பேரமனூர், ஆக.23 கடந்த 4.8.2019 அன்று மாலை 6 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், மறைமலை நகரை அடுத்த பேரமனூர் ரயில்வே தெருவில் திரா விடர் கழகத் தோழர் கி.நீலகண்டன் - நீ.பவானி இணையரின் புதிய இல்லத் திறப்பு விழா காஞ்சிபுரம் கழக மாவட்டச் செயலாளர் பூ.சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. விழாவில், தென்சென்னை மாவட்ட கழகச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் கோ.வி.ராகவன், களியப்பேட்டை கெ. தமிழ்மணி, திருக்குறள் ம. வெங்கடேசன், பகுத்தறிவாளர் கழக மாவட்டச்செயலாளர் அ. சிவக் குமார், நல்லாசிரியர் தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். முன்னதாக கழகத் தோழர் ம.கருணாநிதி அனைவரையும் வரவேற்றார். தோழர் கி. காண்டீபன் அவர்களுடைய மகளான பள்ளி மாணவி கா.மலர் அனைவரையும் கவரும் வண்ணம் சிறப்பாக உரை யாற்றினார்.
கி.நீலகண்டன் அவர்களுடைய பெற்றோர் து.கிருஷ்ணன் - கி.ஜெயா அம்மாள், சகோதரர் கி.காண்டீபன், நண்பர் சு.விஜயராகவன் மற்றும் நீல கண்டன் குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் புடைசூழ ஏராளமா னவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
14ஆவது வட்ட திராவிட முன் னேற்றக் கழகச் செயலாளரும் முன் னாள் நகரமன்ற உறுப்பினருமான மு.வினோத்குமார் தந்தை பெரியார் அவர்களுக்கும், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் சிலை அமைத்த சிறப்புக்குரியவர். அவர் விழாவில் பாராட்டப்பட்டார்.
காஞ்சி மண்டல திராவிடர் கழகச் செயலாளரும் தலைமைக்கழகப் பேச் சாளருமான பேராசிரியர் முனைவர் காஞ்சி கதிரவன் புதிய இல்லத்தைத் திறந்து வைத்து கருத்துரையாற்றினார். பார்ப்பன மறுப்பு நிகழ்ச்சியாக தமிழர் குடும்பங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும் என்றும் பார்ப்பனரை அழைத்து நம்குடும்ப நிகழ்ச்சிகளை நடத்துவதால், நம் குடும்பத்துப் பெண்கள் இழிவுபடுத்தப்படுகின்றனர்; நம்முடைய மொழி இழிவுபடுத்தப் படுகிறது; பார்ப்பனர் தவிர மற்ற அனைவரும் மனுதர்ம சாஸ்திரத் தின்படி தீண்டத்தகாதவர்கள் என்றும் இழிவு படுத்தப்படுவதால் பார்ப்பனர் மறுப்பு நிகழ்ச்சியாக நடத்த வேண்டும் என்றும் நம் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்றும் நம் குழந் தைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்றும் தந்தை பெரியார், தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி ஆகி யோர் சமூக நீதிக்காக களம் கண்டு அரசியல் சட்ட பாதுகாப்பு செய்திருப் பதையும் தம் உரையில் குறிப்பிட்டார். கா.செல்வா அவர்கள் நன்றி கூறினார்.
ஆட்டோ ஓட்டும் தொழிலை மேற்கொண் டுள்ள கி.நீலகண்டன் அவர் களுடைய மகன் நீ.தமி ழன்பன் பி.ஈ. பட்டமும், நீ.மதிவாணன் சி.ஏ. பட்டமும் பெற்றுள்ளது பாராட்டத் தக்கதாகும்.
- விடுதலை நாளேடு, 23. 8 .19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக