சென்னை, ஆக.9- தென் சென்னை மாவட்ட மந்தை வெளி, இராஜா அண்ணா மலைபுரம் பகுதி திராவிடர் கழகம் சார்பில் 20.7.2019 அன்று மாலை 6 மணி அள வில் காமராசர் சாலை சீனி வாசா அவின்யூ இணைவில் தந்தை பெரியார் பிறந்த நாள் தெருமுனைப் பரப்புரை கூட்டம் மந்தைவெளி பகுதி பொறுப்பாளர் பொ.சிவக் குமார் தலைமையிலும், மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன் மற்றும் துணைச்செயலாளர் கோ.வீ.ராகவன் ஆகியோர் முன்னிலையிலும், துணைச்செயலாளர் சா. தாமோதரன் அவர்கள் வர வேற்புரை ஆற்ற மிக எழுச் சியுடன் நடைபெற்றது.
சிறப்புரை
மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மகளிர் பாசறை மாநில செயலாளர் பா.மணியம்மை ஆகியோர் உரையாற்றிய பின் மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரையாற்றி னார்.
அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் தே.செ.கோபால், கோ.மஞ்சநாதன், க.தமிழ்ச் செல்வன், ஈ.குமார், மு.பவானி, இளைஞர் அணி துணைத் தலைவர் மு.முகிலன், மு.சண்முகப்பிரியன், செ.தமிழ்சாக்ரடீசு, மு.பசும் பொன், காரல் மார்க்ஸ், தில்ரேசு பானு, வேலவன், பா.பார்த்திபன், தாம்பரம் மோகன்ராசு, மா.குண சேகரன், மு.இரா.மாணிக்கம் மற்றும் கழகத்தோழர்களும் கலந்துகொண்டனர். மொதுமக்கள் கருத்துகளை செவிமடுத்து எழுச்சி பெற் றனர்.
இரவு 9.50 மணி அளவில் மாவட்ட மாணவர் கழக தலைவர் வி.விசுவாசு நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
- விடுதலை நாளேடு, 9.8.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக