புதன், 7 ஆகஸ்ட், 2019

கலைஞர் முதலாமாண்டு நினைவு நாள்: திராவிடர் கழகத்தின் சார்பில் அமைதி ஊர்வலம்



கலைஞர் முதலாமாண்டு நினைவு நாள்: கழகத் தலைவர் மலர்தூவி மரியாதை




சென்னை,ஆக.7 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முதலா மாண்டு நினைவு நாளையொட்டி இன்று (7.8.2019) காலை 9.30 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து திராவிடர் கழகத் தோழர்களின் அமைதி ஊர்வலம் புறப்பட்டது.

தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீர மணி அவர்கள் மற்றும் ஏராள மான தோழர்கள் அமைதி ஊர் வலத்தில் பங்கேற் றனர்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக் கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட  தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், மாவட் டச் செயலாளர் கோ.நாத்திகன், திருவொற்றியூர் மாவட்டத் தலை வர் எண்ணூர் வெ.மு.மோகன், சோழிங்கநல்லூர் மாவட்டச் செயலாளர் விடுதலைநகர் செய ராமன், ஆவடி மாவட்டச் செய லாளர் இளவரசன், அமைப்பா ளர் உடுமலை வடிவேல், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணைச் செயலாளர்கள் நா.பார்த்திபன், யாழ்திலீபன், பெரியார் சமுக காப்பு அணி மாநில அமைப்பாளர் சோ. சுரேஷ், பெரியார் களம் இறைவி, மகளிர் பாசறை மாநில செய லாளர் வழக்குரைஞர் பா.மணி யம்மை, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, சென்னை மண்டல இளைஞரணி தலைவர் ஆ.இரா.சிவசாமி, நெய்வேலி வெ.ஞானசேகரன், தலைமைக் கழகப் பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா, தரும புரி இரு.கிருட்டினன், மா.செல்ல துரை, மு.அர்ச்சுனன், திருச்சி தொழிலாளர் கழகம் மு.சேகர், ஆவடி இளைஞரணி க.கலை மணி, வை.கலையரசன், கார்வேந் தன், தமிழ்மணி, கோவிந்தன், தயாளன், சு.மோகனப்ரியா, வட சென்னை மாவட்டத் துணைத் தலைவர் செம்பியம் கி.இராமலிங்கம், அமைப்பா ளர் புரசை சு.அன்புச்செல்வன், நங்கைநல்லூர் க.தமிழினி யன், ஆயிரம் விளக்கு சேகர், அரும்பாக்கம் சா.தாமோத ரன், தமிழ்செல்வன், சைதை மு.ந.மதியழகன், தரமணி கோ. மஞ்சநாதன், சூளைமேடு இராஜேந்திரன், கோவிந்த ராஜ், பொறியாளர் மயிலை ஈ.குமார், மயிலை பாலு, வி.வளர்மதி, மு.பவானி,  பூவை செல்வி, பெரியார் மாணாக்கன், தொண்டறம், இ.ப.இனநலம், பெரம்பூர் ப.கோபாலகிருஷ் ணன், கொடுங்கையூர் கோ.தங்க மணி, தங்க.தனலட்சுமி, வடசென்னை இளைஞரணி காரல் மார்க்ஸ், மகளிர் பாசறை த.மரகதமணி, இராமாபுரம் ஜனார்த்தனன், ஊரப்பாக்கம் இராமண்ணா, பி.சீனுவாசன், பொய்யாமொழி, கு.சோமசுந் தரம், தொழிலாளர் கழகம் மா.இராசு, நூர்ஜகான், தாம் பரம் சீ.இலட்சுமிபதி, சு. மோகன்ராசு, மா.குணசேக ரன், க.முத்து, கலாநிதி,  காம ராஜ், காரைமாநகர் தே. சுரேஷ், கும்மிடிப்பூண்டி செ. உதயக்குமார், க.ச.க.இரணி யன், புழல் த.ஏழுமலை, வே.சிறீதர், பா.சிவக்குமார், க.சர வணன், ந.கதிரவன், சிற்றரசு, யுவராஜ், சுதன், அருள், சட் டக் கல்லூரி மாணவர் சு.தமிழ்செல்வன் மற்றும் தென் சென்னை, வடசென்னை, தாம்பரம், ஆவடி, சோழிங்க நல்லூர், திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட சென்னை மண்டல கழகத் தோழர்கள் ஏராளமானவர் கள் அமைதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

சென்னை அண்ணா சாலையில் அமையப்பெற்றுள்ள அறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப் பட்ட அமைதி ஊர்வலம் கலைஞர் நினைவிடத்தில் முடிவுற்றது. கழகத் தோழர்களின் கட்டுப்பாடான ஊர்வல அணிவகுப்பைக் கண்டு காவல் துறையினரும், பொதுமக்க ளும் வியந்து போற்றினர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கழகப் பொறுப்பா ளர்கள் புடைசூழ கலைஞர் நினைவிடத்தில் மலர் வளை யம் வைத்து மரியாதை செலுத் தினார். மானமிகு சுயமரியாதைக் காரர் கலைஞருக்கு வீரவணக் கம் முழக்கங்கள் வானைப் பிளந்தன.

-  விடுதலை நாளேடு, 7.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக