தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில மேனாள் தலைவரும் சென்னை அரும்பாக்கம் நேசனல் ஸ்டார் மேனிலைப் பள்ளியின் தாளாளரும் பகுத்தறிவாளரும், கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மீது மாறாப் பற்று கொண்டவருமான தோழர் மானமிகு. அரும்பாக்கம் கோ.பா.சாரதி அவர்கள் 08-07-2022 வெள்ளிக்கிழமை மதியம் 02-00 மணியளவில் உடல் நலக் குறைவால் காலமானார்.அவருக்கு வயது 74.
அரும்பாக்கம் பகுதி முன்னேற்றத்திற்காகவும் கழக நிகழ்ச்சிகள் அப்பகுதியில் நடைபெற உதவிக்கரமாகவும் இருந்ததோடு தான் நடத்தும் பள்ளியில் எந்த மத சின்னங்களோ அடையாளங்களோ உள்ளே நுழையாமல் தடுத்தவர். மேலும் தந்தை பெரியார் பெருந்தலைவர் காமராஜர் படங்களை மட்டும் வைத்து அவர்களின் பிறந்தநாள் விழாவின் போது விழா எடுத்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். நமது கழக நிகழ்ச்சி களுக்கும் முற்போக்கு நிகழ்ச்சிகளுக்கும் பள்ளி அரங்கத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தவர் .சிறந்த நாத்திகரும் பகுத்தறிவாளருமான சாரதி அவர் களின் விருப்பப்படி தோழர்கள் நாத்திகன் கேசவன் தலை மையில் 105 ஆவது வட்ட திராவிட முன்னேற்ற கழக மாமன்ற உறுப்பினர் ந.அதியமான் தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோ தரன், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் பூவை .க. தமிழ்ச்செல்வன், அரும்பாக்கம் ஏ.சுந்தர், மாதவரம் வா.சி.ரவி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் எந்தவித சடங்கும் இன்றி வீரவணக்க முழக்கத் துடன் அரும்பாக்கம் மயானத்தில் எரியூட்டப்பட்டது .மயானம் வரை அவரது மகள்கள் நிஷா, அனுஷ்கா ஆகியோர் வந்திருந்தது, பகுத்தறிவு நாத்திக கொள்கைகளுக்கு உரம் சேர்த்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக