகளிரணி கோ. அன்புமணி, திருவொற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு. மோகன், செயலாளர் ந. இராசேந்திரன், ஜீவானந்த் மனோகரன், நெய்வேலி வெ. ஞானசேகரன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே. பாண்டு, பொதுக்குழு உறுப்பினர்கள் பி.சி. ஜெயராமன், கலைச்செல்வன், ஆவடி மாவட்ட செயலாளர் க. இளவரசன், துணைச் செயலாளர் பூவை. க. தமிழ்ச்செல்வன், உடுமலை வடிவேல், ஆவடி நகர துணைத் தலைவர் வஜ்ஜரவேலு, பூவை பகுதி தலைவர் க.ச. பெரியார் மாணாக்கன், க. கலைமணி, ஆளந்தன், மகேஷ் கணேசன், முகப்பேர் தி. முரளி, அயப்பாக்கம் அரிகிருஷ்ணன், திருநின்றவூர் இராசேந்திரன், மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் கலைஞர் நினைவிடத்திற்கு வந்திருந்து மரியாதை செலுத்தினர்.

- விடுதலை நாளேடு,7.8.2025

திங்கள், 21 அக்டோபர், 2024

தேவநேய பாவாணர் மகனின் உடலுக்கு மரியாதை ஆசிரியரின் இரங்கல் அறிக்கை வழங்கப்பட்டது


விடுதலை நாளேடு
Published October 21, 2024

திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் அருமை மகன் மணிமன்றவாணன் மறைவையொட்டி, மேற்கு கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள தேவநேயப் பாவாணர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தென் சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் மலர் மாலை வைத்து கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையை அவரது இணையர் மற்றும் மகனிடம் வழங்கி ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாநில இளைஞரணித் துணைச்செயலாளர்கள் சோ.சுரேஷ், மு.சண்முகப்பிரியன், தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன், எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த கரு.அண்ணாமலை, தென் சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ந.மணிதுரை, பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் பொருளாளர் ஜனார்த்தனன், மயிலாப்பூர் பெரியார் யுவராஜ், எம்ஜிஆர் நகர் தோழர்கள் மணி மொழியன், தம்பி, டெய்லர் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
(20.10.2024,பி.ப.1.30மணி)