திங்கள், 30 மார்ச், 2026

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் ‘அஞ்சா நெஞ்சன் அழகிரியின் 77 ஆவது நினைவு நாள் மற்றும் ‘ஏன் திமுக ஆட்சி மீண்டும் வரவேண்டும்?’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் பரப்பரை பொதுக்கூட்டம்

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டம்
திராவிடர் கழகம்

சென்னை, மார்ச் 30– தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:

மயிலாப்பூர் – தென் சென்னை

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் ‘அஞ்சா நெஞ்சன் அழகிரியின் 77 ஆவது நினைவு நாள் மற்றும் ‘ஏன் திமுக ஆட்சி மீண்டும் வரவேண்டும்?’ என்ற தலைப்பில் மாபெரும் பரப்பரை பொதுக்கூட்டம்  28.03.2026 மாலை 6:00 மணி அளவில் நடைபெற்றது.

திராவிடர் கழகம்

தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் டி .ஆர். சேதுராமன் தலைமை யேற்றார்.  தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்புரை ஆற்றினார். தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தொடக்க உரையாற்றினார்.

கோ.வீ.ராகவன் (பொதுக்குழு உறுப்பினர்), ந.மணிதுரை (மாவட்ட இளைஞரணித் தலைவர்), பெரியார் யுவராஜ் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்), ச. மகேந்திரன் (இளைஞர் அணி துணைத் தலைவர்) ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் வீ.கே.ஆர். பெரியர் செல்வி, முருகன் (விசிக), பி.சாரநாத் (விசிக), எஸ்.கே.சிவா (சி.பி.அய்), எஸ்.குமார் (சி.பி.அய்.எம்) ஆகியோர் உரையாற்றினர்.

திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் வீ. அன்புராஜ் சிறப்புரை ஆற்றினார்கள்.

முன்னதாக அறிவுமானனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலை சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு அவர்கள் நிகழ்ச்சியின் இறுதியில் வருகை தந்து வேட்பாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு உரையாற்றினார்.

அவருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் பயனாடை அணிவிக்கப்பட்டது.

கழக பொதுச் செயலாளர்
வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்து பாராட்டினார். பிறகு தோழமைக் கட்சி தோழர்கள் பயனாடை அணிவித்து பாராட்டினர்.

எஸ்.முரளி (மயிலாப்பூர் கிழக்கு பகுதி செயலாளர்,திமுக), அ.தவநேசன் (திமுக, 125ஆவது வட்டச் செயலாளர்), அ.ரேவதி (125ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர், திமுக) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

கழகத் தோழர்களான அ.அன்பு (துணைத் தலைவர், மாவட்ட இளைஞரணி), வி. வளர்மதி (தலைவர், மகளிர் அணி), பி. அஜந்தா, வி. தங்கமணி, ஜெ. சொப்பன சுந்தரி, வி. சகானப் பிரியா, ஆர். கோமதி, வி.நிலா, கு.ரேவதி, ச. மாரியப்பன், அ.அன்பு, திருவல்லிக்கேணி அப்துல்லா, ஈ. குமார், எம்.டி.சி. இராஜேந்திரன், தாம்பரம் சு.மோகன்ராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), க. தமிழ்ச்செல்வன் (துணைச் செயலாளர் ஆவடி மாவட்டம்), குன்றத்தூர் மு. திருமலை, சி.காமராஜ்,

கரு. அண்ணாமலை (மாவட்ட கழகத் தலைவர், மேற்கு சென்னை) க.சுப்பிரமணி (மாவட்ட செயலாளர், மேற்கு சென்னை), ம.தி. பெரியார் ஆதவன், ம.தி. பெரியார் இனியன், தர்மா ஆகியோரும்;


தோழமைக் கட்சியினரான எஸ். வெங்கடேசன் (124ஆவது வட்டப் பகுதி பிரதிநிதி), வி. விஜய் வெங்கடேசன் (மாவட்ட செயலாளர், திமுக இலக்கிய அணி), மயிலை தீபன் (பகுதி இளைஞரணி துணைச் செயலாளர்), எம்.புகழேந்தி (125 வது வட்டம்), ஆர்.‌‌சிறீ. செல்வி, கே. கலையரசி (திமுக 125 ஆவது வட்ட துணைச் செயலாளர்), அகல்யா (திமுக பகுதி துணைச் செயலாளர்), குமாரி மாவட்ட கிழக்கு பகுதி துணைச் செயலாளர்), கோ. கண்ணன் (126 ஆவது வட்ட திமுக), மா.பா. அன்பு (124(அ)வட்டப் பொறுப்பாளர், திமுக), தலித் கமல் (மாவட்டத் துணைச் செயலாளர்), சூ.க.சார்லஸ் (மாவட்டத் துணைச் செயலாளர்),கே. மணிகண்டன், சீமென்.கோ.அன்பு, ஜி. இராமச்சந்திரன்( விசிக, 121ஆவது வட்ட செயலாளர்), ஆ.க. எழிலன் (மாவட்டத் துணைச் செயலாளர், விசிக), ப. சரவணன், ந. வீர பெருமாள், இரா. தேன் (விசிக), எஸ். பாலாஜி (விசிக), பிரசன்ன குமார் மற்றும் பெருவாரியான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


- விடுதலை நாளேடு, 30.03.2026



வியாழன், 19 மார்ச், 2026

தொல்லியல் ஆய்வாளர் சர் ஜான் மார்ஷலின் 150 ஆவது பிறந்த நாள்: தமிழர் தலைவர் ஆசிரியர் மலர்தூவி மரியாதை

திராவிடர் கழகம்

சர்.ஜான் மார்ஷல் 150ஆம் பிறந்த நாள் : சிலைக்கு மாலை அணிவித்தபின் தமிழர் தலைவர் பேட்டி


அகழ்வாய்வு நடந்தால் மட்டும் போதாது,
கீழடி அறிக்கையையும் வெளியிட வேண்டும்!
இதுதான் எங்களது கோரிக்கை – அதற்காக திராவிடர் கழகம் போராட்டம் நடத்தவும் தயார்!

திராவிடர் கழகம்

சென்னை, மார்ச் 19  அகழ்வாய்வு நடந்தால் மட்டும் போதாது, கீழடி அறிக்கையையும் வெளியிட வேண்டும்.  இல்லை யென்றால், அதற்காக திராவிடர் கழகம் போராட்டம் நடத்தவும் தயார் என்று செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

இன்று (19.3.2026) தொல்பொருள் ஆராய்ச்சியாளர்  சர்.ஜான் மார்ஷலின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாளாகும். சென்னை எழும்பூரில் உள்ள அருங்கட்சியகம் முன்பு அமைந்துள்ள அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

சர். ஜான் மார்ஷல் பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக  வந்து,  சிறப்பாக தொல் பொருள் ஆய்வை மேற்கொண்ட நேரத்திலே, இந்த நாகரிகம் என்பது திராவிட நாகரிகம் என்பதை தன்னுடைய ஆய்வுத் திறத்தால் நிறுவினார். ‘வேதகால நாகரிகத்தை விட அதற்கும்  முன்பு ஏற்பட்ட பழம்பெரும் நாகரிகம் திராவிட நாகரிகம்.  ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்றவற்றில் இருந்த கட்டுமானங்களும், கழிவுநீர் வடிகால் வசதிகளும் சிறந்ததொரு நாகரிகம் என்பதற்கு முதன்மையான சான்றுகளாகக் கிடைக்கின்றன’ என்று சொன்ன சர்.ஜான் மார்ஷல் அவர்களின் 150 ஆம் பிறந்த நாள் இன்று.

‘திராவிட மாடல்’ ஆட்சியில்
சர்.ஜான் மார்ஷலுக்குச் சிலை திறப்பு!

‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய ஒப்பற்ற நம்முடைய முதலமைச்சரான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று பெருமையோடு உச்சரிக்கக் கூடிய ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் அவர்கள், அவருக்கென்று இங்கே சிலை எடுத்தார்கள்.  இலக்கியவாதிகளும் சிலை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். தொல்பொருள் ஆய்வாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் வற்புறுத்திய நிலையில், அதற்கு அறிவிப்பு கொடுத்தது மட்டுமல்ல, ‘சொன்னதைச் செய்வோம்’ என்று மிகத் தெளிவாக காட்டக்கூடிய வகையில் இந்த சிலையையும் கடந்த ஆண்டு திறந்தார்கள். அது பாராட்டி வரவேற்கக் கூடிய ஒன்றாகும்.

அதுமட்டுமல்லாமல், இரண்டு நாட்களுக்கு முன்னால், ‘திராவிட மாடல்’ ஆட்சி தொடர்ந்து போராடிக் கொண்டிருந்த அடிப்படையிலான ஒரு செய்தி – கீழடி நாகரிகம் என்பது திராவிட நாகரிகத்திற்கு உடன்பாடானது மட்டுமல்ல, அதற்கும் மூத்தது என்று தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். அந்த நாகரிகத்தினுடைய அறிக்கைகள், அதற்குரிய தரவுகள் ஆகியவற்றை வெளியிடக்கூடாது என்று ஒன்றிய அரசு, ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. மோடி அரசு, திட்டமிட்டு அதை வெளியிடாமலேயே வைத்திருக்கிறார்கள்.

அந்த ஆய்வில் ஈடுபாடோடு இருக்கக்கூடிய அதிகாரிகளையும் தொல்லை கொடுத்து மாற்றி இருக்கின்ற நேரத்திலே, 8 இடங்களில் மேலும் அகழ்வாய்வு செய்வதற்கு அனுமதி தராமல் மறுத்து வைத்திருந்தார்கள். தொடர்ந்து முதலமைச்சருடைய போராட்டத்தினாலே அதற்கு அனுமதி கொடுத்து, அதனை நேற்று (18.3.2026) முதலமைச்சர் தெளிவாக்கி இருக்கிறார். 8 அகழ்வாராய்ச்சிகள் நடந்தால் மட்டும் போதாது. கீழடி அறிக்கையும் வெளியிடப்பட வேண்டும் என்பதை முதலமைச்சர் வலியுறுத்தி இருக்கிறார்கள். சர்.ஜான் மார்ஷல் அவர்களுடைய 150 ஆம் பிறந்தநாள் விழாவிலே, இதுதான் எங்களுடைய கோரிக்கையாக மட்டுமல்ல, அடுத்த போராட்டமாகவும் இருக்கும்.

– இவ்வாறு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கலந்து கொண்டோர்

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ், கழக மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தையன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைத் தலைவர் மயிலை சேதுராமன், அன்பு, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வட சென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்டச் செயலாளர் புரசை
சு. அன்புச்செல்வன், சோழிங்கநல்லூர் மாவட்ட காப்பாளர் ஆர்.டி. வீரபத்திரன், மாவட்டத் தலைவர் வேலூர்  பாண்டு, செயலாளர் தமிழினியன், கொடுங்கையூர் கோ. தங்கமணி, தங்க தனலட்சுமி, அரும்பாக்கம் சா.தாமோதரன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், ஜனார்த்தனன், செல்லப்பன்,மாணிக்கம், இளவரசி, பூங்குழலி, அருள், உத்ரா, யுகேஷ், பூவை தமிழ்செல்வன், மகேந்திரன், தன்ராஜ், பெரியார் பிஞ்சுகள் திராவிட எழில்,யாழ் தமிழ், பெரியார் சம்பத், உடுமலை வடிவேல், பா. சிவக்குமார், புகழேந்தி, ச.விஜய், மதுரவாயல் தமிழ்ச்செல்வன், பிரகாஷ், க. கலைமணி, கணேசன், டெய்சன், அசோக்குமார் உள்ளிட்ட பெருந்திரளான தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

- விடுதலை நாளேடு, 19.03.26

புதன், 18 மார்ச், 2026

அன்னை மணியம்மையார் 48ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை


திராவிடர் கழகம்

சென்னை, மார்ச் 16- தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் 48ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (16.3.2026) காலை, அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் மலர் வளையம் வைத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் வாழவைத்த தொண்டறத்தாய் அன்னை மணியம்மையாரின் 48ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (16.3.2026) காலை 10.30 மணியளவில் சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு கழகத் தோழர் – தோழியர்கள் பெருந்திரளாக சென்று மலர் மாலை அணிவிக் கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, தந்தை பெரியார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவுத் தூண் ஆகிய இடங்களில் மலர் வளையம் வைக்கப்பட்டது. பின்னர் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது

அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிட தொழிலாளரணி, பெரியார் மருத்துவமனை, திராவிடன் நிதி, பெரியார் நூலகர் வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல், பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், ஆடிட்டர் ஆர்.இராமச்சந்திரன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், நெய்வேலி ஞானசேகரன், மருத்துவர் டாக்டர் தர்ஷினி ஆனந்து, சி.வெற்றிச்செல்வி, பேராசிரியர் க.பெரியார் செல்வி, பொறியாளர் ச.இன்பக்கனி தங்க.தனலட்சுமி, பசும்பொன் செந்தில்குமாரி, இளவரசி, உமா, பூவை செல்வி, மு.செல்வி, வி.வளர்மதி, க.சுமதி, க.வெண்ணிலா, இளவேனில், பூங்குழலி, உத்ரா, வாணி, தேவி, விசாலாட்சி, வெண்ணிலா கதிரவன், க.அழகுமணி, வளர்மதி, மோகனப்பிரியா, பிரசீனா, அன்புமணி, மரகத மணி, ஆதிலட்சுமி, கலைவாணி, பெரியார் பிஞ்சு அதிரா.

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் மயிலை சேதுராமன், ஆயிரம் விளக்கு சேகர், காரைக்குடி பிராட்லா, மயிலாடுதுறை கி.தளபதிராஜ், வழக்குரைஞர் துரை அருண், தொழிலாளரணி செல்வராஜ், ஜனார்த்தனம், பெரியார் மாணாக்கன், சி.காமராஜ், எண்ணூர் மோகன், நங்கநல்லூர் தமிழினியன், கலைமணி, ஆனந்த், அசோக், டெய்சன், ராமு மற்றும் திரளான கழகத் தோழர்கள், பெரியார் திடல் பணித் தோழர்கள் அனைவரும் பங்கேற்று மரியாதை செலுத் தினர்.


தமிழர் தலைவர் தலைமையில், அன்னை மணியம்மையாரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து சூளுரை!



அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரின் 48 ஆவது நினைவு நாள் இன்று!
பிரியா விடை கொடுத்தோம் – அன்று; பிரியாமலேயே
நம்மை வழிநடத்தும் உணர்வாக உள்ளார் இன்றும்!

அன்னை மணியம்மையாருக்குப் பிரியா விடை கொடுத்தோம் – அன்று; பிரியாமலேயே நம்மை வழிநடத்தும் உணர்வாக உள்ளார் இன்றும்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரின் 48 ஆவது நினைவு நாள் இன்று (16.3.2026).

நினைவு நாள் என்பது
ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள்!

இந்நாளில்தான் நாம் அனைவரும் அன்னை அவர்களை நினைவு கூர்கிறோம்; தொண்டறத்தாயின் ஒப்பில்லாத் தொண்டினைப் பாராட்டிப் பெருமிதம் கொள்கிறோம் என்பது மட்டுமல்ல.

அவர்களை என்றும் நாம் மறந்தோமில்லை; இன்று மட்டும் நினைவு என்பதற்கு! இந்நாள் – நினைவு நாள் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள், அவ்வளவே!

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் என்ற பேரி யக்கத்தைத், தன்னுடைய ஈடற்ற தொண்டால், தொய்வில்லாப் பணியால் 95 ஆண்டு வாழ வைத்த அரும்பெரும் தன்னல மறுப்பாளர் அருமை அன்னையார்!

தொண்டறம் –

மிக எளிய வாழ்வு இவைதான் அன்னையார்!

கைவிடப்பட்ட குழந்தைகளுக்குத் தாயாகி, தாலாட்டி, வளர்த்து வாழ்வளித்துக் காப்பாற்றி, இறக்கைகள் முளைக்கும் வரை பாதுகாத்து வளர்த்த தாய்ப்பறவை அவர்!

ஆசிரியர் அறிக்கை

பொதுத் தொண்டுக்கான பாடநூல் ஆசிரியர் அவர் – இன்றும், என்றும்!

மானுடம் என்பது ஒரு சுயநல வட்டம் அல்ல; எல்லையற்ற (மானிட) பெரும் நெஞ்சுரம் கொண்ட வர்களைக் களப் போராளிகளாக்கி, இலட்சியத்தை வென்றெடுத்து, அவனிக்குப் பொதுவாழ்வு – ‘‘பொதுத் தொண்டுக்கான பாடநூல் ஆசிரியராகத்’’ திகழ்பவர் அவர் – இன்றும், என்றும்! கூடுதலாக ‘விடுதலை’யின் அதிகாரப்பூர்வ ஆசிரியராகப் பல ஆண்டுகள் திகழ்ந்தவர்!

நம்மையெல்லாம் ‘நெருக்கடி காலம்’ என்ற ஓர் இருண்ட அடக்குமுறை காலத்திலும், கண்ணை இமை காப்பதைப்போல்  கழகத்தைக் காப்பாற்றிட, தனது நலவாழ்வைப் பற்றிக்கூட கவலைப்படாது, சுற்றிச் சுழன்று, பாதுகாப்புக் கவசமாய்த் திகழ்ந்தவர்.

வேலூர் தந்த வீராங்கனை அவர்!

பல்லாண்டு, பெரும் அவமானத்தையே வெகு மானமாகப் பெற்ற காலத்திலும்கூட, நிலைகுலையாமல், தலைதாழாமல் வென்றெடுத்த வேலூர் தந்த வீராங்கனை அவர்!

எல்லாவற்றையும் தாண்டி, தம்மிடம் இருந்த சொத்துகளை – நம் தந்தையைப்போல பொதுத் தொண்டுக்குரியதாக்கி, பொல்லாங்கு சொன்னவர்களை வெட்கித் தலைகுனிய வைத்து, பெரும் கொள்கைப் பிழம்பாய் வெளிச்சம் தந்த விடிவெள்ளி அவர்!

அதனால், வீட்டுக்குள் அடைபட்ட பெண்களின் மூளை விலங்கினை உடைத்து, முன்னேற, பல்கலைக் கழகமும், கல்லூரிகளும், அவர் பெயரில் வெளிச்சம் பாய்ச்சும் கல்விக் கலங்கரை விளக்கமாகி ஓளிவீசி நிற்கின்றன!

நம்மை வழிநடத்தும் உணர்வாக உள்ளார்!

பிரியா விடை கொடுத்தோம் – அன்று!

பிரியாமலேயே நம்மை வழிநடத்தும் உணர்வாக உள்ளார் இன்றும்! என்றும்!!

வாழ்க தொண்டறத்தாய்!

 கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை

16.3.2026

வெள்ளி, 13 மார்ச், 2026

அறிவு இல்லம்” அறிமுக விழா! பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்பு!

“அறிவு இல்லம், மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” – கல்வெட்டை திறந்து வைத்தார் கழகப் பொதுச் செயலாளர்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

சின்ன போரூரில், லெட்சுமி நகரில் ம.பழனிவேல்ராஜா, ப.தெய்வசிகாமணி (எ) கலா ஆகியோரால் புதிதாக கட்டப்பட்ட ‘அறிவு இல்ல’த்தை, நேற்று (12.03.2026) கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்தார். உடன்: கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், நெய்வேலி ஞானசேகரன், வி.சி. வில்வம், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (12.3.2026)

“அறிவு இல்லம்” அறிமுக விழா! பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்பு!

சென்னை, மார்ச் 13- சென்னை, சின்ன போரூரில், ம.பழனிவேல் ராஜா, ப.தெய்வசிகாமணி (எ) கலா ஆகியோரால் புதிதாக கட்டப்பட்ட அறிவு இல்லத்தை, 12.03.2026 அன்று கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்தார்.

“அறிவு இல்லம், மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” எனப் பொறிக்கப்பட்ட கல்வெட்டை வீ.அன்புராஜ் திறந்து வைத்தார். தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் அமைந்த வீடுகளை உறவினர்கள் மற்றும் கழகத் தோழர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.

வீ.அன்புராஜ் அவர்களுக்கு, பகுத்தறிவாளர் கழகப் பொறுப் பாளர்  ம.பழனிவேல்ராஜா, ப.கலா, தெ.ப.அறிவுச்செல்வி ஆகி யோர் பயனாடை அணிவித்து, ஆங்கில நூல்களை வழங்கி, பெரியார் உலகத்திற்கு ரூ 5 ஆயிரம் நன்கொடை வழங்கினர்.  விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும் தோழர்கள் அனைவருக்கும் பயனாடை அணி விக்கப்பட்டது.

உயர்கல்வி பயில ஜெர்மனி நாட் டிற்குச் செல்லும் அறிவுச்செல்விக்கு, பயனாடை அணிவித்து வாழ்த்து களைத் தெரிவித்தார் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்.

சின்ன போரூர் பகுதியில் புதிதாக வீடு கட்டிச் சென்றாலும் மாநில ஒருங்கிணைப்பாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், சென்னை யின் அனைத்து மாவட்டத் தலை வர்கள், செயலாளர்கள், போரூர் பகுதியின் சுற்றுவட்டாரக் கழகத் தோழர்கள் எனப் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, கொள்கைபூர்மான நிகழ்வாக நடத்தப்பட்டது. கழகத்திற்குப் புதிய பகுதியாக இருந்தாலும், தெருக்கள் தோறும் கழகக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.


புதிய இல்ல அறிமுக விழாவில் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் மதுரை வே.செல்வம், வழக்குரைஞர் சு.குமாரதேவன், சென்னை 151 ஆவது பகுதி மாமன்ற உறுப்பினர் ச.சங்கர்கணேஷ், கியூபா கன்ஸ்ட்ரக்சன்ஸ் க.புனிதா, வி.சி.வில்வம், பு.வி.கியூபா, சென்னை மேற்கு மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் கரு.அண்ணாமலை, மாவட்டச் செயலாளர் ராமாபுரம் க.சுப்பிரமணி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, ஆவடி மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன், ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதுரை ஒளிப்படக் கலைஞர் ராதா, ஓ.இராமச்சந்திரன், பெரியார் நூலக வாசகர் வட்டப் பொறுப்பாளர் ஜெ.ஜனார்த்தனன், நெய்வேலி ஞானசேகரன், தமிழ்ச்செல்வன், வெங்கடேசன், தமிழ்மணி, வேலுச்சாமி, உடுமலை வடிவேல், அருள், ரேவந்த் குமார், உத்ரா சுப்பிரமணி, தாமோதரன், பெரியார் மணிமொழியன், ஜெயசீலன், கண்ணன், மூவேந்தன், மணிபாரதி, குன்றத்தூர் மு.திருமலை, சுரேஷ், கண்ணதாசன், பட்டூர் வெங்கடேசன், சன் சரவணன், சிலம்பம் சிவாஜி, டைசன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். இயக்க விழாவாக மூடநம்பிக்கை சடங்கு சம்பிரதாயங்கள் இல்லாமல் சிறப்புடன் நடைபெற்றது.

- விடுதலை நாளேடு, 13.03.2026

செவ்வாய், 10 மார்ச், 2026

அன்னை மணியம்மையாரின் 107-ஆவது பிறந்த நாள் சிலைக்கு மாலை – நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை கழக துணைத் தலைவர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!



திராவிடர் கழகம்

சென்னை, மார்ச் 10- தொண்டறத்தாய் அன்னை மணியம்மையாரின் 107ஆவது பிறந்த நாளான இன்று (10.3.2026) காலை 10 மணியளவில் சென்னை பெரியார் திடலில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

முன்னதாக சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மகளிரணியினர் ஊர்வலமாகச் சென்று மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, தந்தை பெரியார் நினைவிடம், அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளி தூண் ஆகிய இடங்களில் கழகத் தோழர்கள் மலர் வளையம் வைத்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திராவிடர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிட தொழிலாளர் கழகம், திராவிடன் நலநிதி, பெரியார் மருத்துவமனை, பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யம், பெரியார் நூலக வாசகர் வட்டம் ஆகியவற்றின் சார்பில் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வீ.பன்னீர்செல்வம், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் ச.குமாரதேவன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், வழக்குரைஞர் துரை.அருண், திராவிடன் நலநிதி தலைவர் ப.சீத்தாராமன், விடுதலை அச்சக மேலாளர் சரவணன்.

மகளிரணி

பெரியார் மருத்துவமனையின் மருத்துவர் தர்சினி ஆனந்த், சி.வெற்றிச்செல்வி, பொறியாளர் ச.இன்பக்கனி, பேராசிரியர் பெரியார் செல்வி, பசும்பொன் செந்தில்குமாரி, உமா செல்வராசு, தங்க.தனலட்சுமி, மு.செல்வி, மு.செல்விமுரளி, நூர்ஜகான், மதனராணி, பூங்குழலி, வளர்மதி, மனோகரி, இளவரசி, கற்பகம், மரகதமணி, க.வெண்ணிலா, மீனாம்பாள், க.சுமதி, மோகனப்பிரியா, விசாலாட்சி, வாணி, தேவி, இந்திரா, இளவேனில், உத்ரா, சாந்தி, சண்முகலட்சுமி, பெரியார் பிஞ்சுகள் ஆதிரை, அதிரன், பெரியார் மருத்துவமனை செவிலியர் சந்தியா.

தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் ப.முத்தையன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி,  சென்னை  மேற்கு மாவட்டத் தலைவர் கரு.அண்ணாமலை, செயலாளர் சுப்பிரமணியன், மயிலை சேதுராமன், அரும்பாக்கம் தாமோதரன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், தமிழினியன், வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை ச.அன்புச்செல்வன், தொழிலாளரணி, செல்வராசு, இராமலிங்கம் மற்றும் சி.சித்தார்த்தன், சி.காமராஜ், கண்ணன், மகேஷ், டெய்சன், கலைமணி விஜய், பெரு.இளங்கோ, பொறியாளர் சிங்காரவேலன், ரங்கநாதன், ஜான்சன், கோ.தங்கமணி, முரளி, இளவரசு, தமிழ்செல்வன், முகப்பேர் முரளி, ஜனார்த்தனம், பெரியார் திடல் பணிமனைத் தோழர்கள் மற்றும் திரளான கழகத் தோழர் – தோழியர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

அன்னை மணியம்மையார் 107ஆம் ஆண்டு பிறந்த நாள் : நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை

-விடுதலை நாளேடு, 10.03.2026

ஞாயிறு, 8 மார்ச், 2026

சோ.சுரேஷ் – மு.பவானி இணையேற்பு விழா : தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்


திராவிடர் கழகம்
மதுரை கோ.புதூர் பரசுராமன்பட்டி வ.சோமு – சோ.புஷ்பம் ஆகியோரின் மகன் சோ சுரேஷ் – சென்னை மயிலாப்பூர் நொச்சி நகர் நினைவில் வாழும் ர.முத்து – மு.குணசுந்தரி ஆகியோரின் மகள் மு.பவானி இருவரின் இணையேற்பு விழாவை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: மோகனா வீரமணி, ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார், பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மதுரை மாவட்டத் தலைவர் முருகானந்தம், செயலாளர் சுரேஷ், தென் சென்னை மாவட்டத் தலைவர் வில்வநாதன் மற்றும் இரு இல்லத்தார். (மதுரை கோ.புதூர் சிறீ ராதா லட்சுமி பேலஸ், 8.3.2026)

-விடுதலை நாளேடு,8.3.2026

https://www.youtube.com/live/HuwC6FJ7Z7c?si=sr7h-hho-vbnC3n4

வியாழன், 5 மார்ச், 2026

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சியைக் கண்டித்து சமூகநீதிக்கான பெரும் போராட்டத்தில் பங்கேற்றோர்




சென்னை, மார்ச் 5– ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. ஆட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறித்து அதிகாரப் பதவிகளை உயர்ஜாதியினரின் ஏகபோகமாக்கும் அநீதியைக் கண்டித்து 3.3.2026 அன்று சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் விவரம் வருமாறு:-

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், மாநில கழக மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில கழக கிராமப்புற பிரச்சார செயலாளர் முனைவர் அதிரடி அன்பழகன், துணைப் பொதுச் செயலாளர்கள் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், பொறியாளர் ச.இன்பக்கனி, மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்கள் செ.பெ.தொண்டறம், பொறியாளர் தேவ.நர்மதா..

வடசென்னை

மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்ட கழகச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், காப்பாளர் கி.இராமலிங்கம், தி.செ.கணேசன், நா.பார்த்திபன், சி.பாசுகர், ப.கோபாலகிருஷ்ணன், அயன்புரம் துரைராசு, ஆ.பாஸ்கர், புரசை பாலா, இரா.எம்ரோஸ், ஓட்டேரி சேகர், பழ.சேரலாதன், வழக்குரைஞர் ஜெ.துரை, சி.காமராஜ், ஓ.இராமச்சந்திரன், சி.சித்தார்த்தன், வ.தமிழ்ச்செல்வன், அ.புகழேந்தி, பா.பார்த்திபன், சஞ்சய், பார்த்தீஸ்வரன், விஸ்வா, கோகுல், ச.விஜய், இரா.அருள், ம.பூவரசன், சி.முரளிகிருஷ்ணன்.

தென் சென்னை

மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட கழகச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி,கோ.வீ.ராகவன், மு.சண்முகப்பிரியன், இரா.மாரிமுத்து, ந.இராமச்சந்திரன், ச.மாரியப்பன், நுங்கம்பாக்கம் சஞ்சய், ச.ஆனந்தன், பா.இராசேந்திரன்,எம்..டி.சி, ச.மகேந்திரன், அ.அன்பு, எம்.ஆனந்தன், உதயசூரியன், எஸ்.அப்துல்லா, ச.சந்தோஷ், வே.சித்தார்த்தன்.

மேற்கு சென்னை

மாவட்ட கழகத் தலைவர் கரு.அண்ணாமலை, மாவட்டக் கழகச் செயலாளர் க.சுப்பிரமணியன், நெய்வேலி வெ.ஞானசேகரன், மு.ரா.மாணிக்கம், அரும்பாக்கம் தாமோதரன், ச.ஜனார்த்தனன், சு.ஜெயசீலன், ஈக்காட்டுத்தாங்கல் மு.சேகர், அருள், தம்பி சேகுவாரா, ஜான்.

தாம்பரம்

மாவட்டக் கழகத் தலைவர் ப.முத்தையன், மாவட்ட கழகச் செயலாளர் கோ.நாத்திகன், வழக்குரைஞர் ஆர்.உத்திரகுமாரன், சு.மோகன்ராஜ், கருப்பையா, குணசேகரன், சன் சரவணன், இர.சிவசாமி, கார்த்திக், பழனிசாமி, மதியழகன், தனசேகரன், ராமண்ணா, ஆறுமுகம், பாலமுரளி, ஆதித்யா.

ஆவடி

மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன், மாவட்டக் கழகச் செயலாளர் க.இளவரசன், ரகுபதி, பூவை.தமிழ்ச்செல்வன், கோ.முருகன் இ.தமிழ்மணி, வேல் முருகன், பெரியார் மாணாக்கன், சுந்தர்ராஜ், சு.வெங்கடேசன், இனியன், நன்னன், சேத்பட் நாகராஜ், சதீஷ், கண்ணன், முகபேர் முரளி, தங்க ரவி, அ.சரவணன், பாசறை கோபால், பட்டரவாக்கம் ரவிச்சந்திரன், ஆ.வெ.நடராசன், முத்துகிருஷ்ணன், உடுமலை வடிவேல், வேல்சாமி, இரணியன், பன்னீர்செல்வம், சி.வச்சிரவேல், ஆதிரன், அண்ணாதுரை.

கும்மிடிப்பூண்டி

மாவட்ட கழகத் தலைவர் புழல் ஆனந்தன், வடகரை ஜெகத் விசயகுமார், வடகரை உதயக்குமார், பொன்னேரி அருள், சக்கரவர்த்தி, கஜேந்திரன், பெரியபாளையம் ஆகாஸ், அருணகிரி, செல்வராஜ், க.ச.க.இரணியன்.

சோழிங்கநல்லூர்

மாவட்ட கழகத் தலைவர் வேலூர் பாண்டு, மாவட்ட கழக செயலாளர் நங்கநல்லூர் தமிழினியன், காப்பாளர் இரா.தே.வீரபத்திரன், பி.சி.ஜெயராமன, நித்தியானந்தன்.

திருவொற்றியூர்

மாவடட கழகத் தலைவர் வெ.மு.மோகன், மாவட்ட கழகச் செயலாளர் ந.இராசேந்திரன், மா.சேகர், கோ.தங்கமணி, சி.வாசு.

மகளிரணி

சி.வெற்றிச்செல்வி, வி.கே.ஆர்.பெரியார்செல்வி, பசும்பொன், தங்க.தனலட்சுமி, பூவை செல்வி, வி.வளர்மதி, பி.அஜந்தா, த.மரகதமணி, நர்மதா, அறிவுமதி, சி.மெர்சி ஆஞ்சலாமேரி, சி.அமலசுந்திரி, வி.கே.மகிழினி, அன்புச்செல்வி, கீதா ராமதுரை, சுகந்தி தமிழ்மணி, எல்லம்மாள், தேன்மொழி, வள்ளி, முகபேர் செல்வி, இனியன், நாகவள்ளி, அருணா, மீனாம்பாள், நன்னன், புஷ்பா பன்னீர்செல்வம், நந்தினி அண்ணாதுரை, நதியா, வெண்ணிலா, த.இளவரசி, யாழ் தமிழ், திராவிட எழில்,  வெண்ணிலா, ராணி ரகுபதி (ஆவடி) ஆகியோர் பங்கேற்றனர்.

 - விடுதலை நாளேடு, 5.3.2

போராட்டத்தில் தென் சென்னை மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்டோர் பட்டியல்

1.இரா.வில்வநாதன், (மாவட்ட தலைவர்)

2.செ.ர.பார்த்தசாரதி ,(மாவட்ட செயலாளர்)

3.கோ.வீ.ராகவன்(பொதுக்குழு உறுப்பினர்),

4.மு.சண்முகப்பிரின் (துணைத்தலைவர்)

5.இரா.மாரிமுத்து(இளைஞர் அணி துணைச் செயலாளர்)

6.ந.இராமச்சந்திரன்,

7.ச.மாரியப்பன்

8.நுங்கம்பாக்கம் சஞ்சய்

9.ச.ஆனந்தன்

10.பா.இராசேந்திரன்,எம்..டி.சி

11.ச.மகேந்திரன் (மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ) 

12.அ.அன்பு (மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ) 

13.வி.வளர்மதி,(மாவட்ட மகளிரணி தலைவர்)

14.பி.அஜந்தா (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்) 

15.உதயசூரியன்

16.எஸ்.அப்துல்லா

17.ச.சந்தோஷ்

18.வே.சித்தார்த்தன்

19.ஆ.வீரமர்த்தினி(கழக செயலவைத் தலைவர்) 

20. த.வீரசேகரன் (வழக்குரைஞர் அணி தலைவர்)

21. சே.மெ.மதிவதனி துணைப் பொதுச் செயலாளர்)



,


செவ்வாய், 3 மார்ச், 2026

சென்னையில் ‘சாஸ்திரிபவன்’ முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்: தமிழர் தலைவர் ஆசிரியர் உள்பட தோழர்கள் கைது!



சமூகநீதிக்கான பெரும் போராட்டம் தமிழ்நாடு அளவில்!
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். பதவிகளில் பார்ப்பனர்– உயர் ஜாதியினரின் ஆதிக்கத்தைக் கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
57 ஆவது முறையாகக் கைது!

சென்னை, மார்ச் 3- ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறித்து அதிகாரப் பதவிகளை உயர்ஜாதியினரின் ஏகபோகமாக்கும் அநீதியைக் கண்டித்து இன்று (3.3.2026) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

தொடக்கத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆரப்பாட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காவல் துறை யினரால் கைது செய்யப்பட்டார். அவர் கைதாவது 57 ஆவது முறையாகும்.

கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தந்த தகவலின்படி, இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), இந்திய அயல் தொடர்புப் பணி (IFS) உள்ளிட்ட அகில இந்திய சேவைகளில் அனுமதிக்கப்பட்ட மொத்தப் பணியிடங்கள் மற்றும் தற்போதைய பணியில் உள்ள அதிகாரிகள் பற்றிய சேவை வாரியான, மாநில வாரியான விவரங்கள் பின்வருமாறு:

மொத்தம் அனுமதிக்கப்பட்டுள்ள 6,877 இந்திய ஆட்சிப் பணி, 5,099 இந்திய காவல் பணி, 3,193 இந்திய அயல் நாட்டுப் பணி ஆகியவற்றில் முறையே 5,577, 4,594, 2,164 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

கடந்த அய்ந்து ஆண்டுகளில் 2020 முதல் 2024 வரை நடத்தப்பட்ட குடிமைப் பணி தேர்வுகளில் நேரடி நியமனமாக IAS, IPS, IFS சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள பட்டியலின்படி, அட்டவணை ஜாதி  (SC), அட்டவணை பழங்குடி (ST), பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (OBC) சார்ந்த அதிகாரிகளின் எண்ணிக்கை யும் தரப்பட்டுள்ளன.

01.01.2025 நிலவரப்படி, IAS,. IPS, IFS சேவை களில் மாநிலக் கட்டமைப்பு வாரியாக உள்ள காலிப் பணியிட விவரங்கள் சிவில் லிஸ்ட் (Civil List) அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 1,300 இந்திய ஆட்சிப் பணியிடங்களும், 505 இந்திய காவல் பணியிடங்களும், 1,029 இந்திய அயலுறவுப் பணியிடங்களும் காலியாக இருப்பதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய சேவைகளில் சமூக நீதி, சமச்சீர் பிரதிநிதித்துவம் மற்றும் நிர்வாகத் திறன் ஆகியவை குறித்து தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், இந்தத் தகவல்கள் அரசின் அதிகாரப்பூர்வ பதிலாகப் பதிவாகியுள்ளன.

ஒன்றிய அரசு தந்துள்ள இந்த தகவல்களின்படி, சமூகநீதி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அய்.ஏ.எஸ்.சில் 8 சதவீதம், அய்.பி.எஸ்.சில் 10 சதவீதம், அய்.எஃப்.எஸ்.சில் 17.28 சதவீதம் மட்டுமே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவு அதிகாரிகள் இருப்பதும் எஞ்சியுள்ள 82 சதவீதம் முதல் 92 சதவீதம் வரையிலான இடங்கள் பார்ப்பனர் உள்ளிட்ட உயர்ஜாதியினரால் அபகரிக்கப்பட்டிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தியாவின் அதிகாரப்பிடி இன்னும் பார்ப்பனர்களின் கைகளில்தான் இருக்கிறது என்ற சுடும் உண்மையை ஒளிக்கப் பார்க்கிறார்கள்.

இந்தியாவின் திட்டங்களை வகுக்கும் பிரதமர் அலுவலகத்தின் அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் 90 சதவீதத்திற்கும் மேல் பார்ப்பனர்களும், உயர் ஜாதியினரும்தான் என்கிறார்கள் தகவலறிந்த வட்டாரத்தினர்.

பார்ப்பன – உயர்ஜாதி ஆதிக்கத்தைப் பாரீர்!

2022 ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, 75 அமைச்சகம் மற்றும் அரசுத் துறைகளில் பணியாற்றும் செயலாளர்கள், இணைச் செயலாளர்களின் எண்ணிக்கை 322 பேர்.
இதில்,
எஸ்.சி (பட்டியல் ஜாதியினர்) – 16
எஸ்.டி (பழங்குடியினர்) – 19
ஓ.பி.சி (பிற்படுத்தப்பட்டோர்) – 39
மட்டும் தான்!
உயர் அதிகாரமிக்க செயலாளர்கள் என்று மட்டும் எடுத்துக்கொண்டால்,
2019-ஆம் ஆண்டு நிலவரப்படி,
மொத்தமுள்ள 89 செயலாளர்களில்,
பழங்குடியினர் (ST) – 3
ஒடுக்கப்பட்டோர் (SC) – 1
இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) – 0
ஆம், ஒருவர் கூட பிற்படுத்தப்பட்டவர் இல்லை. ஒரே ஒருவர் தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்!

இந்தியாவின் உயர் அதிகாரம் அனைத்தும் பார்ப்பனர், உயர்ஜாதியினரின் கைகளிலேயே இருக்கிறது என்பதற்கு இதற்குமேல் என்ன ஆதாரம் வேண்டும்! பாரீர், பாரீர்! பார்ப்பன உயர்ஜாதி ஆதிக்கத்தைப் பாரீர்!

எனவே, சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு வரும் இந்த ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து இன்று (3.3.2026) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகத் தோழர்கள் ஒன்றிய அரசின் அலுவலகங்கள் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

தமிழர் தலைவர் பங்கேற்பு

சென்னையில் இன்று (3.3.2026) காலை 11 மணியளவில் ஒன்றிய அரசின் அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற பெருந்திரளான ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கண்டன முழக்கங்களை ஒலித்து கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், காவல் துறையினரால் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கைது செய்யப்பட்டார்.

காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட தமிழர் தலைவரும், கழகத் தோழர்களும் முதற்கட்டமாக ஷெனாய் நகர் சமூக நலக் கூடத்தில் காவலில் வைக்கப்பட்டனர்.

தமிழ்நாடு

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, துணைப் பொதுச் செயலாளர்கள் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், நெய்வேலி ஞானசேகரன், பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், சி.வெற்றிச்செல்வி, பொறியாளர் ச.இன்பக்கனி க.பெரியார் செல்வி, பசும்பொன் உள்ளிட்டோர் மற்றும் வடசென்னை, தென்சென்னை, தாம்பரம், ஆவடி மாவட்டக் கழக நிர்வாகிகள் – தோழர்கள் பெருந்திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட
ஒலி முழக்கங்கள்!

வாழ்க வாழ்க வாழ்கவே சமூகநீதிப் போராளிகள் வாழ்கவே! வெல்லட்டும்! வெல்லட்டும்! சமூகநீதி வெல்லட்டும்! வீழட்டும்! வீழட்டும்! ஆரிய ஆதிக்கம் வீழட்டும்! உறுதி செய், உறுதி செய்! ஒன்றிய அரசே உறுதி செய்! உயர் அதிகாரப் பதவிகளில் ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை உறுதி செய்! தேவை! தேவை! அனைத்துத் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை!

தமிழ்நாடு

 

ஒன்றிய ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அரசே! ஏமாற்றாதே, ஏமாற்றாதே! இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் ஏமாற்றாதே, ஏமாற்றாதே! எங்கே எங்கே இடஒதுக்கீடு? உயர் பதவிகளில் இடஒதுக்கீடு! அமல்படுத்து! அமல்படுத்து! மண்டல் கமிஷன் பரிந்துரையை   முழுமையாக அமல்படுத்து!

நடைமுறைப்படுத்து! நடைமுறைப்படுத்து! இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்து! உயர் அதிகாரப் பதவிகளில் ஒடுக்கப் பட்டோருக்கும்,    பிற்படுத்தப் பட்டோருக்கும் சட்டப்படி இடஒதுக்கீட்டை  முழுமையாக வழங்கிடு!

ஒன்றிய அரசே, ஒன்றிய அரசே! வெளியிடு, வெளியிடு! வெள்ளை அறிக்கை வெளியிடு! ஒன்றிய அரசின் பதவிகளில் உயர் அதிகாரப் பதவிகளில் இடஒதுக்கீட்டு விவரங்களை முழுமையாக வெளியிடு!

 

அமைத்திடு, அமைத்திடு! சமூகநீதியைக் கண்காணிக்க அதிகாரமிக்க ஆணையத்தை அமைத்திடு, அமைத்திடு!       ஒன்றிய அரசே அமைத்திடு!

பின்பற்று! பின்பற்று! திராவிட மாடலைப் பின்பற்று! ஒன்றிய பாஜக மோடி அரசே! சமூகநீதியை நிலைநாட்டுவதில்   திராவிட மாடலைப் பின்பற்று! கற்றுக் கொள்! கற்றுக்கொள்!     பெரியார் மண்ணாம் தமிழ்நாட்டிலிருந்து ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதியைக் கற்றுக் கொள்!

 

EWS என்ற பெயரால் 10 சதவிகித இடங்களை அபகரிக்கும் பார்ப்பனச் சதியை முறியடிப்போம், முறியடிப்போம்! எங்கள் தந்தை பெரியாரும் பாபாசாகேப் அம்பேத்கரும் தமிழர் தலைவர் ஆசிரியரும் பெற்றுத் தந்த சமூகநீதியை அழிக்கத் துடிக்கும் ஆரியத்தை விடமாட்டோம், விடமாட்டோம்! போராடுவோம், வெற்றிபெறுவோம் வெற்றிகிட்டும் வரை போராடுவோம்!

தமிழ்நாடு

ஞாயிறு, 1 மார்ச், 2026

திருவொற்றியூர், வடசென்னை, தென்சென்னை மாற்றிமைக்கப்பட்ட பகுதிகள், பொறுப்பாளர்கள் விவரம்

‘மேற்கு சென்னை’ புதிய மாவட்டமாகச் செயல்படும்!

திருவொற்றியூர், வடசென்னை, தென்சென்னை மாற்றிமைக்கப்பட்ட பகுதிகள், பொறுப்பாளர்கள் விவரம்

சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் தலைவர் அறிவிப்பு

திருவொற்றியூர் மாவட்டம்

மாவட்டத் தலைவர் – வெ.மு.மோகன்

மாவட்டச் செயலாளர் – ந.இராசேந்திரன்

மாவட்டத் துணைத் தலைவர் – எம்.ஆர்.எப்.சேகர்

மாவட்டத் துணைச் செயலாளர்கள் – செல்வம், வாசு

1.புது வண்ணை

2.பழைய வண்ணை

3.கொடுங்கையூர்

4.இராயபுரம்

5.திருவொற்றியூர்

6.காசிமேடு

7.மணலி

8.மாத்தூர்

9.எலந்தஞ்சேரி

10.மாதவரம்

11.எண்ணூர்

12.கத்திவாக்கம்

வடசென்னை மாவட்டம்

மாவட்டக் காப்பாளர் – கி.இராமலிங்கம்

மாவட்டத் தலைவர் – தளபதி பாண்டியன்

மாவட்டச் செயலாளர் – புரசை சு.அன்புச்செல்வன்

மாவட்டத் துணைத் தலைவர்கள் – நா.பார்த்திபன், பாலமுருகன்

மாவட்டத் துணைச் செயலாளர் – வ.தமிழ்ச்செல்வன்

மாவட்ட இளைஞரணித் தலைவர் – ஓட்டேரி ந.கார்த்திக்

மாவட்ட இளைஞரணிச் செயலாளர் – பா.பார்த்திபன்

  1. புளியந்தோப்பு
  2. வியாசர்பாடி
  3. பெரம்பூர்
  4. மகாகவி பாரதியார் நகர்
  5. கவிஞர் கண்ணதாசன் நகர்
  6. பெரியார் நகர்
  7. கொளத்தூர்
  8. அண்ணா நகர் – திருமங்கலம்
  9. அயனாவரம்
  10. கீழ்ப்பாக்கம்
  11. புரசைவாக்கம்
  12. வேப்பேரி
  13. பாரிமுனை
  14. எருக்கஞ்சேரி
  15. பட்டாளம்
  16. ஓட்டேரி
  17. வில்லிவாக்கம்,
  18. அமைந்தகரை
  19. மண்ணடி
  20. சூளை

தென்சென்னை மாவட்டம்

மாவட்டக் காப்பாளர் – சைதை மு.ந.மதியழகன்

மாவட்டத் தலைவர் – இரா.வில்வநாதன்

மாவட்டச் செயலாளர் – செ.ர.பார்த்தசாரதி

மாவட்டத் துணைத் தலைவர்கள்
– டி.ஆர்.சேதுராமன், மு.சண்முகப்பிரியன்

  1. எழும்பூர்
  2. சேத்துப்பட்டு
  3. நுங்கம்பாக்கம்
  4. சூளைமேடு
  5. சைதாப்பேட்டை
  6. புதுப்பேட்டை
  7. சிந்தாதிரிப்பேட்டை
  8. ஆயிரம் விளக்கு
  9. தேனாம்பேட்டை
  10. ராயப்பேட்டை
  11. நந்தனம்
  12. ஆழ்வார்பேட்டை
  13. சேப்பாக்கம்
  14. திருவல்லிக்கேணி
  15. நொச்சி நகர்
  16. பட்டினப்பாக்கம்
  17. மயிலாப்பூர்
  18. மந்தைவெளி
  19. ராஜா அண்ணாமலைபுரம்
  20. கோட்டூர்புரம்
  21. அடையாறு
  22. திருவான்மியூர்

மேற்கு சென்னை மாவட்டம்

புதிய பொறுப்பாளர்கள்

மாவட்டத் தலைவர் – கரு.அண்ணாமலை

மாவட்டச் செயலாளர் – ராமபுரம் க.சுப்பிரமணி

  1. அரும்பாக்கம்
  2. எம்.எம்.டி.ஏ. காலனி
  3. கோயம்பேடு
  4. வடபழனி
  5. சாலிகிராமம்
  6. சின்மயா நகர்
  7. விருகம்பாக்கம்
  8. வளசரவாக்கம்
  9. ராமாபுரம்
  10. கே.கே.நகர்
  11. அசோக்நகர்
  12. ஆழ்வார் திருநகர்
  13. ஜாபர்கான்பேட்டை
  14. ஈக்காட்டுதாங்கல்
  15. கிண்டி
  16. கத்திபாரா – ஆலந்தூர்
  17. கோடம்பாக்கம்
  18. தியாகராயர் நகர்

- விடுதலை நாளேடு, 01.03.2026