திராவிடர் கழக பவள விழா மாநாடு சேலம் மாநகரில் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு!
திராவிடர் கழக பவள விழா மாநாட்டில் பங்கேற்க இன்று காலை (26.8.2019) 4.30 மணிக்கு ஏற்காடு விரைவு ரயிலில் சேலம் வருகை தந்த கழகத் தலைவர், தமிழர் தலைவர் அவர்களுக்கு மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவர் பழனி புள்ளையண்ணன் தலை மையில் மேளதாளம் முழங்க, எழுச்சி முழக்கத்தோடு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழர் தலைவரை
வரவேற்ற தோழர்கள்
பெரியார் சமுக காப்பணியின் வணக்கத்தை பெற்றுக் கொண்ட தமிழர் தலைவருக்கு, கழக பொதுச் செயலாளர்கள் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக் குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், மாநில அமைப்பு செயலாளர்கள் தருமபுரி ஊமை.ஜெயராமன், மதுரை வே.செல்வம், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண் டியன், மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் வா.பிரபாகரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள், அ.சுரேஷ், பொழிசை கண்ணன், புதுச்சேரி இளைஞரணி தலைவர் இராசா, மண்டல திராவிடர் கழக தலைவர் சிந்தாமணியூர் கவிஞர் சி.சப்பிரமணியம், சேலம் மாவட்டத் தலைவர் கே.ஜவஹர், மாவட்ட செயலாளர் அ.ச.இளவழகன், மேட்டூர் மாவட்டத் தலைவர் க.கிருட்டிணமூர்த்தி, ஆத்தூர் மாவட்ட செயலாளர் நீ.சேகர், ஓசூர் மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன், சேலம் மாவட்ட துணைத் தலைவர் பரமசிவம், சேலம் மாநகர செயலாளர் அரங்க.இளவசரசன், சேலம் மாவட்ட அமைப்பாளர் ச.வே.ராவணபூபதி, ஓமலூர் ஒன்றியத் தலைவர் சவுந் திரராஜன், காரைக்கால் மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, சேலம் மண்டல இளைஞரணி செயலாளர் பு.க. செல்வம், ஆத்தூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ப. வேல் முருகன், ஆத்தூர் மாவட்ட மாணவர் கழக தலைவர் கார்.முகிலன், பா.வைரம் உள்ளிட்ட எராளமானோர் பயனாடை அணிவித்து வரவேற்பு தந்தனர்.
- விடுதலை நாளேடு, 26 .8. 19
- விடுதலை நாளேடு, 26 .8. 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக