ஞாயிறு, 17 ஜூலை, 2022

பேராசிரியர் மு. நாகநாதன் நூல்கள்: தமிழர் தலைவர் வெளியிட்டார்


சென்னை லயோலா கல்லூரியில்  பேராசிரியர் மு. நாகநாதன் எழுதிய  "வளர்ச்சியா? வீழ்ச்சியா?",  "பொறிகள்",  "Dravidian Political Economy" ஆகிய முன்று நூல்களை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  வெளியிட்டார். இவ்விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி அரிபரந்தாமன், இந்தியக் கடல்சார் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கே.அசோக் வரதன் ஷெட்டி (இ.ஆ.ப. ஓய்வு), சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர்  முனைவர் இராமு. மணிவண்ணன் மற்றும் லயோலா கல்லூரியின் சமூக அறிவியல் மய்யத்தின் இயக்குநர் பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி ஆகியோர் பங்கேற்றனர். (9.7.2022)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக