மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் வாழ்த்துரை
சென்னை, ஜூன் 18 பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கள், இன்றைக்கு ஒன்றிய அரசின் சார்பில் அறி முகப்படுத்தப்பட்டு இருக்கின்ற பல்வேறு திட்டங்களை யெல்லாம் இங்கே தீர்மானமாகத் தொகுத் துத் தந்திருக்கிறார்கள்; அந்தத் திட்டங்கள் இந்தி தெரியாத மக்களுக்குப் புரியாத திட்டங்களாகத்தான் இருக்கின்றன என்றார் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்அவர்கள்.
இந்தி எதிர்ப்பு மாநாடு
கடந்த 4.6.2022 அன்று மாலை சென்னை சைதாப் பேட்டை தேரடி வீதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
இந்தி எதிர்ப்புத் திறந்தவெளி மாநாட்டின் தலைவர் - பெருமதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே,
நிகழ்ச்சியில் எனக்கு முன்னால், மிகச்சிறப்பானதொரு எழுச்சி உரையாற்றி வீற்றிருக்கின்ற பெருமதிப்பிற்குரிய எழுச்சித் தமிழர் அவர்களே,
வருகை தந்து உரை நிகழ்த்தி சிறப்பித்திருக்கின்ற தி.மு. கழகத்தின் செய்தித் தொடர்பு செயலாளர் பெரு மதிப்பிற்குரிய இனிய அண்ணன் நாடாளுமன்ற மாநி லங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் இனிய அண்ணன் சுப.வீ. அவர்களே,
வருகை தந்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற பல் வேறு அரசியல் இயக்கங்களின் முன்னோடி தலைவர் களே, இந்த மண்டலத்தின் வார்டு குழுத் தலைவர் மரியாதைக்குரிய இனிய நண்பர் கிருஷ்ணமூர்த்தி அவர்களே,
வருகை தந்து சிறப்பித்திருக்கின்ற உங்கள் அத்தனை பேருக்கும் முதற்கண் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பக்கத்தில் இருக்கின்ற போரூரில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய பிறந்த நாளினையொட்டி, திராவிட முன்னேற்றக் கழக மாவட்டக் கழகத்தின் சார்பில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் பங்கேற்ற இலக்கிய அரங்கம் நடைபெற்ற காரணத் தினால், அதை நான் முன்னின்று நடத்தவேண்டிய சூழலில், இந்த நிகழ்ச்சிக்குக் காலதாமதமாக வர நேர்ந்தது. அதற்காக என்னை மன்னிக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்ளக் கடமைப்பட் டுள்ளேன்.
பொதுவாக இந்த நிகழ்ச்சியை நாங்கள் முன்னின்று எங்களால் நடத்தப்பட்டு இருக்கவேண்டும். காலதாமத மாக வர நேர்ந்தமைக்கு முதலில் என்னுடைய வருத் தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
12 தீர்மானங்களும்
மிக முக்கியத்துவம் வாய்ந்தவை
இந்த மாநாட்டில், 12 தீர்மானங்களை நிறைவேற்றி தந்திருக்கிறார்கள். 12 தீர்மானங்களும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
பெருமதிப்பிற்குரிய தமிழர் தலைவர் அவர்கள் எனக்குப் பின்னால் இங்கே மிகச் சிறப்பானதொரு உரையை ஆற்றவிருக்கிறார்கள். எனவே, நீண்ட நேரம் உரையாற்றி, அவருடைய உரைக்கு நான் தடையாக இருக்க விரும்பவில்லை.
நிறைவேற்றப்பட்டு இருக்கின்ற தீர்மானங்களில், 11 ஆவது தீர்மானம், ஒன்றிய அரசின் திட்டங்களை எந்த அளவிற்கு மக்களுக்குத் தெரியாத மொழியில், ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு, சமஸ்கிருதமும், இந்தி கலந்த வகையில், அந்தத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன என்பதுகுறித்து ஒரு தீர்மானம்.
இதற்கு முன்பு ஒன்றிய அரசில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபொழுது, ஜே.என்.என்., வி.ஆர்.என். என்கின்ற ஒரு திட்டம் - நகர்ப்புறங்களை வளர்ச்சி அடையச் செய்கின்ற திட்டம் என்பதாகும்.
ஜே.என்.என்., வி.ஆர்.என். என்ற திட்டத்தை, தமிழி லேயும்கூட அந்தந்த மாநில மொழிகளில் சொல்லுகிற பொழுது, ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் என்று அழகாக சொல்லுவதற்கான அந்த வாய்ப்பு இருந்தது.
ஆனால், இப்பொழுது சொல்லப்பட்டு இருக்கிற எந்தத் திட்டமும், குறிப்பாக பெருமதிப்பிற்குரிய ஆசி ரியர் அவர்கள், பல்வேறு திட்டங்கள் - இன்றைக்கு ஒன்றிய அரசின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக் கின்ற திட்டங்களையெல்லாம் இங்கே தீர்மானமாகத் தொகுத்துத் தந்திருக்கிறார்கள்.
இந்தி தெரியாத மக்களுக்குப்
புரியாத திட்டங்கள்
எடுத்துக்காட்டாக,
அடல் பென்ஷன் திட்டம்
ஆம் ஆத்மி பீமா யோஜனா
இஞ்சியோன் செயல்திட்டம்
யுவா ஷக்தி சம்யோஜனா
நமாமி கங்கே
கிராமாலயா
ஜன்தன், ஆதார் மொபைல் ஜாம்
ராஜ்ய சிசு சுரக்ஷா
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா
பிரதான் மந்திரி கிரிஷி யோஜனா
பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி யோஜனா
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா
ஸ்வச் பாரத் இயக்கம்
ஜன்தன் யோஜனா
பிரதான் மந்திரி கரீப்
பிரதான் மந்திரி க்ருஷி கல்யாண் யோஜனா
கிசான் விகாஸ் பத்ரா
கிரிஷி அம்தான் பீமா யோஜனா
பிரதான் மந்திரி க்ருஷி சின்சாய் யோஜனா
பரம்பராகாத் கிருஷி விகாஸ் யோஜனா
முக்தா பாரத்
பண்டித் தீன்தயாள் உபாத்யாய் உன்னத் கிருஷி ஷிக்சா
பிராதான் மந்திரி பசல் பீமா யோஜனா
க்ருஷி விக்யான் கேந்திரா
ராஷ்டிரிய க்ருஷி விகாஸ் யோஜனா
ராஷ்டிரிய கோகுல் யோஜனா
பசுதன் சஞ்சீவனி
சுவஸ்திய ரக்ஷா யோஜனா
மிஷின் மதுமேகா
உடுதே தேஷ்கா ஆம்நாகரீக்
நிர்னாயத் பந்து யோஜனா
ஜீவன் பீமான்
சம்பூர்ணா பீமா கிராமா யோஜனா
தீன்தயாள் ஸ்பார்ஸ் யோஜனா
தர்பன்
அந்தியோத்யா அன்ன யோஜனா
கிராமின் சுவாச் சர்வேக்ஷான்
ஹர் கர் ஜல் பூர்த்தி
சுவச்சதான்
கிராமின் க்ருஷி மவுசன் சேவா
சைபர் சுவச்சத்தா கேந்திரா
பிரதான் மந்திரி வய வந்ததான் யோஜனா
ஜனனி சுரக்ஷா யோஜனா
ஜனனி சிசு சுரக்ஷா கார்யாக்ராம்
ராஷ்டிரிய கிஷோர் சுவஸ்திய கார்யாகிராம்
பிரதான் மந்திரி சுவஸ்திய சுரக்ஷா யோஜனா
இந்திரதனுஷ் யோஜனா
மிஷன் பரிவார் விகாஸ் யோஜனா
பிரதான் மந்திரி சுரக்சித் மந்திரித்வ அபியான்
தீன்தயாள் அந்த்தியோதயா யோஜனா
சர்வ சிக்ஷா அபியான்
பிராஹிக் ஷக்
ராஷ்டிரியா மத்யமிக் சிக்ஷா அபியான்
உச்சத்தார் அவிஷ்கார் அபியான்
ராஷ்டிரிய ஷிக்ஷா அபியான்
இதுபோல நூற்றுக்கணக்கான திட்டங்களை ஒன்றிய அரசு அறிவித்து நடைமுறைப்படுத்திக் கொண்டி ருக்கிறது.
இதில் ஒரு திட்டம்கூட இந்தி தெரியாத மக்களுக்குப் புரியாத திட்டமாகும்.
மக்களுக்குத் தெரிந்த மொழியில்
இந்தத் திட்டங்கள் வரவேண்டும்!
எனவே, இவையெல்லாம் மாநில மொழிகளில் அழைக்கப்படவேண்டும். மக்களுக்காக செயல்படுத்து கிற திட்டங்கள், மக்களுக்குத் தெரிந்த மொழியில் இந்தத் திட்டங்கள் வரவேண்டும் என்கின்ற வகையிலான தீர்மானங்கள் உள்ளிட்ட, 12 தீர்மானங்களை நம்முடைய ஆசிரியர் தலைமையிலான இந்த மாநாடு முன் மொழிந்திருக்கிறது.
இந்தத் தீர்மானங்களை வரவேற்று, இந்த சிறந்த வாய்ப்புக்கு நன்றி கூறி, பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களை பேச அன்போடு அழைத்து, விடை பெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் வாழ்த்துரை யாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக