ஞாயிறு, 24 ஜூலை, 2022

சுயமரியாதைச் சுடரொளி இராம. அரங்கண்ணல் துணைவியார் திருமதி ஆண்டாள் மறைவு : கழகத் தலைவர் இரங்கல், ஆறுதல்


தி.மு.க.வின் துவக்க கால முன்னோடிகளில் ஒருவரும், 'விடுதலை' நாளேட்டின் மேனாள் துணையாசிரியரும்,  முத்தமிழறிஞர் கலைஞரின் உற்ற தோழரும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் நண்பருமான இராம. அரங்கண்ணல் துணைவியார் திருமதி ஆண்டாள் அம்மையார் (வயது 87) நேற்று  (23.7.2022) சென்னை கோபாலபுரம் இராமசாமித் தெருவில் உள்ள இல்லத்தில் மறைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

ஆண்டாள் அம்மையார் தனது வாழ்நாள் முழுவதும் விருந்தோம்பலில்  சிறந்தோங்கிய பான்மையராவார்.   

அம்மையாரின் உடலுக்கு கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (24.7.2022) காலை 8.30 மணியளவில் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். 

இராம. அரங்கண்ணல் - ஆண்டாள் ஆகியோரின் மகன்கள்   பொறியாளர் அ.அசோகன் அரங்கண்ணல், டாக்டர் அ.அருள் (இங்கிலாந்து), அ.அன்புதுரை (மலேசியா) அ.ஆனந்தன், டாக்டர் அ.பொன்னுதுரை ஆகியோரிடம் அம்மையாரின் மறைவிற்குத் தமிழர் தலைவர் ஆறுதல் கூறி இரங்கல் தெரிவித்தார்.

தமிழர் தலைவருடன் சென்ற கழகப் பொதுச் செயலாளர் 

வீ. அன்புராஜ், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, ஆடிட்டர் அ. இராமச் சந்திரன் ஆகியோரும் மறைந்த   அம்மையாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.  இறுதி நிகழ்வு இன்று  நடைபெற்றது.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக