வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

முத்தமிழறிஞர் கலைஞர் சிலை திறப்பு விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா அறைகூவல்!

ஆட்சியின் அடக்குமுறைகளை சந்திப்போம் 'ஜெய் பங்களா' - 'ஜெய் தமிழ்நாடு' என்று முழங்குவோம்!

களம் காண இளைஞர்களே தயாராவீர்! தயாராவீர்!!


முத்தமிழறிஞர் கலைஞர் சிலை திறப்பு விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா அறைகூவல்!




சென்னை ஆக. 8- ''நாட்டில் நடைபெறும் அடக்கு முறை, சவால்களை எதிர்த்துப் போராட இளைஞர்கள் முன் வர வேண் டும்'' என்றும், ''வரலாற்றின் வடிவமாகத் திகழ்கிறார் கலைஞர் அவர்கள்'' என்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழாப் பொதுக்கூட்டத்தில் சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நேற்று (7.8.2019)   மாலை உரை யாற்றும்போது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா அறைகூவல் விடுத்தார்.

பெயருக்கேற்ற போராட்டக் குணம் கொண்ட ஸ்டாலின்!


மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் பேசியதாவது:

துவக்கத்தில் தமிழில் சில வார்த்தை களை பேசிவிட்டு பின்னர் ஆங்கிலத்தில் தனது உரையைத் தொடங்கினார்.

கடந்த ஓராண்டிற்கு முன் நான் சென்னைக்கு வந்து இந்த மண்ணின் மாபெரும் மைந்தர் கலைஞர் அவர்களின் திருமுகத்தை - அவர் மறைந்து விட்ட நிலையில் - அவரது முகத்தை காண்ப தற்காக வந்திருந்தேன்.

தற்போது சென்னைக்கு வந்து கலை ஞர் அவர்களின் சிலையை திறந்து வைக் கும் பெருமை எனக்கு கிடைத்தமைக்காக நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இத்தகைய பெருமையை எனக்களித்த திமுக உறுப்பினர்களுக்கு எனது உளங் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள் கின்றேன். கலைஞர் அவர்களின் செயல் பாட்டை என்னால் எந்நாளும் மறக்க முடியாது!

தி.மு.க. தலைவராக இருந்த கலைஞர் அவர்களின் மகன்களில் ஒருவர் இங்கே தமிழக அரசியலில் பெரிய தலைவராக திகழ்ந்து வருகிறார். கலைஞர் அவர்க ளுக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக, திராவிட மக்களே உங்களுக்கும் உங்கள் அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கி றேன்.

கலைஞர் அவர்கள் மாபெரும் திராவிட இயக்கத் தலைவராவார். அவர் எந்நாளும் நினைவு கூரத்தக்கவராவார். அவரது அயரா பணிகளால் அவரது தொலை நோக்குப் பார்வையால் அவரது செயல்பாட்டால் அவரை எந்நாளும் என்னால் மறக்க முடியாது.

கலைஞரின் தைரியத் தோற்றத்தைக் கண்டு வியந்தேன்


காவல்துறையின் பிடியில் அவர் இருக்கும் போதுள்ள படத்தை நான் பார்த் தேன். பலரும் அதுபற்றி விமர்சனங்கள் செய்தபோதும் அந்தப் படத்தில் அவரது தைரியத் தோற்றத்தை கண்டு நான் வியந்தேன்.

ஸ்டாலின் அவர்கள் பற்றி குறிப்பிட வேண்டுமென்றால் - ஸ்டாலின் என்ற அந்தப் பெயரே ஒரு புரட்சிகர வீரரின் பெயராகும். இடதுசாரி புரட்சிகரத் தலை வர்களான காரல் மார்க்ஸ் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் பற்றி அனைவரும் அறிவோம்.

இங்கே ஸ்டாலின் அவர்கள் பற்றி குறிப்பிட வேண்டும் என்றால் எதையும் எதிர்த்துப் போராடக் கூடிய போராட்டக் குணம் உடையவர் என்பார்கள். அது முழுக்க முழுக்க சரியானதாகும்.

கலைஞர் அவர்களின் நடவடிக்கைகள், செயல்பாடுகளை மட்டும் நினைவு கூருவதற்காக மட்டுமல்ல - இன்றையதினம் அப்பெருமகனார் இல்லை என்கிற நிலையில் இருக்கிறார். ஆனாலும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். நம் முடைய நெஞ்சமெல்லாம் அவர் நிறைந்து இருக்கிறார். ஒரே தொலைநோக்குப் பார் வையால்தான் மக்களின் மனங்களில் நிற் கிறார் கலைஞர்!

அவர் எல்லோர் நினைவிலும் நிலைத்து இருந்து கொண்டிருப்பதற்குக் காரணம் எல்லோரும் ஒரு மதத்தினர், ஒரே தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்கிற அவரது எண்ணம்தான். எல்லா மதங்களையும் நேசிக்க வேண்டும்; எல் லோரையும் அரவணைக்க வேண்டும், எல்லா நண்பர்களையும், ஏன் இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் நேசிக்க வேண்டும் என்பதோடு மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். நாம் ஒருங்கிணைந்து வாழ வேண்டும். தாய்மொழியும் நாட்டு மக்க ளும் மிக முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட்டவர்கள் கலைஞர் அவர்களும், எம்.ஜி.ஆர். அவர்களும், பெரியார் அவர்களும் என்பதை நினை வில் கொள்ளவேண்டும். அவர்கள் தான் நமக்கு இத்தகைய தொலைநோக்குப் பார் வையை வழங்கியுள்ளனர்.

வரலாற்றின் ஒரு வடிவமாகத் திகழ்கிறார் கலைஞர்


ஆண்டுக்கணக்கில் மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அவர் இதை உலகின் ஒரு வடிவமாக - திகழ்ந்துள்ளார். எனவேதான், அவர் வரலாற்றின் ஒரு வடிவமாகத் திகழ்கிறார். அந்த வரலாறு என்றைக்கும் மாறாது.

அடித்தட்டு மக்களுக்காக கலைஞர் அவர்கள் பாடுபட்டார். ஏழை மக்களுக் காகவும், சிறுபான்மையினருக்காகவும் சலிப்படையாமல் செயல்பட்டார். விவசாயி களுக்காகவும், வாழ்க்கையில் ஏதுமற்றவர் களுக்காவும் தன் வாழ்நாளில் கடுமையாக உழைத்துள்ளார். அவர் தனது வாழ்நாளில் நல்லதுக்காக தொடர்ந்து பாடுபட்டுள்ளார்.

அடக்குமுறைகளை எதிர்த்து போராடி வெற்றி காண்போம்! மக்களுக்காக பாடு பட்டதற்காகவே மகாத்மா காந்தி அவர் களை நாம் மறந்துவிட முடியாது; அம்பேத் கருக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். அவரை நாம் மறந்து விட முடியாது. அப் துல் கலாம் அவர்களை நினைவிலிருந்து நீக்க முடியாது; நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை நாம் என்றென்றும் நினைவில் கொண்டுள்ளோம். டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களையும் நாம் நினைவில் கொண்டுள்ளோம். அதே போல்தான் எம்.ஜி.ஆரையும், கலைஞர் அவர்களையும் நாம் நினைவில் கொள் வதற்குக் காரணம் அவர்கள் மனித வாழ் வின் கஷ்ட நஷ்டங்களில் பங்கேற்றதற் காகத்தான்.

வாழ்வையே தியாகம் செய்யத் தயாராக வேண்டும்


இன்றைக்கு நாம் அடக்குமுறைகளை யும், துன்ப, துயரங்களையும் எதிர்த்துப் போராடி அதில் வெற்றி காண தயாராக வேண்டும். அதற்காக நாம் நம் வாழ்வையே தியாகம் செய்யத் தயாராக வேண்டும்.

அதே சமயம், தாய்நாட்டிற்காக, தமிழ்நாட்டிற்காக, மேற்கு வங்கத்திற்காக, நமது நாட்டிற்காக நாம் தியாகம் செய்ய வேண்டியுள்ளது. இந்த நாட்டில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் வர்கள்! இன்றைக்கு இந்தக் கூட்டத்தில் பரூக் அப்துல்லா அவர்கள் கலந்து கொண் டிருக்க வேண்டும். ஆனால் கலந்து கொள்ள முடியவில்லை. என்ன காரணம்?

அவர் செய்த குற்றம் என்ன? அவர் வீட்டுச்சிறைக்குள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகியோர் அவ்வாறு வீட்டிற்குள் சிறை வைக் கப்பட்டுள்ளனர்.

பரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார்?


பரூக் அப்துல்லா மிக மூத்த அரசியல் தலைவர். அவர் இங்கு வராத காரணத்தால் அவரிடம் என்னால் பேச இயலவில்லை. அங்கு என்ன நடக்கிறது? பரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.

ஒரு சில அரசியல் தலைவர்கள் ஒரு சில முடிவுகள் எடுக்கின்றனர். ஆனால் அவர்கள் மக்களை கருத்தில் கொள்வ தில்லை. இது வருத்தத்திற்குரியது. ஒன்றை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். தமிழ்நாடு குறித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால் தமிழக மக்களின் நம்பிக்கையை அவர்கள் பெற்றாக வேண்டும். 'வணக்கம்' என்று சொல்லுவது தமிழ்மீதான என்னுடைய பற்று!

அதேபோல் மேற்குவங்கம் குறித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று சொன்னால், மேற்குவங்க மக்களின் நம்பிக் கையை அவர்கள் பெற்றாக வேண்டும். மற்ற மாநிலங்கள் குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் தொடர்புடைய மாநில மக்களின் விருப்பங்களை கருத்தில் பெற்றாக வேண்டும்.

என்னுடைய தமிழ் உச்சரிப்பு சரியில்லை என்று சொல்லப்பட்டாலும், 'வணக்கம் என்று நான் சொல்வதற்குக் காரணம் தமிழ்மீதான என்னுடைய பற்று காரணமாக அவ்வாறு சொல்கிறேன். கலைஞர் தமிழ்நாட்டு மக்களுக்காக, தென்னக மக்களுக்காகப் பாடுபட்டவர்.

மேற்கு வங்கத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் ஒன்றாகத்தான் தேர்தல் நடைபெற்றது. பெற்ற வெற்றியும் நம் இரு மாநிலங்களுக் கும் ஒரே மாதிரியாக இருந்தது. நாங்களும் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். நீங் களும் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றுள் ளீர்கள்.

எனவே நாம் பெற்ற வெற்றியை, தமிழ்நாட்டிற்காக, மேற்கு வங்கத்திற்காக, ஏன் இந்த நாட்டிற்காக அர்ப்பணிப்போம். நாட்டின் ஒருங்கிணைப்பிற்காக அர்ப் பணிப்போம்.

மாநில சுயாட்சிக்காக பாடுபட்டவர்


மாநிலத்தை ஒரு நிலையாக வைத் திருக்க கலைஞர் அவர்கள் பாடுபட்டார் கள். குறிப்பாக மாநில சுயாட்சிக்காக பெரி தும் அவர் பாடுபட்டார். அவர் மக்களை நேசித்தார். அதேசமயம் மாநில மக்களிடம் அன்பு காட்டினார்.

நான் ஒரு இந்தியனாக இருக்கலாம். ஆனால் நான் எனது மாநிலத்தில் மேற்கு வங்கத்தில் பிறந்தேன். ஸ்டாலின் அவர்கள் இந்தியன் என்றாலும் தமிழ்நாட்டில் அவர் பிறந்துள்ளார். அதை அவர் மறுக்க முடியாது. நமக்கென்று தனித்துவம அடையாளம் உண்டு!

நமக்கென்று தனித்துவம்  அடையாளம் உண்டு! நாம் இந்தியர்கள்தான். ஆனாலும் நமக்கென்று தாய்மொழி உண்டு. நமக் கென்று தனித்துவம் உண்டு. ஒவ்வொரு வருக்கும் அவரவர்களுக்கு என்று அடை யாளம் உண்டு.

நான் தி.மு.க. தோழர்கள் அனைவரை யும் வாழ்த்த விரும்புகிறேன். உங்கள் தேர்தல் சின்னமாக உதயசூரியனையும் வாழ்த்துகிறேன்.

இந்த விஷயத்தில் ஸ்டாலின் அவர்கள் மிகவும் புத்திசாலியாக இருக்கிறார். அவர் தனது மகனுக்கு உதயநிதி ஸ்டாலின் என்று பெயர் வைத்துள்ளார். வங்கமொழியில் 'உதய் என்றால் உதயம் என்று பொருளா கும். ஸ்டாலின் அவர்களின் இரு சகோ தரிகள் இங்கே உள்ளனர். செல்வி மற்றும் கனிமொழி ஆகியோருக்கு என் வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்வதோடு, இங் குள்ள மூத்த தலைவர்கள், இளந்தலை வர்கள், மகளிர் தலைவர்கள், சிறுபான்மை தலைவர்கள் அனைவருக்கும் என் வணக் கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அத்து டன் தமிழ்நாட்டு சகோதர, சகோதரிக ளுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

புலிகளைப் போன்ற தைரியசாலிகள்


நீங்கள் மிகவும் நல்லவர்கள். நீங்கள் புலிகளைப் போன்ற தைரியசாலிகள். நீங்கள் எப்போதும் போராடும் குணம் படைத்தவர்கள். உங்களின் குணநலன் களுக்காக என் வணக்கத்தைத் தெரிவித் துக் கொள்கிறேன்.

அடுத்தமுறை நான் வரும்போது உங்கள் மொழியில் பேசுகிறேன். இந்த விழாவிற்கு என்னை சிறப்பு அழைப்பா ளராக அழைத்ததற்காக ஸ்டாலின் அவர் களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நினைவில் கொண்டு அவர் என்னை இவ்விழாவிற்கு அழைத்துள்ளார்.

கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழாவிற்கு என்னை அழைத்ததற்காக அவரையும் நான் நினைவில் கொண்டிருப் பேன்.

அனைவருக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும், அனைத்துத் தலைவர்களுக் கும், பெரியவர்கள் மற்றும் இளம் தலை முறையினருக்கும் என் நன்றியை தெரிவித் துக் கொள்கிறேன். சவால்களை எதிர்த்துப் போராட இளம் தலைமுறையினர் முன்வர வேண்டும். அவர்கள் தனித்து சென்று விடாமல் தலைவர்கள் வழியில் நின்று துணிந்து போராட வேண்டும்.

வங்க மொழியில் நாங்கள் சொல்வதைப் போல்- ஜெய் பங்களா என்பதைப் போல் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கும் 'ஜெய் தமிழ்நாடு' என்று சொல்லி என் உரையை முடிக்கிறேன்.

இவ்வாறு கூறிய மம்தா பானர்ஜி அவர்கள் நிறைவாக 'வணக்கம்' என்று தமிழில் மூன்று முறை குறிப்பிட்டார்.

-  விடுதலை நாளேடு, 8.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக