சென்னை,ஜூன்4- ஒன்றிய பாஜக அரசு அமைந்த நாளிலிருந்து நாட்டையே ஹிந்துத்துவா மயப்படுத்தலில் தீவிரம் காட்டிவருகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசியல் வடிவம் பூண்டதுதான் பாஜக என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறது.
மதசார்பின்மைக்கு எதிராகவும், அரசமைப்புச்சட்டம் உறுதிப்படுத்தியுள்ள அத்துணை உரிமைகளையும் புறந் தள்ளும் போக்குடன் ஆட்சி, அதிகார ஆணவத்தில் பாஜக அரசு ஒற்றை மொழி, ஒற்றை கலாச்சாரம் என்று அனைத்திலும் பன்முகத்தன்மையை சிதைத்து வருகிறது.
அரசு அலுவலகங்களில், பள்ளி, கல்லூரிகளில், அரசுத் திட்டங்களின் பெயர்களில் என அனைத்து துறைகளி லும் இந்தி, சமஸ்கிருதத்திணிப்பைத் தொடர்ந்து கொண்டி ருக்கிறது.
இந்நிலையிலேயே ஒன்றிய பாஜக அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்தபடி, சென்னையில் திரா விடர் கழகம் சார்பில் இன்று (4.6.2022) காலை இந்தி எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கில் அறிஞர்கள், தலை வர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் இன்று (4.6.2022) காலை 10 மணிக்கு இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கம் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் தலைமையில் நடைபெற்றது. வழக்குரைஞர் சு.குமாரதேவன் வரவேற்புரையாற்றினார்.
கருத்தரங்கில் திமுக மாணவரணி மாநில செயலாளர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் சி.வி.எம்.பி. எழிலரசன் தொடக்க உரையாற்றினார்.
‘தேசியக்கல்வியும் மொழித்திணிப்பும்’ எனும் தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எழுத்தாளர் ஆளூர் ஷாநவாஸ்,
‘1937-38 இந்தி எதிர்ப்புப் போராட்டம்’ எனும் தலைப்பில் புலவர் பா.வீரமணி,
‘1948-1955 இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள்’ எனும் தலைப்பில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன்,
‘ஆர்.எஸ்-எஸ்.சின் கல்வி, மொழிக் கொள்கை’ எனும் தலைப்பில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் கருத்தரங்க உரையாற்றினர்.
தமிழர் தலைவர் நிறைவுரை
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக வரலாற்று பூர்வமான ஆதாரங்களை எடுத்துக்காட்டி கருத்தரங்கத்தின் நிறைவுரைஆற்றினார்.
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். திராவிடர் கழக வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி நன்றி கூறினார்.
சிறப்பு விருந்தினர்களுக்கு இயக்க வெளியீடுகளை வழங்கினார் தமிழர் தலைவர்
கருத்தரங்கில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான இந்திப்போர் முரசு, பெரியார் கொட்டிய போர் முரசு, வீரமணி வென்றிடுக வெற்றிமணி ஒலித்திடுக, மொழிப்போராட்டம், மொழி உரிமை ஆகிய இயக்க வெளியீடுகளை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழங்கி சிறப்பு செய்தார்.
கலந்து கொண்டோர்
கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, பேராசிரியர் ப.காளிமுத்து, அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.ஜெயராமன், ஈரோடு த.சண்முகம், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், பேராசிரியர் தேவதாஸ், த.கு.திவாகரன், கண்மதியன், பழ.சேரலாதன், பொறியாளர் நாகராஜன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், சோழிங்கநல்லூர் மாவட்டச் செயலாளர் விடுதலைநகர் ஜெயராமன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை, ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி மாவட்டங்களிலிருந்து கழகப்பொறுப்பாளர்கள், பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் பொறுப்பாளர்கள், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல் பொறுப் பாளர்கள் உள்பட பலரும் கருத்தரங்கில் பங்கேற்றனர்.
இந்தி எதிர்ப்பு மாநாட்டுக் கருத்தரங்கம் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் தலைமையில் தொடங்கியது. மேடையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், வி.சி.க. சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, புலவர் பா.வீரமணி, பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வழக்குரைஞர் சு.குமாரதேவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக