ஆவடி, ஜூன் 8- ஆவடி மாவட்ட பகுத் தறிவாளர் கழகம் சார்பில் 22.-05.-2022 ஞாயிற்றுகிழமை காலை 10- மணிக்கு ஆவடி வெள்ளனூர் அல மாதி சாலை யில் உள்ள கோல்டன் எஸ்டேட்டில் பெண்ணியப் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
சென்னையை ஒட்டிய ஊரகப் பகுதியான வெள்ளனூர் ஆவடி கழக மாவட்டத்தில்-அலமாதி சாலையில் வேல் டெக் கல்லூரி அமைந்துள்ள பகுதியாகும். இங்குள்ள மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், செஞ்சியில் ஜூன் மாதம் நடைபெற வுள்ள பகுத்தறிவாளர் கழக பொன் விழா மாநாட்டின் விளக்க நிகழ்வாகவும் இப்பயிலரங்கம் நடைபெற்றது.
மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் த.ஜானகிராமன் தலைமையில் தொடங்கியது. "சாட்சியம் கலை குழு" வினரின் நாட்டுப்புறகலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முற்போக்கு சிந்தனை யுள்ள பாடல்கள் எழுச்சி ஊட்டும் வகையில் அமைந்தன. இந்நிகழ்வுக்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பா.தென்னரசு வரவேற்புரையாற்றினார்.
திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் பொறியாளர் இ.ச.இன்பக் கனி அவர்களின் தொடக்கவுரையாற் றினார்.
முதல் நிகழ்வாக திராவிட மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மை பெண்ணுரிமை முன்னெடுப்புகளும் போராட்டங்களும் என்னும் தலைப் பில் வகுப்பினை நடத்தினார்.
இயக்க வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு
அதில் திராவிடர் கழகத்தின் மக ளிரணி செயல்பாடுகளையும், இயக்க வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப் பையும் விளக்கினார்.
மாநில மகளிரணி செயலாளர் தக டூர் தமிழ்ச்செல்வி பெண்கள் உரிமை வளர்ந்த வரலாறு என்னும் தலைப்பில் உரையாற்றினார். அவரது உரையில் இந்தியாவில் பெண்களுக்கு நடத்தப் பட்ட கொடுமைகளையும், அவற்றிலி ருந்து மகளிர் மீண்ட வரலாற்றையும் விளக்கினார்.
மதியம் உணவு இடைவேளையில் மீண்டும் சாட்சியம் கலைக்குழுவின் கலைநிகழ்சிகளும், ஈட்டி கணேசன் அவர்களின் மந்திரமா?-தந்திரமா? அறிவியல் பகுத்தறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆர்வமுடன் பார்வை யாளர்களும் மகளிரும் கவனித்து தெளிவடைந்தனர்.
பின்னர், திராவிட மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ.மதிவதனி பெண் களும் நாத்திகமும் என்றும் தலைப்பில் உரையாற்றினார்.
பெண்ணடிமைத்தனத்தை நிலைநிறுத்துவதில் கடவுள், மதம், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றின் பங்குபற்றி விளக்கினார்.
இனிவரும் பெண்கள்
கழக பிரச்சார செயலாளர் அ.அருள் மொழி இனி வரும் பெண்கள் என்னும் தலைப்பில் பல்வேறு அரிய கருத்து களை எடுத்துரைத்தார்.
நிகழ்வில் குறிப்பாக மாவட்ட கழக தலைவர் பா.தென்னரசு, செயலாளர் சு.இளவரசன், துணை தலைவர் ஏழு மலை, துணை செயலாளர் பூவை.க. தமிழ்ச்செல்வன், பகுத்தறிவாளர் கழக செயலாளர் முருகேசன், துணை செய லாளர் கார்த்திகேயன் உள்பட ஏராள மான கழக தோழர்களும் நூற்றுக்கணக் கான மகளிர் தோழர்களும் பங்கேற்ற னர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மோரும் மதிய உணவும் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் த.ஜானகிராமன் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.
நிகழ்விற்கு திராவிட முன்னேற்றக் கழக தோழர் ஜெயராமன் முயற்சியால் கழக கொடிகளும் ஒலி அமைப்பும் சிறப்பாக அமைந்தது.நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மகளிரும் நிகழ்ச்சி பற்றிய கருத்து தெரிவிக்கையில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.மொத்தத்தில் பயிலரங்கம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது.
கழக அமைப்புச் செயலாளர் வி பன்னீர் செல்வம் அவர்கள் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். மண்டலச் செய லாளர் தே.செ.கோபால், மாவட்டச் செயலாளர் க. இளவரசன், மாவட்டப் பகுத்தறிவாளர் கழக செயலாளர் இரா.முருகேசன், மாவட்டத் துணைச் செய லாளர் கார்த்திகேயன், மாவட்ட தொழி லாளர் கழகத் தலைவர் ஏழுமலை, ஆவடி நகரத் தலைவர் கோ.முருகன், மாவட்ட இளைஞரணி தலைவர் வெ. கார்வேந்தன் உள்ளிட்ட தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
வட சென்னை, கும்மிடிப்பூண்டி, ஆவடி மாவட்டங்களை சேர்ந்த நூற் றுக்கு மேற்பட்ட புதிய மகளிர் பங்கேற் றதும், தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதும் பயனுள்ளதாக அமைந் தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக