தொகுப்பு: தகடூர் தமிழ்ச்செல்வி
(மாநில மகளிரணி செயலாளர்)
இரும்பு கோட்டை போன்ற உறுதிமிக்க திராவிடர் கழகத்தில் தங்களை நீண்ட காலம் இணைத்துக்கொண்டு அசைக்க முடியாத இரும்புத் தூண்களாய் நின்று நம்மைப் போன்ற மகளிர் தோழர்களுக்கும் இனி வர இருக்கின்ற இளைய தலைமுறை மகளிர் தோழர்களுக்கும் மிகப்பெரிய வழிகாட்டி களாக, முன்னத்தி ஏர்களாக, ஒளிப் பந்தங்களை கையில் ஏந்தி வழி நடத்துகின்ற நைட்டிங்கேல்களாக விளங் கிக் கொண்டிருக்கும் மூத்த தோழியர்கள் அம்மா பார்வதி அவர்களுக்கு 8.3.2022 அன்றும் அம்மா வெற்றிச்செல்வி அவர் களுக்கு 6.7.2022 அன்றும் 75ஆவது ஆண்டு பவளவிழா பிறந்தநாள்..
அவர்களைச் சிறப்பிக்கும் விதமாக 9.7.2022 அன்று சென்னை பெரியார் திடலில் காலை 10 மணி முதல் அவர்களின் பிறந்தநாள் விழா, இயக்க மகளிரின் கலந்துறவாடல் விழாவாக நடைபெற்றது.
கடலூர் தோழியர் ரமாபிரபா ஜோசப், சென்னை உமா செல்வராஜ், சென்னை பேராசிரியர் பெரியார் செல்வி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி ஆகியோரின் சிறப்பான முன்னெடுப்பில் விழா நடை பெற்றது என்பதை திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை சார்பாக பெருமையுடன் முன்வைக்கிறோம்.
விழாவின் முதல் நிகழ்வாக அம்மா பார்வதி அவர்களும் அம்மா வெற்றிச் செல்வி அவர்களும் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களையும், மோகனா அம்மா அவர்களையும் மகளிர் தோழர்களோடு சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் சிலை முன் தமிழர் தலைவர், அம்மா மோகனா, மற்றும் துணைத் தலைவர் கவிஞர் அவர்களுடன் இணைந்து குழுப்படம் எடுத்துக் கொண் டனர் .
விடுதலை சந்தாக்கள் வழங்கல்
ரமாபிரபா ஜோசப் தன் மகன் அறி வோடு இணைந்து தமிழர் தலைவரிடம்
11 விடுதலை ஆண்டு சந்தாக்கள் வழங் கினார்.
பெரியார் பிஞ்சு நிரஞ்சனா அம்பேத்கர் பிறந்தநாள் பரிசாக ஓராண்டு விடுதலை சந்தாவைத் தமிழர் தலைவரிடம் வழங் கினார்.
தொடர்ந்து, மகளிர் அனைவரும் அன்னை மணியம்மையார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து குழுப் படமும் எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்திலும் அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவிடத்திலும் மகளிர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
பிறகு மணியம்மையார் அரங்கத்தில் குடும்ப கலந்துரையாடல் விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று உரையாற்றிய டெய்சி மணியம்மை அவர்கள் இயக்கத் துடனான தனது மகிழ்வான நினைவு களைப் பகிர்ந்துக் கொண்டார்.
துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் முன்னிலையில் பார்வதி அம்மா அவர் களும் வெற்றிச்செல்வி அம்மா அவர்களும் இணைந்து பிறந்தநாள் கேக் வெட்டினர்.
கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று, மகளிர் தோழர்களின் வாழ்த்துரைகளையும், கருத் துகளையும் இறுதிவரையிலும் கேட்டு, நிகழ்வினைப் பெருமைப்படுத்தினார்.
தீவிரமான இயக்க செயல்பாடுகள்
அம்மா பார்வதி அவர்களின் தீவிர மான இயக்க செயல்பாடுகள் அதே நேரத்தில் எளிமையான அணுகுமுறை பற்றியும் அவருடைய வாழ்விணையர் அய்யா கணேசன் அவர்கள் மூலமாக அம்மா பார்வதி அவர்கள் இயக்கத்திற்கு வந்த வரலாற்றை, இளையதலைமுறை மகளிர் தோழர்களுக்கு எடுத்துரைத்தார. அவருடைய வாழ்விணையர் அம்மா வெற்றிச்செல்வி அவர்கள் திராவிடர் கழகம் நடத்துகின்ற எல்லா போராட் டங்களிலும் தவறாமல் கலந்து கொள் வதைப் பற்றியும், திராவிடர் கழக நிகழ்ச்சிகள் எந்த ஊரில் நடந்தாலும் அங்கு செல்வதற்கு முன்னதாகவே திட்டமிட்டு தயாராகும் சிறப்பான செயல்பாடுகள் பற்றியும், சிந்திப்பதற்கு அவசியமே இல்லாத ஒரு சிறப்பாக இயற்கையாகவே பெரியார் கொள்கையில் ஊறித்திளைத் திருந்த ஒரு குடும்பத்தில் மூத்த பெண்ணாக பிறந்தவர் வெற்றிச்செல்வி என்றும் பாராட்டுரை வழங்கினார்.
தன்னுடைய 75ஆவது பிறந்தநாள் விழாவின் மகிழ்வாக அம்மா வெற்றிச் செல்வி அவர்கள் தோழர்கள் கலைமணி, சோ.சுரேசு, கலையரசன், அருள் ஆகியோ ருக்கு புதிய கருப்பு உடை வழங்கி மகிழ்ந்தார்கள்.
அம்மா பார்வதி அவர்கள் தங்களு டைய 75வது பிறந்தநாள் விழாவின் மகிழ்வாக மகளிர் தோழர்கள் பூங்குழலி, பவானி மரகதமணி, பா.மணியம்மை, சே.மெ.மதிவதனி ஆகியோருக்கு புதிய கருப்புடை வழங்கி மகிழ்ந்தார்கள்
மகளிர் தோழர்கள் ச. இன்பக்கனி, ரமாபிரபா ஜோசப், பா. மணியம்மை,
சே.மெ.மதிவதனி, தேன்மொழி, இறைவி, நித் தியா, உத்ரா பழனிசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மனுநீதி போதிப்பது என்ன?
தமிழர் தலைவர் அவர்கள் எழுதிய 'மனுநீதி போதிப்பது என்ன?' என்ற நூலை தகடூர் தமிழ்ச்செல்வி அவர்கள் பார்வதி அம்மா அவர்களுக்கு பரிசாக அளித்தார்.
இறுதியாக ஏற்புரை நிகழ்த்திய அம்மா வெற்றிச் செல்வி இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த மகளிர் அனைவருக்கும் தன்னுடைய நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.
தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய அம்மா பார்வதி அவர்கள், தம் வாழ்விணையர் கணேசன் அவர்கள் மூலமாக இயக்கத் திற்கு வந்த வரலாறு பற்றியும் மறைந்தும் மறையாமல் நம் நினைவுகளில் வாழ்ந்து வருகின்ற சுயமரியாதைச் சுடரொளிகள் அம்மா மனோரஞ்சிதம், திருமகள் இறையன், மருத்துவர் பிறைநுதல் செல்வி, அன்னத்தாய் அம்மாள் தேவசகாயம், ராஜலட்சுமி மணியம், இரத்தினாவதி அம்மா ஆகியோரோடு இணைந்து பணி ஆற்றிய வரலாறு மற்றும் அம்மா தங்கமணி குணசீலன் அவர்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மகளிர்
க.பார்வதி, சி.வெற்றிச்செல்வி, ச.இன்பக் கனி, தகடூர் தமிழ்ச்செல்வி, ந.தேன்மொழி, பா.மணியம்மை, சே.மெ.மதிவதனி, ரமா பிரபா ஜோசப், உமா செல்வராஜ், பசும் பொன் செந்தில்குமாரி, த.மரகதமணி, இறைவி இறையன், பண்பொளி, நித்தியா, உத்ரா பழனிசாமி, லதா சிவகுமார், பகுத்தறிவு, க.சுமதி, சாந்தி சித்தார்த்தன், டெய்சி மணியம்மை, பவானி, பெரியார் செல்வி, நிரஞ்சனா அம்பேத்கர், நாக லட்சுமி முத்தையன், யாழினி, தொண்டறம், ராணி, கீதா இராமதுரை, அருணா, மாட்சி, பூங்குழலி, குமாரி பார்த்தசாரதி, வளர்மதி, அஜிதா, செல்வி முரளி, இளவரசி, யுவராணி, தங்கமணி, வெண்ணிலா, பகுத் தறிவு, பாரதி, வீரமர்த்தனி, சாந்தி, அன்றில், லதா, ஆதிலட்சுமி, லலிதா, யாழ் ஒளி, மணிமேகலை, வித்யா.
நிகழ்ச்சியில் பங்கேற்றத் தோழர்கள்
கவிஞர் கலி.பூங்குன்றன், வி.பன்னீர் செல்வம் (அமைப்புச் செயலாளர்),
சி.காமராஜ், கலைமணி, சோ.சுரேஷ், அருள், கணேசன், முகப்பேர் முரளி, தாம்பரம் முத்தையன்,
இறுதியாக பசும்பொன் செந்தில்குமாரி (இயக்குநர், பெரியார் சுயமரியாதை திருமண நிலையம்) அவர்கள் நன்றி கூற விழா இனிதே முடிவுற்றது.
பங்கேற்ற அனைவருக்கும் பகல் உணவு அளித்த தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) அவர் களுக்கும், இனிப்பு காரம் வழங்கிய எடிசன் (தமிழக எண்ணெய் பலகாரம், மதுரை) அவர்களுக்கும் தேநீர் வழங்கிய தாம்பரம் முத்தையன் அவர்களுக்கும் அனைத்து மகளிர் சார்பிலும் நன்றியையும் மகிழ்ச்சி யையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக