ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

அறிஞர் அண்ணாவின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை



சென்னை, பிப். 3 அறிஞர் அண்ணா அவர்களின் 50ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2019) அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் தலை மாணாக்கரும், திராவிட முன்னேற்றக் கழக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான அறிஞர் அண்ணா அவர்களின் 50ஆம் ஆண்டு நினைவு நாளில் (3.2.2019), சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகத் தோழர் - தோழியர் புடை சூழச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.கும ரேசன், துணைப்பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞரணி அமைப்பாளர் வீரமர்த்தினி, மேனாள் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் முனைவர் ந.க.மங்களமுருகேசன், திராவிட மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், இணைச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், துணைச் செயலாளர் சு.மும்மூர்த்தி, இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன், அயன்புரம் பொன்.மாடசாமி, கொடுங்கையூர் கழக அமைப்பாளர் கோ.தங்கமணி, ஜெ.கீதை கண்ணன், பெரம்பூர் கவுதம், அகரம் உமர், புரசை ஜி.பால முருகன், பா.அறிவுச்செல்வன், பா.யாழினி, நூல் விற்பனையகம் சக்திவேல், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலா ளர்கள் கோ.வீ.இராகவன், அரும்பாக்கம் சா.தாமேதரன், சைதை தென்றல், ஆயிரம் விளக்கு மு.சேகர், ராயப்பேட்டை மு.ஆனந்தன், மு.சண்முகப் பிரியன், பொறியாளர் குமார், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், துணைச் செயலாளர் மா.குண சேகரன், ஊரப்பாக்கம் பொறுப்பாளர் அரங்க.பொய்யாமொழி, கோவிலம்பாக்கம் மணிகண்டன், சோழிங்கநல்லூர் மாவட்ட துணைச் செயலாளர் பி.சி.ஜெயராமன்,  ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், இளைஞரணி செயலாளர் க.கலைமணி, திருவொற்றியூர் மாவட்ட தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், புழல் டி.பி.ஏழுமலை, பெரியார் களம் இறைவி, தங்க.தனலட்சுமி, செ.அன்புச்செல்வி, தமிழ்ச்செல்வி, பெரியார் நூலக வாசகர் வட்டம் தென்னவன், துரை.முத்துக் கிருஷ்ணன், க.செல்லப்பன் மற்றும் திரளான கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

- விடுதலை நாளேடு, 3.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக