திங்கள், 13 ஜூன், 2022

தரமணி மஞ்சநாதன் மறைவு


கழகப் பொதுச்செயலாளர் தோழர்.அன்புராஜ் அவர்கள் தலைமையில் கழக கொடி போர்த்தி மறைந்த தோழர் கோ.மஞ்சநாதன் அவர்களுக்கு இராயப்பேட்டை மருத்துவமனையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. (13.6.22 நண்பகல்)
மறைவு

திராவிடர் கழக தென்சென்னை மாவட்ட தோழர் தரமணி கோ.மஞ்சுநாதன் (வயது 65) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது உடல் தரமணி கம்பர் தெருவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று (13.06.2022) மாலை 3 மணியளவில் இறுதி மரியாதை தரமணி இடுகாட்டில் நடைபெற்றது. தொடர்புக்கு: இரா.வில்வநாதன். தென் சென்னை மாவட்ட தலைவர் 9841895601

...........................................................

தரமணி மஞ்சுநாதன் மறைவுக்கு கழக துணைத்தலைவர் நேரில் இறுதி மரியாதை

சென்னை, ஜூன் 14- தென் சென்னை தரமணி பகுதி   திராவிடர் கழக கொள்கை வீரர் கோ.மஞ்சு நாதன் (வயது 65) 12.06.2022  அன்று மறைவுற்றார். தகவலறிந்த கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நேற்று (13.06.2022) பகல் நேரில் சென்று கழகத்தின் சார்பில் மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். 

இதில் தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி. வீரபத்திரன், மாவட்ட செயலாளர் விடுதலை நகர் பி.சி.ஜெயராமன், ஆவடி மாவட்ட கழக அமைப்பாளர் உடுமலை வடிவேல், தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மு. இரா.மாணிக்கம், மாநில இளைஞ ரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், சென்னை மண் டல இளைஞரணி அமைப்பாளர் மு.சண்முகப்பிரியன்,  தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன் தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், தென் சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன்,  தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, மயிலாப்பூர் யுவராஜ், ஜெ.குமார், சோழிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணி தலைவர் மு.நித்தியானந்தம், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன், பழவந்தாங்கல் க.தமிழினியன், புதுமை இலக்கியத் தென்றல் செயலாளர் வை.கலையரசன் குன்றத்தூர் திருமலை, க. கலைமணி, ஓட்டுநர் மகேஸ்வரன், அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாலை நடை பெற்ற மஞ்சுநாதனின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான கழக பொறுப்பா ளர்கள், தோழர்கள் வீரவணக்கம், வீரவணக்கம் என முழக்கமிட்டுச் சென்றனர். 

முன்னதாக தகவலறிந்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ் அவர்கள் பகல் 1 மணிய ளவில் இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று தனது இறுதி மரியா தையை செலுத்தினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக