கல்வி வள்ளல் காமராசரின் 120 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2022) சென்னை சிம்சன் (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், கழக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், கழக மாநில வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், அமைப்புச் செயலாளர் தருமபுரி ஊமை.ஜெயராமன், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூர்பாண்டியன், மற்றும் பொறுப்பாளர்கள், தோழர்கள்.
---------+++++++------+++++++----+++++--------கல்வி வள்ளல் காமராசர் 120ஆம் ஆண்டு பிறந்தநாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, ஜூலை 15 கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 120ஆம் ஆண்டு பிறந்தநாளான இன்று (15.7.2022 காலை 9 மணியளவில் சென்னை அண்ணாசாலை, பெரியார் பாலம் அருகில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்தும், காமராசரின் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர், வீ.குமசேரன், கழக மாநில வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை ஜெயராமன், மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், அமைப்பாளர் செந்தூரபாண்டியன், சென்னை மண்டல செயலாளர் தே.செ. கோபால், வடசென்னை மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன் செயலாளர் தி.செ.கணேசன், பெரியார் நூலக வாசகர் வட்டம் செல்லப்பன், நா.பார்த்திபன், அ.வெ.முரளி, சி.வெற்றிச்செல்வி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, க.சுமதி, நித்யா
தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு.சண்முகப்பிரியன், தென்சென்னை இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன், செயலாளர் ந.மணிதுரை, கோடம்பாக்கம் ச.மாரியப்பன், பி.டி.சி.இரோஜந்திரன், செவ்வியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், கே.ராஜேந்திரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக